வெள்ளி, மே 24, 2019

செல்வியின் கணவன்முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...

தெருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து வீட்டு பரிமளாவுடன் பேசிக்கொண்டு இருந்த செல்வி வெளியே வந்து எட்டிப் பார்க்க, தனது கணவர் வருவதைக் கண்டதும் பரிமளாவிடம் சொல்லி விட்டு தனது வீட்டின் கேட்டைத் திறந்து விட்டு வீட்டைத்திறந்து உள்ளே சென்றதும் ஆச்சரியமாக...
என்னங்க அதிசயமா இருக்கு சீக்கிரமே வந்துட்டீங்க.... ?
இல்லை செல்வி தலை வலிச்சது அதான் சொல்லிட்டு வந்துட்டேன்.

சரி ட்ரெஸ் மாத்துங்க காஃபி போட்டு வாறேன்.
வேண்டாம் காஃபி அப்புறமா சாப்பிடலாம் ராஜு வரலையா ?


போனவாரம் ஐ.டி. கம்பெனி இண்டர்வியூவிற்கு போனான்ல அந்த விசயமா அவனோட காலேஜ் ப்ரொபஸர் வரச்சொன்னாரு பார்க்கப் போயிருக்கான் எல்லாம் இன்றைக்கு சரியாகும்னு நம்பிக்கையா போயிருக்கான் என்னங்க ட்ரெஸ் மாத்தாமல் சோபாவுல உட்கார்ந்துட்டீங்க.... ?
மாத்தலாம் இங்கே வா இப்படி உட்காரு....

சொல்லுங்க ?
நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு ?

ஏங்க காலைல போகும்போது நல்லாத்தானே இருந்தீங்க.... ஷூவை எங்கேயும் கழட்டலையே... ?  
ச்சூ சொல்லுடி...

ஏன்... உங்களுக்கு தெரியாதோ.... இப்பவரைக்கும் கல்யாணநாள் வரும்பொது பரிசு வாங்கியாந்து சஸ்பென்ஸா தருவீங்களே... அதெல்லாம் எந்தக்கணக்கு ?
சரி சொல்லு.

இருபத்தி ஏழு வருஷமாச்சு அதுக்கென்ன ?
இத்தனை வருசமும் நான் உன்னை சந்தோசமாக வைத்திருக்கிறேனா ?

ஆஹா.... நம்மாளுக்கு ஏதோ... ஆகிடுச்சு இருங்க பார்வதி அக்கா சமயபுரம் போயிட்டு வந்து விபூதி கொடுத்துச்சு எடுத்து வந்து பூசி விடுறேன்.
ஏய்.... உட்காருடி விளையாடாமல் கேட்டதுக்கு பதிலைச் சொல்லு.

என்னங்க நல்லாத்தானே இருந்தீங்க ?
விளையாடாதே... சீரியஸா கேட்கிறேன்.

நானும் சீரியஸாத்தான் கேட்கிறேன் உங்களுக்கு என்னாச்சு ? ஆஃபீஸ்ல ஏதும் பிரச்சனையா ?
ஆஃபீஸ்ல பிரச்சனை ஏதுமில்லை உன்னை நான் சந்தோசமா வச்சு இருக்கேன்னா இல்லையா... இதை மட்டும் சொல்லு ?

நல்லாத்தானே.... இருக்கோம் சம்பந்தி ஆகியாச்சு அடுத்த வருசம் பேரன் வந்துருவான் இதுக்குமேல எனக்கு என்ன வேணும் ? ம்ம்.... சரி அமெரிக்கா கூட்டிப் போறீங்களா ?  ட்ரம்ப் கொழுந்தியாளிடம் ஒரேயொரு கேள்வி கேட்கணும்.
எப்படிடீ.... எல்லாத்தையுமே விளையாட்டா எடுத்துக்கிறே.... ?

