என்னவளே...
நாம் இருக்கும்போது... ’’அப்படி’’ இருந்ததில்லை,
நீ இறந்த போதும்... நான் ’’அப்படி’’ இருந்ததில்லை,
நான் இறந்திட்டாலும் ’’அப்படி’’ இருக்க சாத்தியமில்லை,
கண் போனபின்னே சூரியநமஸ்காரமா சூரியபுத்ரி
நானாவது புரிந்து கொண்டேன் நீ புரியாமலே,
புதைந்ததேனோ பூமியிலே பூவிழியே
நம்மை EGO என்னும் ஈக்களை மொய்க்க விட்டு,
நம் மனதில்
கருங்கல்லை காய்க்க விட்டோம்
மரங்கொத்தியாய்...
நானிருந்தும், உன் மனங்கொத்த,
எம்மை
தடுத்ததேனோ காலமெனும் நதியினிலே...
கண்ணீரை
கரைத்து விட்டு கரையேறும்போது மட்டும்,
சதி-பதியாய்
படமெடுத்தோம், நமக்குள் சதி செய்தோம்
மனதை
புகைக்க விட்டு புகைப்படம் எடுத்ததென்ன ?
சமூக பார்வைக்காக, நாம் சந்ததியை துளிர்க்க விட்டோம்,
சந்தோச தருணங்களை சன்னியாசம் ஆக்கி விட்டோம்.
இந்த குற்றங்களின் தொடக்கத்திற்கு யார் பொருப்பு ?
இறைவனா... இடைத்தரகர் மனிதனா... இல்லை நாம்தானோ ?
முன்னுரையை நீ தொடுக்க முடிவுரையை நான் கொடுக்க...
இன்று கல்லறையில் நீ துயில... கடற்கரையில் நான் துவல
புதைந்தது உன் உடல் மட்டுமல்ல ! நம் உணர்வுகளும்தான்,
பட்டினியாய் போட்டிருந்தாய், பத்தினியாய் வாழ்ந்திருந்தாய்,
உன்னைத் தொட்ட தருணங்களே எமக்கு பிறவிப்பயனடி,
இந்த நினைவோடு கடந்தது பதிமூன்று ஆண்டுகளடி,
எமது கடைசிப்பயணம் வரை இந்த நினைவே போதுமடி,
நமக்கு மீண்டுமொரு பிறவியிருந்தால் மீண்டு பிறந்து
வருவோமடி நாம் மீண்டும் இணைய வேண்டுமடி
இப்பிறவியில் நம்மை நாமே ஏமாற்றியதை,
மறுபிறவியில் மாற்றியமைத்து பத்துச் செல்வங்களை,
பெற்றிடுவோம் மகிழ்வுடனே வாழ்ந்திடுவோம்,
இந்த ஆசையாவது நிறைவேற வேண்டுமெனில்,
இன்றே என்னவன் இறக்க வேண்டும் என,
இறைவனிடம் சொல்லி விடு நாளையே நான்,
மேலோகம் வந்து உன்னைத்தேடி வந்திடுவேன்,
பேசாதா விசயங்களும், பேராசை எண்ணங்களும்,
உடன் நான் திரும்பி வந்து பூமியிலே பிறந்திடுவேன்,
பூமிக்கு நீ வரும் வேளையிலே, சிவப்பு கம்பளம்
நாம் மணம் புரியும் காரணத்தால், குழந்தை முதல்
தொடங்கிடுவோம், நம் காதலை வளர்த்திடுவோம்
காதலை வளர்த்த, மோகத்தால் நீ விரைவாக
குமரியாகி, நான் விவேகமான குபேரனாகி,
விரைவாக விவாகமாகி, பெற்றிவோம் பேரின்பம்...
உனை பெறவைப்பேன் பேறுகாலம் நாம் பெற்ற
செல்வங்களும், பேறுகாலம் கண்டு களித்து,
பெற்றெடுப்பர் நமக்கு பேரன்-பேத்திகளை
நாம் சந்தோஷமாய் திளைக்கும் தருணத்திலே,
சட்டென உயிர் பிறிய வேண்டுமடி ஒரே நாளில்,
நம் இருவரையும் ஒரே குழியில் கிடத்தி வைக்க,
அருகருகே நாம் கிடந்தே பேசிடுவோம் மௌனமொழி...
இது பேராசை இல்லையடி நாம் பெறாத ஆசையடி,
இந்த ஆசை உனக்கும் இருந்தால் ? ? ?
