ஞாயிறு, நவம்பர் 01, 2020

சேவலும், கோழியும்


ம்ம ரங்கதுரை, செல்லத்துரை மேல வழக்கு போட்டுட்டானாமே ஏண்ணே ?
ஆமாடா தம்பி செல்லத்துரை கோழி வளர்க்கிறான் பக்கத்து வீட்டுல இருக்கிற ரங்கதுரை சேவல் பண்ணை வச்சு இருக்கிறான்ல... இதுல செல்லத்துரை கோழிகள் ரெண்டும் பண்ணையில் உள்ள சேவல்களோட கொஞ்சம் அப்படி, இப்படி இருந்துருக்கும் போல... இதுல செல்லத்துரைக்கு தினம் இரண்டு முட்டை கிடைச்சு இருக்கு. இது எங்க சேவலோட முட்டைனு சொல்லி ரங்கதுரை கேட்டு இருக்கான்.

அது எப்படிணே சேவல் முட்டை போடும் ?
அட கூமுட்டை கோழிதான் முட்டை போடும் ஆனால் எங்க பண்ணைக்கு வந்ததாலதான் உன்னோட கோழி முட்டை போடுது அதனால முட்டை எனக்குதான் சொந்தம்னு நீதி மன்றத்துக்கு போயிட்டான்.

இப்ப வழக்கு என்னாச்சுணே ?
நீதிபதி சொல்லிட்டாரு இது இயற்கையின் செயல்பாடு. செல்லத்துரையோட கோழி இனிமேல் ரங்கதுரை பண்ணைக்குள்ளே போககூடாது. அப்படியும் மீறி சேவல்கள் செல்லத்துரையோட கோழிகளோடு சேர்ந்தால் அவரது கோழிகளின் காமஇச்சைகளை தூண்டி விடுவதால் சேவல்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விடப்படும்’’னு தீர்ப்பு வழங்கிட்டாரு.

தீர்ப்பு வந்துருச்சுல இனி பிரச்சனை இல்லையே... ?
அதான்டா.. ரங்கதுரையும் பதினாறு அடிக்கு சுவர் எழுப்பி பண்ணையை மறைச்சு வச்சு இருக்கான். இப்ப பிரச்சனை வேற ரூபத்துல வந்துருச்சு.

என்ன பிரச்சனை அண்ணே ?
சேவல்கள் தினம் அதிகாலைல மொத்தமாக கூவ ஆரம்பிச்சுடுச்சு.

சேவல் கூவுறது இயற்கைதானே ?
அட வெளங்காமட்டை அது தினம் அப்படி இப்படி இருந்த பழக்கப்பட்ட சேவல்களா... அது கோழிகளை தேடி கூவ ஆரம்பிச்சுடுச்சு.

கோழிகளை எதுக்குணே தேடுது ?
அட கொங்காமட்டை முட்டை போடத்தான்டா...

என்னண்ணே நீங்க முதல்ல கோழிதான் முட்டை போட்டுச்சுனு சொன்னீங்க இப்ப சேவல் முட்டை போடத்தான் தேடுதுனு சொல்லி குழப்புறீங்களா ?
அட காமுட்டாப்பயலே உனக்கு விளக்கம் சொல்லி இப்ப நாந்தான் குசம்புறேன் ச்சீச்சீ குழம்புறேன்.

சரிண்ணே இப்ப இரண்டு பேரும் ராசி ஆகிட்டாங்களாமே... ?.
அதான்டா சேவல் கூவுறது பக்கத்து வீடுகளுக்கு இடையூறாக போகவும் எல்லோரும் சேர்ந்து பண்ணையை காலி செய்யச் சொல்லி சண்டைக்கு வந்துட்டாங்க... செல்லத்துரையிடம் வந்து சமாதானமாக பேசி கோழிகளை மாதக் குத்தகைக்கு எடுத்து எல்லா சேவல்களுக்கும் விட்டு இருக்கான். இப்ப முட்டைக்கு முட்டையும் கிடைக்குது மொத்த சேவல்களுக்கும் சேர்த்து பணமும் கிடைக்கது.

சரிண்ணே எல்லாச் சேவலுக்கும் சேர்ந்துனா முட்டையும் தினம் நிறைய கிடைக்குமாணே... ?.
ஆமாடா நீ ஒரு மனுசன்னு உனக்கு விளக்கம் சொன்னேன் பாரு... முட்டை நிறைய வேணும்னா... நாமக்கல்லுக்குத்தான் போகணும்.