முதல்ல உங்களுக்கு என்னாச்சு... ஆஃபீஸ்லருந்து இவ்வளவு சீக்கிரமாக எதுக்காக வந்தீங்க ?
இல்லை ஒருத்தன் என் மண்டையைக் காய்ச்சிட்டான்.

ஆஃபீஸ்ல உங்களுக்கு தெரியாத வேலையா ?
வேலை இல்லைடி லஞ்சம் வாங்குற விசயமா பேசுன பேச்சு கடைசியில நான் உன்னை சந்தோசமாத்தான் வச்சுருக்கேனா ? அப்படின்னு கேட்டுட்டான் உண்மையிலேயே குழம்பி போயிட்டேன்டி அதான் உடனே கேட்ருவோம்னு வந்துட்டேன் ஆமா நான் லஞ்சம் வாங்கலைன்னு உனக்கு கோபமில்லையே ?

அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு... இப்ப நமக்கு என்ன குறை ? நம்ம குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறோமோ இல்லையோ...  பாவத்தை சேர்க்க வேண்டாம் நாளைக்கே ராஜூ வேலைல ஜாய்ண்ட் பண்ணிட்டான்னா... நீங்க ரிடையர்ட் ஆனாலும் பிரச்சனை இல்லை வீட்ல உடகார்ந்துட்டு எனக்கு ஒத்தாசையா காய்கறி நறுக்கி கொடுக்க மாட்டீங்களா.... என்ன ?
அதுசரி உனக்கு காய்கறி நறுக்கி கொடுக்க நான் ரிடையர்ட் ஆகணுமா ?

சரி எவனோ... கில்லர்ஜி மாதிரி கூமுட்டை சொன்னான்னு கடைசி நேரத்துல லஞ்சம் வாங்கி பெயரைக் கெடுத்துடாதீங்க.....
சரி செல்வி நமக்கு கல்யாணம் ஆன மறுவருசம் என் நண்பன் நல்லமுத்து மலேசியாவுக்கு வா நிறைய சம்பாரிக்கலாம்னு கூப்பிட்டானே.. போயிருந்தால்... நானும் அவன் நிறைய சம்பாரிச்சு அவன் மனைவி மாதிரி உன் கழுத்து நிறைய நகை போட்ருக்கலாம்ல...

போட்ருக்கலாம்தான் ஆனா, எவனாவது வந்து எங்கழுத்துல போட்டு எல்லாத்தையும் கொண்டுட்டு போயிருப்பான் அப்புறம் நம்ம புள்ளைங்க என்ன செய்யும்... நீங்க என்ன செய்வீங்க ?
என்ன சொல்றே ?

