தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2018

எமது இனிய விழா
ணக்கம் இனிய நட்பூக்களே... கடந்த 23.08.2018 வியாழக்கிழமை அன்று எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத்தங்கையின் மகன் விவேக்கிற்கும் மேலக்கொடுமலூர் குமரய்யா கோவிலில் மாங்கல்ய திருப்பூட்டும், மற்ற திருமண வைபவங்கள் பரமக்குடி ஐந்துமுனை லேனா மஹாலில் இறையருளாலும், தங்களது வாழ்த்துக்களாலும் சிறப்புடன் இனிதே நடைபெற்றது.

எனது அழைப்பிற்கிணங்கி அபுதாபியிலிருந்து மூன்றே தின விடுமுறையில் வந்து திருமணம் முடிந்த மறுதினம் விமானம் ஏறிய நட்புறவு குடும்பத்தினர் ஐவர்அணிக்கு நெஞ்சார்ந்த நன்றி எமது இதயத்தில் உண்டு
விவேக்-ரூபலாஇப்பெயரைக் கேட்டவுடன் பலருக்கும் எழுத்தாளர் திரு. ராஜேஸ்குமார் அவர்களின் நினைவோட்டங்கள் வந்து இருக்கலாம். குறிப்பாக சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு...

1992-இல் எனது தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் எனக்கும் பிறகு மகள் பிறக்கலாம் என்று நினைத்து தங்கை மகனுக்கு விவேக் என்று பெயர் வைத்தேன். பிறகு 1996-இல் எனக்கு மகள் பிறக்க ரூபலா என்று பெயர் வைத்தேன். நான் எந்த எண்ணங்களுடன் இப்பெயர்களை வைத்து இருந்திருப்பேன் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்து இருக்குமே... இதோ இறையருளால் நான் நினைத்தபடியே அந்த நல்ல நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டது இறைவனுக்கு நன்றி. குடும்பத்தில் அனைவருக்கும் இதன் அர்த்தங்கள் புரிந்து இருந்தது காரணம் எங்கள் குடும்பத்தில் அனைவருமே படிப்பாளிகள் இல்லையெனினும் நூல்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்களே... இருப்பினும் இதனைக் குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் வெளிவராத நிலைப்பாட்டில் வைத்து இருந்தேன்.


இதில் மிகப்பெரிய அதிசயம் என்ன தெரியுமா ? என்னை தங்கை வீட்டார் பலருக்கும் பிடிக்காதிருப்பினும் நான் வைத்த விவேக் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக் கொண்டதே... இன்று நானும் வலைப்பதிவர் என்று பீத்திகொண்டு ஏதோ தத்தக்கா புத்தக்கா என்று எழுதுகிறேன் என்றால் அதற்கு அடிப்படை காரணம் திரு. ராஜேஸ்குமார் அவர்களின் நூல்களை படித்ததின் தாக்கமே அன்றி வேறில்லை. அவரது க்ரைம் கதைகளில் நிரந்தரமாய் தொடர்ந்து வரும் விவேக்-ரூபலா ஜோடிகள் மிகப்பிரபலம் என்பது அவரது வாசகர்கள் அறிந்ததே... அதன் தாக்கமே இந்த எங்கள் குடும்ப ஜோடிகளும். அதேபோல எனது மகனுக்கு தமிழ்வாணன் என்று பெயர் வைத்ததும் எங்கள் தேவகோட்டை தங்கம் எழுத்தாளர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் நினைவாகவே... இப்பெயர்கள் நான் தீர்மானித்து வைத்தது 1980 களில்...

நல்லது நட்பூக்களே... எங்கள் செல்வங்களை முன்பே வாழ்த்தி கருத்துரை இட்ட நல்உள்ளங்களுக்கும், அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் கோடி. வருத்தமான விடயம் எனது தங்கை வனிதா இல்லாதது மட்டுமே...78 கருத்துகள்:

 1. கேட்பதற்கும் படங்கள் பார்ப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே.
  மாங்கல்ய திருப்பூட்டு இதுவரை நான் கேள்விப்படாத இனிமையான பெயர் .

