தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 21, 2020

திருக்குறளை சுட்டிய திருக்குவளை


   தமிழ் இன்றைய இளைய தலைமுறையினரிடம் வாழ்கிறதா ? நிச்சயமாக இல்லை இதோ தமிழ் மாதங்கள் பனிரெண்டு அதன் பெயர்களைக்கூட சொல்லத் தெரியவில்லையே... வெட்டியாக தமிழ் தமிழ் என்று கூவுகிறது ஓர் கூட்டம் ஆனால் இதில் காரியத்துக்காக குரல் கொடுப்பவரையே நம்புகிறது இந்த பாமரப்பயல்கள் கூட்டம்.

இவர்கள் திருக்குறள் படித்து அதற்கு குரல் கொடுக்கப் போகிறார்களா ? நாளைய தூண்கள் என்று இவர்களை இந்த சமூகம் நம்பிக் கொண்டு வாழ்கிறதே... நம்பிக்கை உயிர்ப் பெறுமா ? ஹிந்தி ஒழிக என்று கூவும் காகங்களே... ஆங்கிலம் தமிழை விழுங்கி கொண்டு மறைப்பது தெரிகிறதா ? மொழியை காப்பாற்றாத அரசு தன்னையே பலி கொடுத்துக் கொண்டு இருப்பது புரியவில்லையா ? செம்மொழி மாநாடு நடத்திய திமுக முதலாளி கருணாநிதிதான் சன் தொலைக்காட்சிக்கு மானாட மயிலாட என்று பெயர் சூட்டி தமிழக சமூகத்து மாணவச் செல்வங்களின் மொழியறிவை சிதைத்து திசை மாற்றி விட்டார்.

பால் - பொருட்பால்
அதிகாரம் – கொடுங்கோன்மை

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

என்கிறார் வள்ளுவர்.. (553-ம் குறளில்)

பொருள்-
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத பிரதமர் அல்லது முதல்வர், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் பதவியை இழந்து விடுவர்.


நமது நாட்டில் பல மொழிகள் உருவாகி விட்டதால் இந்த மொழி அழிவு நிகழ்கிறதோ பெரும்பான்மை இங்கு பலமில்லையே. சரி எல்லாவற்றுக்கும் நான் ஏன் மன்னனை மன்னிக்கவும் பிரதமரை குற்றம் சொல்ல வேண்டும். தூய்மை இந்தியாவை உண்டாக்க பிரதமர் சொல்லித்தான் நாம் செய்ய வேண்டுமா ? நமக்கு தெரியாதா ? நமக்குள் நாமே ஏன் தூய்மையாக வைத்துக் கொள்ளக்கூடாது ? அதற்காக தேவகோட்டையிலிருந்து பர்வீன் டிராவல்ஸில் சென்னை சென்று அங்கிருந்து மாமல்லபுரம் சென்று கடற்கரை ஓரத்தில் கிடக்கும் பெப்ஸி டப்பாக்களை பாலிதீன் பைகளில் போட்டு அங்கு வேலை செய்யும் துப்புறவுத் தொழிலாளியிடம் கொடுக்கச் சொல்லவில்லை.

தமது வீட்டிலிருந்து வெளியேற்றும் கழிவு நீர்களை முறையாக கழிவுப்பாதையில் செல்வதுபோல் அமைத்து விட்டால் போதுமானது ஆனால் நாமென்ன செய்கிறோம் ? வீட்டிலிருந்து வாசலை விட்டு வெளியே சாலையில் செல்வதுபோல் அனுப்பி விட்டு நான் சரியாக வரி கட்டும் இந்திய குடி(காரனின்) மகன் என்று அரசை வாய் கிழிய பேசுகிறோம். அவர்களை ஆட்சியமைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் வல்லமை உள்ள நமக்கு அதன் நுணுக்கங்களை வெறும் இருபது ரூபாய் நோட்டுக்கு அடகு வைக்கிறோம். வரும்முன் காப்பவனே அறிவாளி நமக்கு முதல்வர் ஆட்சி வேண்டாம் மன்னர்கள் ஆட்சியே போதும்.

திரைப்படம் – பூம்புகார் (1964)
வரும்முன் காப்பவன் தான் அறிவாளி - புயல்
வரும்முன் காப்பவன் தான் அறிவாளி அது
வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி

பாடலாசிரியர் – மு.கருணாநிதி
இசை - ஆர்.சுதர்சனம்
பாடியவர் – கே.பி.சுந்தராம்பாள்

வருமுன் நம்மைக் காக்காமல் அடிமைப் பரம்பரை போல் அயோக்கியன் என்று அறிந்தே அவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாக்களிப்பது ஏமாளித்தனம் இல்லாமல் வேறன்ன ? தமிழர்கள் தனது வாழ்நாளில் ஓர் முறையாயினும் அறம் சார்ந்த மாமனிதர்களை ஆராய்ந்து வாக்களிப்போம். ஆனாலும் ஒரு சுவாரஸ்யம் இந்த அறிவுரைகளை தந்த கவிஞர் யாரென்று பார்த்தீர்களா ? மேலுமொரு சுவாரஸ்யம் இப்பாடலின் தொகையறா வரிகளை கேளுங்கள்...