நாம, கல்லுக்கு எதுக்குணே போகணும்... ?.
?. ?. ?.

சிவாதாமஸ்அலி-
கேள்வி கேட்ட தம்பி தெள்ளுமணிதான் போலயே... ?

ChavasRegal சிவசம்போ-
நாமக்கல் போனால் நண்பர் பசி பரமசிவத்தை பார்த்து வரலாமே... ?

34 கருத்துகள்:

 1. நீண்ட நாளாயிற்றே ஒருக்கால் எட்டிப் பார்ப்போமே எனத் திறந்தேன் புளொக்ஸ் ஐ... வன் மினிட் எனக் காட்டியது... உடனே ஜம்ப் ஆகிட்டேன்... பார்க்க மாட்டேன் பார்த்திட்டால் பேசாமல் போக மாட்டேன்🤩🤩😀😀

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்லிராணி ஜம்பு பண்ணியதற்கு அப்புறம் எல்லா கோழியும் சேவல்களும் பத்திரமாக இருக்கிறதா? நிச்சயம் எல்லாம் சட்னியாக மாறி இருக்குமே. இப்ப ரங்க துரையும் செல்ல துரையும் எந்த கோர்ட்டுக்கு போவாங்க

   நீக்கு
  2. ம்ஹூம்.. இம்முறை ட்றுத்தை முந்தி ஜம்ப் ஆகிட்டேன் எனும் கோபத்தில கோர்ட்ஸ்க்கு இழுக்கப் பார்க்கிறீங்கபோல கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கோர்ட்ஸ் உம் இப்போ வீடியோக்கோல்லதானோ?:))

   நீக்கு
 2. அதுசரி... அந்த சேவல் கோழிக்கும் அவை போட்ட முட்டைக்கும் பசி பரமசிவம் ஜிக்கும் என்னண்ணே ஜம்பந்தம்?... ஹா ஹா ஹா இதை நான் கேட்கல்லே அஞ்சுதான் கேய்க்கச் சொன்னாக:)... மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊ:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரங்கதுரைக்கும் செல்லத்துரைக்கும் புத்தி சொல்லிச் சமாதானம் பேசினதே நானாக்கும். அந்த வகையில் என்னைக் கவுரவிக்கத்தான் நாமக்கல் வரணும்னு கில்லர்ஜி சொல்றார்.

   அதிரா,அஞ்சு,கில்லர்ஜி எல்லாரும் நாமக்கல் வாங்க. கூடை கூடையா முட்டை கொடுத்தனுப்புறேன்...இலவசமாத்தான்! ஆனா, இப்ப வரவேண்டாம்; கொரோனா யுகம்(!) முடியட்டும்! ஹி...ஹி...ஹி!

   நீக்கு
  2. நீங்க முட்டை எல்லாத்தையும் கில்லர்ஜிக்கே குடுங்கோ அறிவுப்பசிஜி:))..
   முட்டை நிறையச் சாப்பிட்டால்
   முடி வளருமாமே.. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்

   நீக்கு
 3. நிஜம்மாவே ஒண்ணும் புரியலை. இப்போ எதுக்குச் சேவலும், கோழியும், முட்டையும்? இதன் உள் அர்த்தம் என்னனு மண்டை காயுதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. இதுல விஷயம் ஒன்ருமில்ல நேற்று கில்லர்ஜி கோழி பிரியானியும் அவிச்ச முட்டையும் சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் பதிவு போட்டு இருக்காரு

   நீக்கு
  2. ஹாஹாஹா, கில்லர்ஜி உண்ட மயக்கத்திலிருந்து இன்னும் எழுந்துக்கலை போல! அதுவும் மேட்டூருக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில் சம்பந்தி வீட்டுச் சாப்பாடு வேறே! கேட்கணுமா?

   நீக்கு
 4. இன்னைக்கி மூலை முடுக்கெல்லாம் அடுக்கி அடுக்கி விக்கிற முட்டைகளுக்கும் சேவலுக்கும் என்னா சம்மந்தமுங்கோ...வ்!..

  பதிலளிநீக்கு
 5. இந்த கதைமூலமா என்னமோ சொல்ல வர்றீங்க!! ஆனா, எனக்குதான் விளங்க மாட்டேங்குது

  பதிலளிநீக்கு
 6. அது எப்படிங்க அண்ணே எல்லோரும் கோழி பண்ணை வச்சிருக்க ரங்கராஜ் மாத்திரம் சேவல் பண்ணை வச்சிருக்கிறார். கோழி இல்லாமல் சேவல் எப்படி வந்துச்சி? 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 7. பரமசிவம்னா நாமக்கல்லில் கொஞ்சம் பேருக்குத் தெரியும். 'பசி'பரமசிவத்தை என் தெருக்காரங்களுக்கே தெரியாது. சிவசம்போ தெரிந்து வைத்திருக்கிறாரே! நன்றி. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 8. இப்படியெல்லாம் கற்பனை செய்ய எப்படி முடிகிறது கில்லர்ஜிக்கு? -வியந்து மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால் கதை ஏதோ சொல்கிறது என்னவென்று புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. சேவல் கோழி சண்டை இல்லை. சொந்தக்காரங்க சண்டை.
  என்ன செய்தின்னுதான் புரியவில்லை.:)

  பதிலளிநீக்கு
 11. கில்லர்ஜி இங்க எல்லோரும் சொன்ன கருத்துக்களை பார்க்கும் போது உங்களை கமலஹாசன் என்று சொல்லுறாங்க போல இருக்கு

  பதிலளிநீக்கு
 12. வார்த்தை விளையாட்டையும்   நகைச்சுவையையும்  ரசித்தேன். 

  பதிலளிநீக்கு
 13. கூமுட்டை மற்றும் ப்ல முட்டைகள் பதிவில் ஒண்ணுமே புர்யலே

  பதிலளிநீக்கு
 14. எனக்கு சில சந்தேகங்கள் அண்ணே.
  1. சேவல் முதலில் வந்ததா பெட்டைக்கோழி ுலகில் முதலில் வந்ததா?
  2. சேவல் முதலில் வந்தா முட்டைய யார் போட்டது?
  3. பெண் கோழி முதலில் வந்தா முட்டை எப்படி தானா உருவாகிருச்சு?
  4. சேவல வச்சு பிரியானி போட்டா டேஸ்டா இருக்குமா இல்ல பெண் கோழி பிரியானி தான் டேஸ்டா இருக்குமா?
  5. இக்கேள்விகளுக்கு எல்லாம் நாகை அண்ணன் பசி பரமசிவனின் 34 பகுத்தறிவு நூல்களில் விளக்கம் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரவிந்த் கீழ சொன்ன கருத்தேதான் உங்கள் 3 வது கேள்விக்குப் பதில் இரண்டாவது பகுதிக்கு முட்டை தானாவே வரும். அதற்குச் சேவல் அவசியம் இல்லை. சேவல் கோழியோடு சேரும் போது வெளியில்வ் அரும் முட்டை உள்ளே உயிருடன் வரும். சேவல் சேரவில்லை என்றாலும் முட்டை வரும் தான் அந்த முட்டைதான் கடைகளில் விற்கப்படும் முட்டை. வீட்டில் வளர்க்கப் படும் கோழிகளில் இதை எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் கோழிகள் மேயப் போவதால் சேவலோடு இணைய நேரிடும் அப்படி நேர்ந்தால் முட்டையை வீட்டார்கள் உண்டாலும், முட்டையைக் கோழி அடைகாத்தால் குஞ்சுகள் வரும் சான்ஸ் உண்டு.

   கீதா

   நீக்கு
 15. தம்பி அரவிந்து,

  34 பகுத்தறிவு நூல்களையும் வரி வரியா படிச்சிட்டு நல்லா சிந்திச்சிருந்தா இப்படியான கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டாய்.

  படி தம்பி.

  சந்தேகம் இருந்தா, kaliyugan9@gmail.com முகவரிக்கு வா.

  இது கில்லர்ஜி தளம். 'அண்ணே'ன்னு அவர்கிட்டே கேட்குறியேப்பா?

  சேவலா கோழியா,எதுல பிரியாணி போட்டா டேஸ்ட்டா இருக்கும்னு கேட்டிருக்கே. இதுக்கு 34 நூல்களிலும் பதில் கிடைக்காது. சொல்றேன்.

  ரெண்டையும் கலந்து செஞ்சா அசத்தலா இருக்கும் தம்பி!!!