  மண மக்களின் நல் வாழ்க்கைக்கு இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அலைபேசியில் அழைத்து வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 2. மணமக்களுக்கு எனது ஆசிகள்! மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 3. மணமக்களுக்கு ஆசிகள்.
  திருமணபடங்களை பதிவில் போட்டது மகிழ்ச்சி.
  நேரில் கலந்து கொண்ட நிறைவு.
  மணமக்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க வளர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் நன்றி

   நீக்கு
 4. மணமக்களுக்கு வாழ்த்துகள். இறைவனின் பரிபூரண ஆசிகள் என்றும் உங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி

   நீக்கு
 5. ஆஹா.... கொஞ்சம் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்களா? நன்றாக இருக்கிறது.

  எல்லாம் சிறப்பாக நடந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. இனி அவர்கள் வாழ்க்கை செழுமையுறும்வண்ணம் அவர்கள் வாழ இறைவன் அருள் புரியட்டும். (தமிழ்வாணன் என்பது நாம் எல்லாம் ஆசையுடன் படிக்கும் மர்ம நாவல்கள் எழுதிய கல்கண்டு ஆசிரியர் அல்லவா? அதனால்தான் வைத்திருப்பீர்கள் என்று முன்பு நினைத்தேன், கேட்க விட்டுப்போய்விட்டது. விவேக்-ரூபலாவைத் தெரியாத, ராஜேஷ்குமார் ரசிகர்கள் உண்டா?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி.

   ரசிகர்கள் என்று சொல்லாதீர்கள் வாசகர்கள் என்பதே சரி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  மண மக்களுக்கு என் அன்பான ஆசிகள். தங்கள் மகளின் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அனைத்து போட்டோக்களும் நன்றாக உள்ளது. படங்களை பார்த்ததும், நாங்களும் வந்திருந்து தங்கள் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சந்தோஷம், மன திருப்தி கிடைத்தது. தங்கள் மகளும்,மருமகனும் நீடூழி வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

   நீக்கு
 7. மனம் நிறை வாழ்த்துகள் தேவ கோட்டையாரே. தம்பதிகள் மற்றும் அனைத்துப் படங்களும் வெகு இனிமை. மண்டபம் பிரமாதமாக அமைந்திருக்கிறது.
  என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க என் மனமார்ந்த ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது ஆசிகள் குழந்தைகளுக்கு கிட்டட்டும்.

   நீக்கு
 8. படங்கள் மிக அருமை. திருமண நிகழ்வுகளை நேரில் கண்டு களித்த அனுபவம் கிடைத்தது. மகிழ்ச்சி... மகிழ்ச்சி.

  மணமக்களுக்கு மீண்டும் என் மனம் கனிந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 9. மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. கண் நிறைந்த காட்சிகளாக
  திருமண மங்கலம்....

  பல்லாண்டு பல்லாண்டு இனிதே வாழ
  அன்பின் நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது வாழ்த்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 11. தவறாக நினைக்க வேண்டாம் ஜி.... நீ(வி)ர்


  "நண்பேன்டா"

  பதிலளிநீக்கு
 12. மணமக்களுக்கு வாழ்த்துகள். ராஜேஷ்குமார் தாக்கத்தில்தான் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று யூகித்தேன். திருமணம் சிறப்பாக நடந்தது சந்தோஷம். நீடூழி வாழ்க மணமக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது யூகம் சரியே... வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 13. மனமக்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 14. புகைப்படங்கள் அனைத்தும் அழகு!

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகள் (எனது உடல்நிலை காரணமாக, தங்கள் இல்ல திருமண விழாவிற்கு வர இயலவில்லை; மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது நிலைப்பாடு அறிவேன்.

   நீக்கு
 16. மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்!
  மானாமதுரை அருகே உள்ள மேலகொடுமணூரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபிராமம் அருகிலுள்ள மேலக்கொடுமலூர்.