ஆமாங்க நகை போட்டுக்கிட்டு இப்ப நடக்க முடியுதா ? கழுத்தை அறுத்துக்கிட்டு போறாங்கே... மோதிரம் கழட்ட வரலைன்னு விரலை வெட்டி எடுத்துக்கிட்டு போறாங்களாம் உயிருக்கே ஆபத்தான இந்த நகை எதுக்கு ? நேற்றுகூட சம்பந்தி போன் பண்ணும்போது சொன்னேன் மாப்ளே பிஸினஸ் செய்யிறதாக இருந்தால் நகைகளை விற்று செய்யட்டும் வெளிநாடு எல்லாம் எதுக்குனு... அவுங்களும் ஆமா எங்களுக்கும் வெளிநாட்டுக்கு அனுப்ப விருப்பமில்லைனு சொன்னாங்க நகையும் பாதுகாப்பா இருக்கும் மாப்பிள்ளையும் ஊருலயே இருந்திடுவாரு அவரென்ன, உங்களை மாதிரியா ? விபரமானவருதானே ?
ஏண்டி சந்சடி சாக்குல எனக்கும் ஆப்பு வைக்கிறே.... அப்ப நான் மலேசியா போகாததால உனக்கு கோபமில்லை.
உங்க நண்பர் நல்லமுத்து இருபது வருசம் மலேசியாவுலருந்து வந்து என்னாச்சு ? வியாதியோட வந்தாரு தினம் ஆஸ்பெட்டலும், வீடுமா அலையுறாங்க எல்லாம் பணஆசைதானே.... இதோ பக்கத்து வீட்டு பரிமளா ராத்திரி எல்லாம் கைக்குழந்தையை வச்சுக்கிட்டு எவனும் திருடங்கே வந்துருவாங்களோன்னு பயந்துக்கிட்டே இருக்கிறா... வாழவேண்டிய வயசுல புருசங்காரன் துபாய்ல இது வாழ்க்கையா ? அவளுக்கு வேண்டிய நகை இருக்கு ஆனால் புருசன் பக்கத்துல இல்லையே... ராத்திரிக்குத்தான் வரமாட்றீங்க பகல்யாவது இங்கே வாங்கன்னு கூப்பிடுறா... நாம பக்கத்துல இருக்கிறதாலயும், இவ நல்ல பொண்ணுங்கிறதால கௌரவமா இருக்கிறா.. மேலத்தெரு மேகலா வீட்டுக்கு தினம் ஒருத்தன் வர்றான்னு அவளை வீட்டைக் காலி செய்யச் சொல்லி தெருவுல எல்லோரும் சண்டை போட்டாங்களாம் புருசன் சிங்கப்பூரில இருக்கான் யாரைக்குறை சொல்றது எல்லாம் பணத்தாலதானே.... ?
அப்ப என்னோட வாழ்ந்ததுல உனக்கு சந்தோசம்தான்.

இன்னும் பத்து வருசம் கழிச்சு கேட்கிறது ? வீட்டுக்கு மருமகள் வரப்போறாள் ஞாபகம் இருக்கட்டும்.
அப்பாடா எனக்கு இப்பத்தான் மனசு சந்தோசமாக இருக்கு இன்றைக்கு அவனுக்கு அறிவுரை கொடுப்போம்னு நினைச்சது தப்பு.

உங்கள்ட்ட இல்லாததை அவனுக்கு எதுக்கு கொடுக்கிறீங்க ?
................... ஏண்டி.... உன்னை.......

படக்கென்று எந்திரித்து ஓடவும் கதவைத் திறந்து கொண்டு ராஜூ உள்ளே வரவும் சரியாக இருந்தது கையில் ப்ளாஷ்டிக் பேக்.

என்னம்மா அப்பா இந்த நேரத்துல வீட்ல ? ரெண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாடுறீங்க ?
ஆமாடா உங்க அப்பா இந்த நேரத்துல வர்றது உலக அதிசயம்தானே...

அப்பா ஆசீர்வாதம் செய்யுங்க.. அம்மா நீங்களும்தான்.
சந்தோஷம் எந்திரிப்பா என்ன ராஜூ விஷேசம்.

பேக்’’கை பிரித்து ஒரு லட்டு எடுத்து அப்பாவுக்கு பாதி, அம்மாவுக்கு பாதி ஊட்டி விட்டான்.

ராஜூ வேலை கிடைச்சுருச்சா ?
ஆமாப்பா என்னோட ப்ரொஃபஷருக்கு வேண்டப்பட்டவர்தான் ஐ.டி. கம்பெனி எம்.டி. பர்ஷேஸிங் டிபார்ட்மெண்ட் மேனேஜர் வேலைப்பா சம்பளம் ஸ்டார்ட்டிங்லயே 13000 ஆயிரம் அப்புறம் எக்ஸ்ட்ரா வருமானம் வரும் என் பேரை காப்பாற்றணும் அப்படினு ப்ரொபஷர் சொன்னாருப்பா.

