தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 25, 2015

மனப்பொருத்தம்


வாங்க, வாங்க, எல்லோரும் (வலைப்பதிவர்கள்) உட்காருங்க....

ஆமா மாப்பிள்ளையோட அப்பா வரலியா ?
அவரு பிஸினஸ் விசயமா, அந்தமானுல இருக்காரு, கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருவாரு.

நல்லது, வரட்டும்.
பொண்ணோட அப்பா பேரு ஜெயில்சிங்னு தரகரு சொல்லவும், ‘’என்னஆளுக’’ ன்னு குழம்பிட்டோம்.

அது, ஒண்ணுமில்லே அவரு ரொம்ப காலமா ஜெய்பூர்ல இருந்தாரு, அந்த ஊருக்கு தகுந்தாப்போல ஜெயில்சிங் னுபேரை வச்சுக்கிட்டாரு, மத்தபடி நாங்களும் மள்ளாங்கி ஜாதிதான், கடகுனி கோத்திரம்.
அதுசரி, நாங்களும் கடகுனி கோத்திரம்தான், பைபாஸ்ரோடு பைங்கிளியம்மன்தான், நமக்கு குலதெய்வம்.

மாப்பிள்ளை பேரு என்ன ?
சிறைமீட்டான்.

மாப்பிள்ளை என்ன படிச்சு இருக்காரு ?
சொந்த வேலை கையில இருக்கிறதால, படிப்பெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லே.

நல்லது என்ன வேலை செய்யிறாரு ?
அவுட்''டேக்கு அண்டு இன்''புட்டு

அப்படீனா புட்டு வியாபாரமா ?
இல்லே, இல்லே சொந்த பிஸினஸ்.

அப்படியா நல்லது, உள்ளூருதானா ? இல்லே....
அப்படியில்லே, பிஸினஸ் விசயமா, அடிக்கடி வேலூருக்.... SORRY வெளியூருக்கு போயிட்டு வருவாரு.

நமக்கு பூர்விகம் எது ?
பாளையங்கோட்டை.

சரி பொண்ணை வரச் சொல்லுங்கோ,
பெண் காபி கொண்டுவர...
எல்லோரும், காபி எடுத்துக்கோங்க,

பொண்ணு பேரு என்ன ?
செயின்'' செல்லாயி.

அதென்ன செயின் ?
அது ஒண்ணுமில்லே, சின்னவயசுல இருந்தே செயினுனா, ரொம்ப இஷ்டம், அதான் பேரோட சேர்ந்தே வந்துருச்சு.

அப்படீனா, பொண்ணுக்கு நெறைய செயின் போடுவோம்னு சொல்றீங்க.
ஆமாமா, இனி அவ எடுக்கிறது எல்லாம் உங்களுக்குதானே.

என்ன சொல்றீங்க ?
இல்லே, இனிமே வீட்டுல உள்ளதெல்லாம் அவளுக்குத்தானே ஒரே பொண்ணு இல்லையா, அதெத்தான் சொல்றோம்.

நல்லது.
மாப்பிள்ளை என்னமோ ? சொல்றாரு....

வேற, ஒண்ணும் இல்லே  பொண்ணுகிட்டே கொஞ்சம் தனியா பேசணுமாம்.....
அதானால, என்ன ? இப்ப இதெல்லாம் சகஜமாப்போச்சு நம்மகாலம் மாதிரியா...

தனியறையில்......
சவுக்கியமா ?
ம்.

என்னை, கல்யாணம் செய்துக்க சம்மதமா ?
ம்,

ம்னு, சொன்னா போதுமா ? பேசமாட்டியா ?
இல்லே, எனக்கு கூச்சசுபாவம்.

நகை எல்லாம் நெறையப் போட்ருக்கே....
ம்.

இது என்ன ? புதுசாயிருக்கு..
ஆமா நேத்துதான் எடுத்தேன். 

எத்தனை பவுனு ?
தெரியலை...  

நீ தானே, எடுத்தே பின்னே எப்படி தெரியாம இருக்கும்...?
அது... வந்து..

சரி என்னோட PHOTO வேணுமா ?
ம்.