இன்றே என்னவன் இறக்க வேண்டும் என,
இறைவனிடம் சொல்லி விடு, நாளையே நான்
மேலோகம் வந்து, உன்னைத்தேடி வந்திடுவேன்.
இதை கவிதையாக வடித்தேனா... கட்டுரையாக
குழைத்தேனா... கதையென
திரித்தேனா... யாமரியேன்
பராபரமே... எங்களது Wetting Day’ யான இந்த வெட்டிநாள்’லில் என்னவளின்
ஆன்மாவுக்கு இது அர்ப்பணம் பிறகே தங்களின் பார்வைக்கு சமர்ப்பணம்.
அன்புடன்
Killergee
(பழமையை விரும்பும், புதுமைச்சித்தன்)
30.08.2014
காணொளி
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஒவ்வோ(ர்) உளத்திலும் ஊமையாய்க் காயங்கள்!
இவ்வகை வாழ்வுதான் ஏனிறைவா? - கவ்வும்
துயரமே காலமெலாம் பின்தொடர வேண்டாம்!
அயர்வினை மாற்றவழி ஆற்று!
வடித்த பாடல் வரைந்த வலி கொடுமையானது!
நெஞ்சடைக்கின்ற துயரம். உங்கள் ஆதங்கம் நிறைந்த
பாடல் வரிகள் உளத்தை ஆழ உழுதுபோகின்றது!..
காலதேவன் கட்டளை! கடந்தது கடந்தவையே!
காலம் உங்கள் உளக்காயத்தினை ஆற்றட்டும்!
உங்கள் துணையின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்!
நானும் உங்கள் துயரத்தில் கலந்துகொள்கிறேன்…
காலம் கவலைகளை ஆற்றும்!..
பதிலளிநீக்குஅண்ணா,
பதிலளிநீக்குகவிதையில் தெரியும் உங்கள் காதலை நீங்கள் மட்டுமாக அனுபவிப்பதைவிட வேறு தண்டனையும் வேண்டுமா:(( உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கு அண்ணா! அண்ணி காத்திருக்கட்டும். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல:(( மனம் பாரமா இருக்கு:((
என்ன சொல்வது என்று தெரியவில்லை... காயங்களுக்கு...காலமே மருந்து.
பதிலளிநீக்குஎன்னதான் ஆறுதல் சொன்னாலும் இழப்பு ஈடு செய்ய முடியாதென்றாலும் காலம்தான் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உங்களுக்கு வழங்க வேண்டும்
பதிலளிநீக்குஉங்கள் மௌன மொழியின் பின்னே இவ்வளவு சோகம் உள்ளதா ?எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை ..இதுவும் கடந்து போகும் கில்லர்ஜி!
பதிலளிநீக்குநல்லவர்களுக்குத்தான் சோதனைகள் வரும் என்பார்கள். உங்களுக்கும் இது தான் நடந்ததோ....
பதிலளிநீக்குஅன்பின் சகோதரமே ஆதரவுச்சொல்ல இல்லை வார்த்தைகள் . ......
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குதங்கள் பெரும் இழப்பின் கொடுமை குறித்த எழுத்துக்கவி என் கண்களில் நீரை, இல்லை! இல்லை! கண்ணீர் மழையையே வரவழைத்து விட்டது. எமனின் கால் படாத வீட்டுப்படியே இல்லையென்று சொல்வதுண்டு!!! ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..! காலங்கள் கரையும் போது அதனுடன் சோகங்களும் கரையுமென்பார்கள். ஆனால் நெஞ்சமென்ற ஒன்றிருக்கும் வரை அதன் விரிசலாய், நினைவுகளையும், சுமந்துதான், தீர வேண்டும். வேறு வழி? அது காலத்தின் கட்டாயம்! அந்த விரிசல்களின் காயங்கள் ஆற, நாங்களும், உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
பிரார்த்திக்கும் உள்ளமுடன்,
கமலா ஹரிஹரன்.
13 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட கிடைக்கும் தங்களைப் போன்றவர்களின் இந்த ஆறுதல்கள் மனதை சிறிது இலவம் பஞ்சுபோல் ஆக்கி விட்டதை உணர்கிறேன் சகோதரி.
நீக்கு''..மௌன மொழி''.. என்றதும்(கௌரி சிவபாலன் வலையில்)
நீக்குஎப்படியிருக்கும் பார்ப்போமே என்று எட்டிப் பார்த்தேன்.
அது மிகக் கவலை தந்துவிட்டது. ஒவ்வோருவருக்குள்ளும்
சொல்லாத மொழிகள் எத்தனை! எத்தனை!...
எதை எழுதுவது எனத் தெரியவில்லை.
ஆனால் இப்படி எழுதுவதால் அமைதி பிறக்கும் என்பது உண்மை சகோதரா!.....
அமைதி பெருகட்டும்!!!!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
பூவிழி வாசலில் எத்தனை சோகங்கள்..!
நீக்கு
பதிலளிநீக்குதங்களின் மனம் அமைதியாய் கவலைகளற்று இருந்திடவும், உடல் நலத்திற்கும் எங்கள் மௌன மொழிப் பிரார்த்தனைகள்....என்ன என்று சொல்லத் தெரியாமல் வார்த்தைகள் இறந்துவிட்டதால் மௌன இடம்...
இதுவும் கடந்து போகும்!!!.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
துயரத்தின் நடுவில் துவண்டு
அழுது சொல்லிய சேகங்கள்.
படிக்கும் போது எங்களையும்
கண்ணீர்க்கடலில் ஆழ்த்தியது.
வரிக்கு வரி சொல்லுக்கு சொல்
சோங்கள் இழையோடி
வாடிய வதனமும்.
தங்களின் படத்தில் தெரிகிறது...
எல்லாம் .இறைவன் செயல்.....
துணைவியின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த எணணப்பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
\\ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
பதிலளிநீக்குவாழ்வென்றால் போராடும் போர்க்களமே//
இந்த பாட்டுத் தான் உடனும் ஞாபகத்திற்கு வந்தது. வீட்டுக்கு வீடு வாசல்படி தானே சகோ துன்பம் இல்லாத வாழ்வு எங்குமே இல்லையே! இத்தனை கலாய்புகளுக்கும் மகிழ்ச்சிக்கும் பின்னால் எவ்வளவு துயரம். என் கண்கள் சிந்திடும் படியாய் ......மௌனமாய் அழுகிறது உள்ளம்.
அமைதியும் திடமும்
பெறவேண்டும் நீஎன்று
ஆண்டவனை நான் வேண்டுகிறேன் ...!
கடமைகள் உனக்காய்
காத்திருக்கு அதை
கண்ணுக்குள் வைத்தே
துயர் களைந்துவிடு!
வார்த்தைகள் ஏதும்
இல்லை இனிஉன்
வல்லதுயர்தனை போக்கிடவே!
தாமதமாக வந்தமைக்கு மிகவும் மனம் வருந்துகிறேன் சகோ !
காலங்கள் காயங்களை ஆற்றிவிடும் எனும் நம்பிக்கையில் ... வாழ்வோம் சகோ! தேற்றும் வழியின்றி விடை பெறுகிறேன் சகோ.
தங்களின் கவிதையின்
பதிலளிநீக்குஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு எழுத்திலும்
அன்பே உருவான தங்களின்
பாசம் கண்டேன்
நேசம் கண்டேன்
தங்களின் துயரில்
நானும் பங்கு கொள்கின்றேன் நண்பரே
சோகம் தொண்டையை அடைக்கிறது. குழந்தைகளை நினையுங்கள். அம்மா,அப்பாவாக தாங்கள் அல்லவா...அவர்களுக்கு இருக்க வேண்டும். பிஞ்சுகள் என்ன செய்வார்கள்...மழலையில் மனச்சுமையைக் கரையுங்கள். இறைவன் தங்களுக்கு மனோதிடத்தை தரட்டும். பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபதிமூன்று ஆண்டுகளின் பிரிவு..
பதிலளிநீக்குஇது ஆற்ற முடியா ஆறாக் காயம் தோழர்..
தேறுதல் கொள்ளுங்கள் ...
குழந்தைகளை குறித்து அக்கறையை மடைமாற்றுங்கள்
உங்கள் கண்ணீர் தெறிக்கும் கவிதையில் வலியை எங்கள் நெஞ்சில் இறக்கி வைத்து விட்டீர்கள்!
பதிலளிநீக்குபல நேரங்களில் இருப்பதன் அருமையை இல்லாமல் போகும் போதுதான் உணர்கிறோம்.
இல்லையா நண்பரே!
கண்ணதாசனின்,
சாவே உனக்கொருநாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?
தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?
தெய்வமே உன்னையும் நாம் தேம்பி
அழ வையோமோ?