  பதிலளிநீக்கு
 16. ஹா ஹா ஹா கில்லர்ஜி பதிவு ஜாலி உங்கள் வார்த்தை விளையாட்டில்!

  அது சரி இது ஜாலி பதிவுதான்..தெரியுது

  இருந்தாலும் சொல்லிடுறேன் கோழி முட்டை போட சேவல் அவசியம் இல்லை. முட்டையிலிருந்து குஞ்சு வருவதற்குத்தான் சேவல் அவசியம்.
  கீதா

  பதிலளிநீக்கு
 17. பதிவை யும் உரையாடல்களையும் ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 18. நன்றி பரமசிவண் அண்ணா மற்றும் கீதா மேடம்.

  பதிலளிநீக்கு
 19. விவாதமே செய்ய தெரியாத சிலரின் ஞாபகம் வந்தது... அதாவது அவர்களிடம் என்ன தான் சான்றுடன் பேசினாலும், பேசிய சில சொற்களை வைத்து நேரத்தை ஓட்டுவார்கள்...

  பதிலளிநீக்கு
 20. கிட்டத்தட்ட எனது அடுத்த பதிவின் முக்கிய குறளின் குரல் போலவே உள்ளது ஜி...

  பதிலளிநீக்கு
 21. சேவலுடன் இணை சேராத போதும் கோழிகள் முட்டை இடுகிறதே, அது எப்படி என்று அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா?

  படம் உதவி : கூகுள் நன்றி.

  சேவலுடன் இணையாமலே கோழிகள் முட்டையிடும்.

  கோழிகள் முட்டையிடுவதற்கு சேவல் தேவையில்லை; ஆனால், கோழிகள் குஞ்சு பொரிப்பதற்கு சேவல் தேவை.

  கோழிகள், பொதுவாக ஐந்தாறு மாதங்களிலே பருவத்தில் முட்டையிட தொடங்கும். கரு சூழத்தில் இருந்து உயிரற்ற கருக்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கும். இந்த கருக்கள் தான் கருக்கட்டாத முட்டைகளாக மாறி வெளியே வரும்.

  பாலூட்டிகளுக்கு கரு முட்டைகள் உதிரப்போக்கு காலத்தில் குருதியோடு வெளிவருவதைப் போல் கோழிகளுக்கு உயிரற்ற கருக்கள் முட்டைகளாக வெளிவருகின்றன.

  சேவல் கோழியை மிதிக்கும்போது விந்தணுக்கள் சேர்ந்து கருக்கள் உயிருள்ள கருக்கட்டும் முட்டைகளாக மாறும்.

  நாம் கடைகளில் வாங்கும் வெள்ளை முட்டைகள் கருக்கட்டாத முட்டைகள். இவை கோழி பண்ணைகளில் சேவல் இன்றி முட்டைக்காக லேயர் போன்ற கால்சியம் சத்துக்களை கொடுத்து வளர்க்கும் லேயர் கோழிகள் மூலம் பெறப்படுகிறது.

  கருக்கட்டும் முட்டைகளில் உயிரணுக்கள் இருக்கும். கருக்கட்டாத முட்டைகளில் உயிரணுக்கள் இருக்காது. மற்ற எல்லா சத்துக்களும் இரண்டு முட்டைகளிலும் இருக்கும்.

  கருக்கட்டாத வெள்ளை முட்டை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படாது.

  கறிக்கோழிகளுக்கு எடை கூடுவதற்காக சில நாடுகளில் கோழி தீவனங்களோடு ஹார்மோன் சத்து கலந்து தருகிறார்கள். இத்தகைய கோழி இறைச்சி தான் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

  தமிழ் கோரா (ta.quora.com) இல் இருந்து பெறப்பட்டது.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 22. கருத்துரைகளுக்கு உடனுக்குடன் பதில் தருவாரே கில்லர்ஜி. இப்போது ஏன் தாமதம்?

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரரே

  பதிவு ஒவ்வொரு வரிகளிலும், தங்கள் பாணியில் நகைச்சுவையாக இருந்தது. படித்து ரசித்தேன். பதிவில் வந்த கருத்துக்களில் மேலும் பல விஷயங்களையும் அளித்து கொண்டேன். இரு தினங்களாக சற்று உடல்நல குறைபாடுகளில் உடனே பதிவுக்கு வர இயலவில்லை. அதனால் தாமதம். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...