மணிபர்ஸை திறந்து PHOTOவை எடுக்க, உள்ளே சலவை நோட்டுகளாக, சடச்சடவென...

ஐ, ரூவா.... நோட்டெல்லாம் புதுசா இருக்கு பேங்க்ல எடுத்ததா ?
ஆமா... வரும்போதுதான் எடுத்தேன்

எந்த பேங்கு ?
அது... வந்து தெரியலை.

நீங்கதானே எடுத்தீங்க பின்னே எப்படி தெரியாம போகும் ?
என்ன நீ தேவையில்லாத, கேள்வியெல்லாம் கேட்கிறே... ஆமா நீ செயினை எங்கே எடுத்தே ? உண்மையை சொல்லு.

அது... அது ப....ப..
பஸ்ஸுல, அடிச்சியா ?

இ.... இல்லே... ஆ... ஆமா.
அது சரி நீதான் நமக்கேத்த ஆளு.

அப்படீனா... உங்களுக்கு வேலை... அவுட்டேக்கு அண்டு இன்புட்டுனு சொன்னாங்க...
ஆமா, பிட்பாக்கெட்டு பர்சை வெளியில எடுத்தா என்னை உள்ளே வச்சுருவாங்க, இதுகூட வரும்போது பஸ்ஸுலதான் அடிச்சேன்.

ஐ........
உனக்கு சந்தோஷமா ? சரி அப்படினா நமக்கு, நல்லபொருத்தம் இருக்கு வா உடனே கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லுவோம்.

என்ன பொண்ணும், மாப்பிள்ளையும் சந்தோஷமா வர்றதை பார்த்தா எல்லாப் பொருத்தமும் இருக்கும் போலயே....
ஆமாமா, அப்படியே நம்ம சோலந்தூர் சோஸியர் சோனைமுத்துட்டே போயி பேர் ராசிக்கு பார்த்துருவோம்.

அட ஏங்க, அந்த ஆளுக்குவேற தெண்டச்செலவு மனப்பொருத்தம் இருந்தா மாலைப் பொருத்தம் கூடி வந்துரும் வர்ற ஆவணியில முகூர்த்தம் வச்சுக்கிறலாம், தட்டமாத்துங்க.
அதுவும் சரிதான், எங்களுக்கு சம்மதம்.

 

சாம்பசிவம்-

இனம் இனத்தோடதான், சேருது, இனி நாறோட சேர்ந்து நாளும் நாறும்.

காணொளி

CHIVAS REGAL சிவசம்போ-
ரெண்டும், முத்தலாயிருக்கு சொன்னா... குடிகாரப்பயல்னு சொல்வாங்கே.

74 கருத்துகள்:

 1. நல்ல பொருத்தம்தான்
  குடும்பம் சிறந்திடும்
  தம 1

  பதிலளிநீக்கு
 2. ஆஹா..! ஆஹா..! பொருத்தாமான ஜோடி..!
  த ம 2

  பதிலளிநீக்கு
 3. இதுவல்லவோ பொருத்தம்...! ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 4. பொண்ணு பாக்கறதுக்கே மொய் வைச்சுட்டோம்....அப்ப கல்யாணம்? அஹஹஹ் அது நடந்தாத்தானே!!!
  யாரப்பா அங்கே .....இந்த ரெண்டு பிக்பாக்கெட்டுங்களையும் பிடிச்சுட்டு வாங்க கூடவே இதுக்குச் சாட்சியா இருக்கற கில்லர் ஜி யையும் இழுத்துட்டு வாங்க....நம்ம தில்லை அகத்துக்கு....ஒரு எஃ ஐ ஆர் போட்டுருவோம். (ஒரு வேளை அவிங்களப் பிடிக்கறதுக்குத்தான் இவரு ப்ளான் பண்ணி நம்மள எல்லாம் கூப்பிட்டுருபாரோ....!!!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, கல்யாணத்துக்கு வந்த என்னை ஏன் ? இந்தக்கணக்குலே சேர்கிறீங்க ....

