தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 05, 2020

முதலாளியும், தொழிலாளியும்


01. பிறவியை பலனுள்ளதாக ஆக்க வேண்டுமென்ற ஞானம் இருபது வயதில் தோன்றினால் பயனுண்டு

02. பிறவியை பாழாக்கி விட்டோமே என்ற புத்தி ஐம்பது வயதில் வந்தால் பயனில்லை

03. இருபத்து இரண்டு வயது மனைவியின் தலையில் மல்லிகைப்பூ சூடிவிட்டால் பலனுண்டு

04. அருபத்து இரண்டு வயது மனைவியின் தலையில் பிச்சிப்பூ வைத்து விட்டாலும் பிச்சு விடுவார்

05. தங்கைக்கு தங்கவளையல் வாங்கி கொடுத்தாலும் தன் வீட்டில் கிடைக்காத பெருமை

06. கொழுந்தியாளுக்கு கொலுசு வாங்கி கொடுத்தால் மாமியார் வீட்டில் பெரும் பெருமை கிடைக்கிறது

07. தனிமையில் செல்லும்போது வழிப்போக்கர்களுக்கு இரண்டு ரூபாய் தர்மம் செய்ய மறுப்பவன் மனது

08. ஹோட்டலுக்கு காதலியோடு செல்லும்போது சர்வருக்கு இருபது ரூபாய் டிப்ஸ் வைப்பதில் மகிழ்கிறது

09. மாலுக்கு சென்று ஷோக்கேஸ் கடையில் 1299 ரூபாய்க்கு சட்டை எடுக்கும்போது திறக்க மறுப்பவரின் வாய்

10. பிளாட்பாரத்தில் எடுக்கும் ஐந்து ரூபாய் கைக்குட்டையை எடுக்கும்போது அரைமணி நேரம் பேரம் பேசுகிறது

11. காசிக்கு சென்று தனது பாவத்தை கழுவி விட்டதாக நினைத்து குளித்து வந்த மனிதன்

12. தனது சகோதரனின் பாகத்தில் கை வைத்து துரோகம் செய்வதில் குளிர்ந்து கொள்கிறான்

13. தனது திருமணத்துக்கு பாட்டிக்கு ஆயிரம் ரூபாய்க்கு சேலை எடுக்க மனம் வராதவன்

14. நண்பர்களுக்கு திருமண பார்ட்டி வைக்க ஐயாயிரம் ரூபாய் செலவு செய்வதில் மகிழ்கிறான்

15. ஊரில் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் முதலாளியை இழிவாக நினைப்பவர்கள்

16. துபாயில் இருப்பவனை பெருமையாக நினைக்கிறார்கள் அவன் கக்கூஸ் கழுவும் தொழிலாளி என்பதை அறியாமல்

ChivasRegal சிவசம்போ-
கொரோனா வந்து ராவுனதுல இனி மனுசனை மனுசனா மதிப்பாங்கே இனி நம்மளைப் போல உள்ளூர் மாப்பிள்ளைக்குதான் மவுசு.

காணொளி

33 கருத்துகள்:

  1. எல்லாமே நன்றாக உள்ளன. ஆனால் வயது போன காலத்திலும் மனைவிக்குப் பூச்சூட்டி விடுவதில் என்ன தப்பு? வயதானாலும் கணவன், மனைவி தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த வயதிலும் பூ வைக்கலாம் அந்ததெந்த வயதிற்கேற்ப நிச்சயம் பலன் உண்டு

      நீக்கு
    2. முழுமையா படிக்கலையா இல்லை வரிசையைப் புரிஞ்சுக்கலையா?

      கொழுந்தியாளுக்கு கொலுசு வாங்கிப்போட்டுவிட்டு, அறுபத்தி இரண்டு வயது மனைவிக்கு பிச்சிப்பூ வைத்துவிட்டால், பிய்க்காமல் என்ன செய்வாள்?

      நீக்கு
    3. இத்தனை காலம் மனைவிக்கு கொலுசு வாங்கித்தராமலேயா இருந்திருப்பார். கொழுந்தியாள் திருமணச் சீராகக் கொலுசு வாங்கிக் கொடுத்ததுக்கும் மனைவிக்குப் பிச்சிப்பூ வாங்கினதுக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்லை. நல்லதே நினைப்போமே!

      நீக்கு
  2. மலையாளத்தில் இருந்தாலும் புரிகிறது. இப்படித்தான் நடக்கிறது. சாலை ஓர வியாபாரிகளிடம் பேரம் பேசும் மனம் இம்மாதிரிக் கடைகளில் சொன்ன விலைக்கு வாங்கிக் கொண்டு வரும்.

