வணக்கம் நட்பூக்களே... நண்பர் திரு. இரா.
அரவிந்த் அவர்கள் எனது மாணிக்பாட்ஷா மின்நூலை படித்து விட்டு விமர்சனம் எழுதி
அனுப்பி இருக்கிறார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த
விமர்சனத்தை படித்து நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன் காரணம் எனது எழுத்துகள்
சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறதா ? என்ற ஐயப்பாடு எனக்கு வெகுகாலமாகவே
இருந்து வந்தது.
அதை தகர்த்து எறிந்து விட்டார் நண்பர் திரு.
இரா. அரவிந்த் அவர்கள். இவைகளை இந்நூலை படித்தவர்களால் உணர முடியும். இவர் எத்தனை ஆழமாக இந்நூலை உள் வாங்கி படித்து
மனதில் நிறுத்தி இருக்கிறார் என்பதை நினைத்தால் எனக்கு இன்னும் ஆச்சர்யமாக
இருக்கிறது. அதேநேரம் பெருமையாகவும் இருக்கிறது. மாணிக்பாட்ஷாவுக்கு மணிமகுடம்
சூட்டி இருக்கிறார். இதோ நண்பரது விமர்சனம்...
உறவு முறைகளில் ஒரு
மாணிக்கமாய் மாணிக்பாட்ஷா
அனைத்து உயிர்களையும் ஆள விழையும் மானிடனின்
பலத்திற்கான காரணம், உறவு முறைகளால் பின்னி பிணைக்கப்பட்ட
சமூக அமைப்பே. குறுதியால் தந்தை மகன் உறவு, தாம்பத்தியத்தால் கணவன் மனைவி உறவு, மதம் மற்றும்
இனத்தால் இதர உறவுகள், பணத்தால் தொழில் ரீதியான உறவுகள் என
அனைத்து உறவுகளும் எதையாவது எதிர்ப்பார்த்தே உருவாகி நிலைப்பவை.
இந்த எதிர்ப்பார்ப்பு எதுவும் இன்றி எதையும்
பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியுடன்,
வாழ்வு
முழுவதும் நீடிக்கக்கூடிய ஒரே உறவு நட்பு என்றால் அது மிகையாகாது. யாருமே இழக்கக்கூடாத இந்த அற்புத உறவின் உருவகங்களாக இரு நண்பர்களை நம் கண்
முன் நடமாடச் செய்திருக்கிற சிறுகதையே திரு. தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின்
மாணிக்பாட்ஷா
மாணிக்கம், பாட்ஷா இருவரின் மழலை தொடங்கி முதுமை கடந்தும் நீடித்த உன்னத நட்பின்
சித்திரமான இக்கதை, வாசகர்களான நம் வாழ்விலும் அமைந்த
அத்தகைய நம் நண்பர்களையும் எண்ணி போற்றும் வாய்ப்பை வழங்குகிறது. இருவருக்குள் சண்டையே வராதா என எண்ணினால், சண்டையில் அடி வாங்கியவரே,
மன்னிப்பும்
கேட்டு சமாதானத்திற்கு வர வேண்டும்,
நன்றி
சொல்லுதல் கூடாது போன்ற எழுதா நிபந்தனைகள், நம்மைப் பரவசத்திற்கு உள்ளாக்கி கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.
இவர்களின் மனைவிமாறும் அத்தகைய நண்பர்களாகவே
திகழ, எந்த உறவாலும் யோசனை கூற முடியாத
இக்கட்டான தருணங்களிலும் உரிமையுடன் அதிரடியாக ஊடுருவி, அந்தரங்க யோசனை கூறும் நட்பின் வலிமையை நம் வாழ்விலும் பல தருணங்களில் அனுபவித்திருப்போம். மாணிக்கம் தத்தெடுத்திருப்பது மகளையா, மகனையா என்ற ரகசியத்தைக் கதையின் முக்கிய கட்டம் வரை காத்து வெளிப்படுத்திய
பாங்கு, ஆசிரியரின் எழுத்து வன்மைக்கு ஒரு
சான்று.
ஊதாரியாகச் சென்ற நண்பனின் மகனை நேரடியாகக்
கண்டிக்கும் பாட்ஷா, காம வசத்தில் இருந்தாலும், தந்தையின் நண்பரை மாமாவாக மதித்து மனைவியை அடக்கும் இளமாறன், கொள்ளியிடும் உரிமையை,
சொத்துரிமைக்கு
இணையாக வைக்கும் மகன், அதை விட்டுக் கொடுத்தேனும், தன் வளர்ப்புத் தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுதல் என நெஞ்சை நெகிழச்
செய்யும் நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இல்லை.
இவ்வாறு, பள்ளியில் அரும்பி,
மதம், தொழில், திருமணம், இல்லாள் மறைவு, குழந்தைகள், இழப்புகள் என அனைத்துச் சவால்களையும் கடந்து, இறப்பையும் தாண்டி அடுத்த தலைமுறையிலும் மலர்ந்து மணம் வீசும் இந்நட்பின்
அற்புதத்தை
அனுபவிக்க
பின்வரும் சுட்டியில் படிக்கலாம்.
மாணிக்பாட்ஷா
நட்புடன், இரா. அரவிந்த்
எமது நெஞ்சார்ந்த நன்றிகளை திரு. இரா. அரவிந்த் அவர்களுக்கு இங்கு சமர்ப்பிக்கின்றேன் வாழ்க நலம் – கில்லர்ஜி தேவகோட்டை
எமது நெஞ்சார்ந்த நன்றிகளை திரு. இரா. அரவிந்த் அவர்களுக்கு இங்கு சமர்ப்பிக்கின்றேன் வாழ்க நலம் – கில்லர்ஜி தேவகோட்டை
இதை அவர் எனக்கு அனுப்பி இருந்தார். சில காரணங்களால் சென்ற வாரம் வெளியிட முடியவில்லை. அந்தக் குறையை சரிசெய்து, அவரிடமே வேறு வடிவத்தில் வாங்கி இந்த வியாழன், அதாவது நாளை வெளியிடுகிறேன் என்றும் மூன்று நாட்களுக்கு முன் ஃபோனில் சொல்லி இருந்தேன். நாளைய பதிவில் சேர்த்தும் வைத்திருக்கிறேன். இது நண்பர் அரவிந்தும் அறிவார்.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம். பாராட்டுகள் அரவிந்த். பாராட்டுகள் கில்லர் ஜி.
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி அப்படியா... ? மகிழ்ச்சி பதிவை சிறப்பாக படித்து இருக்கிறார் என்பதை என்னால் மட்டுமல்ல, இந்நூலை படிப்பவருக்கும் புரியும். பாராட்டுகளுக்கு நன்றி ஜி.
நீக்குநம்மை நம் எண்ணங்களை நம் படைப்புகளை அனைவரும் நாம் விரும்பும் வண்ணம் புரிந்து கொள்வார்களா? என்று நினைக்கவே தேவையில்லை. பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளும் வெவ்வேறு விதமானது. துகள்களில் தூசிகளில் நாமும் ஒன்று. இங்கு நாம் பெருமை பேச பெருமைப்பட எதுவும் இல்லை. நம் பயணம் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அதன் பிறகு தான் நிலைக்குமா? நீடீக்குமா? என்பது போன்ற பேச்சு. பெரியார் அண்ணா, காந்தி காமராஜர் இவர்களை எல்லாம் இப்படி நாம் நினைவூ கூறப்படுவோம் என்று நினைத்தா செயல்பட்டு இருப்பார்கள். கவலை வேண்டாம். உங்கள் எண்ணங்களை உங்கள் விருப்பப்படி பதிவு செய்யுங்கள். செயல்படுவது முக்கியம். தொடர்வது அதனை மிக முக்கியம். காலம் தீர்மானிக்கும்.
நீக்குவருக நண்பரே மிகவும் ஆழமான கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள்.
நீக்குமிக்க நன்றி நான் எழுதுவேன் இறுதி மூச்சுவரை எழுதுவேன்.
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி மகிழ்ச்சியும், நன்றியும்.
நீக்குபுதினத்தை பின்னர் காண்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்குஅதற்கு முன்பே தோழரின் விமர்சனம் நட்புக்கு அருமை மனிதர் கில்லர்ஜி தரும் மரியாதையை அற்புதமாய் சொல்லி விட்டது.
வருக நண்பரே புதினத்தை காண்பது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது கருத்துரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
அன்பின் ஜி..
பதிலளிநீக்குதாங்கள் மேலும் பல எழுதி புகழ் பெற வேண்டும்...
நல்வாழ்த்துகளுடன்.,
அன்பின் ஜி
நீக்குதங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
திரு அரவிந்த் அவர்களின் அருமையான விமரிசனம். நட்புக்குத் தரும் மரியாதையை அழகாய் எடுத்துரைத்திருக்கிறார். விரைவில் படிக்கணும் என்னும் ஆவலைத் தூண்டி விட்டது.
பதிலளிநீக்குவருக சகோ அவசியம் நூலைப்படியுங்கள் மிக்க மகிழ்ச்சி.
நீக்குநீங்கள் பதிவிட்டுஇருப்பது உண்மையான நட்புகளாக இருக்கலாம் வலை நட்புகளல்ல என்றே நினைக்கிறென்
பதிலளிநீக்குவாங்க ஐயா புனைவுகளுக்கு அடித்தளமே... உண்மையின் நிகழ்வுகள்தானே... வருகைக்கு நன்றி ஐயா.
