துபாய் இந்தியன் ஸ்கூல் இசை நிகழ்ச்சி விழா.
எனது குடும்ப நண்பர் + மருத்துவர் இவர்களுடன் போயிருந்தேன் காணொளி
யாருமே எடுக்ககூடாது அனைவரும் ஜெயா தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டுமென
திட்டவட்டமாக அறிவித்து இருந்ததால் ? சுற்றி வளைத்து சுமார் 2 ½ மணிநேரம் எமது கேமராவால்
எடுத்து மறுநாளே நண்பருக்கு சி.டி போட்டுக் கொடுத்து விட்டேன் அன்று நடந்த
கூத்துகளைத்தான் இன்று விவரிக்கப் போகிறேன் அதன் ஒரு காட்சியைத்தான் கீழே இணைத்து
இருக்கிறேன் காரணம் அந்தக் காட்சியை வைத்துதானே இந்தப்பதிவு.
பாவாடை தாவணி போட்டருந்தபோது பெண்களிடம் ஒரு
நல்ல பழக்கம் தொற்றி வளர்ந்து கொண்டே வந்தது இது அவர்கள் கிழவியாகி சுடுகாடு
செல்லும்வரை தொடர்ந்தது இதைப்பற்றி நான் விரிவாக எழுத வேண்டிய அவசியமில்லை
சுடிதாருக்கு மாறிய பெண்கள் ‘’சால்’’ என்றொரு துண்டை பழங்கால
பெரிசுகள் தோளில் போடுவதுபோல இவர்களும் போட்டுக்கொண்டு போகிறார்கள் பெரும்பாலும்
முதுகுப்புறமே இது கிடக்கின்றது அது இல்லாமலும்கூட போகலாம் என்ற நிலையும் ஆகி
விட்டது இது நாகரீகத்தின் வளர்ச்சியா ? வீழ்ச்சியா ? (இதனைக் குறித்து விரிவான பதிவு பிறகு எழுதுவேன்) உதாரணமாக பாவாடை தாவணி அணிந்த பெண்களின்
மேலாடையை நாம் பொது இடத்தில் எடுத்து விடமுடியுமா ? எடுத்தவனின் நிலையை நினைத்துப் பாருங்கள்
உடனடியாக அந்த இடத்தில் தர்மப்பிரபுக்கள் முளைத்து விடுவார்கள் இன்று சுடிதார்
போடுவதால் அந்த சால் எடுத்தும் விளையாடலாம் என்பதை பல திரைப்படங்களிலும்
காட்டி விட்டார்கள் அதே கூத்துதான் இங்கும் அரங்கேறி இருக்கிறது மொத்தமும் தமிழ்க்
குடும்பங்கள்தான் அந்தக் கூட்டத்தில் நானும் உட்கார்ந்திருந்து இந்த காட்சிகளை
சுட்டேன் திடீரென ஆடிக்கொண்டு இருந்தவன் அடுத்த வரிசையில் உட்கார்ந்திருந்த
பெண்ணின் சால்’’லை எடுத்து வந்து தனது தலையில் போட்டுக் கொண்டு ஆடுகிறார் முடிந்ததும் கொண்டு போய்
கொடுத்து விடுகிறார் இந்தக் கூட்டத்தினர் அனைவருமே தமிழர்கள் என்பதை நான்
தங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன் பாருங்களேன்.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா... கண்டவர்கள்
சொன்னதுண்டா...
ஒரு சினிமாக்கவிஞர் கூட இப்படி எழுதினார் ஆம்
முந்தானை விரித்தாள் என்கிறோம் இதன் அர்த்தமென்ன ? அந்த சேலையின் வாசம் அவனது கணவன் மட்டுமே
நுகரவேண்டும் இதுவும் சேலைதானே இங்கு நுகர்ந்தவன் யாரோ ? எவரோ ? தமிழ்க்
கலாச்சாரம் என்பது பழங்காலம் தொட்டு வளர்ந்தது அவை இன்றும் அயல் நாடுகளில் மதிப்புடன்
பேசப்படுகிறது ஆனால் போற்றிப்பாதுகாக்க வேண்டிய நாமோ இப்படி வாழப்பழகி விட்டோம்.
மேலும் மகளுடன் குத்தாட்டம் அந்த மகள் எதிர்
காலத்தில் எந்தவிதமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பாள் ? பொது இடத்தில் இப்படி அடுத்தவன் மனைவியின் சால்’’லை உருவி ஆடுவது தவறென்று
எடுத்தவனுக்கும் தெரியவில்லை, எடுக்க விட்டவளுக்கும் தவறென்று தெரியவில்லை, ஏன் ? இதை விட்டு விட்டவனுக்கும் தவறென தெரியவில்லை
எந்த தொடர்பும் இல்லாமல் காட்சியாளராக வந்திருந்த எனக்கு மட்டும் ஏன் ரத்தம்
கொதிக்கின்றது ? மெத்தப் படித்தவர்களிடம் கேட்டால் லைப்பில்
என்ஜாய்மெண்ட் வேண்டும் என்பார்கள் சந்தோஷம் வேண்டும்தான் அதற்காக
பொதுக்கலாச்சாரத்தை சீர்குழைத்து பொது இடத்தில் உனக்கென்ன சந்தோஷம் ? வேண்டுமானால் வீட்டுக்குள் வைத்து யாரும்
யாருடனும் ஆடட்டும் வைர ஊசி என்பதால் வயிற்றில் குத்திக்கொள்ள முடியுமா ? இதில்
ஆடுவதை நான் படமெடுக்கின்றேன் என்பதை அறிந்தும் ஆடுவதுதான் வேதனையிலும் வேதனை.
அடுத்தவன் பொண்டாட்டி ஆடுவதை படமெடுப்பது குற்றமில்லையா ? எனக்கேட்கலாம் இல்லை என்பதே எமது பதில் காரணம்
பொது இடத்தில்தான் எடுத்தேன் அவர்களின் சொந்த வீட்டினுள் நுழைந்து ஆடும்போது அல்ல !
புதுமைப் பெண்களடி
பூமிக்கு கண்களடி
பாரதி சொன்னானே தமிழ்ப்
பாரதி சொன்னானே
செல்லம்மா அக்கா புருஷன்
சொன்னது இதற்காகவா ?
இப்பதிவுக்கும், இசைக்கடவுள் பதிவுக்கும் தார்ரோடு
போட்டு இணைப்பு ஏற்படுத்திய நண்பர் திரு. ஸ்ரீராம் ஜி மற்றும் நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி.
காணொளி
ஆஅவ்வ்வ்வ்வ்வ் இங்கினயும் இன்று மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)
பதிலளிநீக்குவாங்க ஃபாஸ்ட்டும்தான்
நீக்குஏஞ்சாமீ!... காலத்தை கெடுத்துப் போட்டுட்டு கஷ்டம் தீரணும்...ந்னு காவடி எடுக்குறானுவோ... அறிவு அழிஞ்சு போய் தான் வெகு நாளாச்சுங்களே!...
பதிலளிநீக்குவாங்க ஜி உண்மைதான்
நீக்குமரங்களை அழித்து விட்டு மழை வருவதற்கு வருணபகவானுக்கு யாகம் வளர்த்து என்ன செய்ய.... ?
ஹா ஹா ஹா வீடியோ முழுவதும் பார்த்து முடிச்சேன், சொல்லிய சோல் கதைக்கு ஏற்ப அழகாக வீடியோ எடுத்திருக்கிறீங்க...:).
பதிலளிநீக்குகுற்றச் சாட்டுக்களை ஏற்றுக் கொள்கிறேன், நம் குடும்பத்துக்குள் அல்லது நம் உறவுக்குள் எனில் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.. பப்ளிக்கில் சபை நாகரீகம் என ஒன்று இருப்பதை தெரிஞ்சு வச்சிருக்கோணும்.. அது அடிப்படையில் இருந்து வரவேண்டும்... சும்மாவா சொன்னார்கள் தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்றெல்லாம்ம்
பாவாடை தாவணியில் இருந்தபோது நல்ல பழக்கம் இருந்தது எனச் சொல்லிட்டீங்க கில்லர்ஜி.. அப்படி மட்டுமல்ல.. பழக்க வழக்கம் என்பது நாம் என்ன உடையில் இருப்பினும்.. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத்திலேயே இருக்கிறது.
சிலர் புதிசாக ஜீன்ஸ் போடும் பெண்கள், போட்டவுடன் நினைக்கிறார்கள்.. ஜீன்ஸ்தானே போட்டிருக்கிறோம்.. எப்படியும் காலை வைத்து இருக்கலாம் என.. நேரே பார்த்து வெறுத்திருக்கிறேன் சிலரை. அப்படியான விசயங்கள்தான் தப்பு.
இன்னும் சிலர் நினைக்கிறார்கள்.. இப்படி நடந்தால், உடை போட்டால் அது ஆணடிமை.. நாமும் சரிசமன் தானே என்றெல்லாம்.
யாரும் யாரையும் விடக் குறைந்துவிடவில்லை.. ஆனா நமக்கு நமக்கென சில ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள்.. நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.. இதனால நாம் யாருக்கும் அடிமை என அர்த்தம் இல்லை... அதிலும் ஒரு அழகு இருக்கிறது.
வருக கதைக்கு தகுந்த காணொளி எடுத்தேன் என்று சொல்வதை தவிர்க்கவும் கடவுள் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவே அந்தக் காணொளியை தந்தேன் காணொளிக்காக அன்றைய நிகழ்வுகளை விவரிக்கும் சூழலும் வந்து விட்டது.
நீக்குஅருமையான கருத்துரை எனக்கு ஆதரவு சொன்னதற்காக சொல்லவில்லை,
உண்மைதான் யாரும், யாருக்கும் அடிமை இல்லை ஆணும், பெண்ணும் சம்மே ஒருவர் இல்லையெனில் மற்றவருக்கு உலக வாழ்க்கை இல்லை இதை அனைவரும் உணரவேண்டும்.
நான் ஆணாதிக்கத்திற்கும் எதிரானவன், பெண்ணடிமைக்கும் எதிரானவன்,
நீங்கள் அன்று “கடவுள்” எனச் சொன்னபோது.. இவர் அல்லது எஸ் பி பி ஆக இருக்கலாம் என நினைச்சேன்ன்.. இவரா சூஸ் காலைக் காட்டினார்ர்.. கர்ர்ர்ர்ர்:).
பதிலளிநீக்குஹா ஹா ஹா அமைதி அமைதி
நீக்குஇவரிடமும் சிறிய அளவில் கர்வம் இருந்ததை நானும் நேரில் கண்டவன் ஆனால் அதில் நியாயம் இருந்தது அது வேறு கதை.
நீக்குஹாய் கில்லர்ஜி, நலமா?
பதிலளிநீக்குநலமே நண்பா ?
நீக்குநீங்கள் குறிப்பிட்டதுபோல எத்தனையோ சம்பவங்கள் நடக்குது ஜி. What to do?
பதிலளிநீக்குநடக்கத்தான் செய்கிறது மாற்றம் என்பது எல்லோர் மனதிலும் வரவேண்டும்.