    பதிலளிநீக்கு
  3. காணொளிக்கும் பதிவுக்கும் அருமையான பொருத்தம் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  4. அருமை ஜி... ஒவ்வொரு 16-க்கும் குறள் ஞாபகம் வந்தது வேறு எண்ணம்...

    ஆனால் காணொளி...?

    பதிலளிநீக்கு
  5. காணொளி புரிகிறது... தமிழில் பிறந்தது தானே எல்லாம்...

    ஒரு மொழி :

    பிறரை அழிக்க
    தானே உருவாக்கி
    தானே அழித்து
    தானே கற்க
    தானே நினைக்கும்
    மகளிர் பற்றி
    என்ன எண்ணம் ஜி...?

    பதிலளிநீக்கு
  6. நடக்கும் நிகௌகளை செய்திகளை அருமையாக தொகுத்து இருக்கிறிர்கள்

    பதிலளிநீக்கு
  7. தொகுப்பு வெகு சிறப்பு.

    இதற்கு முந்தைய பதிவுக்கு[சேவலும் கோழியும்]வந்த பின்னூட்டங்க்களுக்குப் பதில் இல்லையே!?

    பதிலளிநீக்கு
  8. கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்தே என் கருத்தும்....

    பதிலளிநீக்கு
  9. தெருவில் கடலை வண்டிக்காரனிடம் 10ரூ கடலை வாங்க கொசுறு கேட்பான்,
    ஆனால் தியேட்டரில் 100 ரூ கொடுத்து பாப் கார்ன் வாங்குவான்.

     நீதி : அடிமட்டத்தில் உள்ளவர்களையே அமுக்க முடியும். 

    பதிலளிநீக்கு

  10. இந்தியாவில்தான் ஐம்பது வயதாகிவிட்டால் வய்தானவர்கள் லிஸ்டில் சேர்த்துவிடுகிறார்கள் ஆனால் இங்கே ஐம்பது வயது என்பதும் சாதிக்க கூடிய வயதாகவே இருக்கிறது பலரும் சாதிக்கிறார்கள் இந்த வயதில்

    பதிலளிநீக்கு
  11. கில்லர்ஜி எல்லாம் நல்லாருந்தாலும் சிலது நாட் அப்ளிக்கபில்....ஹா ஹா ஹா

    2. அதென்ன சாதிக்க வயது உண்டா என்ன? அது நம்மூரில்தான். நம்மூர்ல கல்யாணம் ஆனாலே பெரீஈஈஈஈஈஈஈஈஈஈய பெண் என்ற லிஸ்ட்....40 ஆனாலே வயதாகிவிட்டது என்பார்கள் எல்லா உடல்வலியும் சொல்லிப்பாங்க...ஆனால் சாதிக்க வயது தடையே அல்ல.

    நானெல்லாம் 50 நெருங்கும் போதுதான் வலைப்பக்கமே வந்தேன். இது சாதனிய என்ற லிஸ்டில் இல்லை. ஆனால் எந்த வயதிலும் நம் மூளை வேலை செய்து உடல் நன்றாக இருக்கும் வரை சாதனை செய்யலாம். ஏதேனும் நல்லதும் செய்யலாம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. யாரங்கே கொஞ்சம் மதுரை தமிழனை, அல்லிராணியை, அவங்க செக் எல்லாரையும் கூப்பிடுங்க...ஒரு பஞ்சாயத்து....அதெப்படிங்கிறேன் 62 வயசானா மனைவி தலைல பூ வைச்சா பிச்சுப்பிடுவாராமே...வைக்கக் கூடாதா என்ன? என்னன்றேன்...!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. காணொளி சூப்பர் கில்லர்ஜி!!!

    நான் அதை முழுவதும் ஆதரிப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கில்லர்ஜி ஒரு விஷயம்....குறைவான ஸ்டேட்டஸில் இருப்பவர்களை மேலானவர்கள் அமுக்கி ஆளத்தான் நினைப்பார்கள் அதே பணக்காரரிடம் செல்லுபடியாகுமா? யாரேனும் எதிர்ப்பார்களோ? இது வீட்டிற்கும் பொருந்தும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  15. எளியவர்களிடம் பேரம் பேசவே கூடாது.

    அன்புக்கு வயது கிடையாது.

    எத்தனை வயதிலும் சாதிக்கலாம்.

    காணொளி தெரியவில்லை சிறிது நேறம் கழித்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு தடவையும் நினைத்துக்கொள்கிறேன். ஆனா சிலரைப் பார்த்த உடன் நமக்கு அனுதாபம், பாவமாகவும் தோணும். அவங்க கிட்ட பேரம் பேசுவதில்லை. மற்றபடி, கொஞ்சம் விட்டால் சரவண பவன், சங்கீதாவில்கூட பேரம் பேசிடுவேன் போலிருக்கு.