ஒருவனுக்கு ஒருத்தியென்ற உயிர் மூச்சை உள்ளடக்கி
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே
திசை தவறிப் போகாதே

இந்த வரிகளைப் படியே வாழ்ந்த ஸ்ரீராமன் தெட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி வாழ்க நீ எம்மான். இந்த திருக்குறளை சுட்டிக் காண்பித்தது திருக்குவளையாரே

இப்படி எல்லாம் நம்மை ஆள்பவர்களை குறை சொல்வதற்கு முதலில் நமக்கு நாமே தகுதியை வளர்ப்போம். இதன் காரணமாகவே நான் இப்பொழுது மேலிடத்து மாமனிதர்களை (அதாவது மேலேயே பறந்து கொண்டு இருப்பவர்களை) குறை சொல்வதில்லை காரணம் நான் டெல்லியோ, சென்னையோ, செல்ல வேண்டியது இருந்தால் திருச்சியை பாதுகாப்புடன் கடக்க வேண்டுமே ஆகவே நான் யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது இஃகி... இஃகி... இஃகி....


மக்கள் அழிவில் வாழும் மன்னர் (பிரதமர்-முதல்வர்) பாழும் கிணற்றில் வீழும் ஊனமான தவளை போன்றவராவர்.

சாம்பசிவம்-
மாற்றம் மக்கள் மனதில் வரணும் நாமும் மாக்களாக இருக்கும்வரை.... ? ? ?

ChavasRegal சிவசம்போ-
ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும், எனக்கும் இல்லை போத்திகிட்டு படுடி பொன்னாத்தானானாம்...

காணொளி

Share this post with your FRIENDS…

40 கருத்துகள்:

  1. சிவசம்போ சரியான கருத்தை சொல்லிவிட்டார். பீஹார் தேர்தலில் பிரசாரம் தொடங்கிவிட்டது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீண்ட இடைவெளியாகி விட்டதே வரவு... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டுமா ஜி...? அருமை...

    ஆனாலும் சில குறியீடுகள் புரிகிறது...

    பதிலளிநீக்கு
  3. காணொளி சிரிப்பு வந்தாலும், வருத்தம் அதிகம்...

    தீபாவளி வந்து விட்டதாம்; பாதுகாப்பாக இருங்கள் என்பது நேற்றைய வடை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி மாதங்களின் பெயர்கள்கூட சொல்லத் தெரியாத இவர்களால் தமிழை வளர்க்க இயலுமா ?

      நீக்கு
  4. நல்லா இருக்கு பதிவு. இதிலே என்னையும் வம்புக்கு இழுத்திருக்கீங்க? இஃகி,இஃகி,இஃகி! உங்க கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு! என்னோட கொ"ல்"கை அதான்! அது சரி மக்கள் மனம் எல்லாவற்றிலும் மாற வேண்டும்.அதற்குப் பாடத்திட்டம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். தமிழ் மாதங்கள், வருடங்கள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், போன்றவற்றைச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதிகாச, புராண வரலாற்றில் முக்கியமானவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்கணும். முக்கியமாகத் தேவாரப் பதிகங்கள், திவ்யப் ப்ரபந்தங்களைக் கற்பிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உங்களது கொ'ல்'கை கண்டு அச்சமாக இருக்கிறது.
      ஆம் எல்லாமே மாறவேண்டும் அதற்கு முதலில் மக்கள் மனம் மாறவேண்டும்.

      ஓர் சாதாரண விடயம் தமிழ் மாதங்கள் 12 அவைகளை சொல்லத் தெரியவில்லையே என்பது வேதனையே...

      நீக்கு
  5. காணொளியைப் பார்த்து ஒரே தலை சுற்றல். முன்னொரு தரம் "அக்கன்னா" தெரியாத இரண்டு +2 இளைஞர்களைப் பற்றிய வீடியோ பார்த்தேன். இப்போ இதுவா? நல்ல தண்டனை!

    "மானாட மயிலாட" சன் தொலைக்காட்சி அல்ல, கலைஞர் தொலைக்காட்சி! அதைத் தான் பெரியவர் பார்த்து மகிழ்ந்து கொண்டு இருப்பார் என முகநூல் மூலம் அறிந்திருக்கிறேன். உடனே நான் பார்க்கிறேன்னு நினைக்காதீங்க. நான் தொலைக்காட்சி பார்ப்பதே அரிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் கல்லூரி மாணவ- மாணவியர்கள்.

      சன், கலைஞர் எல்லாமே ஒரே குடும்பம்தானே... காணொளி கண்டமைக்கு நன்றி.

      நீக்கு
    2. இல்லையே, "சன்"னிடம் கோவித்துக் கொண்டு ஒரே நாளில் ஆரம்பிச்சது "கலைஞர்"

      நீக்கு
    3. ஒரே நாளில் ஒரு தொலைக்காட்சி நிறுவப்படுகிறது இவர்களால் இதை மக்கள் உணரவேண்டும்.

