தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 06, 2018

கோவிந்த ஹரிமேலி




நான் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’அது’’ எனது கண்ணில் பட எழுந்து அதனருகே போன என்னை அந்த அதிகாரி வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார். நான் அந்த புகார்ப்பெட்டி அருகே போய் அதன் மேலிருந்த படிவங்களை எடுத்து படித்துப்பார்த்தேன் இதை அங்கிருந்த அதிகாரிகள் மட்டுமல்ல, அனைத்து பயணிகளும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் படிவத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இந்த மூன்று மொழிகளிலும் எழுதலாம் என்று இருந்தது இதில் எழுதி பொய்யானவர்களின் முகத்திரையை கிழித்தால் என்ன ?

ஹிந்தியில் எழுதலாமா ? நிச்சயமாக தவறு வந்து விடலாம் சந்தேகம் கேட்பதற்கு ஹிந்தி நண்பர்களும் கிடையாது ஆங்கிலத்தில் எழுதலாமா ? நமக்கு முதுகுவலி வருமே தமிழ் இனிய தமிழ் இதுவே நமக்கும் சரி இவனுகளுக்கும் சரி சரியென படிவம் கேட்டிருந்த கோடிட்ட இடங்களை எனது கைகளை கொண்டு அழகிய தமிழ் எழுத்துக்களால் நிரப்பினேன் படிவம் இப்படித்தான் இருந்தது கீழே பாருங்களேன்.

புகார் அளிப்பவரின் பெயர் :                 சிவாதாமஸ்அலி
புகார் அளிப்பவரின் வயது :                 பதினெட்டு மட்டுமே
புகார் அளிப்பவரின் கடவட்டை எண் :       K 5326840
புகார் அளிப்பவரின் குடியுரிமை நாடு :       இந்தியா
புகார் அளிப்பவரின் மாநிலம் :               தமிழ்நாடு
புகார் அளிப்பவரின் ஊர் :                   தொங்குணான்டி பாளையம்
புகார் அளிப்பவர் தற்போது வசிக்கும் நாடு : உகாண்டா

இப்படி உண்மையை உள்ளபடி நிரப்பி கீழே புகாரில் எழுத வேண்டிய விசயங்களை விலாவாரியாக எழுதி மடித்து புகார்ப் பெட்டியில் போட்டு விட்டு திரும்பினேன் நான் கண்டகாட்சி எனக்கு மேலும் சூடேற்றுவது போலிருந்தது ஒரு அமெரிக்கர் அவருடைய காதலியை நிற்க வைத்து விதவிதமாய் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார் எனக்கு வந்துச்சு கோபம் விறு விறு விறு விறு விறுன்னு நேராப் போனேன் அந்த சுங்க அதிகாரியிடம் அதோ எடுக்கிறானே…. அமெரிக்கன் அவனுட்ட உங்க விதிமுறையை சொல்லலாமே... அவர் எனக்கு பதில் சொல்ல வாயை திறக்கும் பொழுது... ‘’டிங் டாங்’’ வணக்கம் பயணிகள் கவனத்திற்கு மதுரையிலிருந்து அபுதாபி செல்லும் விமானம் இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட்டு போகத்தயாராக இருக்கிறது பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திற்குள் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி.

பயணிகள் அனைவரும் தயாராக நானும் புறப்பட்டேன் அந்த அதிகாரி என்னையும் நான் அவரையும் GUNஇன்றி கண்களால் சுட்டுக் கொண்டோம் விமானம் என்னை சுமக்க நான் குடும்ப நினைவுகளை சுமக்க இருவரும் சேர்ந்து வானில் மேக கூட்டங்களை கிழித்துக் கொண்டு பறந்தோம்...
அய்யய்யோ புகாரில் எழுதியதை சொல்ல மறந்துட்டேனே என்ன தெரியுமா ? கீழே பாருங்களேன்...

கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி
கோவிந்த ஹரிமேலி தும்ஹி நஹி ஹாலி
கோபாலோடு நாஹும் குந்து தீர்த்தனக்கு வாழி

இதைத்தான் பதினெட்டு தடவை எழுதினேன் இது நான் சின்ன வயசுல சௌராஷ்ட்ரா மக்கள் மார்கழி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு போகும்போது அவர்கள் மொழியில் பாடும் பஜனைப்பாடல் நானும் நல்லாப் பாடுவேன் அப்பத்தானே ஓசியிலே பொங்கல் கிடைக்கும் ஹி ஹி ஹி...
சரி அப்படீனாக்கா... அவங்களை பற்றி புகார் எழுதலையா ?
ஏங்க பாவம் ஏதோ நம்ம தமிழன் அவன் பொழைப்பைக் கெடுத்து நமக்கு என்ன லாபம் ? அவனும் நம்மைப் போலத்தான் குட்டிப்புள்ளைக்காரன் ஆகத்தான் இருப்பான். நாம் ஒருவனுக்கு கெடுதல் செய்தால் நமது சந்ததிகளைக் கெடுக்க ஒருவன் பிறப்பான் ஆகவே நம்மால் முடிந்தால் பிறருக்கு நன்மை செய்து நமது சந்ததிகளுக்கு நன்மை செய்ய ஒருவனை பிறக்க வைப்போமே...

//இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்//
அப்படினு, நமது ஐயன் நமக்கு சொல்லித் தரலையா ? ஊர் உலகம் எப்படியோ... எனக்கென்று ஒரு கொள்கையுண்டு அதில் எனது இறுதி மூச்சுவரை உறுதியாக இருப்பேன். – கில்லர்ஜி.

முற்றும்.

47 கருத்துகள்:

  1. நல்ல உணர்வுடைய ஆக்கம் பகிடியும் தான்..
    நன்றி உறவே....
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  2. ஆஆஆஆ மீ தான் 1ஸ்ட்டூஊஊ:)...
    ////இப்படி உண்மையை உள்ளபடி நிரப்பி///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதில நிரப்பியது உண்மையா இல்ல இப்போ எங்களுக்குச் சொல்லியிருக்கும் ஊர் பேர் உண்மையா?:)... எனக்கிதுக்கு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அதுல நிரப்பினது சிவதாமஸ் அலியாச்சே! உண்மை தெரிய சாம்பசிவம் அங்கிளை பிடிங்க!

      கீதா

      நீக்கு
    2. வாங்க அதிரா இதை நீங்க முதல் மரியாதை வீராசாமியிடம்தான் கேட்கோணும்.

      நீக்கு
  3. என்னமோ பெரிய ஹிட்லர் ரேஞ்சுக்கு நம்மை எதிர்பார்க்கப் பண்ணிப்போட்டு , சடாரென காலில விழுபவர் போல இப்பூடி டத்துவம் சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்களே...

    சே சே அந்த மீசைக்குக்கூட ஒரு மருவாதை இல்லாமல் போச்சே:) - இத நான் ஜொள்ளல்ல... ச்றீ சிவசம்போ அங்கிள் ஜொல்லச் சொன்னார்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அங்கிள் சிவசம்போவை எனக்கு கால் பண்ணச்சொல்லுங்க...

      நீக்கு
    2. அவரே கால் ல நிற்கமுடியாமல் எப்பவும் தரையிலயே தவழுறார்:)..இந்த நிலைமையில் உங்களுக்கு ஒரு கால்:) க்கு எங்கின போவார் அங்கிள் பாவமெல்லோ கர்ர்ர்ர்:)..

      நீக்கு
    3. ஓஹோ இலங்கை பாணியில் "கோல்" பண்ணச் சொல்லி இருக்கணுமோ...

      நீக்கு
    4. யா யாஆஅ கில்லர்ஜிக்கு டமில் பழக்கிட்டேன்ன்ன்ன்ன்ன் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி என்பது எல்லோருக்கும் தெரியோணுமெல்லோ:) ஹா ஹா ஹா

      நீக்கு
    5. எங்களுக்கு இதெல்லாம் அபுதாபிலேயே தெரியுமே...

      நீக்கு
  4. என்ன இது...
    மழை நேரத்துல வெடி வெச்சது மாதிரி ஆகிப் போச்சே!..

    எப்படியோ
    உங்களுக்கு சௌராஷ்ட்ர மொழியும் தெரியும்..ந்னு எங்களுக்குத் தெரிந்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் நினைத்திருந்தால் அன்றே அந்தமொழி பழகி இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த சிந்தனையே வரவில்லை. இது ஞாபகத்தில் உள்ள வரிகள் இதுவும் சரியாக இருக்குமென்ற எண்ணமும் இல்லை.

      நீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா ஹா அப்ப அது சிவதாமஸ் அலி! அப்ப ஏர்போர்ட்ல ஆள்மாறாட்டம்னு நினைக்காம என்ன செய்வாங்களாம்!! நல்லகாலம் உங்க மீசை ஒட்டு மீசையோனு இழுத்துப்பார்க்கலை போல

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழுத்திருந்தால் லக்கேஜில் கிடக்கும் கோடரிக்கு வேலை வந்து இருக்கும்.

      நீக்கு
  6. தொல்லை கொடுத்தவனையும் மன்னித்து - அதுவும் உடனே... ஏனெனில் கொஞ்ச காலம் போனாலே மன்னிக்கத் தோன்றாது... - அவரை விட்டு விட்டதற்கு பாராட்டுகள். ஆனால் அவர் மனதில் நீங்கள் என்ன எழுதி போட்டீர்களோ என்று கவலை + பயம் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அந்தப்பயம் கடைசிவரை இருக்கட்டும். வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. காலைவேளையில் நல்லா வயிறு வலிக்கச் சிரிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிப்பு மனதுக்கு நல்லது சிரித்து ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. ஆஹா நல்ல மனசு உங்களுக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவும் உள்ள பழைய மனசுதான் ஜி வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. மிக அருமையான பதிவு.
    இன்னாசெய்தாரை ஒறுத்தல்

    நல்ல கொள்கை வாழ்த்துக்கள்!
    பஜனை பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி. பஜனைப்பாடல் வரிகள் சரியா என்று நினைவில் இல்லை.

      நீக்கு
  10. நல்ல மனம் வாழ்க...

    சௌராஷ்ட்ரா எனக்கு மறந்து விடும் போலிருக்கே ஜி... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஜனைப்பாட்டில் இது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது ஜி

      நீக்கு
  11. சௌராஷ்ட்ர மொழியில் பஜனைப் பாடல் எழுதுவதுதான் இன்னா செய்தவருக்கு நன்னயம்செயலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா புகாரில் புஹாரி ராகம் பாடுவதுதான் செயல் திட்டம்.

      வேறொன்றும் இல்லை.

      நீக்கு
  12. ஏதோ ஆட்டம்பாம் வெடிக்கப் போறீங்கன்னு பார்த்தால் புஸ்வாணமாப் போச்சே....

    இருந்தாலும் நீங்கள் செய்தது நல்லதுதான், சிரிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அந்த ஆளுக்கு குறைந்த பட்சம் ஒரு மாதமாவது உறக்கம் தொலைந்து இருக்கும். இந்த தண்டனை போதும் குடும்பம் பாதிக்ககூடாது.

      நீக்கு
  13. கோவிந்த ஹரி ஹரி கோபால ஹரி.
    கோடரியோடு வந்த புயல் பூவை
    வைத்துவிட்டுப் போய் விட்டது.
    தேவகோட்டையாரே, உங்கள் தாராள
    மனம் என்றும் வாழ்க,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. நான்தான் அப்பவே..சொன்னேன்.. தாங்கள் பல மொழி வித்தகர் என்று...........

    பதிலளிநீக்கு
  15. புகார் அளிப்பவரின் வயது.... பதினெட்டு

    பதினெட்டுக்குமுன் ’என்றும்’ன்னு போட மறந்துட்டீங்கண்ணே

    பதிலளிநீக்கு
  16. GUNஇன்றி சுட்டுக்கொண்டோம்...ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான முத்தாய்ப்பு நண்பரே.
    " இன்னா செய்தாரை " என்ற குறளிலேயே தாங்கள் யார் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  18. நல்ல சஸ்பென்ஸோடு கொண்டு சென்று, அழகாக முடித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. சம்பவத்தை உரிய சஸ்பென்ஸோடு சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம். நலம். நலம்றிய அவா. என்னிடமும் பலமுறை இது போன்ற அதிகப் பிரசங்கி அதிகாரிகள் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். பாஸ்போர்ட்டை அவர்கள் கையில் கொடுத்து விட்டு காத்திருப்பு இருக்கையில் சென்று அமர்ந்து விடுவேன். நான் போய் கெஞ்சுவேன் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் சிறிது நேரம் கழித்து அவர்களே வந்து தந்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி.

      தங்களது அணுமுறையும் நன்றாகத்தான் இருக்கிறது வாழ்த்துகள்.

      நீக்கு