தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 03, 2020

தள்ள வேண்டியதை தள்ளு


ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா ? டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு.பகவான்ஜி அவர்கள் அடிக்கடி சொல்வார் தள்ள வேண்டியதை தள்ளினால் தட்டு வண்டிக்கும் மின்சாரம் கொடுப்பாங்கே என்று நமது நாட்டின் அவலநிலை இதுதான்.

இந்தக்கடை சாலையோரம் அதாவது புறம்போக்கு இடத்தில் கடை போட்டு இருக்கின்றார்கள் ஒருவேளை இது மக்களின் நடைபாதைக்கு இடையூராக இல்லாமல் இருந்திருக்கலாம். இதற்கு மின்சார இணைப்பு கொடுத்து இருக்கின்றார்கள் எங்கிருந்து பார்த்தீர்களா  ? டிரான்ஸ்பார்மரில் இருந்து நேரடியாக இது முறையானதுதானா  ? டிரான்ஸ்பார்மரின் அருகில் கூரை வேய்ந்த வீடு இருக்கலாமா ? இது திடீரென்று தீ பிடித்து விடாதா ? இதற்கு மின்சார வாரியம் மின்சார இணைப்பு கொடுக்கலாமா ? காரணமென்ன  ? இக்கடைக்காரர் ஆளுங்கட்சிகாரர்களுக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். ஆகவே சட்டம் இங்கு ரப்பர் தடியைப்போல் வளைக்கப்படுகிறது.

நீங்கள் அடிக்கடி நகரங்களில் பார்த்து இருப்பீர்கள் கடைக்கு முன்புறம் மக்கள் நடையாதையை அடைத்துக் கொண்டு கடையை நீட்டித்து ஆக்கிரமித்து இருப்பார்கள். திடீரென்று மாவட்ட கலெக்டர் கூரையை பிய்த்து எறிந்து விட உத்தரவிடுவார். தெருவே வெறிச்சோடி இருக்கும் மீண்டும் பார்த்தால் பழையபடி கொஞ்சம் கொஞ்சமாக கடையை சாலையை நோக்கி விஸ்தாரமாக்குவார்கள் ஒரு திரைப்படத்தில் நடிகர் திரு.விவேக் கேட்பார் நடைபாதை வியாபாரிகள் சங்கம் விழா நடத்தும்போது... //நடைபாதை என்பதே மக்கள் நடக்கத்தானே// என்று ஆக அரசே முறையற்ற சங்கங்கள் அமைப்பதற்கு அதிகாரமளிக்கிறது இவைகளை நிறுத்த இயலாது காரணம் இது ஒரு தொடர்கதை.


நமது நாட்டில் அரசியல்வாதிகளை ஊழல் செய்கின்றார்கள் என்று குற்றம் சொல்கிறோம் அவர்கள் வாக்கு கேட்டு வரும்பொழுது வறம்பு மீறி தேர்தல் செலவு செய்கின்றனர். அப்பொழுது தெரியவில்லையா  ? இவர்கள் நியாயமற்றவர்கள் என்று... வாக்களிக்க எல்லா வேட்பாளர்களிடமும் பேரம் பேசி பணம் வாங்கிக் கொண்டுதானே வாக்களிக்கிறோம் மக்கள் மட்டுமென்ன உத்தமபுத்திரன்களா  ? சரி அதிகாரிகள் மட்டுமென்ன அரிச்சந்திரன்களா  ? இந்த ஊழல்வாதிகளின் தொடக்கம் எங்கே  ? மக்களில் யாருமே நல்லவர்கள் இல்லை மக்களிலிருந்து சென்றவர்கள்தான் அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகள்.

இந்த நாடு நாசமாவதற்கு அடிப்படை காரணம் மக்களே... மக்களிடம் நல்ல சிந்தனைகள் இல்லை காரணம் இறை நம்பிக்கை முழுமையாக இல்லை ஆயினும் கோவில்களில் மக்கள் வெள்ளம் அலை மோதிக்கொண்டே இருக்கிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இறைவனை உடனடியாக காண பணம் இது லஞ்சமில்லையா ? கோவில் சிலைகளில் கூட கலப்படம் ஆகவேதான் இறைவனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சக்தி இல்லாமல் போய் விட்டது. இதன் காரணமாகவே மருத்துவமனைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. இனியெனும் நாடு காப்பாற்றப்பட வேண்டுமெனில் அரசியல்வாதிகளின் கைத்தடியாக செயல்படும் அல்லக்கைகளை நாடு கடத்த வேண்டும்.

64 கருத்துகள்:

  1. உங்களின் பொயிங்கல்கள் அனைத்தும் சரியே... இப்படிக் கனெக்சனால முன்பு பல வீடுகள் எரிஞ்சிருக்கின்றன...
    அதுசரி பகவான் ஜி எப்படி இருக்கிறார்? ஏதும் தெரியுமோ கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வலைப்பூவை நிறுத்தி விட்டார் யாருடனும் தொடர்பில்லை. முதல் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. சில நாட்களுக்கு முன் நண்பர் 4700 என்று வந்த பில் தொகையை கணினியில் இருப்பவர்களிடம் சொல்லி 470 என்று மாற்றினார். 500 லஞ்சம். மிரண்டு போனேன்.

      நீக்கு
    3. வருக நண்பரே ஒரேயொரு பூஜ்ஜியத்தை நீக்கி தனது வீட்டு ராஜ்ஜியத்தை ஆள்கிறார் போலும்.

      நீக்கு
  2. அடக்கொடுமையே :( கொஞ்சம் கூட யோசனையின்றி கனெக்ஷனும் குடுத்தவங்களை அதே ட்ரான்ஸ்பார்மரில் கட்டி வைக்கணும் .இங்கெல்லாம் எங்கள் சொந்த வீடானாலும் சின்ன எக்ஸ்டென்க்ஷன் செய்றதா இருந்தாலும் கவுன்சில் அனுமதி இன்றி ஒன்றும் செய்யமுடியாது .கடவுளை காண பணம் :( 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதில் கடவுளை காண பணம் கட்டுவது எனக்கு உடன்பாடில்லை.

      நம் மனசாட்சியில் கடவுள் இல்லையா ?

      நீக்கு
  3. எங்கள் வீட்டு முன்னால் டீக்கடை வைத்திருப்பவர்(அடுத்த மா நிலத்தவர்) நேற்று
    எங்கள் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தேன்.
    அங்கே சிசிசி டிவி பொருத்தப்பட்டிருக்கிறது.
    நுழைந்தார் குழாயைத் திறந்தார்,. குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துக்
    கொண்டார்.

    தண்ணீர் எடுத்துக் கொண்டதில் தப்பில்லை.
    அங்கே இருப்பவர்கள் அதற்கு ஒன்றும் தடை சொல்லவில்லை.
    ஏனெனில் கேட்கும்போது டீ, வடை கிடைக்கும்.

    தண்ணீர்ப்பந்தல் வைத்திருப்போம்,அந்தப் புண்ணியம் என்று
    நினைத்துக் கொள்ளலாம்.
    ஆக்கிரமிப்பு என்று வரும்போது காவல் இல்லாத
    எல்லைக்கோடுதானே.
    இந்தக் கடைகளும் அப்படித்தான்.
    அவர்களுக்கு எல்லோருமே ஆதரவு. காவல்காரர்கள்,
    அரசியல்வாதிகள். யார் எப்படிப் போனால் என்ன.
    பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும்
    செய்து கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு நீங்கள் காவலுக்கு ஒரு ஆள் வைத்திருந்தீர்களே... என்ன ஆனார்மா அவர்?

      நீக்கு
    2. வல்லிம்மா... ஆரம்பத்திலேயே கவனம் வையுங்கள்.

      நீக்கு
    3. வீட்டு விசயத்தில் கவனம் வையுங்கள் அம்மா.

      அவர் வெளிமாநிலத்தவர் என்று சொல்கின்றீர்கள். அவரை தொடர்ந்து புழக்கத்தில் விட்டால் அக்கம், பக்கத்தார் உங்களது அனுமதியோடுதான் நுழைகிறார் என்று ஒதுங்கி விடுவார்கள்.

      வீட்டை பூட்டி வைப்பதைவிட மிகவும் வேண்டப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட பகுதியை இலவசமாக வசிக்க விடுவது பாதுகாப்பானதே..

      நீக்கு
    4. கவலையான விஷயம் ரேவதி. உடனடியாக உங்கள் பிள்ளைகளை என்ன, ஏது என விசாரிக்கச் சொல்லுங்கள். நாம் ஏதும் கேட்கலைனா அவங்க முழு உரிமை எடுத்துப்பாங்க. சொந்த அனுபவம்.

      நீக்கு
  4. ஊழல் என்பது மேல்மட்டத்தில் என்றில்லை, அடித்தட்டு வரை  இருக்கிறது.  மாறுவதற்கு, திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் இது மிகப்பெரிய சிலந்தி வலைதான்.

      நீக்கு
  5. மக்கள் ஊழல்வாதிகள் என்பது ஒருபுறம்.

    இந்த மாதிரி அத்துமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் டிஸ்மிஸ், ஓய்வூதியம் கிடையாது என்று வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான வார்த்தை.

      ஊழல் நிரூபணமானால் அவர் இறந்து விட்டாலும் சொத்துகள் பறிமுதல் செய்யணும்.

      நீக்கு
    2. நாடு நல்லபடியாக ஆகும்../ ஆகவேண்டும் என்பதெல்லாம் வெறுங்கனவு...

      கண்டு கொண்டே இருக்க வேண்டியது தான்...

      நீக்கு
    3. வாங்க ஜி கனவு காணச் சொன்னவரின் அர்த்தம் தடம் மாறி விட்டதே...

      நீக்கு
  6. கில்லர்ஜி, நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்றாலும் இன்றைய காலகட்டத்தில் சொல்லுபவர்கள் தான் தவறு செய்பவர்கள். ஆகவே நீங்கள் தான் குற்றவாளியாகப் பார்க்கப்படுவீர்கள். என்ன செய்ய முடியும்? தமிழ்நாட்டில் அடிப்படை மனப்பான்மையே முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது. இலவசங்களும், இலவசமாகக் கொடுக்கப்படும் பணமும் தான் மக்கள் வாழ்க்கையையே நிர்ணயிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் இன்று நேர்மை பேசுபவனை வினோதமாக பார்க்கின்றனர்... ஏன் குடும்பத்தினரே...

      நீக்கு
    2. சரியாகத்தான் சொல்கிறீர்கள். நேர்மைக்கு மதிப்பில்லை.

      நீக்கு
  7. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது’

    என்பார் பட்டுக்கோட்டையார். எனவே அதுபோல மக்களாய்ப் பார்த்து இலஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலொழிய இலஞ்சத்தை ஒழிக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

      நீக்கு
  8. இறைமீது நம்பிக்கை என்பதைவிட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், தான் நன்றாகஇருக்கவேண்டும் என்பதே இப்போது மேலிடுவதைக் காணமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. இறைவனை தரிசிக்க சிறப்பு நுழைவு கட்டணம் - இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கோவில்களின் வருமானத்துக்கு இது ஒரு வழி. கடவுள், 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் குறையைத் தீர்த்துவைப்பேன்' என்று சொல்லவில்லையே.

    இந்த உலகத்தில் 'பணம்' என்பது மிக இன்றியமையாததாக இருக்கிறது, மனிதர்களுக்கு. அதனால் பணத்தை வைத்து நிறைய சாதிக்கப்பார்க்கிறார்கள். நீங்க தட்டில் 100 ரூபாய் போடுங்கள், இறைவனின் மாலையை உங்களுக்குப் போடுவார்கள், 1000 ரூபாய் கொடுங்க, பிரசாதமும் தருவாங்க. ஆனால் இந்தத் தவறுகளைச் செய்பவர்கள் மனிதர்கள்.

    கொஞ்சம் யோசித்துப் பாருங்க... கருணாநிதி வீட்டில் எத்தனை பேர் வேலை செய்தார்கள், அவர் அருகிலேயே இருந்து வேலை பார்த்தவர்கள் எத்தனைபேர். அவர்களுக்கா எம்.பி. சீட், எம்.எல்.ஏ சீட், கட்சியில் பதவி என்று கருணாநிதி கொடுத்தார்? எங்கோ இருந்து கட்சியை வளர்ப்பவர்களுக்குத்தானே கொடுத்தார். மனிதன் செய்யும்போது சுயநலத்துடன் முடிவு எடுத்தாலும், இறைவன் தராசு போல எல்லோருக்கும் சரி சமமாக அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்றபடிதானே பலன் கொடுப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பணம் வசூலிக்கும் முறையை கொண்டு வந்தது இறைவன் இல்லை மனிதன்தான்... கோவில்களில் நடக்கும் அவலங்களால் பக்தி நம்பிக்கை இழக்கிறதே...

      தாங்கள் சொன்னதில் அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்றபடி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. ஐயா ஒரு சிறிய திருத்தம்.  தட்டு கடைகளுக்கு போஸ்டில் இருந்து கரண்ட் இணைப்புக்கு மின் வாரிய அனுமதியும் அதற்கான கட்டணம்களும் உண்டு. வெளிநாடுகளில் நீங்கள் பஸ் போன்ற வண்டிகளை கொண்டு வந்து தெருக்களில் நிறுத்தி இரவில் உணவு தயாரிப்பதையும் விற்பதையும் கண்டிருப்பீர்கள். அதுபோன்று இங்கும் நகரங்களில் உண்டு. அவைகளுக்கு போஸ்டில் இருந்து கனக்சன் உண்டு. 

    ஆனால் நீங்கள் போட்டிருக்கும் குடிசை இணைப்பு முறையற்றதாகத் தான் தோன்றுகிறது. இது ஆந்திரத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. ஹைதராபாதில் கட்டிட வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்தில் குடிசை போட்டு மின் இணைப்பையும் தற்காலிமாக கொக்கி போட்டு எடுப்பதை கண்டிருக்கிறேன். (டிவி கூட பார்ப்பார்கள்) 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது விளக்கத்திற்கு நன்றி
      இது ஆந்திரா அல்ல தேவகோட்டைதான் ஹி.. ஹி.. ஹி..

      நீக்கு
  11. எல்லோருமே திருடங்க தான் சொல்லப்போனா குருடங்க தான் எனும் இளையராஜா குரலில் ஒலித்த பாடல் நினைவுக்கு வருகிறது கில்லர்ஜி. நீங்கள் இதைக் குற்றம் என்று சொல்லும்போது உங்களை எதிரியாகவே பார்க்கும் உலகம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் உண்மையை பேசுபவனை பைத்தியக்காரன் என்கிறது உலகம்.

      நீக்கு
  12. வழிப்பாட்டு தளங்களும் மருத்துவமனைகளும் இன்றைக்கு நல்ல தொழில்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி
      காசை முன்னுக்கு வச்சான்,
      கடவுளை பின்னுக்கு வச்சான்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவில் தங்கள் ஆதங்கம் தெரிகிறது. குடிசை வீடு டிரான்ஸ்பார்மரின் அருகில் வேய்ந்து கொள்ளலாமா? தீடிரென்று நெருப்பு பொறி வந்து விழுந்து விட்டால் எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர்கள் உணரவேயில்லையா? என்னவோ.. நீங்கள் சொல்வது போல் மக்களின் ஊழலுக்கும் முடிவேயில்லை.

    அந்த மீனாளும் ஆரம்பத்தில் இப்படி மின்சாரம் கண்டு பயப்படாமல், குடிசை வேய்ந்த பெட்டிக்கடை வைத்து எத்தனையாவது ஆண்டு விழா கொண்டாடிய அலுப்பில் போட்டோவில் தைரியமாக காட்சி தருகிறாரோ?:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அது கடை மட்டுமல்ல உள்ளே குடும்பம் வசிக்கிறது நான் பார்த்து விட்டுதான் எழுதுகிறேன். மீனாள் தைரியசாலிதான் போலும் ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு
  14. நீங்கள் சொல்வது உண்மைதான்.
    நேர்மை, உண்மை பேசுபவர்களை பிடிக்காது தான் சிலருக்கு.

    சிலவிஷயங்களை தடுக்க முடியாது .

    பதிலளிநீக்கு
  15. ஓலைக்கூரை மிகவும் பழசு ஆகி விட்டது, சின்ன தீப்பொரி பட்டாலும் உடனே எரிந்து சாம்பல் ஆகிவிடும்
    டிரான்ஸ்பார்மர் வேறு பக்கத்தில் இருப்பது பயம் கொடுக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லவனை கோமாளி என்கிறது சமூகம்.

      டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் மட்டுமல்ல மின்சார இணைப்பே அதிலிருந்துதான் முறையின்றி கொடுத்து இருக்கின்றார்கள்.

      நீக்கு
  16. படத்தை பார்க்கவே பயமாக இருக்கிறது.

    அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவர் என்றால் எல்லா தில்லுமுல்லுகளும் நடக்கும்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வேண்டப்பட்டவருக்கு ஒரு நீதிதான் கிடைக்கிறது.

      நீக்கு
  17. ப்ரெசன்ட் கில்லர்ஜி

    வருகிறென்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கில்லர்ஜி, சில இடங்களில் இப்படியான கனெக்ஷ்ன் கொடுக்க அனுமதி உண்டுதான். ஆனால் இங்கு சரியான முறையில்லை என்றே தெரிகிறது. அதுவும் ட்ரான்ஸ்ஃபார்மர் பக்கத்தில் அந்தக் ஓலைக் கூரையைப் பாருங்கள் நீங்கள் சொல்லுவது போல் தீப்பிடித்தால்....ஒரு வேளை அதற்கும் பணம் கிடைக்குமோ என்னமோ? இங்கு போட்டது தவறு என்பதற்குப் பதில் நஷ்டம் பணம் என்று...

    மேலில் இருந்து கீழ் வரை ஊழல் விரவியிருக்க என்னத்த சொல்ல

    கோயில் வரிசை கட்டணம்...அதிலும் பாருங்க ஸ்பெஷல் க்யூவிலுமே கட்டண வித்தியாசம் உண்டு தெரியும் இல்லையா. 1000 கொடுத்தால் வேறு க்யூ, 500 கொடுத்தால் வேறு க்யூ. எனக்கும் இதில் உடன்பாடு கிடையாது. முற்றிலும். எனவே இப்படியான கட்டணக் கோயில்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுவது வழக்கம். பொதுவாகவே நான் கோயிலுக்குச் செல்வது குறைவு அதுவும் கூட்டம் உள்ள கோயில்களுக்குச் செல்வதை விரும்புவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அதன் இணைப்பு ட்ரான்ஸ்பார்மரிலிருந்துதான் வருகிறது நான் எல்லாவற்றையும் கவனித்து நான்தான் படம் எடுத்தேன்.

      கோவில்களில் கட்டணம் வசூலிப்பது முறையற்றது. ஏன் இதே கடவுளை மனமுருகி வணங்கினால் பலன் தரமாட்டாரா ?

      நீக்கு
    2. ட்ரான்ஸ்ஃபர்மரிலிருந்தே கொடுத்திருப்பது ஒரு வேளை இவங்களாவே போட்டிருப்பாங்களோன்னு தோணுது கில்லர்ஜி அநியாயம்

      கீதா

      நீக்கு
    3. இந்த (அ)நியாயம் தேவகோட்டையில்தான்...

      நீக்கு
  19. வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் வணிகத் தலங்களாகிவிட்டன நண்பரே
    காசில்லாதவன் மணிக்கணக்காய் வரிசையில் நிற்க வேண்டும், காசுள்ளவன் ஒரே நிமிடத்தில் இறைவனைக் கண்டு, ஹாய் என்று ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, தன் பிழைப்பைப் பார்க்கப் போய்விடுவான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இதுதான் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

      நீக்கு
  20. ஊழ்ல் கொஞ்சம் கூட ஷாக் அடிக்கவில்லை போலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. //இந்த நாடு நாசமாவதற்குக் காரணம் மக்களே// ...உண்மை.

    பதிலளிநீக்கு
  22. உங்கள் கோபம் நியாயமானதுதான். இந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிக்கு அனுப்பி பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது யோசனையும் நன்று.

      நீக்கு
  23. எங்கள் ஊரில் நடை பாதைகள் கடை பாதைகளாக இருபது சகஜம்

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஐயா எல்லா ஊரிலும் இந்த தொல்லை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. ஆக்கிரமிப்பு என்பது பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

    பதிலளிநீக்கு
  26. நல்ல ஊரில் நடைபாதைக் கடைகள்
    நல்ல பணிகளைச் செய்கின்றன.
    சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு
  27. உண்மை இன்னும் உறைக்காமல் இருப்பது வேதனை

    பதிலளிநீக்கு
  28. ஒரு சின்ன திருத்தும் ... டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் குடிசை போடவில்லை ... குடிசை பக்கத்தில்தான் யாரோ டிரான்ஸ்பார்மரை நட்டுவிட்டு சென்றுள்ளார்கள். எனவே வழக்கிலிருந்து தப்பிக்கவும், கடைக்காரரை சரிகட்டவும்தான் மின் இணைப்பு கொடுத்துள்ளார்கள். எனவே இங்கு முழு தவறும் மின்சாரவாரிய நிர்வாகத்தினரையே சாரும் ... (இது நம்ம முதலமைச்சரின் "முன்னாள் டீ கடை" போல் தெரிகிறது ... நமக்கு ஏன் வம்ம்பு ... கண்டுக்காதீங்கோ) ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா விசயம் எனக்கு இப்பொழுதுதான் விளங்குகிறது நண்பரே...

      நீக்கு
  29. சாராயத்த வித்து நடக்கிற ஆட்சி எப்படி இருக்கும்.. அப்படித்தான் எல்லாமும் இருக்கும் நண்பரே!

    பதிலளிநீக்கு