   நீக்கு
 5. நானும் தான் கல்யாணத்துக்குப் போயிருந்தேன்..
  மொய் வைக்க அவங்க விடவே இல்லே!..
  அவங்களாவே எடுத்துக்கிட்டாங்க!.. அம்புட்டு பாசம்!..

  பதிலளிநீக்கு
 6. பின்னாடி வரதட்சனை பிரிச்சனை,ஈகோ பிரச்சினை எதுவும் வந்தா பின்னாடி பாத்துக்குவோம்... என்னோட முதல் வாழ்த்து..

  பதிலளிநீக்கு
 7. பாளையங்கோட்டையில்தான் தேனிலவு போல ஹ ஹ ஹா!

  பதிலளிநீக்கு
 8. இப்ப நடக்கற கல்யாணங்க எல்லாமே இப்படித்தானுங்க இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா3/25/2015 11:38 AM

  வளம்சேர் வஞ்சீரா ஒளிபோல இருந்த சங்கமிக செவ்விந்தியர்களை ஓடஒட வெண்கோற்ப சிருவாமாகி விரட்டி பன்னீர் சமூகச் சின்னங்களை இங்கிலும் அங்கிலும் சிலாக்கிய சேர்வையாக அனூசவிருட்சமாக்கிய அமெரிக்க விட்டு வந்த பின்னர் உங்கள் எழுத்துக்கள் ஏன் ஒருதலைப் பட்சமாக சாங்கோக விநாயசலியத்தின் எச்சமாக மாறிவிட்டது என்று நினைக்கும் போதே உங்கள் நன்பரின் இந்திய விஜ்யத்தை பத்தி ஒரு வரி கூட உவமொக நிரலியம் செய்திடும் தன்சித்த கட்டுரைகள் உங்களின் கூர்த்தபாங்கிமையான பதுவோற்பல பதிவுகளில் வராதது ஏனோ என்று கேட்க விரும்பி, மாதொருபாகனில் தொடங்கி மெல்ல மெல்ல எம் சமுதாயத்தை இடிக்க நினைக்கும் விற்கணித சூழ்பராக்கிரமத்தின் சூத்திரத்தின் சரித்தர சாமூக பிம்பதை கண்டுற்று துனுக்குற்றே மாதொருபாகனில் மறைந்து எம் நம்பிக்கைகளை கேள்விகேட்க வாரனவதி சிரன்மனியாக சேப்புச்சக்கிரத்தின் வைதோர்ந்த பகுத்த மொர்மனச் சேர்வையை புரிந்து கொண்டுவிட்டோம்.வடகிழக்கில் எம்மக்களை வேட்டையாடிய கழுதைப் புலிக்கூட்டத்தின் கழுவ சம்பிரதாயத்தை மனம்திறந்து கண்டிக்காதவர் தானே நீர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரே,
   முகம் காட்ட மறுத்தாய்.
   முகவரியை மறைத்தாய்.
   யார் ? நீரும்...

   தங்களது கருத்துரை எதிலும் தொடர்பில்லாமல் இருக்கிறது எனக்கு ஒன்றும் புரியவில்லையே...இடையில் ‘’மாதொருபாகன்’’ என்கிறீர் யாருமய்யா ? நீர் கொஞ்சம் விளக்கினால் விளங்கி கொண்டு விளக்கமளிப்பேன்.

   அல்லது வேறு யாருக்கும் இடவேண்டிய கருத்துரையை தெரியாத்தனமாக எனக்கு அனுப்பி விட்டீர்களா ?

   தயவு செய்து மீண்டும் வந்து எனக்கு பதில் தரவேண்டுமென கோருகிறேன்.

   நட்புடன்
   கில்லர்ஜி.

   நீக்கு
 10. இந்தப் பொருத்தம் வலைப் பதிவர்கள் முன்னாலா. சரியாப் போச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது ஐயா அவங்களுக்கு நம்மை விட்டால் யாரு இருக்கா ?