ராஜூ ரொம்ப சந்தோஷம் பர்ஷேஸிங்னு சொல்றே.... வாழ்க்கையில் கடைசிவரை நியாயமாக வேலை செய்யணும் லஞ்சம் வாங்ககூடாது உன்மீது நம்பிக்கை வச்சுத்தான் ப்ரொஷர் உனக்கு சிபாரிசு செய்திருக்கார் அவரோட பெயரைக் காப்பாற்றணும் உனக்கு நான் சேர்த்து வைச்ச சொத்தே நியாயமாக நான் வாழ்ந்ததுதான் இதைப் போலத்தான் நீயும் உன்னோட சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கணும்.
அப்பா நான் உங்களோட பிள்ளை இதைச் சொல்லித்தரணுமா ? கண்டிப்பாக நான் நியாயமாகத்தான் வேலை செய்வேன் உங்களை மாதிரியே...

ரொம்ப சந்தோசம்பா....
இந்தாப்பா ராஜூ பார்வதி அக்கா சமயபுரம் போயிட்டு வந்துச்சாம் விபூதி.

ஏண்டி அவனுக்கு வேலை கிடைச்சுச்சு விபூசி பூசிவிட்டே சரி எனக்கு எதுக்கு பூசிவிடுறே ?
உங்களுக்கு பித்தம் தெளியிறதுக்கு.

அதென்னம்மா அப்பாவுக்கு பித்தம் தெளிய ?
அது வந்துடா... உங்க அப்பா....

ஏய் சும்மா இருக்கமாட்டியா.... ?
உங்களுக்கென்ன ? நான் எம்மகன்ட்டே சொல்லுவேன்.

அம்மா என்னனு சொல்லுமா ?
இருடா... நான் கண்டிப்பாக சொல்வேன்.

வீட்டில் டெலிபோன் ஒலிக்க...

ஹலோ...
ஹலோ சம்பந்தி நாந்தான்.

சொல்லுங்க சம்பந்தி நல்லா இருக்கீங்களா ? அண்ணன், மாப்ளே, வினிதா எல்லாரும் நல்லா இருக்காங்களா ?
எல்லோரும் நல்லா இருக்கோம் ஒரு சந்தோசமான விசயம்.

சொல்லுங்க... சொல்லுங்க சம்பந்தி
நீங்க பாட்டியாகப் போறீங்க......

ஆஹா...... சந்தோஷம் சந்தோஷம் இன்னைக்கு சந்தோஷமான விசயங்களாவுல இருக்கு வினிதா எங்கே ?
இப்பத்தான் நானும், மருமகளும் ஆஸ்பெட்டல் போயிட்டு வந்தோம் டயர்டா இருக்குன்னு சொல்லுச்சு உறங்குது அப்புறமா போன் செய்யுங்களேன் சரி வேறென்ன சந்தோஷ செய்தி ?  

இங்கே ராஜூவுக்கு வேலை கிடைச்சுருச்சு சரி சம்பந்தி அப்படியே சீனியை அள்ளி வாயில போட்டுக்கங்க எனது சார்பாக...
ஏன் லட்டு வாங்கித் தரமாட்டீங்களோ ?

அது நாங்க நாளைக்கு மதுரைக்கு வரும்போதுல லட்டோடு வருவோம்.
சரி அப்படின்னா... ரெண்டு ரெண்டு லட்டோட வாங்க.

கண்டிப்பாக ரொம்ப சந்தோஷம் சம்பந்தி நான் அப்புறமாக போன் செய்யிறேன்.
என்ன செல்வி ?

டேய் கன்ஃபாம் ஆகிடுச்சுடா...
என்னம்மா கன்ஃபாம் ?   

உனக்கு வேலை கிடைச்சுருச்சு, இவரு தாத்தா ஆகிட்டாரு, ஆஃபீஸ்ல இன்னைக்கு யாரோ இவரு மண்டையை காய்ச்சுட்டானாம் பொறுக்க முடியாமல்தான் எந்திரிச்சு வந்துட்டாரு இங்கே பாரு, காதோரம் நரைச்சுருச்சு வயசாகிடுச்சு, இவருக்கு ரிடையர்டு வாங்கி வேற வேலை கொடுத்துருவோம்.
வேறன்னமா வேலை ?