      நீக்கு
  16. பதிவு அருமை
    காணொளி இன்றைய நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  17. குறும்படத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. சர்வருக்கு டிப்ஸ் - யார் கூட வந்தாலும் எனக்கு டிப்ஸ் வைக்க மனம் வருவதில்லை. எல்லாம் சேர்த்துத்தானே (Cost) பொருட்களுக்கு விலை வைக்கிறார்கள். அப்புறம் எதற்கு வேலை பார்ப்பவர்களுக்கு டிப்ஸ் தர வேண்டும்? அப்படிப் பார்த்தால், ஆபீஸில் வேலை செய்யும்போது நம்ம பெட்டி கேஷ் வவுச்சரை கிளியர் செய்யும் கேஷியருக்கும் டிப்ஸ் வைக்கணுமா?

    பதிலளிநீக்கு
  19. //உள்ளூரில் காய்கறி வியாபாரம் செய்பவரை// - நான் பஹ்ரைனில் இருந்தபோது, வார இறுதிகளில் வீட்டைச் சுத்தம் செய்ய ஒருவனின் உதவியை நாடினேன். மாதத்திற்கு 12-15 தினார் சம்பளம். அவர், வந்தால், இருக்கும் 2 மணி நேரத்தில் முழுமையாக சுத்தம் செய்வார். நாம மானிடர் செய்யவே வேண்டாம். அவங்க மெஸ்ல எப்போதும் ஒரே வகையான உணவையே சாப்பிட்டிருப்பார் என்பதால், வெள்ளி அன்று மட்டும் சுத்தம் செய்து முடித்ததும் நான் உணவு தயார் செய்து அவருக்குத் தருவேன். அவர் கம்பெனியில் காண்டிராக்ட் புதுப்பிக்காமல், மதுரைக்குச் சென்று சொந்தமாக, ஸ்டேஷனரி கடை வைக்கப்போகிறேன் என்று சொல்லிட்டு போயிட்டார். நல்ல உழைப்பாளி என்பதால், ரொம்பவே நல்லா இருப்பதாகவும், கூட வேலைக்கு இரண்டு பசங்களை வைத்துள்ளேன் என்றும் சொன்னார். நல்லா உண்மையா உழைக்கிறவன் எங்க இருந்தாலும் பிழைத்துக்கொள்வான்.

    பதிலளிநீக்கு
  20. நீங்க ரைமுக்காக அப்படி எழுதினாலும், எந்தத் தொழில் செய்தால் என்ன (கக்கூஸ் கழுவுவது). செய்யும் தொழில் தெய்வம்தானே.

    பதிலளிநீக்கு
  21. காணொளி முகத்தில் அறைவதுபோலச் சொல்கிறது, உண்மையை. எளியவர்களிடம் நானும் பேரம் பேசுவதுண்டு. அது தவறு எனவும் புரிகிறது. ஆனா பொதுவா மனுஷ மனசு என்பது ஏமாந்தவர்களை ஏறி மிதிப்பதும், வலிமையானவர்களிடம் பணிவதுமாக இருக்கிறது.

    எளியவர்களும் நம் உடையைக் கண்டு விலையை அதிகம் சொல்லி ஏமாற்றப்பார்ப்பதும் நடக்கிறதே.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதலிரண்டு வாசகங்கள் உண்மை. மிகவும் ரசித்தேன். 11ம். 12ம் நம் மக்களின் ஆசையை குறிக்கின்றன. மொத்தத்தில் அனைத்துமே நன்றாக உள்ளது. காணொளியும் உண்மை. சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசி எதையும் வாங்கும் நாம், அதையே பெரிய மால்களில் அங்கு வைத்த விலையை அப்படியே வாய் மூடிக் கொண்டு கொடுத்து வாங்கி வருகிறோம். பதிவுக்கு பொருத்தமான காணொளி. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. காணொளி பார்த்தேன். சிறிமியிடம் விலை குறைத்து கேட்ட அம்மா, அதை அதிகவிலை கொடுத்து கடையில் வாங்குவது .!

    எளிய மக்களிடம் பேரம் பேசாமல் வாங்க சொல்வது அருமை.

    பதிலளிநீக்கு
  24. அனைத்தும் நலம்.
    தேவகோட்டைஜி லாவகம் தமிழ் பேசுகிறது.
    உண்மைகளை மறைத்து என்ன செய்யப்
    போகிறோம் உலகம் இவ்வளவுதான்.

    காணொளி மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
  25. துபாயில் இருப்பவனை....அருமையான யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  26. வழக்கம் போலவே பொட்டில் அறைந்தாற் போல் உள்ளன பல செய்திகள் இப்பதிவில் நண்பரே

    பதிலளிநீக்கு