ஆரவல்லி நாம இரண்டு பேரும்
இப்படி ஆடு மேய்க்கும்போது பேசிப்பழகுறது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் ?
விளக்கமாரு நஞ்சுரும்.
உங்க அப்பா பார்த்தால் என்ன ஆகும் ?
பழைய செருப்பு பிஞ்சுரும்
அப்படினா நாம என்னதான்
செய்யிறது செங்கோடா ?
ஆடுகளை பத்திக்கிட்டு
தஞ்சாவூர் பக்கமா போயிடுவோம் விளைச்சல் நல்லா இருக்கும்.
அங்கிட்டு போயிட்டா
நமக்கு பாதுகாப்பு வேண்டாமா ?
அந்த ஊருல துரை செல்வராஜூனு
ஒருத்தர் இருக்காராம் நம்ம கில்லர்ஜி பெயரைச் சொன்னால் உதவுவாராமே...
எப்படி உதவுவாரு ?
நமக்கு கல்யாணம் செய்து வைக்க
சொல்லுவோம் ஏற்கனவே குவைத்ல ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்தவருதானே...
சரி சாப்பாட்டு செலவுக்கு
என்ன செய்யிறது ?
இருக்கிற ஆடுகளை ஒவ்வொன்றாக
வித்து சாப்பிட வச்சுக்கிருவோம்.
எல்லா ஆடுகளுமே முடிஞ்சு
போச்சுனு வச்சுக்க பிறகு ?
நம்ம ஊரு பக்கம் வருவோம்
கண்டிப்பாக ஏத்துகிருவாங்க...
ஒருவேளை என்னோட தாய்மாமன்
சீவலப்பேரி தாலியை அறுத்து வீசிப்புட்டாருனா... ?
நீ உன் வழியில போ... நான்
என் வழி வழியில போறேன்.
அப்ப நீ உழைக்க மாட்டே ? என்னை கழட்டி
விட்டுப்புட்டு நீ வேற ஒருத்தியை கல்யாணம் செய்துக்கிருவே ?
வேற என்ன செய்யிறது... தாய்
தகப்பன் சொல்றதை கேட்கணுமே... ?
இது முதல்ல தோணலையோ....
எந்திரிடா...
என்ன ஆரவல்லி திடீர்னு
அருவாளை எடுக்கிறே... டா போட்டு பேசுறே ?
எனக்கு இன்னொரு பேரு
இருக்கு சூரவல்லி நாளைப்பின்னே உன்னோட ஆடு என்னோட ஆடுகூட மேஞ்சுச்சு உன்னோட ஆட்டை
அறுத்துப் போட்டுவேன் ஜாக்கிரதை.
சொல்லி விட்டு தனது ஆடுகளை
மேற்கு பக்கமாக ஓட்டிக் கொண்டு போனாள் ஆரவல்லி என்ற சூரவல்லி.
Chivas Regal சிவசம்போ-
வீராயி பேத்தி மாதிரி இருக்குதே... ?
சாம்பசிவம்-
தெய்வீக காதலாக இருக்கும் போலயே...
தெய்வீக காதலாக இருக்கும் போலயே...
ஹஆஹ்ஹ ஆரவல்லி செங்கோடன் லேட்டஸ்ட் ஹைடெக் ஆடுமேய்க்கிறவர்களோ :) ஜீன்ஸ் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்காங்களே பிப்ரவரி மாதமும் அதுவும் இன்னும் 2 நாளில் உலக காதலர் வர பொது :) அதுக்குள்ள ஒரு ஜோடியை பிரிச்சுட்டீங்க :)) ஆனா இந்த ஆரவல்லி மாதிரி எல்லா பெண்களும் இருந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும்
பதிலளிநீக்குவாங்க சகோ நானா பிரித்தேன் அவர்களது பியுச்சர் பிளானில் தவறு பிரிந்து விட்டார்கள்.
நீக்குகுவைத் ஜி அவர்களுக்கு தலைவலி விட்டது.
ஆஆஆஆஆஆஆ மீ 1ஸ்ட்டாக ஓடி வருவதற்குள் காத்துக் கிழக்காலே வீசிவிட்டதே கர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜி இது கொஞ்சம்கூட நியாயம் இல்லை ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:))
நீக்குநீங்களும் முந்தி வரலாமே...?
நீக்குமுந்தி வந்திருக்கிறேனே... ஹா ஹா ஹாஅ..
நீக்குஇரண்டாவதுதன்னே....
நீக்கு@Athiradi, Jeans marked culture of the last 140 years probably more than we think. They were first working clothes, then symbols of disobedience only to become fashion items. History of denim and jeans is long and colorful. http://www.historyofjeans.com/
நீக்குஹா ஹா ஹா ஏன் இந்தக் கொலை வெறி?.. பாவம் செங்கோடன்:)).. வீட்டோடு மாப்பிள்ளையாக வச்சிருக்கலாமெல்லோ:))
பதிலளிநீக்குதாய்மாமன் சீவலப்பேரி சீவிடுவானாமே...
நீக்குநல்லவேளையா முதல்லேயே சுதாரிச்சாளே! இப்படி ஒரு சோம்பேறியைக் கல்யாணம் செய்து கொண்டு அவதிப்படாமல்! :)))))
பதிலளிநீக்குஆமாம் இதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு
நீக்குஇந்த மாதிரி சோம்பேறி ஆளுககிட்டதானே பெண்கள் ஏமாறுவாங்க? அது எப்படி உங்க கதையில் மட்டும் பெண்கள் புத்திசாலியாக இருக்காங்க சரி சரி அதிரா ஏஞ்சல் மாதிரி இல்லாமல் நாட்டுல்ல நாலு புத்திசாலி பெண்ணுங்களும் இருக்காங்க என்பதை உங்க கதை மூலம் தெரிஞ்ச்சுகிட்டேன்
பதிலளிநீக்குநம்ம கதையில் வருபவர்களும், வாசகர்களும் புத்திசாலிகளாக இருப்பார்கள். துக்ளக் வாசகர்கள் போல...
நீக்குமுரசொலிக்கு இங்கு வேலையில்லை.
ஆஆஆ இண்டைக்குத்தான் ட்றுத் உண்மை பேசியிருக்கிறார்ர்:))
நீக்குஉண்மையிலேயே இப்போதெல்லாம் இப்படிப்பட்ட மனோபாவக் காதல்தான் நிறைய காணக்கிடைக்கிறது.
பதிலளிநீக்குவாங்க ஜி எவன் இப்போ உண்மையாக நேசிக்கிறான்.
நீக்குஅது சரி...சந்தடி சாக்கில் துரை செல்வராஜூ ஸார் பற்றி ஒன்று சொல்லி இருக்கிறீர்களே.... நிஜம்தானா? துரை செல்வராஜூ ஸார்... அந்த அனுபவத்தை சொல்லலாமே... இல்லை கதையாக கேவாபோ வுக்கு அனுப்பலாமே...
பதிலளிநீக்குஆமாம் பின்னணியில் அவர்தான் இயக்குகிறார் ஆரவல்லியையும், செங்கோடனையும்.
நீக்குசெங்கோடன் ஆரவல்லி - ஆடு மேய்க்க ஏற்ற டிரெஸ்தான். நல்லவேளை கில்லர்ஜி டை லாம் கட்டிவிடலை.
பதிலளிநீக்குபிஞ்ச செருப்பு அருமை. எங்க இருந்துதான் படத்தைப் பிடித்தீர்களோ
வருக நண்பரே இதற்காகவே கடையில் 699 ரூபாய்க்கு புதிய செருப்பு வாங்கி ஒரு செருப்பை கிழித்து படம் எடுத்து இருக்கிறேன் கவனித்தீர்களா ?
நீக்குகாதலர் தினத்துக்கு ஏற்ற கதை. ஹி ஹி
பதிலளிநீக்குஇவர்கள் நவீன்-நாயக் காதலர்களோ..
நீக்குஅப்படித்தான் இருக்கணும் பெண்கள்.தெளிவா முடிவு எடுக்கணும்..அருமை சகோ.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குதொலைக்காட்சியில் பார்த்த செய்தி :- காதலித்து மணந்த கணவன் வேலை பார்க்கவில்லை எந்த வேலைக்கும் போக பிரியபடவில்லை. எல்லோரும் கேலி செய்கிறார்கள் என்று மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று காட்டினார்கள்.
பதிலளிநீக்குசெங்கோடன் மனநிலை அறிந்து ஆரவல்லி தன் வேலையை பார்க்க போனது அருமை.
ஆரவல்லி தப்பித்துக் கொண்டார்.
வாங்க சகோ உழைக்காத சோம்பேறிக்கு குடும்பம் தேவையில்லைதானே....
நீக்குஇந்நிலையில் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற சிந்தையாளர்கள் உயர்வானவர்களே.
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான்.
நீக்குமீள் வருகைக்கு நன்றி சகோ
நீக்குசூரவல்லியின் முடிவு சரி தான் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி ஆடுகூட சேரக்கூடதாமே...
நீக்குபெண்கள் தினத்தன்று போட வேண்டிய கதையை காதலர் தினத்தன்று வெளியிட்டு விட்டீர்கள். தெளிவான பெண்தான். சாதாரணமாக சோம்பேறிகள் பொய்யர்களாகவும் இருப்பார்களே,செங்கோடன் கொஞ்சம் நல்லவன் போல, உண்மையை கூறி மாட்டிக்கொண்டு விட்டான்.
பதிலளிநீக்குவாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்குசோம்பேறி ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சூரவல்லி மாதிரி பெண்கள் இருக்கனும். தெளிவா இருக்கா சூரவல்லி.
பதிலளிநீக்குவாங்க சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்கு1940 களில் ஆரவல்லி சூரவல்லி என்னும்திரைப்படம் வந்திருந்தது அது பற்றியோ என்றிருந்தேன்
பதிலளிநீக்குவாங்க ஐயா அன்றைய கால கட்டத்தில் "ஆரவல்லி சூரவல்லி" ஸூப்பர் ஹிட் படமாச்சே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக உள்ளது. நல்ல துணிச்சலான முடிவு. கொஞ்சம் சபலபட்டு அவஸ்தைபடாமல் முன்னெச்சரிகையுடன் முடிவு எடுத்த ஆரவல்லிக்கு பாராட்டுக்கள். அவரவர்களுக்கு என்ற வாழ்வை வாழ்ந்துதானே ஆக வேண்டும். இனி நல்ல வாழ்க்கையாக இருவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இது போன்ற குவைத் ஜோடிகளை இணைத்து வைத்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள். அந்த உண்மை சம்பவத்தையும், விரிவாக விரைவாக எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்குகுவைத் ஜி அவர்கள் விரைவில் எழுதுவார்.
நல்லவேளை முதலிலேயே புரிந்து கொண்டாளே! காதலர் தினம் சமயம் பார்த்து இப்படி ஒரு பதிவு! :) ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி பதிவை இரசித்தமைக்கு நன்றி.
நீக்குஒரு நவநாகரிக ஜோடி ஆடு மேய்த்துக்கொண்டே காதல் பண்ணுது!!! கில்லர்ஜியால் மட்டுமே இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடிகிறது!. அசத்துங்க நண்பரே.
பதிலளிநீக்கு[இது உங்களுக்கு மட்டுமேயான தகவல்: எனக்கு wattsappஐப் பலமுறை முயற்சித்தும் சரியாகக் கையாளத் தெரியல. நீக்கிட்டேன். வாய்ப்பு அமைந்தால் மீண்டும் முயல்வேன். வருகைக்கு நன்றி]
வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்குஅன்பின் ஜி...
பதிலளிநீக்குநேற்று பதிவு வெளியானதுமே படித்துவிட்டு புல்லரித்துப் போனேன்...
அதனால் தான் உடனடியாக கருத்துரை சொல்ல முடியவில்லை...
சிதறுகாய் அடிக்கிற மாதிரி சொல்லிட்டீங்க...
ஆரவல்லிக்கு வேற எடத்துல மாப்பிள்ளை பார்க்குறாங்களே...
அது தெரியுமா!...
வாங்க ஜி ஆரவல்லிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையா ? இதெல்லாம் உங்களுக்குதானே தெரியும்.
நீக்குசீக்கிரமே அதையும் உங்கள் தளத்தில் அவுத்து விடுங்கள்.
ஆரவல்லி, சூரவல்லியை ஒரே நபராக ஆக்கிவிட்டீர்களே?
பதிலளிநீக்குவருக முனைவரே
நீக்குசூரவல்லியாகி சூரசம்ஹாரம் நடத்தினால்தான் செங்கோடன் போன்றவர்களை சமாளிக்க முடியும்.
ஆத்தீ.... காதலர் தினத்துல கொலை வெறி பதிவா????
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
வருக நண்பரே இதற்கு நான் பொருப்பு அல்ல!
நீக்குஅவன் சோம்பேறி மட்டுமல்ல உண்மையை முன்பே சொல்லிவிட்டதால் நேர்மையானவன் என்றே தோன்றுகிறது நண்பரே.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கூற்றும் உண்மையே...
நீக்குநல்ல வேளை அந்த சூரவல்லி இவனோட "ஆட்டை" அறுத்து போட்டு விடுவேன்னு சொல்லிச்சு .... அதற்கு பதிலாக ஏடாகூடமாக வேறு எதையாவது அறுத்துபுடுவேன்னு சொல்லியிருந்தா செங்கோடன் பாடு திண்டாட்டம்தான் ... அப்புறம் இந்த பெண்ணை மட்டுமல்ல வேறு எந்த பெண்ணையும் வாழ்க்கையில் காதலிக்க முடியாமல் போயிருக்கும்... ம் ம் ம் ... செங்கோடனின் "நாக்கு" வெட்டப்பட்டால் அப்புறம் இதைப்போல் காதல் வசனமெல்லாம் பேசமுடியாதே ... அதை சொன்னேன்....
பதிலளிநீக்குஆமாம் நண்பரே செங்கோடனை குலதெய்வம் தலமாடு காத்தது.
நீக்குசோம்பேரியின் நேர்மை.. நியாமான முடிவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குதாமதமாக வருகிறேன் ஜி மன்னிக்கணும். திருமண
நீக்குஆண்டு விழாக் கொண்டாட்டங்கள்.
ஆரவல்லியை சூரவல்லி ஆக்கின செங்கோடனின் நேர்மைக்கு நன்றி ஏமாத்தாமல் இருந்தானே.
நல்ல கதை. பிய்ந்த செருப்பு மிக ஜோர்.
வாங்கி அறுத்த கதை இன்னும் சூப்பர்:)
துரை தொடருவாரென்று நம்புகிறேன்.
வாங்க அம்மா மன்னிப்பு எதற்கு ?
நீக்குதங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ஆமாம் துரைஜி பகுதியை
தொடரட்டுமே...
காதலர் நாளன்று ஒரு காதல் இணைகளைப் பிரித்துவிட்டீர்களே இருப்பினும் ஆரவல்லி என்கிற சூரவல்லி செய்தது சரியே.
பதிலளிநீக்குவருக நண்பரே நான் பிரிக்க வில்லை.
நீக்குஅவர்களது திட்டங்களில் குளறுபடி.