வேறென்ன வீட்ல காய்கறி நறுக்கிறதுதான் ?
ஏண்டி....... உன்னை...

ஓடிய... அம்மாவை, அப்பா விரட்டிக் கொண்டு ஓடுவதைப் பார்த்து சிரித்த ராஜூ கணினியைத் திறந்து நாளை மதுரைக்கு இரயில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்யத் தொடங்கினான்.

வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்.
சுபம்

51 கருத்துகள்:

 1. ஆக, எப்படியோ கதை சுபம்...

  எல்லாருக்கும் நல்ல புத்தி வரட்டும்!...

  பதிலளிநீக்கு
 2. இப்போ இந்த சம்பவத்தை அறிந்து
  குருட்டுப் பூனை தொலைக் காட்சியினர்
  நேரலை நடத்துதாமே...

  அதுபற்றி கில்லர் ஜி தொடர்ந்து சொல்லவும்..

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி.

  ஹப்பா நல்ல காலம் செல்விய நல்ல விதத்துல சொல்லிட்டீங்க! எங்கேயாச்சும் குண்டு தூக்கிப் போடுவீங்களோனு நினைச்சு கொஞ்சம் உதறலோடுதான் வந்தேன் சுபம் போட்டுட்டீங்க...

  சூப்பர் கில்லர்ஜி!! அதிக ஆசை இல்லைனா நாம் சந்தோஷமா இருக்கலாம்...நானும் என் மகனும் அடிக்கடிப் பேசிக் கொள்வது லைஃப் சிம்பிள்தான் நாம தான் அதைக் காம்ப்ளிக்கேட் செஞ்சுக்கறோம் அப்புறம் கஷ்டப்படுறோம்...லைஃபை சிம்பிளா வைச்சுட்டோம்னா மனசும் காம்ப்ளிக்கேட் ஆகாது..குழம்பாது சந்தோஷமா இருக்கலாம்னு...

  சூப்பர் ஜில்லர்ஜி...வாழ்த்துகள் பாராட்டுகள்! செல்வியின் பேச்சை ரசித்தேன்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இப்படியெல்லாம் வாழவேண்டுமென்று ஆசைப்பட்டவன்.

   ஆனால் நடைமுறையில் பாலனின் நேர்மை மட்டுமே சாத்தியமாக இருக்கிறது.

   வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. கீதா ரங்கன்..... என்னோட பெரியப்பா ரொம்ப ரொம்ப எளிமையா வாழ்ந்தார் (நிறைய, ஓரளவு பணம் இருந்தபோதும்). அவர்கிட்ட, ஏன் இப்படி கஷ்டப்படறீங்கன்னு (பஸ்ஸுக்குப் பதிலா நடப்பது, தேவையில்லாத செலவு செய்யாதது, உடை, உணவில் எளிமை) கேட்டபோது, 'நான் இதை கஷ்டமாக நினைக்கலை. We are only custodians of money what we earn" என்றார்.

   நீக்கு
  3. உங்கள் பெரியப்பாவின் குணம் நன்று நண்பரே

   "வளமையில் எளிமை"

   நீக்கு
 4. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 5. நல்லவேளை கில்லர்ஜி..

  நேரம் கெட்டநேரத்தில் சொல்லாமல் வீட்டுக்கு வருகிறார் அவர்... ஏதும் விபரீதம் என்றெல்லாம் இருக்குமோ என்றெல்லாம் கவலையாய் இருந்தது. முழுக்கமுழுக்க பாஸிட்டிவாய் கஹய்யை அமைத்து விடீர்கள். நல்லதொரு குடும்ப அறிமுகம். படிக்கும்போதே சந்தோஷம் வருகிறது. காலையில் ஒருநேர்மறைச் சிந்தனை கொண்ட பதிவு வாசித்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்துரை மகிழ்ச்சி தருகிறது.

   நீக்கு
 6. அழகான கணவன், மனைவியின் ஆழமான புரிதல்....
  இப்படி புரிதல் இருந்தால் பிரிதலுக்கு இடமேது...?

  பதிலளிநீக்கு
 7. கற்பனையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இப்படிப்பட்ட கணவன், மனைவி இருக்கின்றனர். நகை பற்றி நீங்கள் எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை! நகைகளை அதிகம் வைத்துக் கொள்ளவும் வேண்டாம், நடமாட பயப்படவும் வேண்டாம்.

  கணவன் , மனைவிக்குள் இப்படிப் பட்ட புரிதல் இருந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். திருஷ்டிப் படாமல் இருக்கட்டும். நூறாண்டு வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இதுதான் வாழ்க்கை என்று புரியும்போது கணவன்-மனைவி இருவருமே முதுமையடைந்து விடுகின்றனர்.

   அல்லது இறைவன் ஒருவரை அழைதுது விடுகிறான்.

   நீக்கு
 8. அருமையான கதை.
  மிக அழகாய் கதையை கொண்டு சென்றீர்கள்.
  இந்த காலத்தில் பணம், பணம் என்று அதன் பின்னே ஓடி வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்.
  //இளமை சென்று முதுமை வந்தால் காதல் இசை பாடாது உள்ளம் அதை சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை.//
  என்ற பாடல் நினைவுக்கு வருது.
  நகை, சொந்த வீடு, குழந்தைகள் படிப்பு என்று நிறைய காரணம் சொல்லி உழைக்கிறார்கள், உழைக்கிறார்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அழகான, விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 9. கணவன் மனைவி உரையாடல், மகன் அம்மா உரையாடல் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. நல்ல நீதியைக் கொண்ட கதை.... அதிகமா எதுக்கும் ஆசைப்படக் கூடாது. இருப்பதை வைத்து சிறப்புடன் வாழணும். எதுக்கு அடுத்தவன் வயித்தெரிச்சல்ல வந்த காசு? நமக்குத்தான் நல்லாவே நம்ம முப்பாட்டன்கள் சொல்லிவச்சிருக்காங்களே.

  'அழக் கொண்ட எல்லாம் அழப் போம்' - பிறரை வருத்திச் சம்பாதித்த பணம் அவ்வாறே நம்மை விட்டு நீங்கும்.

  நல்ல கதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நீதிக்கதை நிலைக்கு உள்ளதா ?
   தமிழரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 11. வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் -
  ஆனாலும் அன்பு மாறாதது...
  மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் -
  பிரிவென்னும் சொல்லே அறியாதது...
  அழகான மனைவி அன்பான துணைவி -
  அமைந்தாலே பேரின்பமே...
  மடிமீது துயில சரசங்கள் பயில -
  மோகங்கள் ஆரம்பமே...
  நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி...
  நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி...
  சந்தோஷ சாம்ராஜ்யமே...

  பதிலளிநீக்கு
 12. தம்பதிகள் அவசியம் வாசிக்க வேண்டிய தரமான உரையாடல் கதை. சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  இனியும் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 13. என்னாதூஊ பாலனின் மனைவி முடிஞ்சு இப்போ செல்வியின் கணவனோ.. நில்லுங்கோ கொஞ்சத்தால வந்து படிக்கிறேன்ன்...:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க...
   ஹலோ செல்வியின் கணவன்தான் பாலன்.

   நீக்கு
 14. பாலனின் மனைவி
  செல்வியின் கணவன்...

  தலைப்பின் சாமர்த்தியத்தை இப்போதுதான் கவனிக்கிறேன் கில்லர்ஜி... சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதுதான் கவனித்தீர்களா ?
   ஐயய்யோ இதை அதிரா படித்தால் உங்களுக்குத்தான் பிரச்சனை.