   நீக்கு
 11. இதுக்கு இப்படி அர்த்தமா?,,,,,,,, வௌங்கிடும். ஜாடிக்கேத்த முடி. நல்ல்லலலலலலலலலலலலலலலலலலலா இருக்கு.
  அப்புறம் ஒரு நீதி தேவதைப் பாராட்டினா உங்களுக்கு பத்தாதா? அதுவும் 33333333333333333333.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா நல்ல ஜாடிதான் ஏன் 3 தேவதைகள் பாராட்டியதால் பொறாமையா ?

   நீக்கு
  2. ,இருக்காதா பின்ன? அப்புறம் அந்த முன்கை முழங்கை தத்துவம் சொல்லல?

   நீக்கு
 12. ஜோடிப்பொருத்தம் சூப்பர் !

  பதிலளிநீக்கு
 13. உண்மையிலேயே இதுதான் சரியான பொருத்தம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஐயா இப்படிப்பொருத்தம் இருக்கும்போது ஜாதகப்பொருத்தம் எதற்க்கு ?

   நீக்கு
 14. ஹாஹா! நல்ல காமெடி ஸ்டோரி! கருத்தையும் உள்ளே வச்சு பறிமாறியது சூப்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே...

   நீக்கு
 15. என்ன பொருத்தம், நமக்குள் இந்தப் பொருத்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே வெளியூர் போய் விட்டீர்களோ... இடைவெளி அதிகமாகி விட்டதே.... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. அவுட்டேக்கு இன்புட்டு சூப்பரா இருக்கு.
  இந்த காமெடிக்கு சீக்கிரம் காப்பிரைட்ஸ் வாங்கிடுங்க. இல்லன்னா ஏதாவது ஒரு திரைப்படத்துல வந்துடப்போகுது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்தமைக்கு நன்றி நண்பரே.... அம்பூட்டு விபரம் இருந்தால் நான் ஏன் ? அபுதாபியிலே இருக்கப்போறேன். உகாண்டா போயிருக்க மாட்டேன்.

   நீக்கு
 17. ஆ!!! கமல்ஹாசன் திரைப்படம் போல விவகாரமாய் ஆரம்பித்தது நச்சென்ற கருத்துடன் முடிகிறது.
  அபுதாபியில எங்கன உக்காந்து இதெல்லாம் யோசிக்கிறீங்கன்னு கொஞ்சம் எங்களுக்கும் சொன்ன தேவல!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... அபுதாபி போலீஸ் காலேஜ் சிக்னலில் உட்கார்ந்துதான்.

   நீக்கு
 18. தனியா பேசும்போதே அவர்கள் இருவரும் கைவரிசையைக் காட்டிக் கொண்டார்களாமே,உண்மையா ? செயினும் பணமும் இடம் மாறிடிச்சாமே:)

  பதிலளிநீக்கு
 19. ஹா....ஹா....ஹா... படிக்க ஆரம்பிக்கும்போதே இடிச்சுது! நல்லா பொருத்தமாப் போடறீங்க வீடியோ..

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள ஜி,

  லட்சுமி கடாச்சமா ‘ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே’

  நா மறுபடியும் சொல்றேன் நீங்க அவளக் கட்டிக்கக் கூடாது...

  மறுபடியும் சொல்றேன் நா அவளக் கட்டிக்குவேன்...

  எக்கேடோ கெட்டுப்போங்க... நல்ல...ல...ல...ல மனப்பொருத்தம்!

  அருமை... அருமை...!

  நன்றி.
  த.ம. 15.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே அழகாக பாரட்டினீர்கள் ஆனால் 15 தான் விழவில்லை.

   நீக்கு
 21. திருமணம் எங்கே சிறையிலா? நல்ல பொருத்தம்........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் அது மணமக்கள் திருமணம் வரை நடந்து கொள்ளும் விதத்தைப் பொருத்தது.

   நீக்கு
 22. அப்படிப்போடு..... 10 பொருத்தமும் ஓகே, என்ன சாப்பாடுனு சொல்லவே இல்ல.....