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை என்று பாடிய கவிஞன் எங்கே ஜி பண்பாடு இங்கே படாத பாடு படுகிறது சொன்னாள் ஆணாதிக்கம் என்பார்கள் நமக்கு எதுக்கு வம்பு
பேசாமல் தமன்னா வாக்கைப் போட்டுவிட்டுக் கெளம்பு வேண்டியதுதான்
தம 3
வருக கவிஞரே என்ன இப்படி சொல்லிட்டீங்க.....
நீக்குஉங்கள் பதிவைப் படித்து, நண்பர் இ பு ஞா செம கடுப்பாகி இருப்பார் என்று தோன்றுகிறது :)
பதிலளிநீக்குஹா,, ஹா,, ஹா,, இது பகவான் வேலை இல்லையே....
நீக்குமுழு காணொளியும் பார்த்தேன் .. ..நாம் எதையாவது சொன்னா இந்த பாழாய்ப்போன பெண்ணிய வியாதிங்களே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க ..விட்டா அந்த ஷாலை வச்சி பரபரப்பே செஞ்சிடுவாங்க ...இந்த மாதிரி கூத்து நிறைய நடக்குது :( ..
பதிலளிநீக்குவருக தங்களது கருத்தை ஆதங்கத்துடன் பகிர்ந்து விட்டீர்கள் நன்றி
நீக்குஎன்னத்த சொல்ல... இப்படி இருப்பது தான் சுதந்திரம், உரிமை என நினைக்கிறார்கள்..... சினிமா மோகம் தலைவிரித்து ஆடுகிறது.....
பதிலளிநீக்குவாங்க ஜி சுதந்திரமும், உரிமைகளும் மாறித்தான் விட்டது.
நீக்குதமிழ் கலாச்சாரம் என்றால் என்ன என முதலில் தெளிவாக சொல்லுங்கள். அதன் பின் நான் இந்த திரியில் நீண்ட விவாதத்துக்கு தயாராக வருகின்றேன்
பதிலளிநீக்குதமிழ்க் கலாச்சாரம் என்பது மற்ற நாட்டினருக்கும் ஏன் இந்தியாவிலேயே மற்ற மாநிலத்தினருக்கே வேறுபடுகிறது.
நீக்குஅயல் நாட்டினர் கணவனும் மனைவியும் டூ பீஸ் உடையுடன் சாலையில் நடந்து செல்கின்றார்கள் தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்.
அயல் நாட்டினர் கணவனும் மனைவியும் குழந்தைகள் முன்னிலையில் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொள்வார்கள் தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்.
அயல் நாட்டினர் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதம் கேட்க மாட்டார்கள் தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்
அயல் நாட்டினர் நினைத்தவுடன் பிரிந்து வாழ்ந்து விடுவார்கள் தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்.
அயல் நாட்டினர் கணவனும் மனைவியும் குழந்தைகளுக்காக வாழ்ந்ததில்லை தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்.
அயல் நாட்டினர் தனது மகளின் கணவனுக்கு பிரத்யேகமாக மரியாதை கொடுக்க மாட்டார்கள் தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்.
அயல் நாட்டினருக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை தெரியாது தமிழனும் தமிழச்சியும் இப்படி இல்லை.
இதுதான் நம் தமிழ்க் கலாச்சாரம்.
குறிப்பு – தமிழ் நாட்டில் இது அழிந்து வருகிறது என்பதை மறுக்க மாட்டேன்.
அடிக்குறிப்பு – நானும் அதிக காலம் அயல் நாட்டில் வாழ்ந்தவன்.
உண்மையில் இந்த தமிழ்க்கலாச்சாரம் என்பதை நீங்கள் எதை வைத்து கூறினீர்கள் என புரியாமல் தான் கேட்டேன். தாவணி அணிந்தால் தான் கலாச்சாரம் என்பது இல்லை அல்லவா?
நீக்குநாம் போற்றும் நம் தமிழ் கலாச்சாரக்காரணங்களை விட மேல் நாட்டினரிடம் இன்னும் அதீதமான கலாச்சாரபற்று உண்டு சார் அதில் முக்கியமானது கூட்டுக்குடும்பம். குடும்ப ஒற்றுமை எனும் பெயரில் ஒரே வீட்டில் எதிரியாய் வாழாமல் தனித்தனி வீட்டில் நட்புடன் வாழ்வதும். தங்கள் முக்கிய நிகழ்வுகளில் தாய் தகப்ப்னை பேணுவதும் அடங்கும், நாங்கள் வெளிப்பார்வையை வைத்து முடிவெடுக்கின்றோம். நாம் நம் கலாச்சாரமென போற்றும் பலதும் இப்படித்தான். ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஓரும் பேனும்
மீண்டும், மீண்டும் சொல்கிறேன் உடைகள் என்பது காலத்துக்கு ஏற்றவாறு மாறுபட்டுக்கொண்டே வருகிறது.
நீக்குநான் சொல்ல வந்த விடயம் பொது இடத்தில் அந்தப் பெண்னின் உடையை எடுத்து ஆடியவர் மற்றொரு ஆணின் துண்டை உறுவி ஆடியிருந்தால் இதை குற்றமாக நான் சொல்ல வேண்டிய நிலை வந்து இருக்காது.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என எழுதியவன் அதே பட்டில் சேலையை அங்கேயிங்கே தூக்கி அங்கங்களை காட்சிப்படுத்தியதும் உண்டல்லோ?
பதிலளிநீக்குஅவன் வியாபாரி சூழலுக்கு தகுந்ததுபோல் எப்படியும் எழுதுவான் நாம்தான் நல்லது, கெட்டதை பிரித்து உணர்ந்து வாழவேண்டும்.
நீக்குஅட இதைத்தானே நானும் சொல்கின்றேன். நல்லது கெட்டதை உணர்ந்து வாழ வேண்டும் எனும் போது நமக்கு நல்லதாய் தோன்றுவது இன்னொருவருக்கு கெடுதியாய் தோன்றலாம். நம் பார்வையில் கெட்டதாக தோன்றுவது அவர்களுக்கு நல்லதென படலாம். மாற்றங்களை நாம் சினிமாவை வைத்தும் சீரியல்களை உதாரணமாக்கியும் தேடாமல் நிஜ வாழ்க்கையில் தேடலாம் .
நீக்குநமக்குப் பிடித்ததே மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது அதேநேரம் பொது விடயத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு.
நீக்குஅவர் பிறரின் உடையை எடுத்து ஆடுவதை காணும் குழந்தைகள் நாமும் இப்படி செய்தால் தவறு இல்லை என்ற சிந்தையே வரும் காரணம் இது பொது இடம்.
நீங்கள் கூறியபடி.. நடனக்காட்சியில் அடுத்த வரிசைப்பெண்ணின் சல்வார் மேலிருந்த ஷால் எடுத்து தனையில் கட்டியதும் ஏற்கனவே ஒத்திகை செய்யப்பட்ட நிகழ்வாக இருக்காது என்பது உங்களுக்கு எப்படி தெரியுமாம்! அதை விட அந்த பெண் அறிமுகமில்லாதவளாக இருப்பாள் என்பதும் அவள் சம்மதமின்றி ஷாலை எடுத்ததாக மூன்றாம் நபராக நாங்கள் எப்படி முடிவெடுக்க முடியும். அவர்கள் அறிந்தவர்களாக கூட இருக்கலாம் அல்லவா?
பதிலளிநீக்குஎந்த நிகழ்ச்சியும் நடத்துபவர்கள் ஒத்திகை பார்த்தே தீரவேண்டும் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க ஒத்திகையா ?
நீக்குஅப்படியே இருந்தாலும் பெண்ணின் மேலாடையை பொது இடத்தில் எடுத்து விளையாடுவது முறையா ?
அவள் அவனது கொழுந்தியாள் கோகிலாவாக இருந்தாலும் மட்டுமல்ல, மனைவி மருதவள்ளியிள் ஷால்’’லாக இருந்தாலும் எடுத்தது தவறே...
இந்த தமிழ்க்கலாச்சார ஆடையெனும் பெயரில் பலரின் புரிதலில் இருக்கும் தாவணியும், சேலையும் தான் பெண்ணின் உடல் அங்கங்களை அப்படியே வரிவரியாக மட்டுமல்ல முக்கியமாக மறைக்க வேண்டிய பகுதிகளான முதுகு, இடுப்பு முன் பக்க நெஞ்சுப்பகுதி என பல பகுதிகளை வெளிக்காட்டும் செக்சி ஆடை என்பது புரியுமா?
பதிலளிநீக்குநாங்கள் இங்கே சேலை அணிந்தால் அப்படித்தான் ஐரோப்பியர் சொல்கின்றார்கள். அத்தோடு தாவணி பாவாடை எனும் அந்தக்கால ஆடைக்கு கட்டாயம் தாவணி எனும் பெயரில் மூன்று முழத்திலேனும் உடலை சுற்றி மறைக்க துணி தேவை. அந்த ஆடையில் வடிவம் அப்படிப்பட்டது. தாவணி இல்லாமல் அந்த ஆடையை அணியவும் முடியாது. காரணம் அது ஒரே ஆடை அல்ல. மேலே பிளவுஸ் கீழே பாவாடை, ந்டுவில் கண்டவர்களும் கிள்ள இடம் விட்டு இடுப்பெனும் பெயரில் ஒரங்கம். இதில் தாவணி அணிந்த எந்த பெண்ணின் மேல் துணியையும் பொது இடத்தில் என்ன. சொந்த தாய் சகோதரி முன்னால் கூட கழட்ட முடியாது.
சினிமாக்க்காட்சிகளில் பெண்களை கற்பழிக்க மேல் தாவணித்துண்டை ஒரே இழு இழுப்பார்கள். அப்பெண் நெஞ்சின் முன் இருகைகளையும் கட்டிக்கொள்வாள். அப்புறம் பிளவுஸ் கிளிபடும்.. ஹாஹா.. நிஜத்தில் தாவணிபாவாடை எனும் நமது கலாச்சார ஆடை ஊர்ப்பொறுக்கிகளுக்கு தப்பு செய்ய வசதியான ஆடைதான் சார்.
சேலையை சரியாக அணிந்தால் மரியாதையை, மதிப்பை கௌரவத்தினை தரும் . எம் பெண்களுக்கு கண்ணியமான தோற்றம் தருவதும், அது நம் நாட்டின் தேசிய ஆடையும் என்பதனால் அதைதவறு எனவும் சொல்ல முடியாது. ஆனால் அதை அணிந்தால் தான் எங்கள் கலாச்சாரம் பேணப்படும் என்பது சரியல்ல என்பது என்புரிதல்.
ஆனால் சுடிதார் அப்படியான ஆடைஅல்ல. முழு உடலையும் முழுமையாக மறைத்து முகமும் கைகால்கள் தவிர உடல் பாகங்களை முழுமையாக மூடி இருக்கும் உடை. அதற்கு மேல் தாவணி அணிந்தாலும் அணியாவிட்டாலும் பாதகம் ஏதும் இல்லை. என்னைப்பொறுத்த வரை சுடிதாரை விட பாதுகாப்பான கௌரவமாக உடை இல்லை.
