நான் ஜெர்மனி போயிருந்த போது சாலைகளில் குறுக்கே நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும் அதில் படகுகளில் மக்கள் உல்லாசமாக பயணிக்கின்றார்கள். இதில் பாலங்கள் தோறும் நான் கண்டது அதன் குறுக்கு கம்பிகளில் விதவிதமான பூட்டுகள் தொங்கின... அதில் தேதிகள் அல்லது காதலர்களின் பெயர்கள் செதுக்கி இருக்கும் அல்லது வண்ணங்களில் எழுதியிருக்கும் இவைகளைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன்.
இது காதலர்கள் போட்ட பூட்டுகள் என்றனர் அதாவது தங்களது காதல் கைகூட வேண்டுமென்ற பிரார்த்தனைகள் அதாவது நம்மூரில் அம்மனிடம் குழந்தை பாக்கியம் கேட்டு வேப்பமரத்தில் தொட்டில் கட்டி விடுவோமே... அதைப் போலவேதான் ஆகவே இவைகளை நாம் கேலி செய்தல் கூடாது காரணம் இது தவறென்றால்... தொட்டில் கட்டி விடுவதும் தவறே... ஆகவே அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.
சரி இதனுடைய சாவிகள் எங்கே ?
சாவியை கீழே ஓடிக்கொண்டு இருக்கும் நதிகளில் வீசி விடுவார்களாம்.
வீசிய சாவிகள் நீரில் உருண்டோடி இறைவனிடம் சொல்லி (?) தனது காதல் கல்யாணத்தில் கைகூடி விடுவதாக நம்புகின்றார்கள் நம்பிக்கைதானே வாழ்க்கை தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை மக்களுக்கு வாறிக் கொடுத்து தனது பூட்டு சின்னத்திற்கு ஓட்டு கேட்கின்றனர் தனக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கைதானே... பணம் வாங்கியவர்கள் மூன்று கட்சிக்காரர்களிடமும் தங்களுக்கே வாக்களிப்போம் என்று சொல்லி வாக்கரிசி போடுகின்றார் என்பது வேறு விடயம். ஹூம் இந்த லட்சணத்தில் மக்கள் சொல்கின்றார்கள் அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றார்களாம் வெட்கம் கெட்டவர்கள்.
அடடே நாமேன் நதிகள் குறித்து பேசும்போது சாக்கடையில் குதிக்க வேண்டும் ? இந்த பூட்டு சாவி விடயம் மடச்செயலோ, மூடச்செயலோ நாமேன் அதனைப்பற்றி கவலை கொள்ளவேண்டும். எனக்கு தோன்றியது என்னவென்றால் பூட்டையும் சாவியையும் இவர்களே பிரித்து விடலாமா ? பிறகு எப்படி இவர்கள் இணைவார்கள் ? ஒரு விடயத்தை சேர்த்து வைப்பதில்தான் நன்மை இருக்கிறதே... ஒழிய பிரித்து பார்ப்பதில் அழகல்ல
இதில் பூட்டு பெண்பாலாம், சாவி ஆண்பாலாம் பரவாயில்லையே இவங்கெளும் நல்லாத்தான் உவமை சொல்லுறாங்கே... சரி இதில் பெண்பாலான பூட்டு மக்களோட பார்வையில் இருக்கிறது ஆண்பாலான சாவி தண்ணீரில் விழுந்து புரண்டு துறுப்பிடித்து மண்ணோடு மண்ணாக மக்கி அழிகிறது. பாவம் ஆண்கள் நிலைப்பாடு உலகமெங்கும் பாவம்தான் போலும். இந்த பழக்கங்கள் ஜெர்மனியில் மட்டுமல்ல, ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்திலும் நான் இவைகளை கண்டேன்
எது எப்படியோ... இங்கு பூட்டுகள் நல்ல வியாபாரம்தான் காரணம் இது அழிவில்லாத தொழில் காரணம் காதல் அழிவதில்லை.
சிவாதாமஸ்அலி-
திண்டுக்கல்லிலிருந்து மொத்தமாக வாங்கிட்டு போனாலும் பாலத்தோரமாக துண்டை விரித்து கூறுகட்டி விற்கலாம் போலயே.... கூறு கெட்டவங்ள்ட்ட...
Chivas Regal சிவசம்போ-
சாவி திரும்பி வரும்னு நம்பிக்கிட்டு இருக்காளுங்களே கொங்காச்சிறுக்கிகள் அதுக்காக கல்யாணம் பண்ணாமல் காத்துக் கிடக்கவில்லையே...
சாம்பசிவம்-
மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவித்தான் கிடக்கிறது போலும் நம்ம நாட்டை விடவா....
காணொளி
1 St ஊஊஒ தேம்ஸ்க்கு கேட்குமா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குபோட் படம் முன்னமே உங்க பதிவுல போட்டுருக்கீங்களோ வேறு ஆங்கிளில்
வருகிறேன்
கீதா
ஆம் பழைய ஜெர்மனி பதிவில் போட்டு இருக்கிறேன்.
நீக்குஉங்கள் கேள்வி எனக்கும் தோன்றியது ஜி. சாவியை ஏன் தண்ணீரில் போடுகிறார்கள் என்று. ம்ம்ம் அவர்களது நம்பிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் இப்படியான நம்பிக்கைகள் உண்டுதான்.
பதிலளிநீக்கு//பாவம் ஆண்கள் நிலைப்பாடு உலகமெங்கும் பாவம் தான் போலும்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். !!!!!!!!!!!!
கீதா
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு இதில் நாம் தலையிட முடியாதுதான்.
நீக்குநான் உண்மையை உளறி விட்டேனோ...
அது சரி,இதுக்கு ஜெமினியும், (கமலும்) உலக்கையும் எதுக்கு? இம்மாதிரி மூட நம்பிக்கைகள் உலகெங்கும் உண்டு. நல்லா இருக்கு பதிவும், படங்களும் நம்பிக்கைகளும்.
பதிலளிநீக்குவாங்க சகோ காதல் மன்னனும், காதல் இளவர(ச)சியு(னு)ம் வேண்டாமா ? வருகைக்கு நன்றி.
நீக்குசில நம்பிக்கைகள் தெரிந்து கொண்டேன்.மதுரையில் சட்டை நாதர் சன்னதி கதவில் அவ்வளவு பூட்டு தொங்கும் அப்புறம் அந்த கதவை கழற்றி விட்டார்கள். இப்போது வீரபத்திரர்கள் சுற்றி போட பட்டு இருக்கும் வேலி கம்பியில் பூட்டை மாட்டி வைத்து இருக்கிறார்கள் எதற்கு என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குகாணொளி பார்த்தேன், கேட்டேன். வாழும் கடவுளை தெரிந்து கொண்டேன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டு தகவல் தந்தமைக்கும் நன்றி
நீக்குஜெர்மனி பூட்டு விஷயத்தில் உங்கள் கேள்வி நியாயமானதே. என் வோட்டு உங்களுக்கே..
பதிலளிநீக்குவாங்க ஜி உங்களது ஓட்டு கடந்து பதிவுக்கு போடவேண்டியதாயிற்றே...
நீக்குஅவா என்றானபின் வோட்டு எப்போ போட்டா என்ன!
நீக்குஅவா... அதுவும் சரியே...
நீக்குகாணொளியில் இரண்டாவது, நான்காவது கருத்துக்குக் கண்கலங்கினேன். கடைசிக்கருத்தில் பாடம் கற்றேன்!
பதிலளிநீக்குபாடம் கற்று கலங்கியமைக்கு நன்றி ஜி
நீக்குஇல்லைஜி.. கலங்கி அப்புறம்தான் பாடம் கற்றேன்!!
நீக்குநன்று ஜி மீள் வருகைக்கும் நன்றி
நீக்குஜெர்மனியினரின் பூட்டு நம்பிக்கை வியப்பைத் தருகிறது
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குபூட்டுகளோடு ஜெர்மனிக்கு போகலாம் ஜி...
பதிலளிநீக்குபிடித்தது : மனுசன், பெரிய மனுசன், ஞாநி, வாழும் கடவுள்...
வாங்க ஜி காணொளியை உணர்ந்து ரசித்தமைக்கு நன்றி
நீக்குவாழும் கடவுள்களைச் சிறப்பித்த காணொளி... அருமை...
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி.
நீக்குஆண்களைத் தான் சிறப்பித்துக் கூறுகின்றனர் இந்தப் பெண்கள்... இவர்களில் எத்தனை பேர் கல்யாணம் ஆனவர்கள் என்று தெரியவில்லை..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் மணமாகி இருந்தால் இந்த ஒப்பனை சுந்தரிகளுக்கு மேக்கப் செட் வாங்கிக் கொடுக்கவே புருஷன்மார்கள் புதுக் கடன் வாங்கி வாங்கி -
போண்டியாகி ஆண்டியாகி இருப்பார்கள்...
ஹா.. ஹா.. முக்கியமான விசயத்தை சொன்னீர்கள் ஜி
நீக்குநல்ல ஆண்களின் சிறப்பினைத் தான் இவர்கள் கூறுகின்றார்கள்....
பதிலளிநீக்குஒருவர் கூட புருஷனைப் புகழ்ந்து பேச வில்லை...
ஆமாம் ஜி
நீக்குஇவர்களின் புருசர்கள் எப்படியோ ?
எல்லாம் சரி தான். தலைப்பை எங்கே இருந்து பிடிச்சீங்க நண்பரே.
பதிலளிநீக்குஹா.. ஹா.. தலைப்பு ஜெர்மன் ரயில்வே ஸ்டேஷனில் கிடைத்தது நண்பரே...
நீக்குஅடுத்த பதிவில் பெண்களின் சிறப்பு..
பதிலளிநீக்குஇங்ஙனம் -
பூரிக் கட்டையால் அடி வாங்கியோர் சங்கம்..
அடுத்த பதிவு ஒரு பெண்ணைப் பற்றிய வாழ்க்கை வரலாறுதான் ஜி
நீக்குஎங்கள் மனதை ஒருவருக்கு ஒருவர் பூட்டுப் போட்டுக்கொண்டதுபோல லாக் பண்ணிவிட்டோம். இனி மற்றவருக்காக அது திறக்காது (இன்னொரு ஆணையோ பெண்ணையோ பார்த்து சஞ்சலப்படமாட்டோம்) என்பது கருத்து. எங்கள் மனத்தைத் திறந்து அதில் நுழையும் சாவி கிடைக்காது.
பதிலளிநீக்குஇந்த வழக்கத்தை சீன் ந்தி (பாரிஸ்) பாலங்களுல் பார்த்திருக்கேன்.
மோதிரம் போட்டுக்கறோம், நெஞ்சில் பச்சை குத்திக்கறோம் என்பது போல இதுவும் ஒண்ணு. (உடனே நயன் சிம்பு பேரை பச்சை குத்தினாங்களேன்னு எதிர் கேள்வி கேக்கப்படாது)
வருக நண்பரே அழகான உண்மை விளக்கம் தந்தமைக்கு நன்றி.
நீக்குஎல்லாம் செரிதேன் கடைசியில் கூத்தாடி கூட்டத்தை இழுத்து விட்டீர்களே...
இதெல்லாம் எல்லா நாடுகளிலும் உண்டு ஜி. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வித பழக்கம். அது மூட நம்பிக்கையோ நம்பிக்கையோ அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. நம் திருவரங்கத்திலேயே கொடிமரம் அருகே நிறைய பூட்டுகள் போட்டுச் செல்லும் வழக்கம் இருக்கிறது. அடுத்த முறை சென்றால் படம் எடுத்து அனுப்புகிறேன்.
பதிலளிநீக்குகாணொளி - ஞானி! :))))) ஹாஹா....
வாங்க ஜி
நீக்குஇந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் இங்கு பார்த்துதான் காப்பி அடித்து விட்டார்களோ...
காணொளியை ரசித்தமைக்கு நன்றி ஜி
ஶ்ரீரங்கம் கோவிலில் பூட்டு நேர்த்தியா? ஆச்சர்யமாக இருக்கிறது. முன்பெல்லாம் கிடையாது. உண்மையில் ஶ்ரீரங்கம் ப்ரார்த்தனை ஸ்தலமே கிடையாது. மோட்ச ரங்கம் என்பார்கள். எங்கும் சுற்றி ரங்கனை சேவி என்பது வழக்கு. நமக்கு முக்தி அளிக்கக்கூடிய தலம் என்பதால் வேண்டுதல்கள் கிடையாது. இப்போது அங்கு துலாபாரம் வைத்திருந்ததை பார்த்தபொழுது கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பாரம்பரியத்தையே மாற்றுகீறார்கள்
நீக்குபணம் எல்லாவற்றையுமே மாற்றித்தான் விடுகிறது.
நீக்குஇந்த கொரோனா நேரத்தில்கூட பிறரின் சொத்தில் ஆசைப்படுகிறார்களே... ?
ஸ்ரீரங்கம் கோயிலில் பூட்டு நேர்த்திக்கடனாகத் தெரியலை. அங்குள்ள கட்டளைதாரர்கள் வைப்பதாகச் சொல்கின்றனர். பிரசாத ஸ்டால்களுக்குக் கொஞ்சம் முன்னாடியே வந்துடும். நாங்க இப்போக் கோயிலுக்குப் போயே ஒரு வருஷம் ஆகிறது! :( வீட்டை விட்டே வெளியேற முடியலை! :(
நீக்குவெங்கட்ஜி திருவரங்கம் என்றும், நீங்கள் ஸ்ரீரங்கம் என்றும் சொல்கிறீர்கள் இரண்டுமே ஒன்றுதானா ?
நீக்குஜேர்மனியின் செந்தேன் மலரே பாட்டு பாடினீங்களோ என வந்தால், எங்க இடத்தில் ஓடும் ஆற்றில் இருக்கும் பாலத்தில் (இப்படி)கட்டிய பூட்டுகள்(நிறைய இருக்கு) பற்றிய பதிவு. எனக்கும் தலைப்புக்கும்,பதிவுக்கும் என்ன சம்பந்தம் என பார்த்தால் கீழ் சொன்ன கருத்தை வாசித்து தெரிந்தாயிற்று.
பதிலளிநீக்குவாங்க சகோ
நீக்குஅந்தபாடல் ஏற்கனவே பதிவில் போட்டு விட்டேனே... நமது தலைப்புகள் எப்படியாவது ஓரிடத்தில் பொருந்தி விடும்.
பூட்டுகள் போடப்பட்ட இதயம் நமக்கு எல்லாம்.
பதிலளிநீக்குநம் துணைவரைத் தவிர வேறு யாரையும் நினைக்க மாட்டோம்.
ஸ்விஸ்ஸில் இதைப் போன்ற பூட்டுகளைப் பார்த்திருக்கிறேன்.
உங்கள் பதிவால் உண்மை விளங்கியது.
சாவிகளாகத் தொலைந்து போன காதலர்கள்
மிக சோகம்.
காணொளி சொல்லும் உண்மை சுடுகிறது.
வருந்தும் கணவர்கள் ஆண்மகன்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது.
கடவுள்தான் நல்வழி காட்ட வேண்டும்.
அன்பு தேவகோட்டைஜி எவ்வளவு கோணங்களில் சிந்திக்கிறீர்கள்.!!!!!!!!!!
மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
வாழ்த்துகள்.
வாங்க அம்மா தாங்கள் இவைகளை பார்த்து இருப்பீர்கள் என்று நினைத்தேன் சரியாகவே உள்ளது.
நீக்குபதிவை விரிவாக அலசி, காணொளி கண்டு கருத்திட்டமைக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு. பூட்டு கதை நன்றாக உள்ளது. ஆமாம்.. நீங்கள் கூறுவது போல் நம்பிக்கைதான் எல்லாவற்றிக்கும் காரணம். ஆனாலும், இப்போதுதான் எவருமே காதலை தத்தம் மனசுக்குள் பூட்டி வைக்காமல், தைரியமாக வீட்டில் சொல்லியோ , சொல்லாமலோ சாதித்து விடுகிறார்களே..! ஹா. ஹா.ஒருவேளை "பூடகமாய்" வீட்டில் சொல்ல முடியாதவர்களுக்காக இந்தனை பூட்டுக்களோ? எனினும் அவர்களது நம்பிக்கைகளும் நிறைவேறட்டும். இந்த பூட்டின் கதைகள் உங்கள் பதிவில் ஏற்கனவே படித்த மாதிரியும் நினைவிருக்கிறது.
தலைப்பு பொருத்தமாக வைத்திருக்கிறீர்கள். (நான் அவ்வை சண்முகி திரைப்பட கதையை சொல்கிறேன்.ஹா ஹா.) காணொளி பிறகு கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குஎப்படியாவது இவர்களது காதல் கை கூடட்டும். ஆமாம் சகோ முன்பு இதனுடைய குறிப்பு கொடுத்து இருந்தேன்.
உங்களுடைய நினைவாற்றலுக்கு வாழ்த்துகள். காணொளி பார்க்கவும்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நம்பிக்கை போலும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
பதிலளிநீக்குஅந்த காணொளியில் பேசியவர்கள் எல்லாம் செயற்கையாய் பேசியதுபோல் தோன்றியது எனக்கு.
வருக நண்பரே...
நீக்குகாணொளியை எடுத்தவன் துப்பாக்கி முனையில் பெண்களை பேசவைத்து இருப்பானோ... ஹா.. ஹா..
நெஞ்சு பொறுக்குதில்லையே
பதிலளிநீக்குவாங்க ஐயா ஏன் இப்படி சொல்கிறீர்கள் ?
நீக்குதினத்துக்கு நாலு பூட்டுகளை கொண்டு வந்து எடைக்கு எடை போட்டாலே கணிசமா காசு கிட்டும்..
பதிலளிநீக்குஐடியா இல்லாத பயலுக..
வாங்க சகோ, அதானே பேரீட்சம்பழமாவது வாங்கித் திங்கலாமே...
நீக்குகடல் கடந்தாலும், நம்பிக்கை என்பது மாற்ற முடியாதது போலுள்ளது.
பதிலளிநீக்குஆம் முனைவரே எங்கும் அறியாமை நிறைந்தே இருக்கிறது.
நீக்குஉலகம் முழுவதுமே ஏதோ ஒரு மூட நம்பிக்கை மக்களை ஆட்டிப் படைக்கிறதுதான்
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆம் வெளியே வருவதற்கு வழி தெரியவில்லையோ...
நீக்குஅண்டசராசரம் அதுபாட்டுக்கு இயங்கிட்டிருக்கு. காதலர்களைச் சேர்த்துவைக்கிறது தவிரக் கடவுளுக்கு வேறு வேலை இல்லேங்கிறதை மக்கள் நல்லாவே புரிஞ்சிகிட்டிருக்காங்க!
பதிலளிநீக்குஹா.. ஹா.. உங்களுடைய பார்வையும் சரிதான் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குஇதை பார்த்து நம்ம ராஜகுமாரன் காதல் பூட்டு என்ற தலைப்பில் சினிமா எடுக்கப் போறார்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா ஹா.. ஹா.. தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குநண்பரே,
பதிலளிநீக்குபூட்டுப்பற்றி எமது வெனிஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தேன், அப்போதே அங்கிருந்த பூட்டுக்கள் அகற்றப்பட்ட காட்சியையும் கண்டேன். பூனை கண்ணை மூடிக்கொண்டாள் இந்த பூலோகமே இருட்டு என்று நினைத்துக்கொள்ளுமாம்.அதுபோலத்தான், இந்த போட்டுப்போட்டு சாவியை தண்ணீரில் தூக்கி எறிபவர்களின் எண்ணமும்.
காணொளியில் வரும் அந்த கடைசி பெண்ணின் பேச்சு தெய்வ வாக்கு. இங்கே அப்பாக்கள் தினம் (Fathers'Day) கொண்டாடும் தருணத்தில் காணொளி பகிர்ந்தமை கூடுதல் சிறப்பு.
வருக நண்பரே தங்களது விளக்கமான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்குசில நம்பிக்கைகள் வேடிக்கையாக இருந்தாலும் சுவாரசியம். பூட்டு பெண்பால். அது பாவம் மனது நிறைய காதலை வைத்துக்கொண்டுக் கம்பிகளில் காத்திருக்கும். ஆண்பால் சாவி அனைத்தையும் அனைவரையும் எதிர்த்து நீச்சலடித்துப் பெ|ண்ணைச் சேர வேண்டும். இதைவிட சாவிக்கு வேறு என்ன வேலை?
பதிலளிநீக்குவாங்க அபிநயா சாவிக்கு சவால் விட்டதை ரசித்தேன்.
நீக்குதொடர் வருகைக்கு நன்றிகளும்...
நீங்க உங்கட குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்கிறீங்க, காருக்கு மாலை போட்டு பொட்டுப் போடுறீங்க... அப்படித்தானாக்கும் அவர்கள் பூட்டுப் போடுகிறார்கள் கில்லர்ஜி...பரிஸ் லயும் இப்படிப் பூட்ட இடமே இல்லாமல் பூட்டுக்கள் தொங்குது... என் பக்கமும் படங்கள் போட்டேன்...
பதிலளிநீக்குஅடடே நீங்கள் சொல்வதும் சரிதான் காருக்கு மாலை போடுவதால் விபத்து நடக்காமலா இருக்கிறது.
நீக்கும்ஹூம்ம்ம்ம் ஆண்கள் பாவம் எனச் சொன்னதால வீடீயோவை இணைச்சிருக்கிறீங்க:)... மாறிச் சொல்லியிருந்தா திட்டியிருப்பீங்க கர்ர்ர்ர்:)... நான் இந்த வீடியோவை சின்மயி அக்காவுக்கு:) அனுப்பப் போறேன்:).. லக்ஸ்மி ஆன்ரியும் பார்க்கக்கூடும் ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஅப்போ அவ்வைப்பாட்டியின் அரிது அரிது... பாட்டுப் பொய்யாகிட்டுதே இங்கு:)... ஹா ஹா ஹா இதுக்கு மேல வாணாம் மீ ஓடிடுறேன்ன்ன்ன்:)
காணொளி கண்டு பொறாமையோ...
நீக்குசின்மயி அக்காவா ? லக்ஷ்மி ஆண்டியா ?
இந்த நம்பிக்கை குறித்த உங்கள் சிந்தனை மிகவும் இரசிக்கும்படியாக உள்ளது...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குகவிஞரின் வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குஅவரவர்க்கு அவரவர் (மூட)நம்பிக்கை! இப்படி பூட்டு போட்டு வேண்டிக்கோள்ளும் பழக்கத்தை மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலிலும் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஎன்னது"இது வில்லங்கமான தலைப்பாக இருக்கிறதே என்று கொஞ்சம் பயந்து கொண்டேதான் திறந்தேன்.
தங்களது தகவலுக்கு நன்றி
நீக்குஹா.. ஹா.. இந்த தலைப்பில் வில்லங்கம் இருக்கிறதா ?
என்னாது... காதல் அழிவதில்லையா...? அந்த ஆண்பால் சாவி மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்து விடுவதாக சொன்னீங்களே!!!
பதிலளிநீக்குநண்பரே காதலர்கள்தான் அழிகிறார்கள்.
நீக்குகாதல் அழிவதில்லை.