   நீக்கு
 18. திருமணம் நல்லபடியாக முடிந்தது அறிந்து சந்தோஷம்......மணமக்கள் எல்லாம் பெற்று நலமாக வாழ பிரார்த்தனைகள். கல்யாணவிட்டில் பெண்ணின் தோப்பனார் என்ன காஸ்ட்டியூமில் வந்தார் என்பது பற்றிய போட்டோக்கள் இல்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   தங்களது பிரார்த்தனை கண்டு மகிழ்ச்சி.

   தோப்பனார் வேட்டி-சட்டையில் வருவார்.

   நீக்கு
 19. வாவ் கில்லர்ஜீ சார் எனக்கு நீங்கள் சொல்லவே இல்லையே?

  விவேக் ரூபலாவுக்கு எங்கள் நல்லாசிகளும் நல் வாழ்த்துகளும்.
  புகைப்படங்கள் அத்தனையும் அருமை. மகளின் மணப்பெண்ணுக்கானஅலங்காரங்களும் சேலைத்தேர்வும் சூப்பர் என சொல்லுங்கள். கோல்ட் கலர் சேலையில் நான் கண் வைத்து விட்டேன். திருஷ்டி சுத்தி போட சொல்லி விடுங்கள்.

  புகைப்படங்களில் விழா மண்டபம். கிச்சன் என பகிர்ந்தது வித்தியாசம். முக்கியமாக கிச்சனின் அமைப்பை கண்டேன். எனக்கும் சில ஐடியாக்களை தந்திருக்கின்றீர்கள்.அதுக்காக கமிஷன் எல்லாம் கேட்க வேண்டாம்.

  மீண்டும் மண மக்களுக்கு நல்வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சார். மகளுக்கான கடமையை தந்தையாக சிறப்பாக செய்து நிறைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.மனம் நிறைவாய் இருக்கின்றது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ முந்தைய பதிவில் அழைப்பு கொடுத்தேன் பார்க்கவில்லையா ?

   மகளிடம் சொல்லி விடுகிறேன் மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி.

   கிச்சன் மேட்டரில் கமிஷன் வேண்டாம் அதற்கு பதிலாக, மணமக்கள் ஸ்விஸ் வருவார்கள் உங்களது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுககவா மாட்டீர்கள்.

   நீக்கு
  2. ஆஹா நிச்சயம் சார். சுவிஸ் வருவார்கள் எனில் நம்ம வீட்டில் தாராளமாக தங்கலாம்.வீடும் வசதியானது தான்.தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்கு பிரைவசி தேவை எனில் இங்கே எங்கள் பக்கமே நிரம்ப ஹோட்டல்ஸ் உண்டு. நாங்கள் புக் செய்தால் காசும் கம்மி தான். சாப்பாடெல்லாம் நம்ம கிட்டயே சாப்பிட்டுக்கலாம்.சுவிஸ் வருவோருக்கு ஒரு டிப்ஸ்.. சுவிஸில் இன்ரர்லாகன் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் தங்கினால் சுவிஸில் எல்லா பக்கமும் போய் வர இரண்டரை மணி நேரம் தான்.ஊர் சுத்தி பார்ப்பதெனில் காலையில் போய் மாலையில் திரும்பி விடலாம். இங்கிருந்து பல பாகங்களுக்கும் நேரடி ரயில் உண்டு. கிளம்பி வரச்சொல்லுங்கள்.

   நீக்கு
  3. ஆஹா விசா ஸ்ஃபோன்ஸருக்கு ஆள் கிடைச்சாச்சு விரைவில் ஏற்பாடு செய்திடுவோம்.

   சாப்பாட்டு செலவு மிச்சம் உங்களது ஆதரவுக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 20. திருமண விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி. உங்கள் மனம் ஆனந்த பூரிப்பில் இருக்கும். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்றி விரைவில் உங்களைத் தாத்தா ஆக்கவும் பிரார்த்திக்கின்றோம். உங்கள் தங்கையும் உங்கள் மனைவியும் விண்ணிலிருந்து உங்கள் மகளையும் மருமகனையும் வாழ்த்தி இருப்பார்கள். மணமக்களுக்கு எங்கள் இதயபூர்வமான ஆசிகள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது இதயப்பூர்வமான ஆசிகளுக்கு நன்றி.

   நீக்கு
 21. மணமக்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் நண்பரே
  விவேக் ரூபலா எனத் தாங்களே இருவருக்கும் பெயர் வைத்த செய்தி
  அளவில்லா வியப்பைத்தான் தருகிறது நண்பரே
  வாழ்த்துகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே திட்டமிட்டே பெயர் வைத்தேன். வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 22. மண விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமை மகிழ்வினைத் தருகிறது. மணமக்கள் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வேண்டுதலுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 23. விவேக் ரூபலா பல்லாண்டுகள் வாழ்க ராஜேஷ்குமார் நாயகர்கள் போல அனைவரின் மனதிலும் இடம் பிடித்து வாழ வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 24. Really superb mama unga ovvoru word's m perfect semmaaaaaaaaaaaa

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தங்களது கருத்துரைக்கு நன்றி.

   இருந்தாலும்... நீங்க யாருன்னு தெரியலையே அப்பு... மாமான்னு வேற சொல்லுறியலே...

   நீக்கு
  2. நான் anushiya மாமா

   நீக்கு
  3. நல்லது நன்றிமா.

   நீக்கு
 25. பதினாறும்பெற்று பெரு வாழ்வு வாழ மீண்டும் வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 26. மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். திருமணம் சிறப்பாக நடந்திருக்கின்றது என்பதை படங்களை பார்க்க தெரிகிறது. உங்களை காணவில்லையே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நான் பிறகு வருவேன்.

   நீக்கு
 27. மணமக்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 28. மீண்டும் நல்வாழ்த்துக்கள். இறைவனருள் உங்கள் பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் எப்போதும் கிட்டுமாக.
  படங்கள் திருமண கலகலப்பைக் கூறிச் செல்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 29. பெயர்காரணம் அறிந்தேன்.

  எல்லாமே உங்க மனசு போலவே அமைந்திட்டுது.

  பிள்ளைகளுக்கு ஆசீர்வாதங்கள்.

  பதிலளிநீக்கு
 30. ஆஹா அழகான ஜோடி , இறைவனுக்கு நன்றிகள் பல
  மணமக்களுக்கு வாழ்த்துகள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 31. மணமக்களுக்கு வாழ்த்துகள்! வாழ்க!! வளம் பெருக!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 32. பதினாறு செல்வங்களும் பெற்று
  சீரும் சிறப்புமாகப் பல்லாண்டு வாழ
  மணமக்களை வாழ்த்துகின்றேன்!

  யாழ்பாவாணன் - இலங்கை

  பதிலளிநீக்கு
 33. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. அன்புடையீர் ,உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இனிமேல் நேரம்கிடைக்கும் போது வந்து படித்து கருத்து சொல்கிறேன் இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி

  பதிலளிநீக்கு
 35. வருக திரு.குத்தூசி அவர்களே... தங்களது வரவு நல்வரவாகட்டும்.தொடர்க... தொடர்வோம் நட்புறவில்...

  பதிலளிநீக்கு
 36. அருமை ...மிக மகிழ்ச்சி..

  படங்கள் எல்லாம் மிக அழகு..  மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ எனது வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது மனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி சகோ

   நீக்கு
 37. உங்கள் குழந்தைகள் விவேக் ரூபலா திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்து பல்லாண்டு மகிழ்வுடன் இனிய இல்லற வாழ்க்கை வாழ்ந்திட எங்கள் இருவரது பிரார்த்தனையுடன் வாழ்த்துகள். உங்கள்

  துளசிதரன், கீதா

  கீதா: கில்லர்ஜி உங்கள் பொறுப்பு முடிந்துவிடவில்லை!! இன்னும் தொடர்கிறது! மிகப் பெரிய பொறுப்பு! அதுவும் இன்பமான பொறுப்பு. அடுத்த தலைமுறையின் வரவை எதிர்நோக்கி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் இருவரது வாழ்த்துகளுக்கும் நன்றி

   நீக்கு