தாவணிபாவாடையும், சரி சேலையும் சரி பெண்கள் அழகை அதிதப்படுத்தி வெளிப்படுத்தும், உடலோடு ஒட்டி அழகை க்கூட்டும், சல்வாரில் அப்படி அல்ல என்பது என் புரிதல். கழுத்தினுள் நுழைத்து அணிய வேண்டி இருப்பதனால உடல் அளவை விட சற்று லூசாக இருக்கும் என்பதனால் உடல் கவர்ச்சி வெளிப்படுவதில்லை.
நான் என் பணி நிமித்தம் பல விழாக்களில் மேடைமுதல் கிச்சன் வரை ஓடிஆடி வேலை செய்யும் போது சுடிதார் தான் அணிவேன்.அதன் மேல் அணியும் ஷால் இடைஞ்சலாக இருந்தால் அதை கழட்டி வைத்தும் விடுவேன். ஆனால் சேலையை எப்போதும் அணிவதை தவிர்ப்பேன். சேலையின் முந்தானை சற்று நகர்ந்தாலும் சங்கடம் தான்.தாவணி அணிந்தாலும்இடுப்புப்பகுதியும், முதுகுப்பகுதியும் எப்போதும் எவர் கண்னையேனும் உறுத்தும், முந்தானையை இழுத்து விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்,
இதே போல் ஜீன்ஸ் டாப்சும் கூட பல நேரங்களில் தாவணி பாவாடையை விட பாதுகாப்பானதும் மரியாதை தரும்படியும் தான் இருக்கின்றது. இங்கே கலாச்சார ஆடை என்பது அந்தந்த நாட்டின் கால நிலைக்குஏற்ப தானே சார்!?
இதில் சல்வார் அணிபவர்கள் மேலே ஷால் இடாவிட்டால் என்ன கலாச்சார மீறல் நடந்து விடும்?
இதையெல்லாம் விட பெண்மையின் கலாச்சாரம் அணியும் ஆடையினால்பேணப்படுவதும் இல்லை. ஆடையை வைத்து பெண்களை விமர்சிப்பதும் கலாச்சார சீர்கேடு என்பதும் தப்பு சார்.
அக்கால ஆச்சிமார் போல மேலே ரவிக்கை அணியாமல் சேலையை கட்டிக்கொள்வதும் நம் கலாச்சாரம் தான்.
பாவாடை தாவணியைவிட ஷல்வார் கம்மீஸ் பாதுகாப்பானது உண்மையே... திருமணம் நடக்கும் பொழுது மணப்பெண்ணை ஏன் சேலை கட்ட வைக்கின்றார்கள் ? மணமகளை ஏன் வேட்டி கட்ட வைக்கின்றார்கள் ?
நீக்குஷல்வார் தாங்கல் சொல்வதுபோல் லூசாக இடுவதில்லை டைட்டானிக் மாதிரி டைட்டாகத்தான் பெரும்பாலும் இடுகின்றார்கள்,
ஷல்வார்-கம்மீஸ்-ஷால் இதுதான் பாக்கிஸ்தான் நாட்டின் பாரம்பரிய உடை ஆனால் அதற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது ? ஆனாலும் வடிவமைப்பு ஒன்றேதான்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதை நம்புபவன் நான்.
ஷல்வார்-கம்மீஸைவிட நிச்சயமாக பாவாடை-தாவணி ஆபாசம்தான் ஆனால் ஒரு பருவப்பெண்ணுக்கு பாவாடை-தாவணியே அழகு மட்டுமல்ல பெருமையும்கூட
//சேலையின் முந்தானை சற்று நகர்ந்தாலும் சங்கடம்தான் தாவணி அணிந்தாலும் இடுப்புபகுதியும், முதுகுப்பகுதியும் எப்போதும் எவர் கண்ணையேனும் உறுத்தும், முந்தானையை இழுத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்//
இதற்கு நான் என்ன சொல்வது ?
//ஷல்வார் அணிபவர்கள் மேலே ஷால் இடாவிட்டால் என்ன கலாச்சார மீறல் நடந்து விடும் ?//
சும்மாவே மனுசன் மிருகமாகி கொண்டு வருகிறான் இதற்கு திரைப்படங்களும் உதவி.
ஒரு திரைப்படத்தின் வசனம் சொல்கிறேன் கேளுங்கள்
////நான் என் வீட்டு பொம்பளைங்க முந்தானை ஒதுங்குனாலே ரசிக்கிறவன் இதுல உனது ஆளை விட்டு வைப்பேனா ?////
தனது தவறை ஒத்துக்கொள்ளாத மனிதன் காலம் மாறுகிறது என்று பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறான் இதுதான் உண்மை.
சார்.பதிவின் சாரம் சல்வார் ஆடை கலாச்சாரச்சீர்கேடு என்பது போல் இருந்ததனால் தான் இக்கருத்தினை இட்டேன். மற்றப்படி சேலை தாவணி தான் எங்கள் விருப்புக்குரிய ஆடைத்தேர்வும்.அதே போல் சல்வாரையும் இப்போதெல்லம உடலோடு ஒட்டித்தான் அணிகின்றார்கள் என்பதில் எதிர்க்கருத்தும் இல்லை.
நீக்குஇங்கும் சினிமாக்கருத்தினை தான் உதாரணம் ஆக்கி இருக்கின்றீர்கள். இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சேலை, தாவணியை நாங்கள் கலாச்சார ஆடை என போற்ற முன் இப்படித்தான் சங்கடத்தினையும் தருகின்றதென்பதையும் புரிந்து காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும்.
நான் எதை அணிய வேண்டும் என நான் தீர்மானிக்க வேண்டும் சில சூழ்னிலைகளுக்காக சல்வாருக்கு ஷால் அணியவில்லை எனில் நான் கலாச்சாரத்தினை மீறினேன் என எப்படிச்சொல்ல முடியும்?
பதிவின் முக்கிய விடயம் சல்வார் கம்மீஸ் அல்ல அந்த நபர் பொது இடத்தில் ஷால்''லை உறுவி ஆடியதுதான்.
நீக்குநானும் இதையே சொல்கிறேன் மனிதன் செய்யும் தவறுகள் எல்லாம் காலம் மாறி விட்டது என்ற வார்த்தைக்குள் கொண்டு செல்லப்படுகிறது.
காணொளி பார்த்தாச்சு.இங்கே இதை விடவும் அதிகமான குத்தாட்டங்களும் மேடை நிகழ்வுகளும் எம்மவர் மத்தியில் அரங்கேறிக்கொண்டிருப்பதை காண்பதனால் காணொளி பெரும் தாக்கம் தரவில்லை.
நீக்குநான் இம்மாதிரி பொது மேடை நிகழ்வுகளை தவிர்த்து விடுவதனால் இதைக்குறித்த கருத்தும் என்னில் இல்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என நான் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இதில் இன்னொரு பிளஸ் என்னவெனில் .. இப்போதெல்லாம் நம்மாட்கள் மிக இளவயதில் ஹார்ட் அட்டாக் தற்கொலை என அதித மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் சூழலில் இம்மாதிரி நிஜழ்ச்சிகள் அவர்களுக்கு ரிலாக்ஸ் ஆக மன ஆரோக்கியத்தினை தரலாம். இப்படி ஆடுவதனால் அவர்களுக்குரிய மன அழுத்தங்கள் வெளியேறலாம்.
வெளித்தோற்றம் பார்வை சூழலை வைத்து எதையும் முடிவெடுக்க முடியாது என்பது தான் இன்றைய உண்மை.
இதையெல்லாம் வளர்த்து விடுவதும் சினிமாக்களும் சீரியல்களும் தானே? முதலில் அதிலிருந்து வெளி வந்தால் போதும், கலாச்சாரம் சீராகி விடும்.
சினிமாதான் சீரழிக்கின்றது என்பது நம் அனைவருக்குமே தெரிகிறது இருப்பினும் அதை ஒதுக்கி வைக்க முடியவில்லை.
நீக்குசேலையின் வாசத்தினை கண்வன் மட்டும் தான் நுகர வேண்டும் எனில் எந்தப்பெண்ணும் பொதுபேருந்திலும் ரயிலிலும் ஏன் தெருவிலும் கூட செல்ல முடியாது . இக்காலத்திலும் இம்மாதிரியான எதிர்பார்ப்புக்களால் பெண்களை அடக்கியாள முடியாது சார்.
பதிலளிநீக்குஎன் பார்வையில் அப்பாவும் மகளும் பொது மேடையில் குடும்ப நிகழ்வுகளில் ஒரு நடனம், நாடகம் இணைந்து நடத்துவது என்பது மிகவும் வரவேற்கத்தகுந்ததே. அவர்களின் புரிதல் சரியாக இருந்தால் அன்றி அப்பாவும் மகளும் மேடையில் நடன்ம் ஆடுவது முடியாத காரியம். ஜெனரேசன் கேப் அப்படி, அரிதிலும் அரிதால் மேன் மட்டவாசிகள் தான் இப்படி என்பதனால் நமக்குள் அது தப்பாக தோன்றுகின்றது. ஆனால் அப்பா மகள் இணைந்த ஒரு நடனம்.. ஆபாசமில்லாமல் கலைப்பார்வையில் ரசிக்கத்தக்கது.
வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டீர்கள் நான் சொன்ன வகை வேறு கணவனுக்காக முந்தானை விரித்தாள் என்று சொன்னேன் அதற்காக இப்படியா அர்த்தம் கொள்வது ?
நீக்குஅப்பாவும் மகளும் ஆடலாமே அதர்கென்ற சில முறைகள் இருக்கின்றது குத்தாட்டம் ஆடுவது இதில் எப்படி அடங்கும்
பாலாவின் தாரை தம்பட்டை என்ற படம் அதில் கரகாட்டம் ஆடுவது அண்ணனும், தங்கையும் மற்றொரு கலைஞன் சொல்வான் ஏண்டா தங்கச்சிகூட இப்படி ஆடலாமாடா ? என்று கேட்பான் அதற்கு அவன் என்ன செய்வது வயிற்றுப்பசியை போக்க வேறு வழி தெரியலையேண்ணே என்று சொல்லி அழுவான் கரகாட்டம் ஆடும் கலைஞனே இதை தவறு என்று சொல்கிறான்
பொழுது போக்குவதற்கு குடும்பத்துடன் வந்த இடத்தில் மகளுடன் இப்படி ஆடுவது தவறில்லையோ...
வேறொன்றுமில்லை இப்பொழுது எல்லா சேனல்களும் நானாட... நாயாட... என்று நிகழ்ச்சிகள் நடத்துகின்றதால் வந்த விணை.
இப்போதும் சினிமாவைத்தானே உதாரணமாக்குகின்றோம். நிஜ வாழ்க்கை அதை விட அதிக நிதர்சனமானது சார் காணொளி பார்க்காமல் பொதுப்பதிவுக்கு தான் நான் கருத்திட்டேன். நமக்கு எது தேவை தேவை இல்லை என நமக்கு விலக்கி வைக்க தெரியாமல் சினிமாவையும் தொலைக்காட்சியையும் தானே உதாரணமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நீக்குசினிமாதானே இன்றைய இளைய சமூகத்தினருக்கு வழி காட்டியாய் இருந்து வாழ்வைக் கெடுக்கின்றது.
நீக்குஉங்கள் பதிவை ஆதரிக்கிறேன். அதிரா அழகாக பதில் சொல்லி இருக்கிறார். ஃபயர்பாக்சில்காணொளி என்பதற்கு கீழே ஒன்றுமே வரவில்லை. க்ரோமில் திறந்தேன். அடோப் பிளேயர் வேண்டும், ஃபிளாஷ் பிளேயர் வேண்டும் என்கிறது. ஸோ "நெட்" ரிசல்ட்... நான் காணொளி பார்க்கவில்லை! பார்க்க முடியவில்லை! எனவே எனக்கு மர்மம் மர்மம்தான் இன்னும். சென்ற பதிவில் என் பின்னூட்டத்தைப் போட்டிருக்கிறீர்கள் நன்றி. நான் ஏன் நிர்வாண நகரம் என்று சொன்னேன் என்று புரிந்ததா?!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம் ஜி உண்மையிலேயே அதிராவின் கருத்துரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது
நீக்குநிர்வாண நகரம் அன்றே கேட்க நினைத்தேன் மறந்து விட்டேன். எனக்கு தெரிய நண்பர் ரஜினீஷ் சாமியார் என்று ஒருவர் இருந்தார் அந்த மடத்தினுள்தான் குள்ளமான நடிகர் அமிதாப்கூட கொஞ்ச காலத்தை ஓட்டினார்.
இப்படிப்பட்ட நடிகனை ஜனாதிபதி வேட்பாளருக்கு சிபாரிசு பண்ணியிருக்காய்ங்கே பாருங்க... ஹூம் காலக்கொடுமை.
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...
நீக்குநன்றி ஜி வருகைக்கு
நீக்குகாணொளி இன்னும் பார்க்கவில்லை பதிவைப்படித்து மட்டும் கருத்திட்டேன். காணொளி பார்த்து கருத்து தொடரும்,.
பதிலளிநீக்குக்கும் இன்னும் காணொளியே பார்க்கலையா ? அதுக்குள்ளே இவ்வளவு கேள்விகளா ? இந்தக் காணொளியை நான் வெளியிட வேண்டிய அவசியமே கடந்த பதிவின் சாராம்சம்தான்
நீக்குமற்றபடி பதிவு நடந்ததை விவரித்ததற்கான பதிவே.
ஒரு வருத்தமான விடயம் சொல்லவா ?
நான் எவ்வளவோ நகைச்சுவையான பதிவுகள் எழுதுகிறேன்
(எல்லோரும் ரசித்து கருத்துரை இட்டதால்தான் நகைச்சுவை பதிவு என்று சொன்னேன்)
அதற்கெல்லாம் வராமல் இப்படியான பதிவுகளுக்கு மட்டும் வருவது யதார்த்தமா ? அல்லது மற்ற பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லையா ?
இருந்தாலும் தோசை பதிவை கிண்டலடித்து நான் கருத்துரை போட்டதுக்காக இப்படியெல்லாம் இந்த அப்பாவியை வாட்டி வதைக்க கூடாது.
ஆஹா! அதென்னமோ இப்படியான பதிவுகள் தான் என் பார்வையிலும் படுகின்றது. உண்மை தான் சார். பின்னூட்டமிடவேண்டும் எனும் ஆர்வம் தரும் பதிவுகளாகவும் இம்மாதிரிப்பதிவுகள் தானே இருக்கின்றது. தோசைப்பதிவெல்லாம் ஒரு பதிவா? அது டிப்ஸுங்க சார்.
நீக்குஆமாம் நீங்கள் இதுக்கெல்லாமா வருத்தப்படுவீர்கள்?
நீக்குஅப்படீனாக்கா... நீங்க கருத்துரை இடாத பதிவுகள் எல்லாம் வெத்து வேட்டு அப்படியா ?
நீக்குஇதுவே தனி கவலையாகி விடும் போலயே...
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யகோ! இதென்னாங்க சார். என் பார்வைக்கு வரும் பதிவுகளுக்கு தானுங்க ஐயா நான் பின்னூட்டம் இடுவேன். வராதவைகளை என்னா செய்யட்டும். இப்ப என்னா செய்யணும்ங்கறிங்க சாரே?
நீக்குஉண்மையில் சொல்லட்டுமா? எனக்கு இந்த பதிவு, பின்னூட்டம், தமிழ் மண வாக்களிப்பு இல்லாம் ஆர்வம் இல்லை சார். நேரம் இருந்தால் வாசிப்பேன் கருத்திடுவேன். வாக்கும் இடுவேன். மனசும் சூழலும் ஒத்துழைத்தால் இப்படி பெரிய பின்னூட்டமும் தருவேன்.அது விவாதங்களாகி விடுவதால் பலர் நமக்கேன் வம்பு என என்னை விட்டு தூரமாய் போய் என்னை சண்டைக்காரியும் ஆக்கி விடுவார்கள். அதுக்காக சொல்ல வந்ததை சொல்லாமல் போகவும் மாட்டேன். நேரம் கிடைக்கணும் சார். அது தான் பிரச்சனையே!
வாதம் செய்வது மூளைக்கு நல்லது இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியவரும் எனக்கு தெரியாதது உங்களிடமிருந்து தெரியவரும்
நீக்குஉங்களிடமிருந்து தெரிந்து கொண்டதை வைத்து நான் தெரிந்து கொள்வேன், நான் அறியாததையும் உங்களிடமிருந்து அறியமுடியும்
எப்பொழுதுமே சொல்ல நினைப்பதை சொல்லி விடவேண்டும் இதில் பயப்பட என்ன இருக்கிறது ?
அப்பாவி நான்தான் பயப்படணும் நானே பயப்படாதபோது நீங்க ஏன் பயப்படணும் ? நீங்களே பயப்பட்டால் பிறகு எனக்கும் பயம் வரும் நான் பயந்தால் பயமே எனக்கு பயமாகலாம்.
முலில் பிழைப்பு பிறகே வலைப்பு ஆகவே....
நேரம் கிடைக்கும் போது மட்டும் வந்து இப்படி பயமுறுத்துங்கள்.
கலாச்சார நிகழ்வு என்னும் பெயரில் பொது வெளியில் மேடையில் நடைபெறும் கூத்துக்கள் வேதனைதான் நண்பரே
பதிலளிநீக்குதம=1
வருக நண்பரே கூத்துகள் மேடையில் நடக்கலாம் பார்வையாளர்கள் மத்தியிலுமா ? வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குகலாச்சாரம் என்பதான வரையறை நிலையில் சிறு நூலிழை அளவு வேறுபாடு அவரவரர் கண்ணோட்டத்தில் தோன்றும். சிறிது பிசகினாலும் சிக்கலே.
பதிலளிநீக்குமுனைவரின் அவர்களின் நடுநிலையான கருத்துரைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி... பாவாடை-தாவணி - இது விரைவில் வழக்கொழிந்துபோகும் தமிழ்நாட்டில். சல்வார்-கம்மீஸ் (பொதுவா இப்போ குழந்தைகள், பெண்கள் பள்ளிகளுக்கு உடுத்துவது, வேலைக்குச் செல்லும்போது உடுத்திச்செல்வது) - இது நல்ல உடை, பாதுகாப்பானது. பாவாடை-தாவணியைவிட மேலானது (நம்ம ஊர் சூடு அதிகம் என்றாலும்). நம்ம கலாச்சாரம் என்பது வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மற்றபடி உங்கள் இடுகையின் உட்கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது. காணொளி வரவில்லை.
பதிலளிநீக்குசமீபத்தில் சாருஹாசனின் புத்தகம் ஒன்றைப் படித்தேன். அதில் அவர் சொல்கிறார், அவருக்குக் கல்யாணம் ஆன புதிது. அவர் மதுரையில் அவர் மனைவியுடன் வந்தபோது, மனைவி ஏதோ கடைக்குள் நுழைந்துவிடுகிறார். இவர் சட்டென்று மனைவி எங்கே என்று தேட, இரண்டு மூன்று கடைகளில் நுழைந்து வெளியே வருகிறார். இதனைப் பார்த்த சில இளைஞர்கள் (60 வருடத்துக்கு முன்பு), சாருஹாசனிடம், 'என்ன உதைவேணுமா, பொம்பளைப்புள்ளைகளைப் பார்க்க ஒவ்வொரு கடையாப் போறயா' என்று கேட்கின்றனர். கடைசியில், அவர் மனைவி வெளியே வந்ததும், இருவரையும் பார்த்துப் புரிந்துகொள்கின்றனர். எதற்குச் சொல்கிறேன் என்றால், மதுரையில் மட்டும், பொதுவாச் சொல்லுவாங்க, பொம்பளைப் பிள்ளை பின்னால் சென்றால், பார்க்கிற யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள், உதைக்க வருவார்கள் என்று. சாருஹாசனே குறிப்பிடுவது, சென்னையைவிட மதுரையில் பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகம் என்று (இப்போ எப்படின்னு தெரியலை. அப்படித்தான் இருக்கும்). இந்த மதுரை இளைஞர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் எண்ணம் எல்லோருக்கும் வந்தால் நல்லது.
வருக நண்பரே
நீக்குவிரிவான விளக்கம் பாதுகாப்பான உடை இதில் மாற்றுக்க கருத்து இல்லை
நான் சொல்ல வருவது ஷால் அது அவசியமில்லாமல் முதுகின் பின்னே கிடக்கிறது என்பதுதான்.
கீழே சகோ திருமதி. ராஜி அவர்கள் அழகாக சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.
ஷால்?! மறைக்க வேண்டியதை மறைக்காம வீணாய் வாங்கப்படும் ஒரு பொருள்.. தண்டச்செலவு
பதிலளிநீக்குவருக சகோ அருமையாக சொன்னீர்கள் என்பதைவிட ஓஃபனாக விசயத்தை "உடை"த்து விட்டீர்கள் நன்றி
நீக்குஇயற்கையிலேயே ஆணைக்காட்டிலும் பெண்ணின் உடம்பு கவர்ச்சி மிக்கது[சிலரிடம் இது மிக அதிகம்]. பெண்ணின் மிகையான கவர்ச்சி கண்டு பெண்ணே திகைத்துப்போகிறாள் எனும்போது ஆணைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
நீக்குஅந்தக் காலம் ஆகட்டும் இந்த நவீன காலம் ஆகட்டும், கவர்ச்சிப் பிரதேசங்கள் [கூடுமானவரை] மறைக்கப்பாடாதவரை, அந்தக் கவர்ச்சியே பெண்ணுக்குப் பேராபத்தை உண்டுபண்ணுகிறது; உயிருக்கே உலை வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கவர்ச்சியை வாரி வழங்கிய அதே இயற்கை, பெண்ணை உடலளவில் பலவீனமானவளாகவும் பிறக்க வைத்திருக்கிறது. ஆபத்துகள் நேரும்போது, ஒரு பெண் ஆண் உதவி இல்லாமல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது மிகவும் கடினம்[மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தவரை, எளியவனின் துணையை வலியவன் அபகரித்துச் சென்றது வரலாறு]சமுதாயத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியிருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் ஆகும்.