நீக்குஇனிய பாராட்டுக்கள்! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான நூல் விமர்சனம். சிறப்பாக கதையில் நட்பின் பெருமைகளைப்பற்றி விமர்சித்த திரு. இரா அரவிந்த் அவர்களுக்கும், மிக அழகாக அதை எழுதியிருக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். விரைவில் நூலை முழுமையாக படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குநூலை படித்து விமர்சித்தால் மகிழ்வேன் நன்றி.
முழுமையாக கதையை உள்வாங்கி அருமையாக விமர்சித்திருக்கிறார் என்பதற்கு கவித்துவமாய் வந்து விழுந்துள்ள வார்த்தைகளே அத்தாட்சி...வாழ்த்துகள் இருவருக்கும்...
பதிலளிநீக்குவருக கவிஞரே உண்மை கதையை ஆத்மார்த்தமாக படித்து இருக்கிறார். என்பதை என்னால் முழுமையாய் உணர முடிகிறது.
நீக்குஅன்பு தேவகோட்டை ஜி.
பதிலளிநீக்குநட்பின் இனிமை நல்ல மனங்களில் தேங்கி நிற்கும் தேன்.
தங்கள் புத்தகத்தை இன்னும்
படிக்கவில்லை.
நண்பர் இரா.அரவிந்தன் அறிமுகப்
படுத்தி எழுதி இருக்கும் விமரிசனம்
அதி அற்புதம். அவரை இத்தனை அருமையாக எழுத வைத்திருக்கும் உங்கள் புதினத்திற்கு வாழ்த்துகள்.
என்றும் வளமுடன் உங்கள் எழுத்து விளங்கவும் இறைவன் அருளட்டும்.
வாங்க அம்மா தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குநீண்ட இடைவெளியாகி விட்டதே...
வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குவாழ்த்திய அணைவருக்கும், நல்ல படைப்பை வழங்கிய KILLERGEE ஐய்யாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குவருக நண்பரே நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
நீக்குஆஹா... மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி. தொடரட்டும் தங்களது மின்னூல்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஉங்கள் புத்தக விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.
பதிலளிநீக்குமுன்னுரை அருமை.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
வருக சகோ தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குநட்பு என்பதையே நகைப்புக்குரிய ஒரு விஷயமாக, நட்பு மறக்காமல், நன்றி மறக்காமல் இருப்பதை அசடுகளின் அடையாளமாகப் பார்த்துச் சிரிக்கும் இவ்வுலகில், உங்களிடையே உலவும் உயர் நட்புபற்றி வாஞ்சையோடு வடித்திருக்கிறீர்கள். அனுபவித்துப் படித்துப் பாராட்டியிருக்கிறார் அரவிந்த்.
பதிலளிநீக்குவருக நண்பரே நண்பர் திரு. அரவிந்த் அவர்கள் மிகவும் ஆழமாக உணர்ந்து படித்து இருக்கிறார்.
நீக்குஅருமை நல்ல எழுத்துக்கள் நிச்சயம் அதன் இலக்கை அடையும். வாழ்த்துகள். படித்துவிட்டு கருத்திடுகிறேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே ஆவலுடன் இருக்கிறேன்... நன்றி.
நீக்குவிமரிசனம் அருமை. உங்கள் நண்பருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவருக கவிஞரே மிக்க நன்றி.
நீக்குஅருமையான மதிப்புரையைத் தந்துள்ள உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள். உங்களைப் பற்றிய அருமையான, உண்மையான மதிப்பீட்டையும் அவர் தந்துள்ளார். சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குகதையை வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அரவிந்த்.
வருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குசூழ்நிலை காரணமாகத் தாமதம் ஏற்பட்டது.
பதிலளிநீக்குஅரவிந்த் விமர்சனம் என்னைப் பெரிதும் மகிழ்வித்தது.
அவருக்கு நன்றி.
உங்களுக்கு என் பாராட்டுகள்.
வருக நண்பரே தங்களை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தேன் நன்றி.
நீக்குதங்களின் மாணிக்பாட்ஷா மின் நூலுக்கு திரு அரவிந்த் அவர்கள் தந்துள்ள மதிப்புரை அருமை. ஒரு நூலை படிப்பதை விட,அதை அனுபவித்துப் படித்துப் புரிந்துகொண்டு அதுபற்றிய கருத்தை வெளியிடுவது அவ்வளவு எளிதல்ல,திரு அரவிந்த் அதை திறம்பட செய்திருக்கிறார்.அவருக்கு பாராட்டுகள்!தங்களுக்கு வாழ்த்துகள்1
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான் உணர்ந்து படித்து இருக்கிறார்.
நீக்குதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.