தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 09, 2021

ஆங்கில் பார்த்த, அங்கிள்


01. உனது மனதில் கனம் இருப்பதை
    ஒரு கணம் மறக்க முனைந்துப்பார்.

02. உன் காதலி பானம் அருந்தியதற்கு
    பெட்டிக் கடைக்கு நீ பணம் கொடு.

03. அவளை மணம் செய்து கொள்ள,
      உன் மனம் நினைப்பது புரிகிறது.

04. தனம் நிறைந்திருக்கும் உம்மிடம்
    தானம் செய்யும் சிந்தையில்லை.

05. சரித்திரம் படைக்க வேண்டியவன்
    ராம் தரித்திரம் பிடித்து இருக்கிறது.

06. பொன்னை வேண்டாம் என்றார்
    பெண்ணை கட்டிய பெருமகனார்.

07. கோவில் நிர்வாகம் பார்த்தவரின்
    சாவில் சந்தேகம் இருக்கிறதாம்.

08. புனைப் பெயரில் பிரபலமானார்
    பூந்தமல்லி எழுத்தாளர் பூனை.

09. உயில் பத்திரம் எழுதியவருக்கு
    வெள்ளிப் பாத்திரம் கிடைத்தது.

10. நித்திரை கொள்வதற்கு தினமும்
    மாத்திரை போட்டுக் கொண்டான்.

11. தெருக் குழந்தைகளுக்கு பட்டு மாமி
    இசை, பாட்டு சொல்லிக் கொடுத்தார்.

12. குடந்தை மருத்துவமனையில் பெண்
    குழந்தை பிறந்துள்ளது மாலாவுக்கு.

13. காலை எழுந்ததும் ஆதி காலண்டரில்
    தேதி கிழித்து குப்பையில் போட்டான்.

14. சிக்கல் சந்தைக் கூட்டத்தில் பெரும்
    மக்கள் வெள்ளம் அலை மோதியது.

15. தாத்தா தஞ்சையில் வாங்கிப் போட்ட
    புஞ்சையில் நெல் அறுவடை முடிந்தது.

16. கண்ணை கசக்கினாள் மொக்கச்சி,
    வள்ளி மண்ணை அள்ளி தூற்றியதால்.

17. ராஜூவுக்கு மந்திரி பதவி கிடைத்ததால்
    முந்திரி பாயாசம் வைத்தாள் மனைவி.

18. டேபிள் மேலே நின்று செங்கோடன்
    தொலைக்காட்சிக்கு கேபிள் மாட்டினான்.

19. வீட்டுக்கு வந்த ஆசைத்தம்பி நகைகளை
    எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினான்.

20. ரவியின் திருமணத்தில் செண்டைக்காரர்கள்
    சம்பளக் குறைவால் சண்டை போட்டனர்.

21. உஷா திருமணத்துக்கு, அவசியம் வா
    என்று அழைப்பிதழ் கொடுத்தாள் நிஷா.

22. தரகர் மெய்யப்பன் இது நல்ல சம்பந்தம்
    என்று பெண் வீட்டில் பொய் சொன்னார்.

23. ரோமா யுத்தம் நடந்த அமங்கலபுரியில்
    ஐயோ, அம்மா என்ற அலறல் சத்தம்.

24. வயலில்  நெல்லுக்கு பாய்ச்சிய கேணித்
    தண்ணீர் புல்லுக்கும் பாய்ந்தோடியது.

25. பங்களாவுக்கு வந்த, டைரக்டர் அங்கிள்
    ஸூட்டிங் எடுக்க ஆங்கில் பார்த்தார்.

26. தார் சாலையில் வழுக்கிக் கொண்டு
    போன கார் பல்டி அடித்து கிடந்தது.

27. மாஸ்க் இடாமல் வரிசையில் நின்றனர்
    டாஸ்மாக் கடையில் குடி மகன்கள்.

28. சீரியல் பார்த்தே காலத்தை ஓட்டியதால்
    சீரியஸ் ஆகி மருத்துவமனையில் உமா.

29. கண்ணன் ராதாவுக்கு கொடுத்த லட்டர்
    அவளது அண்ணன் கைக்கு கிடைத்தது.

30. ஜெயில் காம்பவுண்ட் சுவற்றின் மேல்
    மயில் நின்றதை படமெடுத்தார் வார்டன்.

31. டாஸ்மாக்கில் மது வாங்கிப் போனாள்
    ஒரு மாது இது கலிகாலமடா தேவுடா.

32. அக்கா ஊருக்கு போய் வந்த சேகரன்
    மக்காச் சோளம் பறித்து வந்தான்.

33. சிகரெட் பிடிப்பதை வீட்டுக்கு தெரியாமல்
    சீக்ரெட் ஆக வைத்திருந்தான் சித்தன்.

34. பஞ்சாயத்தில் சாட்டை அடி வாங்கியதில்
    காத்தமுத்து சட்டை கிழிந்து போனது.

35. ஜாதகம் பார்த்த  ஜோசியரை அடித்தான் 
    சொன்னது தனக்கு சாதகம் ஆகாததால்.

36. ஜன்னல் வழியே தெரிந்தது வீட்டிலிருந்த
    ரமாவுக்கு மழையில் மின்னல் அடித்தது.

37. மலையில் இருந்த அம்மனை தரிசிக்க
    போனவர்கள் மாலையில் திரும்பினர்.

38. தனது வயலுக்கு களை எடுக்க போன
    கலையரசி வீட்டுக்கு திரும்பினாள்.

39. மழையில் நனைந்து கொண்டு வந்த,
    மலையாண்டியை அப்பா திட்டினார்.