இன்றைய சமுதாயக் கட்டமைப்பு, தனித்து வாழும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்புத் தருவதால் உடைக் கட்டுப்பாடுகளைச் சில பெண்களால் அலட்சியப்படுத்த முடிகிறது.
சமுதாயக் கட்டமைப்பும் குடும்பமாய் வாழும் முறையும் அறவே தகர்ந்துவிடும் ஒரு நிலை உருவானால் தனித்து வாழும் பெண்களின் நிலை என்ன?
எது எப்படியோ, மனத்தளவில் மட்டுமல்ல உடை உடுத்துவதிலும் இருபாலருக்கும் கட்டுப்பாடுகள் அவசியம் என்றாலும் இது விசயத்தில் பெண்ணுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.
வருக நண்பரே அழகான கருத்துரை எதிர்கால சந்ததியினர் தனது நிலையை உணர்ந்து வாழவேண்டும்
நீக்குகுறிப்பாக இந்தியாவில் காரணம் இப்பொழுது ஐந்து வயது குழந்தை மட்டுமல்ல அறுபது வயது கிழவிகூட காமுகனால் பாதிக்கப்டுகின்றனர்.
பெண்கள் தனியாக வாழும் சூழல் இந்தியாவில் வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை காரணம் இப்பொழுதே மாப்பிள்ளைக்கு பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது.
கில்லர்ஜி உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம், என்னால் இதற்கு எப்படிப் பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ஏனென்றால் நானும் பாவாடை தாவணி அணிந்தவள். புடவை கட்டியவள். இப்போது பல வகை உடைகள் அணிபவள். அதுவும் பல வருடங்களாக பெரும்பாலும் சல்வார், பேன்ட்/ஜீன்ஸ் டாப்ஸ் என்றுதான். அதுவும் பயணம் என்றால் பெரும்பாலும் பேன்ட்/ஜீன்ஸ் ஷர்ட் தான் அணிவதுண்டு. ஏறி இறங்க ஓட என்று எனக்கு சௌகர்யமாக இருப்பதால். அதுவும் குடும்பத்தாரின் அனுமதியுடன். என் மகனுக்காக அவன் கராத்தே கற்றுக் கொண்ட போது அவனுக்காக நானும் கற்றுக் கொள்ள நேர்ந்ததால்....
பதிலளிநீக்குஎந்த வகை உடைகள் அணிந்தாலும், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. நாம் அணியும் உடையும் பிறர் கண்ணிற்கு உறுத்தாமல் நமக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்தால் பிரச்சனை இல்லை.
இரண்டாவது, நாம் எந்த உடை டீசண்டாக, அறுவருப்பு தோன்றாத வகையில், உடலை மூடியபடி அணிந்து நமது உடல் மொழியையும் மிகவும் நாகரீகமாக, பண்பாட்டுடன் வைத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. பெண்கள் அணியும் உடைக்கேற்றபடி உடல் மொழி மிகவும் அவசியம் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
தாவணி அணிந்த காலத்திலும் கூட அதனை மிகவும் கேவலமாக அணிந்து வந்த பெண்கள் உண்டு. உடல் அங்கங்களைக் காட்டியபடி, இலை மறை காயாகக் காட்டியபடி.அப்போது பள்ளியில் ஆசிரியை அவர்களை நிற்க வைத்து எப்படி உடுத்தி வர வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுண்டு. அது போன்று புடவையையும் கூட மிகவும் கேவலமாக அணியலாம். அணிந்தவரும் உண்டு. பலரும் இப்போது கூட அப்படி அணிவதைக் காண்கிறேன். புடவையை உடுத்திக் கொண்டு உடல் அங்கங்களைக் காட்டுவோர் பலர் உள்ளனரே ஜி! சல்வாரும் அப்படித்தான், பான்ட் ஷர்டும் அப்படித்தான். எந்த உடை அணிந்தாலும் அதனை மிகவும் டீசண்டாக பிறர் நமக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அணிந்து நமது உடல் மொழியையும் அப்படி அமைத்துக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. நமது பார்வையும் மாற வேண்டும் என்பதும்..
பொதுவெளி என்று வரும் போது நாம் மிகவும் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை 100% ஏற்றுக் கொள்கிறேன்.
ஹஹஹஹ் அந்தப் பாடகர் ----கடவுள் இவர்தானா!!! ..
நல்ல பதிவு ஜி...
கீதா
நான் சொல்ல வேண்டிய விடையை அழகாக, விரிவாக நீங்களே சொல்லி விட்டீர்கள்.
நீக்குகிரிக்கெட் விளையாடும் பெண்கள் சேலை கட்டிக்கொண்டுதான் ஆட வேண்டும் என்று சொன்னால் எந்த அணியாவது வெற்றி பெறுமா ? பொழுதுதான் வெட்டியாக போகும்.
அதைப்போல் பொது இடத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை யாரும் மறக்ககூடாது.
நல்ல பெண்களும், தவறான பெண்களும் எல்லா நாட்டிலும், எல்லா ஊர்களிலும், எல்லா மதத்திலும், எல்லா ஜாதியிலும் உண்டு அது இதற்கு அப்பாற்பட்டது
ஜி ஷாலைப்பற்றிச் சொல்லுகின்றீர்கள் இல்லையா? நான் சாரி கட்டிக் கொண்டு பேருந்தில் சென்ற போது கூட்டம். பிடிப்பதற்கு கம்பி கிடைக்கவில்லை. நானோ குள்ளம். பேருந்தோ பல சமயங்களில் சடக் சடக் என்று ப்ரேக் அடித்துக் கொண்டிருந்தது. மேலே உள்ள கம்பியைப் பிடிக்கக் கஷ்டமாக இருந்தது கையைத் தூக்கிப் பிடித்த போது.....நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ஜி. என் சாரியின் இடது புறம் விலகி...இத்தனைக்கும் நான் எல்லோரும் கட்டுவது போல் கட்டுவது கிடையாது. உடல் மறைத்து இடது புறம் அதிகமாக புடவை இருப்பது போல் தான் உடுத்துவது என்றாலும் என் இடது உடல் தெரியுமே என்று மிகவும் கஷ்டப்பட்டென் அதற்கு ஏற்றாற் போல் ஒருவன் கை வைக்கவும், பேருந்து ஆடுவதை சாக்காக வைத்து கை வைக்கவும்,,,,பிடித்தேன் அவனை....ஒரு குத்து விட்டிருப்பேன் ஆனால் எனது குத்து எக்குத் தப்பாகப் பட்டு அவன் மயங்கிவிட்டால்...அதனால் நடத்துனரைக் கூப்பிட்டு அவனை அவரிடம் காட்டிக் கொடுத்து...என்று...எனவே ஷாலுக்கும், சாரிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை ஜி. நாங்கள் தானே அதனை அனுபவிக்கிறோம்...எத்தனைப் பெண்கள் சாரி கட்டிக் கொண்டு அவர்கள் அங்கங்கள் தெரியும் படி இல்லை என்றால் அதனை மறைப்பதற்கு அவ்வப்போது அதனை எல்லோர் முன்னிலும் இழுத்து விட்டபடி..அட்ஜஸ்ட் செய்த படி வலது கை எப்போதும் வலது புற புடவையின் விளிம்பை இழுத்து இழுத்துவிட்ட படி.....அதுவும் பொது வெளியில், பல ஆண்களுக்கு முன்னால்.... நல்ல உடல் மொழி அல்லவே ஜி.
பதிலளிநீக்குகீதா
வருக நான் சொல்ல வரும் முக்கிய விடயம் விலை கொடுத்து வாங்கிய ஷால்''லை இன்றைய பெண்கள் ஏதோ துண்டுபோல் இட்டுக்கொள்கின்றார்கள் என்பதே...
நீக்குநெல்லைத் தமிழன் பாவாடை தாவணி வழக்கொழிந்து போகாது....அது இப்போது காக்ரா என்று பல ரூபங்களில் வந்துவிட்டது. இப்படி மருவி மருவி வந்துகொண்டுதான் இருக்கும். அதுவும் தமிழ் சினிமாவில் கிராமீய காதல் பாடல்கள் இருக்கும் வரை, ஏனென்றால் விழாக்களில் ஆட வேண்டுமே அப்போதேனும் இந்த உடை வேண்டுமே.... பாவாடை தாவணியும் இருக்கிறது எக்சிபிஷன் போல ஒரு சில நிகழ்வுகளுக்கு இப்போதைய பெண்கள் உடுத்தி வருகிறார்கள் ஆனால் உடல் மொழி சரியாக இல்லை. எப்போதும் அவர்கள் கை தாவணியை அட்ஜஸ்ட் செய்வதிலேயே இருக்கிறது. அதுவும் நன்றாக இருப்பதில்லையே..
பதிலளிநீக்குகீதா
வணக்கம்
பதிலளிநீக்குஜி
பதிவை படித்தபோது வேதனைதான் இருந்தாலும் நகைச்சுவை புயல் வடிவேல் சொல்வது போல இவை எல்லாம் வாலிப விளையாட்டுக்கள் ஜி..ஆகா..ஆகா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக நண்பரே காணொளியில் ஆடுபவர் வாலிபர் போலவா....... இருக்கூகூகூகூகூகூகூ.........
நீக்குமொத்தத்தில் எந்த உடை பெண்கள் அணிந்தாலும் அதற்கான மரியாதையைப் பெறவும், பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவ்வுடையை எப்படி டீசண்டாக அணியலாம் என்றும் பெற்றோர் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் நல்லது.
பதிலளிநீக்குமற்றொன்றும் ஜி....இப்படி உடை அணிபவர்களில் பெரும்பாலோர் அதாவது நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில் அணிபவர்கள் பலர் மிகப் பெரிய அளவில் மிகச் சிறந்த சேவைகள் ஆற்றி வருகின்றனர் ஜி. நாம் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்குச்க் செய்து வருகிறார்கள். குறிப்பாக முதியோர் இல்லத்திற்கும், மனநிலை பாதிக்கபப்ட்டவர்களுக்கும், நட்சத்திரக் குழந்தைகளுக்கும் இப்படியான இளைஞிகள் கல்லூரிப் பெண்கள் மிகப் பெரிய சேவை ஆற்றி வருகிறார்கள். அது போன்று கல்யாணம் ஆன பெண்கள் தங்கள் கணவரின் பெற்றோரையும் அவரது குடும்பத்தாரையும் தங்களுடனேயே வைத்துக் கொண்டும் அன்பு செலுத்தியும் பார்த்துக் கொண்டு வருகிரார்கள். எங்கள் குடுமப்த்திலேயே பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள் ஜி. எனவே உடைக்கும், மனநிலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை ஜி...
கீதா
சரியாக சொன்னீர்கள் கீதா. பல நேரங்களில் நானும் நீங்கள் சொன்னதைப்போல் சங்கடங்களில் சிக்கி இருக்கின்றேன். அணியும் ஆடையை வைத்து அதுதான் எங்கள் கலாச்சாரம் என திணிக்காமல் எந்த ஆடை அணிந்தாலும் நம் உடல் அசைவுகளில் கவனமாக இருப்பது தான் முக்கியம். சேலையை அணிந்து கொண்டு ஓடிஆடி நடந்து குனிந்து வேலை செய்யும் போதெல்லாம் சங்கடமாகவே இருக்கும், அங்கிங்கே என ஆயிரம் பின் கொண்டு குத்தி மறைத்தாலும் கூட த்தான்.
நீக்குஜீன்ஸ் டாப்சில் கலாச்சாரம் மீறப்படுவதாக சொல்வார்கள். உண்மையில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஆடையாக ஜீன்ஸ் டாப்ஸை சொல்லலாம். தற்பாதுகாப்புக்கு மட்டும் அல்ல முழு உடலை மூடி மறைக்கவும் தான். ஆனால் அதை அணிந்த பின் நாம் காட்டும் உடல் அசைவுகளில் கவனமாக இருந்தால் போதும். சில நேரம் ஜீன்ஸுக்கு மேல் அணியும் டாப்ஸ் இறுக்கமாக இருந்தால் நாஞும் ஷால் அணிவதுண்டு தான். ஷால் அணிய வேண்டும் எனும் ஆடைகளுக்கும் இறுக்கமான சல்வாருக்கும் கட்டாயம் ஷால் அணியத்தான் வேண்டும். கலாச்சார மீறல்கள் என்பது இதை விட பாரதூரமாக போய்க்கொண்டிருக்கின்றது.
வயதுக்கு தக்க மரியாதைப்போச்சும், சில நாட்களேனும் மூத்தவரானாலும் அவரை பெயர் சொல்லி அழைக்காமல் இருப்பதும் கூடத்தான் நம் தமிழ்க்கலாச்சார மரபு அல்லவா?
அணியும் ஆடையை வைத்து ஒருவரை மதிப்பிடாமல் அவர்கள் நடத்தையை வைத்து தான் மதிப்பும் மரியாதையும், கொடுக்கலாம்
தமிழ் நாட்டில் சேலை உடுத்துவது மரபு ஆனாலும் தமிழச்சிகளைவிட சூடான் நாட்டு பெண்கள் உடுத்தும் சேலை முறைகள் அருமை அதாவது அவர்களின் முகமும், மணிக்கையும், கால்களும் மட்டுமே பிறர் காண முடியும் பிறகு நான் புகைப்படம் தேடி பதிவு போடுகிறேன்.
நீக்குஎன்னைப் பொருத்தவரை இவர்கள் சல்வார் கம்மீஸைவிட அருமையாக உடலை மறைத்து விடுகின்றார்கள்.
ஸ்விஸ் நாட்டவருக்கு அதற்காக சூடான் பெண்களைப்போல தமிழ்ப் பெண்களையும் சேலை உடுத்தச் சொல்கிறீர்களா ? என்று சூடாகி விடாதீர்கள்
சாரி கட்டிக் கொண்டு வெளியில் பார்க்க கலாச்சாரத்துடன் மிகவும் நல்லவர்களாகத் தோன்றுபவர்கள் வீட்டின் வாசலில் ரெட்லைட்!!!!!!! அதே சமயம் இப்போதைய இளசுகள் ஏதோ உடை உடுத்திக் கொண்டாலும், குடிசைகளின் இடையில் இறங்கி சேவை செய்கிறார்கள்!!! இரண்டையும் நாம் பார்க்கிறோமே ஜி!
பதிலளிநீக்குஎனவே எந்த உடையும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை ஜி! எல்லாமே நம் மனதில் தான் இருக்கிறது! சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம்..
எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் எல்லாமே நல்லதாகும்!!!
கீதா
உண்மைதான் கீதா. இது தான் என் கருத்தும். சேலை அணிந்தால் தான் உயர்வென்பதும் இல்லை. தாழ்வும் இல்லை. பணி நிமித்தம் உடை அணிவோருக்கும் இந்த சங்கடங்கள் உண்டு.
நீக்குநான் முதலில் சொன்னது போல உடைக்கும் ஒழுக்கத்திற்கும் சற்று வேறுபாடு உள்ளது நல்லவர்கள்,. கெட்டவர்கள் எங்கும் உண்டு உகாண்டாவில் கூட உண்டாமே...
நீக்குதிரு ஸ்ரீராம் மற்றும் எனது வேண்டுகோளை ஏற்று அந்த ‘இசைக் கடவுளை’ வெளிப்படுத்தியமைக்கு நன்றி! அவர் பாடிய பாட்டே தமிழ் பாட்டு அல்ல.அப்புறம் வேறு என்ன சொல்ல.
பதிலளிநீக்குஆஹா இதுவும் சரிதான் நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குகடவுளை காட்டியதால் பக்தையின் கோபத்துக்கு ஆளாகி விட்டேனே...
இப்போதெல்லாம் இப்படி இல்லை எனில் நாகரிகம் தெரியாதவர்களாகி விடுவோம்! :( நாம் காட்டுமிராண்டி என அழைக்கப்படுவோம்! இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்னும் அளவுக்குத் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகள் வருவதாக விமரிசனங்கள் மூலம் தெரிய வருகிறது. பெண்கள் சுதந்திரம் என்னும் பெயரில் எங்கேயோ போகிறார்கள்! தடுக்க வேண்டிய பெற்றோர் வாளாவிருக்கின்றனர்.
பதிலளிநீக்குவருக சகோ பெற்றோர்களுக்கு இப்பொழுது எந்த குழந்தைகளும் பயப்படுவதில்லை
நீக்குபெற்றோர்களும் ஆசிரியர்களிடமும் சொல்லி வைக்க முடியாது காரணம் நாம்தான் ஏற்கனவே அடிச்சா உன் கையை ஒடிச்சுருவேன் என்று ஆசிரியரை மிரட்டி வைத்திருக்கின்றோமே...
வீட்டிலும் தாத்தா-பாட்டி இல்லை வேறு வழி ? அனுபவித்தே தீரவேண்டும்.
நீங்கள் எடுத்த காணொளியில் உங்களையும் பார்த்தேனே
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. நன்றி ஐயா வருகைக்கு
நீக்குஉங்கள் ஆதங்கமும் நிசா அவர்களின்
பதிலளிநீக்குவாதங்களும் மிகச் சரியே
அவர்கள் சொல்வது போல
அது செட் அப் ஹோஸ்டியாகக்கூட
இருக்கலாம். ஆனால் அதை பொது வெளியில்
பார்வையாளர்கள் இரசிப்பது அல்லது
சகித்துக் கொண்டிருப்பது
நம் கலாச்சாரத்திற்கு ஏற்றதல்ல
கண்டிக்கத் தக்கதே
கவிஞரின் சரியான புரிதலுக்கு நன்றி
நீக்கும்...
பதிலளிநீக்குநன்றி தோழர்
நீக்குகாணொளி காண எனக்கு கொடுத்து வைக்கவில்லை நண்பரே....
பதிலளிநீக்குஉங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருங்கள் நண்பரே.
நீக்குபிறகு காணொளி காணமுடியும்.
கொஞ்சம் பிசி.. வந்து பார்க்க நிறைய கருத்துக்கள்.....அந்த சால் போட்ட பொண்ணு மட்டும் பின் குத்தி இருந்தா அங்கே ரன களம் நடந்திருக்கும்
பதிலளிநீக்குவருக அருமையாக சொன்னீர்கள் இந்த பதிவும் வந்து இருக்காது.
நீக்குஅடடா...! ஒரு பட்டிமன்றமே நடந்திருக்கே...!!!
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. ஸ்விஸ் நடுவர் இப்பொழுது வருவார் பாருங்கோ... ஜி
நீக்குவரட்டுமா? போகட்டுமா?
நீக்குசும்மா போன என்னை வரச்சொல்லி இழுத்து விடுவது யார் சார்? என்னமோ சல்வாருக்கும் சுடிதாருக்கும் ஷால் போடாவிட்டால் எங்க கலாச்சாரத்தை நாங்க மீறுகின்றோம் என சொன்னாப்பல இருந்திச்சா... நானும் தான் பல நேரம் ஷால் போட மாட்டேன். யானைக்கு தும்பிக்கை மாதிரி சுடிதாருக்கு ஷால் ஒன்றும் உதவியாயிருப்பதில்லை. உபத்திரவம் தான். நம்ம கில்லர்ஜி சார் இம்பூட்டு வருத்தப்ப்ட்டாரே என நேற்று ஹோட்டலுக்கு போகும் போது ஜீன்ஸ் டாப்புக்கு ஒரு ஷால் தூக்கி மேலே போர்த்திட்டு போனேன். குருப் வந்து பஸ்ஸில் இறங்கியதும் ஆளுக்கொரு தயாரிப்பில் நான் தயிர்ப்பாத்திரத்தினை பவ்வேயில் வைக்கலாம் என தூக்கிட்டு போனேனா... ஷால் நுனி தயிருக்குள் விழுந்து அம்பூட்டு தயிரையும் கொட்டியாச்சு. அப்புறம் ஓடிப்போய் ஷாலை தூக்கி போட்டாச்சு. கலாச்சாரம் மீறினால் என்ன எனக்கு தயிர்ச்சட்டி முக்கியமாக்கும். ஹாஹா.
அதான் சொன்வேனே.. நான் கடைப்பிடிக்காத, என்னால்செய்ய முடியாத எதையும் அடுத்தவருக்கு ஆலோசனையாக என்ன பேச்சுக்கு கூட சொல்வதில்லை. அதே நேரம் என் கருத்தினை சொல்ல தயங்கியதும் இல்லை.
நிகழ்வுகள் பெரும்பாலுமே கலாச்சார மீறல்களுடன் தான் எப்போதும் நிகழ்த்தப்படுகின்றது என்பதனால் நான் ஆரம்பத்திலேயே தவிர்த்து விடுவேன். எங்கள் கம்பெனியினூடாக ஸ்பான்சர் கேட்டு வரும் போதும் வியாபாரம், விளம்பரம் எல்லாம் தாண்டியும் மறுதலித்திருக்கின்றேன். சினிமா சீரியல் சம்பந்தமான எந்த நிகழ்வுக்கும் ஆதரவோ ஸ்பான்சரோ செய்வதும் இல்லை.
அது தான் நான் கடைப்பிடிக்காததை அடுத்தவர் மேல் சுமத்த விரும்பாமல் விலகி விடுவேன்.
நீங்கள் எப்படி? இங்கே கலாச்சார மீறல் என கருத்திட்டிருக்கும் ஏனையோர் எப்படி?
கேட்டுப்பாருங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் எவ்வகையில் எங்கள் கலாச்சாரத்தினை கடைப்பிடிப்பதில் அக்கறையாக இருக்கின்றோம் என்பது புரியும்.
முதலில் நான் என்னை மாற்றிவிட்டு அடுத்தவரை மாற்ற நினைப்பேன். நினைக்க வேண்டும். ஷால் விடயமும் அப்படித்தான்.எல்லோரும் சொல்கின்றார்கள் என போலித்தனமாக கருத்திட நான் தயாரில்லை சார். எழுத்தில் ஒன்றும் செயலில் வேறொன்றாகவும் நான் எப்போதும் இருப்பதும் இல்லை.அதனால் ஷால் விடயத்தில் என் கருத்தினை பகிர்ந்தேன். அம்புட்டுதேன்.
ஹலோ தயிர்ச்சட்டி கொட்டியதற்கு நானா பொருப்பு ? உங்களது கவனக்குறைவு வேலை செய்யும் பொழுது வலைப்பூ சிந்தனை எதற்கு ?
நீக்குசொல்ல வரும் கருத்தை ஆணித்தரமாக சொல்லும் தங்களுக்கு ஒரு சல்யூட் உண்மை சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதே நன்று.
என்னைப் பொருத்தவரை சமூகத்தவறுகளை தட்டிக்கேட்க தவறுவதில்லை அதற்காக அரசு பணத்தில் மோசடி செய்து உலகம் சுற்றிக் கொண்டு இருக்கின்றாரே மோடி அதைப் கேட்பீர்களா ? என்று கேட்டு விடாதீர்கள்
மீள் வருகைக்கு மீண்டும் நன்றி
ஆஹா! தயிர்ச்சட்டி தானாய் கொட்டுப்படல்ல. நான் போட்டிருந்த ஷால் தான் போய் விழுந்திருச்சி. ஆமாம் அப்ப யார் பொறுப்பு?
நீக்குஎங்கள் வக்கிலிடம் கன்சல்ட் செய்து விட்டு உங்களுக்கும் நோட்டிஸ் அனுப்பி கேட்கின்றேன். அதென்ன சார், சிந்தனை எப்போதும் ஒரே போல் தானே இருக்கணும். வேலை செய்யும் போதேன் தனிச்சிந்தனை வேண்டுமாம்?
அதெல்லாம் கவனமாத்தான் கொண்டு போனோம். அவ்வ்வூ. இந்த ஷாலால் ஒரு தடவை பவ்வேக்கு வைக்கும் நெருப்பு கூட பத்திக்கிச்சாக்கும். நல்ல வேளை ஷாலுக்கு பின் செய்யவில்லை. வேலை செய்த தம்பி வந்து சட்டென ஷாலை எடுத்து வெளியே வீசிய்தால் தப்பிச்சசேன் சார். கவனக்குறைவு எல்லாம் இல்லை. தீடிரென வீசிய காற்றில் நெருப்பு சற்று அதிகமா எரிந்தது. நான் அருகில் நின்றதால் ஷாலில் பிடித்து விட்டது
அதானே? நீங்கல்லாம் ஏன் மோடியை தட்டிக்கேட்கவில்லை. அங்கே உங்க ஊரில் தானே நிரம்ப தட்டிக்கேட்டல்களுக்குரிய காரியங்கள் நடக்குது.
பின் போட்டு வைத்திருந்தால் தயிர்சட்டிக்குள் விழுந்திருக்காது என்று சொல்லித் தந்தால்தான் தெரியுமா ?
நீக்குஇதற்கு மேலே ஏஞ்சலின் இதைத்தான் சொல்லி சென்று இருக்கின்றார்கள்
மோடிக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில் கடந்த 4 வருடமாக பேசிக்கொள்வதில்லை.
ஹா ஹா.. நான் சமையல் செய்ரென் ..நாங்கள் சமைக்கும் போது பரதம் ஆடும் பெண் எப்படி தலைப்பு சுற்றி கட்டுவாரொ அப்படி கட்டுவொம் ..இல்லைனா ஏப்ரன். ..மீண்டும் வரென் கொஞ்சம் நேரத்தில்
நீக்குவாங்க ஸ்விஸ்காரங்களைக் கண்டாலே எனக்கு பயமாகத்தான் இருக்கு.
நீக்குஇசைக் கடவுள் இவர் தானா?
பதிலளிநீக்குதொலைக்காட்சிகளில் இதைவிட மோசம்.
வருக சகோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது இதை பெற்றோர்களும் உணரவேண்டும்.
நீக்குவணக்கம் ...
பதிலளிநீக்குதடைகள்
நம்மை
தூண்டும் சக்திகள்
வருக தோழரே தங்களது ஊட்டத்திறனுக்கு நன்றி
நீக்குஸ்விஸ்க்காரம்மா மேடம் இங்கே வந்து பதில் சொல்லுங்க :)
பதிலளிநீக்கு//The materials being fire retarded; The chef wear will protect from splashes, spills and burns; Non-Stick safety shoes need to be worn and ideally with a steel toe cap due to safety when lifting heavy objects.//
செப் cap ஏப்ரன் இ துதான் லண்டன் கேட்டரர்ஸ் மற்றும் வெளியிடங்களில் கிச்சனில் வேலை செய்பவர் அணிய வேண்டிய கட்டாய உடை
பாயிண்ட் நம்பர் 1.. நீங்க சல்வார் கேட்டரிங் செய்யுமிடத்தில் அணிந்திருக்கக்கூடாது கூடாது அதுவும் பறக்க விடுறமாதிரி விட கூடாது
பின் போட்டிருந்தாலும் பின் புறம் knot போல கட்டி இருக்கணும் ..
இந்த தவறுக்கு முதலில் பைன் போடுவாங்க இங்கே :)
ஏப்ரன் கட்டாம சமையல் செய்ற இடத்தில நுழைந்து தயிர் சட்டியில் ஷாலை விட்டு முக்கியது அதைவிட தவறு
அப்புறம்
கமிங் டு தி பாயிண்ட் யார் குர்த்தாவுக்கு ஷால் போட சொன்னாங்க ..குர்தாவுக்கு ஷால் அணிய மாட்டாங்க அது தொளதொளன்னு இருக்கும் ஷர்ட் போலத்தான் அணியணும்
பதிவின் திசை மாறினாலும் நான் இதற்கு விளக்கம் தர வேண்டும். எங்கள் கேட்டரிங்க என்பது தனியே சாப்பாட்டுடன் முடிவதில்லை. ஆல் அரேஞ்மெட் பல நேரம் வெல்கம் வித கிளினிங்க வரை என் மேற்பார்வையில் வேலையாட்கள் தான் செய்ய வேண்டும். அதனால் ஹால் வாசல் முதல் மேடை வரை என் நடமாட்டம் இருக்கும் என்பதனால் அதற்கேற்ப பார்ட்டி க்குரிய ரிச் சல்வார் தான் அணிவேன். கேட்டரிங்க் குரிய எங்கள் கம்பெனி ஆடையும் ஏப்ரனும் வேலையாட்கள் கட்டாயம் அணிவார்கள். கைஉறை முதல் அனைத்து அவர்களுக்கு கட்டாயம் தான். நான் மனேஜ்மெண்ட் தான் அங்கே என்பதோடு அந்தந்த வேலையாட்களை அததுக்கு நியமித்த பின் எல்லாம் தயாராகி ஹாலில் போய் இறங்கியபின் கம்பெனி ஆடையை அணிவதை தவிர்ப்பேன்.
நீக்குதயிர்ச்சட்டி விடயத்திலும் அப்படித்தான். கிச்சன் மற்றும் பவ்வே தயார் செய்தவர்கள் லாஸ்ட் நிமிடம் தயிர் வைக்க மறந்ததனால் நான் குருப் வந்த பின் எடுத்து வைக்க வேண்டி வந்தது. அதைத்தான் இக்கே சம்பவமாக்கினேன். கிச்சனில் வேலை செய்பவர்கள் அதற்கான ஆடைகளோடு தான் இருப்பார்கள். நான் ஹாலில் கவனிப்பதனால் நர்மல் ஆடையில் தான் அதிலும் இந்திய குருப் எனில் இந்தியர்களுக்குரிய சல்வாரிலும் சுவிஸ்குருப் எனில் ஹீன்ஸ் ரிசேட் அப்பது டாப்ஸ் எனவும் அணிவேன். அது அந்த சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பதே. சில நேரம் நெருங்கிய உறவினர்கள், நட்புக்கல் கேட்டரிங்க அண்ட் ஈவன்ஸ் ஆர்டர் எங்களிடம் தந்தால் சேலை அணிந்து வர வேண்டும் என சொல்வார்கள். சேலையும் அணிவதுண்டு. சந்தர்ப்பங்கள் சூழ்னிலைகளை வைத்தே ஆடை அணிவதும் மாறுபடும்.
@நிஷா ..
பதிலளிநீக்குகலாச்சார மீறல் என்பதைவிட பொது இடத்தில மூன்றாமவர் யாரோ ஒருவர் நமது ஷாலை தூக்கி எடுத்துப்போவது என்பதைத்தான் கில்லர்ஜி கண்டித்திருக்கிறார் நாங்களும் கண்டனம் சொன்னோம் ..நான் இதுவரையில் இத்தனை காலமும் சம்மரில் சல்வார்கமீஸ் வின்டரில் லாங் உல்லன் ஸ்கெர்ட்ஸ் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிகிறேன் ..அதிலும் சல்வார் கமீஸுக்கு பின் போடாமல் அணிந்ததில்லை ..நான் வாலண்டியரிங் செய்யுமிடத்தில் மற்றும் ஆலயத்தில் கண்ணாடி பொருட்கள் மற்றும் பெரிய அளவு காண்டில்கள் அருகில் அடிக்கடி நடக்க வேண்டும் அப்போ ப்ரீயா விட்டா என்னாவது அதற்க்கு பின் போட்டு அதன் மேல் ஒரு கார்டிகனையும் போட்டு அலைபாயும் ஷாலை அடக்கி வைப்பேன் .
நானும் சொன்னதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்லியிருக்கேன் ..
எனது பதிவின் சாராம்சமே இதுதான் பொது இடத்தில் பெண்ணின் மேலாடையை எடுத்து ஆடியது தவறு இதையே வீட்டுக்குள் எடுத்து ஆடினால் அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து
நீக்குமற்றபடி உடையைக் குறித்து நான் சொல்ல வரவில்லை நான் தேவகோட்டையில் வேஷ்டி உடுத்துகிறேன் இதையே அபுதாபி அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது கட்டிப்போக முடியுமா ?
உடை என்பது அதிரா கீதா சொன்னதைப்போல எப்படி அணிந்தாலும் மரியாதையாக இருக்கணும் ..
பதிலளிநீக்குசில வருடமுன் லுப்தான்சா கியூவில் ஒரு அழகிய இளம்பெண் எனக்கு முன் நின்றிருந்தார் .திடீரென அவரது மொபைல் அடித்தது
//டேய் எருமை எங்கேடா தொலைஞ்ச எனக்கு புக் பண்ண டிக்கட் இல்லைன்றங்க அங்கே வரக்கூடாதுன்னு சதி பண்றயாடா சோறு கிடைக்காது உனக்கு நீதான் சமைக்கணும் // இதுக்குமேல ஒன்றிரண்டு வார்த்தைகள் பீப் ஒலியுடன் ..
மாடர்ன் ட்ரெஸ் மங்காத்தாவை பார்த்து அதிர்ச்சியில் கியூ மாறிப்போனேன் :) //
கலாச்சாரம் என்பது பாரம்பரியத்தை பாதுகாப்பது மட்டுமில்லை பொதுஇடத்தில் நடந்துகொள்ளும் விதத்தையும் பொறுத்திருக்கு
அந்த நிகழ்ச்சியில் இந்த பெண் ஷாலை எடுக்கும்போது சும்மா இருந்ததை அட்வாண்டேஜா எடுத்து வேறொருவர் வேறிடத்தில் அட அன்னிக்கு இந்த பொண்ணுதானே சாலை எடுக்கும்போது சும்மா இருந்தது அதனால் இன்னிக்கும் அதை செஞ்சா சும்மா இருக்கும்னு நினைத்தால் யாருக்கு அவமானம் ? அந்த பெண்ணுக்குத்தான் ..
ஹல்லோ மேடம் நானும் அதைத்தான் சொல்கின்றேன். எந்த ஆடை அணிந்தாலும் நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் நமக்கான் மதிப்பு. அணியும் ஆடையில் கலாச்சாரம் பேணப்படுமானால் இன்றைய சூழலில் தமிழ்க்கலாச்சாரம் என்று ஒன்றே இல்லை என சொல்வேன்.
நீக்குஎன் பதிவுகள் காணொளியை பார்க்கமுன் பதிவின் அடிப்படையில் பொதுக்கருத்தாக இடப்பட்டது. இருந்தாலும் காணொளி கண்ட பின்னும் கருத்தில் மாற்றம் இல்லை.
இப்போதெல்லாம் சல்வாருக்குரிய ஷாலை விட சேலைக்கு அணியும் ப்ளவுஸே அத்தனை மோசமாக இருக்கின்றது. கலாச்சார ஆடை எனும் ஒன்றை விட முழு உடலையும் மறைக்கும் கண்ணியம் தரும் ஆடை தான் முக்கியம்.
மார்டன் ட்ரெஸ் அணிவோர் எல்லோரும் அப்படியும் அல்ல. சேலை அணிந்து குடும்ப குத்துவிளக்குகள் போல் தோன்றுவோர் எல்லோரும் இப்படியும் அல்ல. அணியும் ஆடையை வைத்து எவரையும் எடை போடமுடியாது.
அரை குறை ஆடை அணியும் பெண்கள் சமூக ஆர்வலர்களாக, சேவையாளர்களாக இருப்பதும் உண்மை. எச்சில் கையால் காகம் விரட்டாத சேலை அணிந்த மாதரசிகளும் உண்டு. இவ்விடத்தில் எனக்கு சில்ஸ் ஸ்மிதா நினைவுக்கு வந்து போனார்.
இந்த சம்பவத்தில் அந்த சல்வார் பெண், ஆடிய ஆண் இருவரும் அறிமுகமானவர்களாக இருந்திருக்கலாம். அறிமுகமில்லாதவர் ஷாலை எடுத்திருந்தால் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சீறி விழுவாள். சிரித்துக்கொண்டே தொடர்ந்து ஆட மாட்டாள்.ஜஸ்ட் லைக் தட். பொழுதுபோக்க வந்த இடத்தில் பாடலுக்கு ஆடிய இடத்தில் உற்சாகத்தில் தன்னை அனைவரும் கவனிக்கட்டும் என செய்யப்பட்ட ஒரு காரியத்தை கலாச்சார மீறல் என்போமானால் இதை விட இன்னும் பாரிய விடயங்களை என்ன சொல்வோம்?
அறிமுகத்தின் அடிப்படையிலும் உரிமையிலும் அன்றி இப்படியான நிகழ்வுகள் நடக்கும் சாத்தியமே இல்லை. இதே போல் தீடிரென பொது இடத்தில் கண்டால் பின்னாலிருந்து வந்து கண்ணை பொத்திக்கொள்வார்கள். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் இப்படி நெருக்கமாக இருப்பது கலாச்சார மீறல்.ஆனால் அவர்களுக்கு அது அன்பின் வெளிப்பாடு.
ஒருவேளை நாங்கள் அப்படியானவைகளை கண்டு இருப்பதனால் இப்படியான நிகழ்வுகள் எனக்கு பெரிதாக தோன்றவில்லையோ என்னமோ?
இதை விட மோசமாக ஒரு புகைப்படம் சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோசமிட்ட பெண்ணின் புகைப்படம் உலாவந்தது இன்னும் வருகின்றது. அம்மாதிரி புகைப்படங்களை எடுப்பதும் அதை பகிர்வதும் தான் மிகப்பெரிய கலாச்சார மீறல். எங்கள் கலாச்சாரத்தினை பண்பாட்டினை நாங்கள்தான் காத்துக்கொள்ள வேண்டும்.
பொது இடத்தில் கலாச்சாரத்தினை பாதுகாத்து விட்டு வீட்டுக்குள் அதே கலாச்சாரத்தினை காற்றில் பறக்க விட்டால் தப்பில்லையா? கலாச்சாரம், பண்பாடு என்பது எல்லா இடங்களிலும் ஒன்றே போல் பாதுகாக்கபப்ட வேண்டியது. வீட்டில் ஒருமாதிரியும் வெளியில் இன்னொருமாதிரியும் எனும் வேஷம் போட்டு நம் கலாச்சாரத்தினை எத்தனை காலம் காத்துக்கொள்ள முடியும்?
கலாச்சாரம், பண்பாடு, கட்டுப்பாடு என நாம் போட்டிருக்கும் வேலிகள் ஒன்றுக்கும் பயனற்றது. உண்மையில் நாங்கள் எங்களளவில் எங்களை கட்டுப்படுத்த வேண்டிய கலாச்சாரம் காக்க வேண்டிய பல சீரியஸ் விடயங்கள் இங்கே இயல்பாக அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது.
அடுத்தவர்கள் செய்யக்கூடாது என சொன்னால்.. அது அவர்கள் அறியாமையினாலும் வளந்த சூழலாலும் கூட அது தவறாகதோன்றாதிருக்கலாம் அல்லவா?
இன்றைக்கு யாரோ ஒரு பெண் தானே என இங்கே ஆளாளுக்கு கலாச்சார மீறல் என விமர்சிக்கின்றோம். நாளை கலந்து கொள்ளும் விழாவிலும் .. அட நாம் அறிமுகமானவர்கள் தானே எனும் மேம்போக்கில் ரிலாக்டாக இருக்கும் சூழலில் அறிமுகமான எவரேனும் நம்மிடமும் இப்படி நடக்கலாம். அவ்விடத்தில் திரும்பி கன்னத்தில் அறைந்தால் தான் கலாச்சாரம் பேணப்படுமா? எனக்கு புரியவில்லை. உண்மையாக புரியவில்லை என்பதனால் தான் இத்தனை விவாதங்களும் ????
முக்கிய பாயிண்ட்.. இதனால் தான் நான் இமமதிரி என்ன எம்மாதிரியான விழாக்களையும் தவிர்த்து விடுவேன். முக்கியமாக சினிமா சீரியல் இசை விழாக்கள் எதுவானாலும் தடா தான்.
இத்தோடு நான் விடை பெறுகின்றேன். மீண்டும் இன்னொரு விவாதத்திரியில் தொடர்வேன்.
நன்றி வணக்கம்.
இதே விழாவில் அந்த சுடிதாரைவிட ஆபாசமான உடைகளுடன் பெண்கள் வந்து இருக்கத்தான் செய்தார்கள் அதேநேரம் உடலிலிருந்து ஒரு உடை பொது இடத்தில் களையப்படும் பொழுது தவறுதானே....
நீக்குஇதைத்தான் நான் சொன்னேன் இதுக்குப்போயி என்னை இப்படியா மிரட்டுவது ?
ஆமாம் அடுத்த விவாதத்திரியில் கலந்துகொள்வோம் ..எங்களுக்கு இம்மாத இறுதியுடன் விடுமுறை நாங்க ஹாலிடேஸ் போயிட்டு வந்ததும் ஆரம்பிப்போம் ..good night and bye for now
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ் இன்னும் இங்கின விவாதம் முடியவே இல்லையா கர்ர்:) விவாதம் என்பது எப்பவும் முடியாது.. தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றே எல்லோரும் வாதாடுவாங்க.. அதனால்தானே மேடை விவாதங்களுக்கு ரைம் கொடுக்கப்படுது:)...
நீக்குஎன்ன தான் ஆயிரம் சொன்னாலும்:) மீ சொல்லும் இந்த 1001 தான் பெரிசூஊஊஊஊஊ:).. ஹா ஹா ஹா.. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் சோலை கேட்பவரின் வளர்ப்பும் சரியில்லை.. கொடுத்தவரின் வளர்ப்பும் சரியில்லை.. கேட்டவர் சகோதரனாக ஏன் கணவராக கூட இருந்திட்டுப் போகட்டுமே.. அது தப்புத் தப்புத்தான்ன்ன்... சோல் என்பது.. நாம் நம் தேவைக்கு, மடியில் கழட்டி வச்சிருந்தால்கூட, அது அந்த உடையுடன் கூடவே வருவது.. முந்தானைக்குச் சமமானது[இல்லயா அஞ்சு?:)].... இதைத்தான் கலாச்சாரச் சீரளிவு என கில்லர்ஜி சொன்னார்ர்.. அது கரெக்ட்டுத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)... அதை விட்டுப்போட்டு.. நாம் என்ன அணிகிறோம் எப்படி நடக்கிறோம் எண்டெல்லாம் நீட்டி முழக்காமல்... கில்லர்ஜி கவிதை எழுதிப்போட்டுக் காத்திருக்கிறார்ர்.. ஓடியாந்து இதே மின்னல் முழக்கத்தை அங்கு காட்டுங்கோ பிளீஸ்ஸ் அஞ்சு, நிஷா.... மீ ஒரு அப்பாவி என்னை விட்டிடுங்கோஓஓஓஓஒ.. நான் தேம்ஸ்க்கே ஓடிடுறென்ன்ன்.. இதுக்கு மேல விவாதம் வாணாம்ம்ம். ரைம் முடிஞ்சு போச்ச்ச்:).. கில்லர்ஜி அந்த பெல்லை அடிச்சு முடிச்சுடுங்கோ ரைமை:). மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:)
ஆம் அந்தப்பெண் ஷாலை எடுத்தவரின் கொழுந்தியாள் கோகிலா மட்டுமல்ல, மனைவி மருதவள்ளியாக இருந்தாலும் இது தவறுதான்
நீக்குஇதை உகாண்டா கோர்ட்டில் வேண்டுமானாலும் வந்து ''ஜொள்ளு''வேன்.