   துணியைப் போட்டு மூடி வைக்கிறேன்.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  அருமை ..! கதையை நல்லபடியாக முடித்து விட்டீர்கள். இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். கணவனும் மனைவியும் இப்படி அமைந்தால் சிறப்பான வாழ்க்கையாக இருக்கும். அவர்களின் சந்ததிகளும் , நல்லதொரு பண்புகளையும் நிம்மதியையும் பெற்று வளர்ந்து, வாழ்வார்கள். நல்ல முடிவு மனதிற்கு மகிழ்வை கொடுத்தது. இது போன்ற கதைகளை தாங்கள் நிறைய எழுத வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மைதான் இப்படி தம்பதிகள் ஆயிரத்தில் ஒருவருக்கே அமைகிறது.

   வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. பதில்கள்
  1. யாரது அதிராவா ?
   பெரிய கருத்துரையாக இருக்கிறதே நன்றி

   நீக்கு
 17. அன்பு தேவகோட்டை ஜி.
  அருமையான முடிவு.
  பாலன் ,செல்வியின் கணவன் நேர்மையின் அவதாரம்.
  வாழ்வு வளம் பெறும் இது போலப் புரிதல் இருந்தால்.

  திண்டுக்கல் தனபாலனின் கல்யாணமாலை பாட்டு அமிர்தம்.
  கணவன் மனைவி உரையாடல் மிக அழகு.
  கோமதி சொல்லும் பாடலும் பழமையின் இனிமை.
  நீங்கள் சொல்லி இருப்பது போல
  புரிதல் வந்த போது எங்கள் இருவருக்குமே வயதாகி விட்டது.
  அன்பு வெகுவாகக் கனிந்த போது அவரை
  இறைவன் அழைத்துக் கொண்டான்.
  மீண்டும் மீண்டும் பிள்ளைகளிடம் சொல்வது
  விட்டுக் கொடுத்து,கோபம் இல்லாமல் வாழத்தான்.

  இன்னுமொரு நல்ல கதையை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா

   எனக்குதான் இன்று காலம் கடந்து விட்டது எனது மனைவி மரணிக்கும்போது அவளுடைய வயது 30 தான்.

   இனியும் இது போன்ற கதைகள் தர முயல்வேன் விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி அம்மா.

   நீக்கு
  2. //அவளுக்கு வயது 30தான்// - ஐயையோ.... எப்படில்லாம் கஷ்டப்பட்டீர்களோ.... எவ்வளவு வைராக்கியத்துடன் பசங்களுக்காக வாழ்ந்திருக்கிறீர்கள்.... சொந்தமாக இருந்த சகோதரியும் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார் (மறைந்தார்)... வயது இன்னும் ஆகும்போது, உங்களை இன்னும் நல்லபடியாக உங்கள் வாரிசுகள் பார்த்துக்கொள்ளட்டும். அதற்காக நான் ப்ரார்த்திக்கிறேன்.

   நீக்கு
  3. வருக நண்பரே அடுத்த பதிவில் இதற்கு தங்களுக்கு பதில் கிடைக்கும்.
   இருப்பினும் தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றியே சொல்வேன்.

   நீக்கு
 18. வாழ்வில் எல்லாம் சுபமாக இருக்க விரும்புகிறோம் ஆனால் அப்படித்தான் இருக்கிறதா கஷ்டமும் சுகமும் சேர்ந்தது தானே வாழ்க்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...

   நீக்கு
 19. விறுவிறுப்போடு நகர்ந்து, நிறைவான விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 20. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 21. நாந்தான் பத்தாங்கிளாச அஞ்சு வருசமா படித்து முடித்தேன்..அதுக்காக மத்தவங்கள வாழ்த்தாம இருக்க முடியாதுங்களே.... வாழ்க! வளமுடன்!!... வாழ்க ! வளமுடன்..!!!

  பதிலளிநீக்கு
 22. நேர்மறையான கருத்து கொண்ட கதை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை அழகாய் விளக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...