தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 29, 2022

தைவான், தைமகள் தையல்நாயகி

சித்திரையில் உதித்த முத்திரை நிலவே
வைகாசியில் வளர்ந்த வைதேகி மலரே
ஆனியில் முளைத்த ஆசைக் குயிலே
 
ஆடியில் தேடிய மாங்கனி முத்தே
ஆவணியில் தாவணி போட்ட மொட்டே
புரட்டாசியில் புரட்டிய புதுப்புத்தகமே
 
ஐம்பசியில் வந்த ஐம்பொன் சிலையே
கார்த்திகையில் கனிந்த கனிக்கரும்பே
மார்கழியில் மலர்ந்த மகரந்தச் சொல்லே
 
தையில் வைத்த தைவான் கிளியே
மாசியில் பூசிய பூங்குழல்ச் சரமே
பங்குனியில் படர்ந்த மங்குனி மகளே
 
சாம்பசிவம்-
காதலுக்கு கண்ணு, மண்ணு தெரியாதுனு சொல்றது இதுதான் போல....
 
Chivas Regal சிவசம்போ-
கடைசியிலதான் தெரியுது நம்ம மங்குனி மகள்னு...

23 கருத்துகள்:

  1. மாதங்களில் அவள் மார்கழி என்று பி பி எஸ் பாடினார்!  நீங்கள் எல்லா மாதங்களையும் அவளுக்கே கொடுத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. அருமை.. அருமை..

    அப்படியே ஆங்கில மாதங்களில் அழகியை(!)ப் புரட்டி எடுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது வேறயா ?

      நீக்கு
    2. இதோ ஆங்கில மாத பதிவு உடனே தயாராகி விட்டது ஜி

      நீக்கு
  3. இளமை வெகு வேகமாகத் திரும்புகிறதே... அதுவும் ஆப்பிரிக்கப் பெண்ணைப் பார்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இளமைக்கும், கற்பனைக்கும் பந்தமென்ன ?

      முதிர்ச்சி தானே முழுமை தரும்.

      நீக்கு
  4. ஜனவரியில் வந்த வனமகளே, மே நில் வந்த மேகலையே..... லாம் மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜனவரி, மே இது ஆங்கில கவிதைக்கு அடிப்படையா ?

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மங்குனி மகளோடு தமிழ் மாதங்களை இணைத்து அருமையான கவி பாடி விட்டீர்கள். ரசித்தேன். ஆனால் அந்த ஊரின் அந்தப்பெண்ணுக்கு தமிழ் புரியுமா என்ற சந்தேகம் லேசாக வருகிறது.:) இப்போதுள்ள குழந்தைகளே ஆங்கில மாதங்களைப் போல் தமிழ் மாதங்கள் சொல்லத் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஆனாலும் உங்கள் கவிச்சொற்கள் தங்கு தடையின்றி அடுக்கடுக்காக அபாரமாக வந்து சேர்ந்திருக்கின்றன. தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  6. மங்குனி மகளோடு பிறந்த பன்னிரு மாதங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி நீங்க பாடிட்டீங்க...சிவதாமஸ் அலி முடிச்சு வைத்துவிட்டார் பாருங்க...!!!!!
    ஆடி க்கு ஏற்றார் போல எதுவும் கிடைக்கலையோ...மாங்கனின்னு போட்டிருக்கீங்களே ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக "ஆவடி முத்தே" என்று போட்டு இருக்கலாமோ ?

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. தலைப்பும் , கவிதையும் அருமை.
    தைவான் தையல்நாயகி மகிழ்ச்சி அடைத்து இருப்பார் கவிதை படித்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பதிவில் கூட சமீபத்தில் தையல் நாயகி வந்தாரே...?

      நீக்கு
    2. ஆமாம், என் பதிவில் சகோ துரைசெல்வராஜூ பதிவில் எல்லாம் தையல் நாயகி வந்தார்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  9. தை, தைனு குதிச்சுட்டாங்க போங்க! அருமையான கற்பனை.

    பதிலளிநீக்கு