      இன்னும் குடும்பமே ஆள நினைப்பது முறையா ?

      நீக்கு
  6. பதிவு நன்றாக இருக்கிறது. காணொளி சிரிப்பும் வருது வேதனையும் வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. மாதங்கள் பெயர் தெரியாத படிப்பாளிகள் வேதனை தான்.
    படிப்பறிவு கொண்ட தமிழ் அறிந்தவர்கள் திருக்குறளைச் சொல்லிக்
    கொண்டே மண்ணுக்குள்
    புகுந்து மாளிகைகள் கட்டி விட்டார்கள்.


    மிக அருமையான பதிவு அன்பு தேவகோட்டைஜி.

    காணொளி வேதனை.
    நம் தமிழ்க் கல்வி அந்த மட்டில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா அவர்கள் கோவை கல்லூரி மாணவர்கள்தான்.

      பதிவை பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  8. பாடியவன் பாட்டை கெடுத்தான்...எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்பது மாதிரி ஓட்டு போட்டவன் நாட்டை கெடுத்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஓட்டுப் போட்டவர்களால்தான் நாடு இப்படி ஆனது.

      நீக்கு
  9. ஆஆஆஆ திரும்படியும் கில்லர்ஜி பொயிங்கிட்டார்:)..

    நான் 3,4 வருடங்கள் முன்புதான் பூம்புகார் படம் பார்த்தேன்... கண் வெட்டாமல் பிரேக் எடுக்காமல் ஒரே மூச்சில் பார்த்து முடிச்ச படம்... அவ்ளோ சூப்பராக இருந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பூம்புகார் படம் பார்த்ததா முக்கியம் ? பதிவைப்பற்றி ஜொள்ளுங்கோ...

      நீக்கு
  10. காலையில் Fb ல் தலைப்பைப் பார்த்ததுமே நினைத்தேன் -

    வேட்டியோட போவுதே வெள்ளாடு!.. என்று.

    பதிவு ஏக அமர்க்களம்...

    பதிலளிநீக்கு
  11. நீங்களும் சங்கை எடுத்து ஊதிக்கிட்டே தான் இருக்கீங்க... சவுக்கை எடுத்து விளாசிக்கிட்டே தான் இருக்கீங்க...

    இதுவே பெரிய புண்ணியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இயன்றவரை விளாசுவோம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. கற்க கசடற என்று சொன்னார்.  அதைச் செய்தால் அல்லவா அதற்குத் தக்க இருக்க முடியும்?!

    காணொளி ரசித்தேன்.  எல்லோருமே உளறு வாயர்கள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது.இதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டால் சரி. காணொளி ரசித்தேன். ஆங்கில அறிவு தேவைதான். ஆனால். தமிழ் மாதங்களின் பெயர்களை வீட்டில் உள்ளவர்களாவது ஒழுங்காக சொல்லித்தந்து வளர்த்திருக்க வேண்டும். (ஆனால், அப்படி சொல்லித்தர தெரிந்தவர்களும் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்.. எப்படிச் சொல்லித் தருவது? அது வேறு விஷயம்.. ) நல்ல பகிர்வாக தந்துள்ளீர்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீங்கள் சொல்வது போல் சொல்லிக் கொடுக்க வேண்டிய பெரியவர்கள் முதியோர் இல்லங்களில் என்ன செய்வது ?

      தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  14. காரியத்திற்காக குரல் கொடுப்பவரைத் தான் நம்புகிறார்கள். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே மக்கள் இன்னும் உணரவில்லை.

      நீக்கு
  15. முனைவர் ஜம்புலிங்கனாரின் கருத்தை வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு. ஊதுகிற சங்கை நீங்கள் ஊதி விட்டீர்கள், விடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் முயற்சி திருவினையாக்கும், முயற்சியின்மை தெருவினையாக்கும்.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. வல்லமையில் மை மட்டும் ஏன் தடித்த எழுத்தாக உள்ளது நண்பரே.
    உள்குத்து ஏதாச்சும் இருக்குமோ.
    மற்றபடி வழக்கம் போல் உங்கள் ஆராய்ச்சி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஹா.. ஹா.. உள்க்குத்தை உணர்ந்து கொண்டு தெரியாததுபோல் ஏனிந்த விளையாட்டு ?

      நீக்கு
  18. கில்லர்ஜி.... நீங்க சொல்றதைப் பார்த்தால் குடிகாரன், பிறரை குடிக்காதே என்று சொல்லக்கூடாது, திருடன், மற்றவர்களை, நாந்தான் கெட்டுப்போயிட்டேன்..நீயாவது நல்லவனாக இரு என்று சொல்லக்கூடாது எனச் சொல்லுவீர்கள் போலிருக்கே.

    கருணாநிதி, தன்னைப்போல் நீங்கள் இருக்காதீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கருணாநிதி குடும்பத்தின் அபார வளர்ச்சிக்கு உங்களைப் போன்றோர் பங்கு இருக்கும் போலயே...

      நீக்கு
  19. ம்ம்ம். நடத்துங்க! உங்கள் பாணி பதிவினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நலமா ?
      பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு