செவ்வாய், ஏப்ரல் 09, 2019

பொய்யாமொழியர்கள்நாற்பதுக்கு நாற்பது திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.
மு.க.ஸ்டாலின்

இந்தக் கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும்.
பிரேமலதா விஜயகாந்த்

நாட்டு மக்களின் நலனுக்காகவே கூட்டணி அமைக்கிறோம்.
அன்புமணி ராமதாஸ்

நண்பர் ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன்.
கமல்ஹாசன்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ரகசியங்களை வெளியிடுவேன்.
சந்திரகுமார் Ex MLA

இந்தியாவை காப்பாற்ற மோடி அவர்களால் மட்டுமே முடியும்.
ஹெச்.ராஜா

இது ஒரு உணர்வுப் பூர்வமான, உண்மையான வெற்றிக் கூட்டணி.
ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் அறுபது லட்சம் குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி.
எடப்பாடி பழனிச்சாமி

இந்த ஆட்சியாளர்களால் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது எனது தமிழ்நாடு.
வை.கோபால்ச்சாமி

நான் 22 வருட அரசியல்வாதி திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி இல்லை.
சரத்குமார்

அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயமாக கட்டியே தீருவோம்.
ஸ்ரீஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர்

இந்தக் கூட்டணி வெற்றி பெற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.
மருத்துவர் ராமதாஸ்

நாணல் போன்று மக்களுக்காக வளையலாம் ஆனால் தேர்தலுக்காக வளையக்கூடாது.
டிடிவி தினகரன்

அரசியலில் பதினெட்டு வயது முதல் 21 வருடங்களாக தொண்டு ஆற்றி வருகிறேன்.
ரவீந்திரநாத் பன்னீர்செல்வம்

ஆறே வாரங்களில் உங்களது முகத்தை ரத்தச் சிவப்பாக மாற்றலாம்.
ஃபேர் அன் லவ்லி நிறுவனம்

அடகு வச்ச நகையை மீட்க முடிலையா... உடனே சௌதி அரேபியாவுக்கு போங்க...
நடிகை மீனா

Chivas Regal சிவசம்போ-
? ? ?

காணொளி

59 கருத்துகள்:

 1. அவ்வ்வ் :) கிணத்துக்குள்ள திமிங்கிலம் வளர்த்த கதை எவ்ளோ பெட்டர் :)) ஹாஹா மேலே
  தொகுத்திருக்கிற காமெடிங்க இதுக்கும் மேலே :) அம்மாடியோ சாமீ சேவ்ட் மீ .இந்த அரியபெரிய அற்புதங்களை காணமுடியாம என்னை பல்லாயிரக்கணக்கு மைல் அப்பால் தூக்கிப்போட்டாரே :)) .அதில கடைசீ ரெண்டு தாங்க முடியாம இணைச்சாப்பல இருக்கு :))
  இத்தனையும் பார்த்து அந்த சிவசம்போ நிலைமை என்னாச்சோ .

  பதிலளிநீக்கு
 2. கடைசி ரெண்டும் ஹா ஹா ஹா ஹா செமை

  மத்தது ஹிஹிஹி....

  இப்பத்தான் தெரியுது ஏன் ரீகலை காணலைனு!!!! ஹா ஹா ஹா


  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க பெரியப்பா ஐம்பது வருஷமாக ஃபேர்அன்லவ்லி போடுறார்...

   இன்னும் கருப்பாகத்தான் இருக்காரு...

   நீக்கு
  2. கில்லர்ஜி.... நான் ஃபேர் & லவ்லி போட்டால் (முன்பு சில சமயங்களில் உபயோகிப்பேன்), கண்ணெல்லாம் எரியுது (அந்த ஆயில் தோலுக்குள்ளும் இறங்குதுன்னு நினைக்கிறேன்). ஒரு பக்கம் திராவிடம்னு பேசறாங்க. இன்னொரு பக்கம் ஃபேர் & லவ்லி போட்டு வெள்ளை வெளேரென்னு ஆயிடலாம்கறாங்க. ஒண்ணுமே புரியலை.

   நீக்கு
  3. நான் இயல்பாகவே சிவப்பு என்பதால் இதையெல்லாம் உபயோகப்படுத்தியதே இல்லை நண்பரே...

   நீக்கு
 3. ஹாஹா....

  இது அரசியல் காமெடி காலம்.... எல்லாவற்றையும் ரசிக்க மட்டுமே முடியும். யாருமே நல்லவர்கள் இல்லை என்று சொல்லும் நாம் அனைவருமே யாரை தலைவராகக் கொள்வது என்பதைச் சொல்வதில்லை... இங்கே யார் வந்தாலும் இப்படித்தான்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்தையும் ரசித்தேன் ரொம்ப. மீனா சொல்வது புரியவில்லை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி தொ(ல்)லைக்காட்சியில் விளம்பரங்கள் பார்த்ததில்லையோ...?

   நீக்கு
  2. விளம்பரங்கள் பாருங்கள் ஜி ஆயிரம் நையாண்டி பதிவுகள் எழுதலாம் அம்பூட்டு வெசயம் இருக்கு.

   எனது தற்போதைய சூழல் மகிழ்ச்சி இல்லை ஆகவே பதிவுகள் எழுதுவது குறைந்து வருகிறது.

   நீக்கு
  3. கில்லர்ஜி... மீனா மட்டுமல்ல, ராதிகா, அப்புறம் அந்த லலிதா ஜுவல்லரி மாமா.... கடுப்பேற்றுவதற்கே இந்த விளம்பரங்கள். காசு கிடைக்கும்னா, யானை லத்திக்கும் விளம்பரம் பண்ணத் தயங்கமாட்டாங்க இந்த நடிகைகள்.

   நீக்கு
  4. கில்லர்ஜி.... எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். உதவி செய்வது one way என்பதை எப்போதும் மனசுல வச்சுக்கோங்க. அது உறவினர்களானாலும், பிள்ளைகளானாலும் பெற்றோர்களானாலும் சரி. வாழ்க்கையில் எப்போதும் 'நமக்கு நாமே'தான். கையில் சோறில்லை என்றால், காக்கைகளுக்கு நம்மிடம் வேலையில்லை.

   நீக்கு
  5. நண்பரே நம்பிக்கைவாதிகள் எல்லோருமே முதுகில் குத்தும்போது... எனது கணிப்பில்தான் தவறு என்று உணர்ந்து என்மீதே எனக்கு கோபம் வருகிறது.

   நீக்கு
  6. தன் மீது கோபம், இரக்கம் வரவே கூடாது.
   அன்பை கொடுத்துக் கொண்டு இருங்கள் ஒரு நாள் உணர்வார்கள் .
   அவர்களிடம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் வருத்தம் வந்து சேரும்.

   நீக்கு
  7. இனியெனும் முயல்கிறேன் தங்களது ஆறுதலுக்கு நன்றி சகோ

   நீக்கு
 5. சிவசம்போவும் ஏதாவது சொல்லுவாருன்னு எதிர்ப்பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 6. இதை ம்றந்துடீங்களே கில்லர்ஜி

  பாகிஸ்தான் வால் ஆட்டினால் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணியே தீருவோம் - மோடி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எனக்கு தெரியாமல் போய் விட்டதே நண்பரே...

   நீக்கு
 7. இதை ம்றந்துடீங்களே கில்லர்ஜி

  என்னை யாரும் கிண்டல் பண்ணினால் நான் தேம்ஸ் நதியில் குதித்துவிடுவேன்-- அதிரா

  பதிலளிநீக்கு

 8. இதை ம்றந்துடீங்களே கில்லர்ஜி

  நான் என்றும் ஸ்வீட் 16 -- அதிரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப அதிராம்பட்டணம், அதிரடி அதிரா வந்து பதில் ஜொள்ளுவார்.

   நீக்கு
 9. நடிகர் சிங்கமுத்துவை எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல நகைச்சுவை நடிகர். காணொளியை மீண்டும் ரசித்தேன். சிங்கமுத்து நகைச்சுவை மனதை மகிழ்ச்சிப்படுத்துது. இந்த அரசியல்வாதிகளின் பீலாவைக் கேட்டால், பளார்னு விடணும்னு தோணுது. ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிங்கமுத்து மிகத்திறமையானவர் எனக்கும் பிடிக்கும்

   திரைப்படத்தில் வடிவேல் தன்னை ஏமாற்றியதற்காக நிஜவாழ்வில் அவரை ஏமாற்றிய நுண்ணறிவு கொண்டவர்.

   நீக்கு
 10. என்னெனவோ நம்பிக்கைகள் அவற்றில் இவையும் சேர்க்கலாம்

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் அருமை.
  நன்றாக சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. காணொளி பார்க்க முடியவில்லை. சில நேரம் வராது மீண்டும் வந்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. 'குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு' என்பதுபோல் அரசியல்வாதிகள் பேச்சும் தேர்தல் முடிந்ததும் நின்றுவிடும். சிங்கமுத்து நகைச்சுவை போல் அவைகளும் நகைச்சுவைதான் இரசியுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அதற்காகத்தான் இந்த நகைச்சுவை காணொளியை தேர்வு செய்தேன்.

   நீக்கு
 14. நகைக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன தொடர்பு நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சௌதி அரேபியா போனால் சம்பாரித்து அடகு வைத்த நகைகளை திருப்பலாம்.

   அந்த டி.வி. விளம்பரம் பாருங்கள் புரியும்.

   நீக்கு
 15. மீனா சவுதி அரேபியாவுக்கு போக சொல்லுச்சா?!
  நான் இன்னும் அந்த விளம்பரத்தை பார்க்கலியே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு தெரியாத டி.வி. விசயங்களும் உண்டா ?

   நீக்கு
 16. நல்ல நகைச்சுவை. அளந்து விடுவதும் அதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை இதை போன்று பேசுபவர்கள் இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 17. ஃபேரன்லவ்லி மாதிரிதான் பொய்யா மொழியர்களின் கூற்றும்........

  பதிலளிநீக்கு
 18. பொய்யாமொழிகளை தொகுத்த விதம் அருமை. இருந்தாலும் உங்களுக்கு அனைவரின்மீதும் இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே இது பொதுநலத்துக்காகத்தானே... எனது தனிப்பட்ட பகை இல்லையே...?

   நீக்கு
 19. ஒரு பேச்சுக்கு இதை எல்லாம் சொன்னா
  அதைப் பெருசாக எடுக்கலாமா கண்ணா!...

  ஊருக்கு இது புரியும்..உறவுக்கு அது தெரியும்..
  வறுமை கஷ்டம் தீராதுன்னு பிசாசுக்கும் புரியும்...

  சொல்லி வெச்ச வார்த்தை எல்லாம் காற்றோடு போகும்..
  கேட்டு நின்ற ஜனங்க மனசு கனலாக வேகும்..

  கடைசியின்னு ஒரு காலம் வரும்போது
  பொய் சொல்லி வெச்ச மனசுக்கும் புரியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ரசிக்கும்படியான கருத்துரை அருமை.

   நீக்கு
 20. என்றும் பொய்யே மொழியும் மனிதர்களின் சிந்தனைகளை அழகாய்த் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்!

  நெல்லைத்தமிழர் அழகாய் எழுதியிருக்கிறார் வாழ்வியல் பற்றி! அதை என்றும் மனதில் நினைவு வைத்துக்கொண்டால் வாழ்க்கையை அமைதியாக கடக்கலாம். மனதின் சோர்வை களைந்தெறிந்து விட்டு மீண்டும் உற்சாகமாய் உயிர்த்தெழுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  பொய்யா மொழியர்கள் பற்றி அறிந்து கொண்டேன். தன் நிலை உணர்தல் என்பது இதுதானோ. ! மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  தங்கள் மனது அமைதி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். மனமாற்றத்திற்காகவாவது வலையுலகம் வந்து கொண்டேயிருங்கள். தங்களுக்கு சொல்ல வேண்டாம். தங்களுக்கே தெரிந்திருக்கும். ஆயினும், என் மனதின் அமைதிக்காக நானும் வலையுலகிற்கு அடிக்கடி வந்து போகிறேன். அது ஒன்றுதான் தீர்வு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி.

   நீக்கு
 22. முட்டாள் தனமா அவங்க சொன்னா இவங்க ஏன் நம்பறாங்கனு தெரியலையே! இந்த ஃபேர் அன்ட் லவ்லி காரனும் வருஷக் கணக்காச் சொல்லியும் யாரும் சிவப்பா மாறினதாத் தெரியலை! ஆனாலும் அதுக்குப் போய் மக்கள் கூட்டமா விழத்தானே செய்யறாங்க! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இன்றுவரை யாருமே சிவப்பாக மாறி இருக்கின்றார்களா ?
   அரசியல்வாதிகளை புரூடா மன்னர்களாக இருக்கின்றார்களே... ஃபேர் & லவ்லி உரிமையாளர்கள்.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...