என்ற வரிகளை நினைவு கூரச் செய்து விட்டது தங்களின் மௌன மொழி!
இந்த மௌன மொழி கவிதையாக(வும்) இருக்கிறதா ? நண்பரே....
பதிலளிநீக்குஆ.....இப்படியொரு கதை வேறு இருக்கா................கில்லர்ஜீக்கு
பதிலளிநீக்குஅட பாவி, என் கவிதையை படி என்று நீ கூற, சற்று சிரிக்கலாம் என்று வந்து சேர்ந்தேன். அழ வைத்து விட்டாயே நண்பா. ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. தளராதே.
பதிலளிநீக்குதங்களுக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா? என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை நண்பரே. உண்மையில் தாங்கள் இறக்கி வைத்த பாரம், இப்பொழுது எங்களின் நெஞ்சில்...
பதிலளிநீக்குஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை நண்பரே.
இதுவும், ஆறுதலே....
நீக்குஇப்படியொரு... பின்புலம் இருக்கின்றது கொள்ளலாமா...?ஜீ
பதிலளிநீக்கு........லாமே.....
நீக்குவலைப்பதிவில் உங்கள் போட்டோவையும், பதிவுகளையும் பார்க்கும்போது உங்களை ஒரு ஜாலியான ஆசாமி , இன்னும் திருமணம் ஆகாதவர் என்றே நினைத்து இருந்தேன்!
பதிலளிநீக்குஉங்களது உயிர்ப்பான இந்த கவிதையைப் படித்தவுடன் சிறிது நேரம் என்னால் எழுதுவது என்றே தெரியவில்லை. “பார்த்தாக்க ஆளு ரொம்ப முறுக்கு! ஆனா உள்ளத்திலே பத்துகதை இருக்கு .... ... ” என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படம் ஒன்றில் வரும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.
எது எப்படி இருந்த போதும், வலைப்பதிவில் எப்போதும் போல் தொடர்ந்து எழுதுங்கள். காலம்தான் உங்கள் காயத்தை மாற்ற முடியும். வலைப்பதிவு அதற்கு துணை நிற்கும்.
எழுத்தை நான் உயிராக நேசிப்பவன், அதற்க்கு வடிகாலாக தங்களைப் போன்றவர்களின் கருத்துரையை மூச்சாக சுவாசிக்கின்றேன், எனக்கு ஆறுதலாக வலைப்பதிவு கடைசிவரை இருக்குமென நம்புகின்றேன் ஐயா.
நீக்கு//நாளையே உன்னைத் தேடி மேலோகம் வந்திடுவேன்//
பதிலளிநீக்குதுயரத்தின் எல்லையைத் தொட்டிருக்கிறீர்கள்.
இயற்கை வழங்கும் தண்டனைகளை ஏற்று வாழ்வததைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து மனதைக் கட்டுப்படுத்த வேண்டுகிறேன்.
நண்பர்கள் குறிப்பிட்டது போல, இம்மாதிரி மனக் காயங்களுக்குக் காலமே மருந்தாகும்.
மௌனத்தில் விளையாடும் மனசாட்சி.
நீக்குஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது உங்கள் காதலை, ஏக்கத்தை, பிரிவின் துயரத்தை...மனம் கனக்கிறதே அன்றி வார்த்தைகள் ஏதும் வரவில்லை சகோதரரே..
பதிலளிநீக்குமௌன.......
நீக்குகாயப்பட்ட மனதுக்கு ஆறுதல் வார்த்தைகள் நலம் சேர்க்கும். ஆனால் சில காயங்களை எந்த வார்த்தைகளும் ஆற்றாது. காலம் கடந்து எடுக்கும் தீர்மானங்கள் விழலுக்கிறைத்த நீராகிப் போகும். உங்கள் கவலை 13 வருடங்கள் கடந்தும் பச்சைப்புண் போல் வலிக்கிறது. வடித்த வரிகள் வலிகளை விபரித்திருக்கின்றது. பிரிவுத்துயர் பற்றி எனக்கும் அனுபவம் உண்டு. 2௦ வருடங்கள் கடந்தும் எனது பெற்றோரின் பிரிவு இன்று நடந்ததுபோல் வேதனையை தருகின்றது. அதனால் உங்கள் வழியை என்னால் உணர முடிகின்றது. ஆற்றவேண்டும் ஆற வேண்டும் ஆனாலும் காலமெல்லாம் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் உண்மை அன்பு. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். காலமே எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கின்றது
பதிலளிநீக்குகாலத்தால் புறந்தள்ளப் பட்ட
பதிலளிநீக்குஇன்பம் சோகமாக மாறியபின்
இன்னொருமுறை அழைப்பு
விடுத்தது
உண்மை காதலுக்கான
உறைவிடம்
மௌனமே.... தங்களுக்கும்.
நீக்குநண்பா . வார்த்தைகள் இல்லை என்னிடம் ஆறுதல் சொல்ல... காலமே தக்க மருந்து..
பதிலளிநீக்குதேறுதல் கொள்கிறது... மனம்.
பதிலளிநீக்குபதிவை படிக்கும்போது மனம் நெகிழ்ந்தது உண்மை. உங்களுக்குள் இத்தனை சோகம் உறைந்து இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கக்கூடிய உறவா அது. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். நடப்பது நம் கையில் இல்லை. இறைவன் உங்களுக்கு மனவலிமையை தர வேண்டுகின்றேன்.
பதிலளிநீக்குநடக்காததை நினைப்பதும், நினைப்பது நடக்காமல் போவதும்தான் மனித வாழ்க்கைக்கு இறைவன் கொடுத்த பாடம் நண்பரே...
பதிலளிநீக்குஇது ஆறுதல் சொல்லி தேற்ற முடியாத வலி...
பதிலளிநீக்குகாலமே வலியை குறைக்கும் மருந்து...
ஆகட்டும்....
பதிலளிநீக்குமிக மிக மிக உருக்கமாக இருக்கிறது! எந்தளவுக்கு நீங்கள் உங்கள் மனைவியார் மீது காதல் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒவ்வொரு வார்த்தையும் உரக்கச் சொல்லுகின்றன! இவ்வளவு சோகமா உங்கள் நெஞ்சில்!!
பதிலளிநீக்குமறுபிறவி என ஒன்றிருந்தால் உங்களுடைய இந்த விருப்பங்கள் கட்டாயம் நிறைவேற வேண்டும்! உங்கள் அளவுக்குக் காதல் உங்கள் மனைவியாருக்கும் இருந்தால் இன்றே உங்கள் உயிர் பிரிய வேண்டுமென இறைவனிடம் கூறுமாறு நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது படிக்கும்பொழுதே நெஞ்சைப் பிழியும் வரி! எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை!...
நண்பரின் புதிய பதிவு வரவில்லையே..வேலைப் பளு அதிகமோ......
பதிலளிநீக்குநண்பர் வலிப்போக்கனுக்காக.... நாளையே காண்க... ''சூட்தண்''
பதிலளிநீக்குஇழப்பு நம்மை முடங்கச்செய்து விடும், மீண்டு விடலாம் அதிலிருந்து/ஈகோ அழித்தேவிடும்.
பதிலளிநீக்குஉண்மைதான் விமலன் ஸார்.
பதிலளிநீக்குசோகத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது மனத்தின் பாரம் குறைவதை உணரமுடியும். நல்ல மனதிற்கு இறைவன் துணையிருப்பான்.
பதிலளிநீக்குஇதுவும் உண்மைதான் முனைவர் ஐயா.
நீக்குsent you a private message via Facebook. Hope you get to read it.
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html?
தகவலுக்கு நன்றி சகோதரி.
நீக்குஉங்களது காலத்தின் சோகத்தை காவியமாய் படைத்தீர்கள், இனி வரும் காலமாவது உங்களுக்கு (நல்ல) காலமாக இருக்கட்டும்...
பதிலளிநீக்குஅய்யனாரே சொல்லும்போது... நம்புகிறேன்.
நீக்குகண்ணீர் மல்க ஆண்டவனை வேண்டுகிறேன். அண்ணாவிற்கு மன ஆறுதலைக்கொடு என்று. தமிழே உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என மனம் சொல்கிறது. பிள்ளைகளை பாருங்கள். வேறென்ன சொல்ல ? கனத்த மனதோடு எதையும் சொல்ல இயலவில்லை.
பதிலளிநீக்குமௌனமாய்,,,, ஏற்றேன்.
பதிலளிநீக்குதவிர்க்கப் பட முடியாதவை அனுபவித்தே தீரவேண்டும் வார்த்தைகள் ஆறுதல் அளிக்குமானால் .........! நீங்கள் ஆறுதல் அடைந்திருக்க வேண்டுமே....! என் தந்தை எனக்குக் கூறிய உபதேச மொழிகளை உங்களுக்கும் கூறுகிறேன் Be bold and cheerful... எதுவும் கடந்து போகும்
பதிலளிநீக்குதங்களது மொழிகளையும் மௌனமாய் ஏற்ரேன் ஐயா.
நீக்குஇவ்வளவு அன்பு, பாசமும் உள்ள நீங்கள் மனைவியை பிரிந்து விட்டது சோகமே!
பதிலளிநீக்குகாலம் சோகத்தை ஆற்றும் அருமருந்து.
அறியாத பருவத்தில் ஒருவருக்கு ஒருவர் ஏற்படும் தனமுனைப்பு (ஈகோ) வருவது சகஜம் சிலர் கடந்து வாழ்கின்றனர் சிலர் காலதாமதமாய் புரிந்து கொள்கிறார்கள்.
படிக்கும் போது மிகவும் மனம் கனத்து விட்டது..
மெளனமொழி மனதை மெளனமாக்கியது.
மௌனமாய் ஏற்றேன் சகோதரி.
நீக்குகண்களைக் கசிய வைத்த கவிதையும் காணொளியும் கண்டேன் சகோ. ஹ்ம்ம் :(
பதிலளிநீக்குகண்கள் நிறைந்த நன்றி சகோ.
நீக்குபிரிவின் வலியை, மனத் துயரை வார்த்தைகளில் வார்த்தெடுத்துள்ளீர்கள். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாத கையறு நிலையில் இருக்கிறேன், ஆறுதல்கள், தேற்றல்களை விட இப்படியான வலிகளை, துயரங்களை கடந்து செல்ல எஞ்சிய வாழ்வின் மீதான நம்பிக்கை மட்டுமே உதவும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையை உங்களுக்கு குறைவின்றி இறைவன் தர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குமௌனமாய் ஏற்றேன்....
நீக்குநண்பனே,
பதிலளிநீக்குஎன்ன சொல்லுவேன்,
கண்ணீர் துளிகளில் எழுதிய இந்த
கல்லறை காவியத்தின் ஒவ்வொரு வார்த்தையும்
சொல்லொன்னா துயர் தந்து -எந்தன்
செல்லெல்லாம் அழ வைத்தது.
என்ன சொல்லி ஆறுதல் படுத்துவேன்
என்ன சொன்னாலும் இழப்பின் வலி
இதயத்தில் தழும்பென்றாலும்
இன்னமும் அவர் நினைவை
இழக்காமல் இருப்பதினால்
இகம் விட்டு பிரிந்த அந்த
இதயமும் மகிழும் என்றும்.
கில்லர்ஜி,
மௌனம் கலைத்து எழுந்து வா.,
மீண்டும் கலக்கலாய் எழுதி வா.
காலம் களிம்பு பூசட்டும்.
நட்புடன்
கோ
மௌனமே... என் பதில் நண்பா.....
நீக்குஉள்ளத்தில் உள்ளவளின் நினைப்பு
பதிலளிநீக்குஉயிருள்ளளவும் இருக்கும்! அது
பேசும் மொழி மௌன மொழியாயிருக்கும்!
வேஷமிடா உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும்
தங்களின் கவிதை உங்களின் உள்ளக்கிடக்கையை
அற்புதமாக அழகாக வெளிப்படுத்தி
உள்ளுக்குள்ளே அழவும் வைத்துவிட்டது!
ஆறுதல் கூறிட வார்த்தைகள் தெரியவில்லை சகோ!
ஆண்டவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர!
ஏற்றேன் சகோ......
பதிலளிநீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குமௌனம்தான் பேசியதோ?
மௌனமே ஒரு பாடலாய் பாட்டுப்பாடவேண்டும்...!
இது மௌனமான நேரம்...! இளம் மனதில் என்ன பாரம்...
இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ?
நடந்தைவை நடந்தவையாக இருக்கட்டும்.... இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்...
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்கையில்...
நீங்கள் கோவையில் இருக்கும் உங்கள் தங்கங்களை
போதுமே ஜி...!
அவர்கள்தான் தங்களின் துணை கொடுத்த துணை...
துணிவே துணை...
அதுவே என்றும் நினை...
உன்னில் மறையாமல்...
என்றும் உன்னிடமே...!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
காலம் உங்கள் மனத்துயரைக் குறைக்கட்டும்.
பதிலளிநீக்கு