40. கல்லில் அடிபட்டு கீழே விழுந்த ராமுக்கு
    பல் விழுந்து மருத்துவமனை போனான்.

41.. புதிய அலைபேசி வாங்க போன பரணி.
    கடையில் விலைபேசி வாங்கினான்.

42. வாடகை தராத காளியை வீட்டுக்காரர்,
    காலி செய்யச் சொல்லி கத்தினார்.

43. கோவிலில் கொள்ளை அடிக்கும்போது
   வெள்ளைச்சாமி மாட்டிக் கொண்டான்.

44. போலீஸ் அடித்து சாகாத சகாதேவன் மனைவி
    மகாதேவி அடித்து செத்துப் போனான்.

45. கோவை பேருந்து நிறுத்தத்தில் நின்ற,
    பாவை கோவிந்தனிடம் லிப்ட் கேட்டாள்.

46. அபுதாபி அரபி வீட்டு  டிரைவர் பாலன்
    வேலைக்காரியிடம் பலன் அடைந்தான்.

47. துபாய் மாப்பிள்ளை துரை  அரபி வீட்டில்
    தூப்பாய் கழுவியதை படம் எடுத்தான்.

48. ஸார்ஜாவுக்கு போன ஷாஜஹான் தனது
    ஸாச்ஜா சாஹிபு ரூமில் தங்கினான்.

49. மலேஷியாவில் வேலைக்கு வந்தவன்
    மலேரியா வந்து மருத்துவம் பார்த்தான்.

50. குவைத்ஜி-யின் வலைத்தளம் சென்றால்
    இறைவனின் திருத்தலம் தரிசித்து வரலாம்.

கில்லர்ஜி தேவகோட்டை

32 கருத்துகள்:

  1. காதலி அருந்தியது பாணம்  அல்ல பானம்!

    ராம் தரித்திரம் என்றால்?  உள்குத்து ஒன்றும் இல்லையே!!!!

    குவைத் ஜி கருத்து ஸூப்பர்.  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      திருத்தி விட்டேன் ரம் என்று வரும்போது ராம் வரவேண்டிய சூழல் ஹா.. ஹா.. உள்குத்து இல்லை.

      ரசித்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. நன்றி ஜி.   சும்மா ஜோக்குக்குதான் சொன்னேன்.  படத்தில் உள்ள இயக்குனர் நேற்றுதான் தனது எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் போல...

      நீக்கு
    3. ஒருவேளை வடக்குப் பக்கம் நடப்பதை சொல்வதாக நினைத்தேன் ஜி...

      நீக்கு
    4. ஸ்ரீராம்ஜி நானும் ஜோக்குதான் மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    5. ஹா.. ஹா.. நான் நான்கு திசைகளையும் சாடுவேன் ஜி

      நீக்கு
  2. தமிழில் விளையாடி இருக்கிறீர்கள். அருமை. எல்லாமும் நன்றாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வார்த்தை விளையாட்டுக்கள் நன்றாக உள்ளது.இறுதியில் குவைத்ஜி வரிகள் மிகப் பொருத்தமாக இருக்கிறது. அனைத்தையும் ரசித்தேன்.

    வார்த்தைகளை கொண்டு நீங்கள் விளையாடி இருக்கிறீர்கள் என்றால் வார்த்தைகளும் உங்களோடு உறவாடி அருமையாக விளையாடி இருக்கிறது. நல்ல திறமையுடன் எழுத்துகளை இணைத்து அழகான பதிவாக்கி தந்ததற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  4. சொல்லாடல் அருமை... ரசித்தேன் ஜி...

    பதிலளிநீக்கு
  5. விளம்பரத்துக்கு பணம் பெறப்படவில்லை - இது அந்த பிஸ்கெட் கம்பெனிக்குச் சொல்றீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பிஸ்கட் கம்பெனியைவிட உங்களுக்காகத்தான் சொன்னேன்

      நீக்கு
  6. குவைத்ஜிக்கு கடவுள் நம்பிக்கை அதிகமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முனைவரே குவைத்ஜி (திரு. துரை செல்வராஜூ அவர்கள்) பக்திமான் என்பது உண்மைதானே...

      நீக்கு
    2. பக்தி மான்!...

      அப்படியும் ஒரு மானா!..

      நீக்கு
    3. ஹா.. ஹா.. உண்டுதானே ஜி ?

      நீக்கு
  7. கட்டம் கட்டி விளையாடி இருக்கின்றீர்கள்
    அருமை.. அருமை!..

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜியின் சொல்லாடல் தரும் மகிழ்ச்சிக்கு 'எல்லையில்லை'ஜி!

    பதிலளிநீக்கு
  9. இரட்டை வரிகளில் இருட்டை விரட்டும் அறிவு. எப்பூடி நம்ம முயற்சி?

    பதிலளிநீக்கு
  10. சொல் விளையாட்டு நன்று கில்லர்ஜி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    சமீப நாட்களாக நண்பர்களது வலைபக்கம் வர இயலாத சூழல். முந்தைய பதிவுகளையும் முடிந்த போது படித்து விடுவேன். தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நலமா ? பாராட்டுகளுக்கு நன்றி.

      நானும் சில பொருப்புகளின் காரணமாக வலைத்தளம் வர இயலாத நிலை.

      நீக்கு
  11. ஆஹா சூப்பர் இவ்ளோ சொற்களை வைத்து விளையாடி விட்டீங்கள்... பூனையும் வந்துவிட்டதே உள்ளே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா உங்கள் ஜொந்தக்காரவுங்களாச்சே...

      நீக்கு
  12. இவை கில்லர் குரலின் விளக்கவுரை என்று ஏற்றுக் கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு