வணக்கம் நண்பர்களே... இறந்தவனை சுமந்தவனும்
இறந்திட்டான்’’ என்ற கவிஞர் ஆலங்குடி சோமு
அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் இது திரைப்பட நடிகர்
திரு. எஸ்.ஏ.அசோகன் அவர்கள் நான் எனது அப்பா வயிற்றில் இருக்கும்போதே பாடியிருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் கீழே யூட்டியூப்பின்
இணைப்பும் கொடுத்துள்ளேன்.
இதோ எனது பாடல்...
பிறந்தவனால் சுமந்தவளும் மகிழ்ந்திட்டா
அதை சுமக்காதவ எண்ணிப்பார்த்து வருந்திட்டா
பிறந்தவனால் சுமந்தவளும் மகிழ்ந்திட்டா
அதை சுமக்காதவ எண்ணிப்பார்த்து வருந்திட்டா
உணர்ந்து உணர்ந்து குணம் நாடி லாபத்தில் நீயோடி
உணர்ந்து உணர்ந்து குணம் நாடி லாபத்தில் நீயோடி
வளர்ந்து வந்த நாள் முதலாய் போர்க்களத்தில் நீ தேடி
பிறந்தவனால் இப்படி
பிறந்தவனால் சுமந்தவளும் மகிழ்ந்திட்டா
அதை சுமக்காதவ எண்ணிப்பார்த்து வருந்திட்டா
ஆழ்வாரின் போதனையில் பயிலுறான்
மனுஷன் தானாவே விழுந்தெழுந்து படிக்கிறான்
ஆழ்வாரின் போதனையில் பயிலுறான்
மனுஷன் தானாவே விழுந்தெழுந்து படிக்கிறான்
தடையில் ஓயாமல் மகிழ்ச்சியிலே குதிக்கிறான்
தடையில் ஓயாமல் மகிழ்ச்சியிலே குதிக்கிறான்
பலநாள் உடமையோடு எங்கெங்கோ மிதக்குறான்
பலநாள் உடமையோடு எங்கெங்கோ மிதக்குறான்
இப்படி பிறந்தவனால் சுமந்தவளும் மகிழ்ந்திட்டா
அதை சுமக்காதவ எண்ணிப்பார்த்து வருந்திட்டா
புலமையிலே ஒருநாள் வளமையிலே மறுநாள்
புலமையிலே ஒருநாள் வளமையிலே மறுநாள்
மகிழ்ச்சியிலே ஒருநாள் நெகிழ்ச்சியிலே பலநாள்
அன்புத் துணைவியும் பெருமைப் பிள்ளையும்
அன்புத் துணைவியும் பெருமைப் பிள்ளையும்
பன்னீர் தெளித்திடவே இறுதிவரைத் திருநாள்
இறுதிவரைத் திருநாள்...
இப்படி பிறந்தவனால் சுமந்தவளும் மகிழ்ந்திட்டா
அதை சுமக்காதவ எண்ணிப்பார்த்து வருந்திட்டா
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
வருடம்: 1965
படம்: இரவும் பகலும்
பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர்.பாப்பா
பாடியவர்: எஸ்.ஏ.அசோகன்
இதோ ஆலங்குடியாரின் பாடல் வரிகள்
இதில் உள்ளது போலவேதான் பாடகரின்
உச்சரிப்பு இருக்கிறது.
எறந்தவனே சொமந்தவனும்
எறந்துட்டான் அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க
மறந்திட்டான்
எறந்தவனே சொமந்தவனும்
எறந்துட்டான் அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க
மறந்திட்டான்
பறந்து பறந்து பணம் தேடி
பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி
பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப்
பேராசையுடன் உறவாடி
இறந்தவனே - அப்படி
எறந்தவனே சொமந்தவனும்
எறந்துட்டான் அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க
மறந்திட்டான்
தாயாரின் வேதனையில்
பிறக்குறான் மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சி
இறக்குறான்
தாயாரின் வேதனையில்
பிறக்குறான் மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சி
இறக்குறான் இடையில்
ஓயாத கவலையிலே மிதக்குறான்
இடையில்
ஓயாத கவலையிலே மிதக்குறான்
ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ
பறக்குறான்
உடலை மட்டும் போட்டு எங்கோ
பறக்குறான் அப்படி
எறந்தவனே சொமந்தவனும்
எறந்துட்டான் அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க
மறந்திட்டான்
இளமையிலே சில நாள் முதுமையிலே
சில நாள்
இளமையிலே சில நாள்
முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள்
துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப்
பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப்
பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி
ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள் அப்படி
எறந்தவனே சொமந்தவனும்
எறந்துட்டான் அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க
மறந்திட்டான்
குறிப்பு – நான் எழுதி வரும் உல்டா பாடல்கள் மகிழ்ச்சியான பாடல்களோ, சோகமான
பாடல்களோ வார்த்தைகளை எதிர்பதமாக எழுதுகிறேன். உண்மையான வரிகளில் கவிஞர்கள்
சொல்வதில் ஒரு கருத்தை முன் வைத்திருப்பார்கள் அதைப் போலவேதான் நானும் ஏதாவது
விடயத்தை சொல்வது போல் முயல்கிறேன். கவிஞர் அப்பா என்று சொல்லியிருந்தால்
நான் டப்பா என்று சொல்லியிருக்கலாம் அதுவும்கூட ஏதோவொரு காரணத்தில்
பொருந்தி விடும் என்பதே உண்மை. கவிஞர்களின் வரிகளுக்கு நான் எந்த மாதிரி வரிகள்
கொடுக்கிறேன் என்று ஒப்பீடு செய்து பாருங்கள் புரியும். இந்த சோகமான பாடல்
இறப்பைக் குறித்தது நான் இதையே மகிழ்ச்சியாக பிறப்பைக் குறித்து எழுதி
இருக்கிறேன்.
இதோ யூட்டியூப் இணைப்பு
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
எனக்கு மிகவும் பிடித்த பாடல் "இறந்தவனைச் சுமந்தவனும்". அதன் மூடிற்கு எதிர்ப்பதமாக நீங்கள் எழுதியுள்ளதை ரசித்தேன். நல்ல முயற்சி
பதிலளிநீக்குவருக தமிழரே ரசித்தமைக்கு நன்றி.
நீக்குஅம்மாவின் மறைவு உங்களை இந்தப் பாடல் எழுத வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல முயற்சி.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்ல முயற்சி. பாடல் நன்று.
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குமனதைக் கலங்க அடித்து விட்டீர்கள்
பதிலளிநீக்குஎனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும்..
பதிலளிநீக்குஇருக்கட்டும்..
மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் ஜி!..
வருக ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅசோகன் பாடிய பாடலை இப்போது மதுரை வந்த பின் அடிக்கடி கேட்கிறேன்.
பதிலளிநீக்குஎங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு பக்கத்து தெரிவில் யார் இறந்து போனாலும் இந்த பாடல் வைத்து விடுவார்கள். அசோகன் நடித்த பாதகாணிக்கையில் உள்ள பாடல் வீடு வரை உறவு பாடல், எட்டுஅடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என்ற சினிமாவில் வரும் அத்தனை சோக பாடல்களும் எனக்கு அத்துபடி.
மதுரை மக்களுக்கு இன்பம் , துன்பம் இரண்டுக்கும் சினைமா பாடல் வேண்டும்.
அசோகன் மிக அருமையாக பாடி இருப்பார் இந்த பாடலை.
நீங்கள் எழுதிய பாடலும் மனதை கலங்க வைக்கிறது.
முற்றும் துறந்த பட்டினத்தாருக்கே அம்மாவின் பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்.
உங்கள் சோகங்களை கொட்டி ஆற்றி கொள்ளுங்கள்.
வருக சகோ தங்களது அனுபவத்தை விரிவான கருத்துரை மூலம் தந்தமைக்கு நன்றி.
நீக்குதெருவில், சினிமா
பதிலளிநீக்குஉணர வேண்டிய நல்ல பாட்டு ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குஇந்தப் பாடலை நான் இன்று வரை கேட்டதே இல்லை. மூலமும் நன்றாக உள்ளது. உங்கள் ஆக்கமும். என்னதான் பாடலை வார்த்தைகளை மாற்றிப் போட்டு எழுதினாலும் அந்த மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகளைப் பொறுக்கிப் போட்டு எழுதுவது தனிக்கலை. உங்களுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது. அம்மாவை இழந்த துயரில் இருந்து மீண்டு வாருங்கள்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது ஆறுதலான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குஅன்பின் தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் பிறக்கும் முன்னர் வந்த பாட்டாக இருந்தாலும் எல்லோரும் உணர வேண்டிய பாடல்.
அருமையான பாடலுக்கு எதிர் பொருள் கொடுத்து
மனதை அமைதி பெறும் பொருளில்
கொடுத்து விட்டீர்கள்.
மிக அருமை. நிறைய எழுதுங்கள் அம்மாவும் உங்களுடன் வருவார்.
வாங்க அம்மா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குகில்லர்ஜி, இந்தப் பாட்டை, எங்கள் தளத்தில் துளசி இந்தப் பாட்டின் தலைப்பில் ஒரு பதிவு (அவர் பெரியப்பா மகன்/அண்ணன் மறைந்த போது) எழுதினார் அப்போதுதான் இந்தப் பாட்டை முதன் முதலில் கேட்டேன். அருமையான பாடல்வரிகள்.
பதிலளிநீக்குஉங்களின் திறமை எப்பவும் சொல்வது போல அருமை. மெட்டிற்குப் பாடல் வரிகள் எழுதுவது என்பது திறமை. கில்லர்ஜி, பாட்டு வரிகள் இல்லாமல் ஏதேனும் ஒரு இசை மட்டும் கிடைத்தால் அதற்கு உங்கள் திறமையைப் பயன்படுத்தி ஒரு பாட்டு எழுதிப் பதிவாக்குங்களேன்!
கீதா
வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
நீக்கு//ஏதேனும் இசை//
இது எனக்கு புரியவில்லையே...
அம்மாவின் நினைவில் அமைத்த பாடல் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த திரைப்பட பாடல் இப்போதுதான் கேட்கிறேன். பாடல் மனதை சோகத்தால் பிழிகிறது. தாங்களும் அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தந்து பாடலை மாற்றியமைத்திருப்பது நன்றாக உள்ளது. உங்கள் மனதின் சோகமும் புரிகிறது. மறக்க முடியாத உறவல்லவா? என்னதான் நாங்கள் இப்படி சமாதானபடுத்தினாலும், அந்த வலிகளின் வேதனைகள் அகல சிறிது காலம் பிடிக்கும். இப்படி பதிவின் பக்கங்களுக்கு வந்து சற்று மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
நேற்று சில வேலைகள், மற்றும் உடல் அசெகரியத்தினால் என்னால் வரவியலவில்லை. இன்று தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். காலையிலிருந்து சார்ஜ் எடுத்துக் கொள்ள என் கைப்பேசியும் முரண்டு பிடிக்கிறது . இப்போதெல்லாம் அவ்வப்போது அதற்கும் வயதாகி விட்டதை அறிவிக்கிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
நீக்கு