  பதிலளிநீக்கு
 23. ஜோடிப்பொருத்தம் சூப்பர். ரசித்து சிரித்தேன். வீடியோ அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ரசித்து வாக்கும் அளித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 24. ஜாடிக்கேத்த மூடி, தொழில் ரீதியா இனம் இனத்தொட சேர்ந்துகிச்சா!! உய் ...........உய் ...........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன நண்பா கௌரவமான குடும்பத்து திருமணத்துக்கு வந்துட்டு இப்படி விசில் அடிக்கிறீங்க ?

   நீக்கு
 25. நல்ல ஜோடிதான்[[[[[[[[[[[[[[[[[[[[[[

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா, அதனாலேதான் இறைவன் ரெண்டு போருக்கும் முடிச்சு போட்டு இருக்கிறான்.

   நீக்கு
 26. சிறைமீட்டான், செயின் செல்லாயி திருமணத்துக்கு வாழ்த்த வரும் அனைவரும் அவரவர் பர்ஸை பத்திரமாக பார்த்துக்கொள்ள் வேண்டிக்கொள்கிறோம்...

  அவுட்புட் ஆன பர்ஸை மீன்டும் இன்புட் பண்ணும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது என்பதை பெருமையுடன் தெரிவித்துகொள்கிறோம்...

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா நலம்தானே ரொம்ப நாளாச்சே என்ன ஆச்சு கல்யாணத்துக்காவது வந்தீகளே சந்தோஷம் வந்தீங்க, களியாவது சாப்பிட்டுப்போங்க....

   நீக்கு
  2. ஆமாம் நண்பரே....

   சொந்த கடமைகளின் காரணமாய் சுனக்கம் ! களி சாப்பிடற நேரத்துல காசு பையை லவட்டிடாதீங்க !

   நீக்கு
 27. நண்பா!
  இவங்க கல்யாணத்துக்கு போனா
  மொய்க் கவரும் சுவர் ஏறிக் குதிக்காமலே
  செயின் செல்லாத்தாக் கிட்டே போயிடும் போலிருக்கே!
  சலவை நோட்டு எங்கிருக்குன்னு சாம் கிட்ட கேட்டு சொல்லுங்க பாஸ்?
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெறும் பையோடு , வெறும் காலோடு வந்து களி திண்ணுப்புட்டு போகும்போது புதுச்செருப்பு மாட்டிக்கிட்டு போக வேண்டியதுதான் நண்பரே...

   நீக்கு
 28. உள்ளப் (மனப்) பொருத்தம் என்று தொடங்கி
  இனம் இனத்தோட தான் சேருமெனக் கூறி முடிக்கும் வரை
  நன்றாகச் சிந்திக்க வைக்கிறியளே!
  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே திருமணத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 29. பதில்கள்
  1. 15 தவறியதால் 18 ம் படியாய் குத்தியமைக்கு நன்றி மணவையாரே...

   நீக்கு
 30. ஐ..ரூபா நோட்டுல 200 தாள் ஒன்றைக் கண்டேன்.. எப்போது இந்தீ சர்க்கார் அந்த நோட்டை வெளியீட்டதென்றுதான் தெரியவில்லை நண்பா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நிறைய பிரிண்ட் அடிச்சு வச்சு இருக்கேன் நண்பரே ஊருக்கு வந்ததும் சேர்ந்தே வெளியிடுவோம்.

   நீக்கு
 31. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்

  பதிலளிநீக்கு
 32. ஆஹா...என்ன ஒரு ஜோடிப் பொருத்தம்.
  11 பொருத்தமும் பொருந்தி இருக்கு...தொழில் பொருத்தத்தைச் சொன்னேன்...

  அடிக்கடி ஆடிமாதம்...இவர்களுக்கு...தாய்வீடு சிறைச்சாலை தானே...?

  வித்தியாசமாக இருக்கு. வீடியோ அருமை.

  தம 20...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலம்தானே கல்யாணத்திற்காவது வந்தீங்களே ? சந்தோஷம்.

   நீக்கு
 33. நலம் விசாரித்தமைக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 34. ஆஹா... சூப்பர் பொருத்தம் அண்ணா...

  பதிலளிநீக்கு
 35. ஒரு தவறு. பெண் ஆண் ஒரே கோத்திரம்னா, கல்யாணம் செய்யமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு