பெண்கள் எல்லா விசயங்களிலும் ஆண்களோடு போட்டி போட்டு அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டனர். பாரதி சொன்னது தமிழக பெண்களுக்கு மட்டுமல்ல உலக மகளிர் அனைவருக்குமே... முதலில் உலக அளவில் அனைத்து பெண்மணிகளுக்கும் கில்லர்ஜியின் வாழ்த்துகள்.
சமீபத்தில் யூட்டியூபில் காணொளி ஒன்று பார்த்தேன் அமெரிக்காவில் எக்ஸ்பிரஸ் எண்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தில் பெண்மணி ஒருத்தி மிகப்பெரிய கண்டெய்னர் ஓட்டுனராக அதுவும் புகையிரதம் போன்று மிக நீளமாக இருக்கிறது அதை வெகு சாதாரணமாக ஓட்டுகிறார். சாதாரண சிறு மகிழுந்து ஓட்டுவதை நாம் பெரிய விசயமாக நினைத்து இருந்தோமே... இவளுக்கு முன் நாமெல்லாம் சாதாரணம் என்று நினைத்துக் கொண்டேன்.
நமது நாட்டில் என்றால் ஓர் பெண்மணியை நம்பி இவ்வளவு பெரிய கண்டெய்னரை அதுவும் உள்ளே டெலிவரி செய்யக்கூடிய பொருட்களோடு ஒப்படைப்பார்களா ? இதற்கு அடிப்படை காரணம் அந்த நாட்டின் காவல்துறையின் சட்ட ஒழுங்கின் கட்டுப்பாடு பொதுமக்களின் கண்ணியம் ஆகவே இந்த பெண்மணிகள் கடமை ஆற்றுகிறார்கள்.
ஒருக்கால் இந்தப் பெண்மணியைப் போல் நமது நாட்டிலும் கொடுத்தால் என்னவாகும் ? மறுநாள் சரக்குகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, கண்டெய்னர் பிரித்து உதிரி பாகங்களாக விற்கப்பட்டு, பெண்மணி சக்கையாக்கப்பட்டு கூவத்தோரமாய் பிணமாய் கிடக்கலாம். இப்படித்தானே தினந்தோறும் நிகழ்கிறது இந்தியாவில். எல்லாம் நாம் ஆள வைக்கும் ஆள்கள் அப்படி கூத்தாடிப்பயல்களை எல்லாம் கடவுளாக பாவித்து ஆள வைத்து இன்று ஆ..... வென்று வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறோம் விதியே என்று வீதியில்....
கண்டெய்னரில் ஓட்டுனரின் கேபின் ஏதோ விமானத்தில் உள்ளது போல இருக்கிறது படுக்கையறை போன்று எல்லா வசதிகளும் இருக்கிறது. ஒருவேளை இவள் நண்பர் திரு. மதுரைத்தமிழன் அவர்களின் மூலம் பாரதியின் நூல்களை வாங்கி படித்து இருப்பாளோ ?
எல்லாம் சரிதான் அவள் யாரென்று கூகுளாண்டவரிடம் விபரம் கேட்டால் அவர் சொன்னாரு பாருங்க... அவளோட முப்பாட்டனோட ஐயா அமெரிக்காவுக்கு பிழைப்பு தேடிப்போனவரு... அப்படியே பச்சை அட்டையை வாங்கி கிட்டு செட்டிலாகி விட்டாராம். எங்கேயிருந்து போனாருனு பார்த்தேன் இந்தியா என்று சொல்லுச்சு இன்னும் உள்ளே போவோம் பெயர் என்னனு போய்க் கேட்டால் லின்னி ஜோர்ஜ் குசாலாம்பாள் என்று வரவும் அடடே தமிழ்ப்பெயர் வருதே எந்த மாநிலமாக இருக்கும் என்று போனால் தமிழ்நாடு என்று சொல்லுச்சு அடடே பரவாயில்லையே... தமிழச்சி என்றால் எந்த ஊராக இருக்கும் தேடினால் கூகுள் சொல்லுது பாருங்க பூர்வீகம் தேவகோட்டை..
ChavasRegal சிவசம்போ-
ஆளைப் பார்த்தால் ஏதோ அரேபியன் குதிரை மாதிரி இருக்குதே...?
காணொளி
சிறப்பான பெண்மணி. சிறப்பான தகவல். காணொளியை ரசித்தேன்.
பதிலளிநீக்குவாங்க ஜி காணொளிப்பாடலை ரசித்தமைக்கு நன்றி. நம்ம க்ரீன் தமிழன் வயிரமொத்து பாடல்தான்.
நீக்குஹாஹாஹா! இன்னிக்குக் காலம்பர எங்கே போனாலும் விவிசி தான்! நல்லா இருக்கு. காணொளியை மத்தியானமாப் பார்க்கணும்.
பதிலளிநீக்குவருக காணொளி பாடலை கேட்கவும்.
நீக்குகாணொளிப் பாடலை இப்போத் தான் கேட்டேன். :)
நீக்குமீள் வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.பதிவை நன்றாக தொகுத்து எழுதியுள்ளீர்கள். நல்ல வீரமான பெண்மணிதான். ஒரு ஆண்மகனாக வலம் வருகிறார். அதுவும் நம் நாட்டு பெண்ணுக்கு வம்சாவளி என்பது மகிழ்ச்சியை தருகிறது. காணொளி எனக்கு சரியாக வரவில்லை. பிறகு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ நம்நாட்டு வம்சாவழியை வாழ்த்தியமைக்கு நன்றி
நீக்குஆம் சார்.
பதிலளிநீக்குஅமெரிக்காவில் பெண்கள் ராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள்.
இங்கும் கூடிய சீக்கிரம் பெண்கள் அந்நிலையை அடைவார்கள்.
காணொளி சுட்டியைத்தான் கண்டுபிடிக்க முடியலை.
முடிந்தால் இதன் யூட்டியூப் சேனல் பெயரை தரவும்.
நான் அங்கு சென்று பார்க்கிறேன்.
வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. சுட்டி தருகிறேன்.
நீக்குஅட கடைசியில் இந்த பொண்ணுக்கு பூர்வீகம் தேவகோட்டை தானா
பதிலளிநீக்குவருக நண்பரே கடைசியில் தேவகோட்டைதானா ? அப்படினு சாதாரணமாக கேட்டு விட்டீர்களே...
நீக்குநானும் கூகுள் ஆண்டவர் கிட்டே அந்தப் பொண்ணு யாருன்னு கேட்டேன். நாமக்கல் கருப்பாயின்னு சொல்லுறார். ஹ...ஹ...ஹ!
பதிலளிநீக்குஎதுக்கும் ஒரு தடவை சரிபார்த்துடுங்க கில்லர்ஜி!
'கல கல'கருத்துப் பதிவு.
பாராட்டுகள்.
வருக நண்பரே கூகுளார இரண்டு தகவல் கொடுக்கிறாரா ? ஒருவேளை அவரது மூதாதையினர் நாமக்கல்லில் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாமோ...
நீக்குகில்லர்ஜி இப்படி ஒரு பெண் அல்ல ஆயிரக்கணக்கான பெண்கள் கண்டெய்னர் லாரிகளை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்... எங்கள் நிறுவனத்திற்கு வரும் பல கண்டெய்னர் லாரிகளை ஒட்டிக் கொண்டு வருவதும் பெண்களே... அதிலும் பல பெண்கள் வேறு தொலை தூர மாநிலங்களில் இருந்து வருகின்றனர் அதுவும் இரவு நேரம் ஒட்டிக் கொண்டு காலை 4 மணி 5 மணிக்கு எல்லாம் வந்துவிடுகின்றனர்
பதிலளிநீக்குஎனது உடன் வேலை பார்த்த இந்திய பெண்ணின் மகள் இங்கு ஆர்மியில் உள்ளார்... 5 அடி உயரம்தான் ஆனாலும் ரொம்ப ஸ்ட்ராங்கான பெண்..பல பஞ்சாபி பெண்கள் இங்கு ஆர்மியில் சேருகின்றனர்.
வருக தமிழரே மேலதிக தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
நீக்குஇதை பாருங்க கில்லர்ஜி பார்த்துவிட்டு மூர்ச்சை அடைந்தால் நான் பொறுப்பல்ல HOTTEST TRUCK DRIVER IN AMERICA!!! https://www.youtube.com/watch?v=CWi6_V6SQsw
பதிலளிநீக்குமிக்க நன்றி அவசியம் பார்க்கிறேன் தமிழரே...
நீக்குhttps://www.youtube.com/watch?v=q4Nr8ahk4_E
பதிலளிநீக்குஇதை கண்டிப்பாக பாருங்கள் கில்லர்ஜி
நீக்குகில்லர்ஜி தளத்துல இப்படியெல்லாம் போட்டீங்கன்னா, அவர் ஒருத்தர் மட்டும்தான் பார்க்கமுடியும். அவர் எல்லாத்தையும் பூட்டி வச்சிருக்காரு. தைரியமா (ஹா ஹா) தளத்தைத் திறந்துவைக்கலை.
நீக்குநெல்லையாரே சில விசயங்கள் பூட்டி வைப்பதே நல்லது.
நீக்கு@நெல்லைத்தமிழன்
நீக்குHOTTEST TRUCK DRIVER IN AMERICA!!!
@நெல்லைத்தமிழன் இந்த லிங்கை க்ளிக் பண்ணி பார்த்து எஞ்சாய் பண்ணுங்க
நீக்குOld Women in Trucking!
நீக்குஓல்ட் வோமன் காணொளி முழுமையாக பார்த்தேன் மற்றவைகளையும் பார்க்கிறேன் நன்றி.
நீக்குஹோட் டெஸ்ட் பார்த்தேன் நண்பரே
நீக்குஹா ஹா. தேவகோட்டை பெண்கள் எல்லாம் தேவலோகத்தில் டிரக் ஓட்டுறாங்க. தேவகோட்டை ஆணுங்கள் அதை பதிவேற்றுராங்க.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா ஆம் அப்படியே ஆகட்டும்.
நீக்குதேவகோட்டை தமிழச்சி... சிறப்பு ஜி...
பதிலளிநீக்குஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்...
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்...
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்...?
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த கில்லர்ஜி...?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி...!
வாங்க ஜி ஸூப்பர் பாடலை கொண்டு வந்து விட்டீர்கள்.
நீக்குநம்ம ஊரிலும் அவங்களுக்கு முழு உரிமை, பாதுகாப்பு கிடைக்க ஆரம்பித்தால், நம்ம ஊர் பெண்களும் இந்த மாதிரி கடின உழைப்பு தேவைப்படும் இடங்களில் வேலை செய்து மிளிர்வார்கள். பொதுவா பெண்கள், ஆண்களைவிட திறமைசாலிகள், நுண்ணுணர்வு மிக்கவர்கள்.
பதிலளிநீக்குஆம் நண்பரே உண்மைதான். நாமதான் திரைப்படத்து போலி வீரர்களைத்தானே நல்லவனாக நினைத்து ஆட்சி பீடத்துக்கு அழைக்கிறோம்.
நீக்குஅப்ப உங்க ஊரு ராணி என்று சொல்லுங்க![[
பதிலளிநீக்குஆம் நண்பரே அப்படித்தான்.
நீக்குகடைசியில் பார்தால்அரேபியன் குதிரை அல்ல இந்தியக் குதிரை
பதிலளிநீக்குவாங்க ஐயா
நீக்குஹா.. ஹா.. இந்தியக்குதிரை.
தேவகோட்டை தமிழச்சியாக மட்டும்தான் இருக்க முடியும்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஇந்தியாவிலும் இப்படியான சில பெண் லாரி ஓட்டுனர்கள் உண்டு கில்லர்ஜி. அமெரிக்கா அளவு இல்லை என்றாலும் இங்கேயும் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்குதேவகோட்டை பெண் - ஹாஹா... அதானே பார்த்தேன்!
வாங்க ஜி உண்மையை சொன்னேன்.
நீக்குதேவகோட்டையை பூர்விகமாக கொண்ட பெண்
பதிலளிநீக்குஅதுதான் இத்தனை திறமை வாழ்த்துக்கள்.
காணொளி நன்றாக இருக்கிறது. பொறுமையாக நிதானமாக ஓட்டுகிறார்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குநல்ல பதிவு. அரேபியன் குதிரை என்ற சொல்லிற்குப் பதிலாக பிற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமோ?
பதிலளிநீக்குவருக முனைவரே ஹா.. ஹா.. இந்தியன் குதிரை என்று சொல்லி இருக்கலாமோ ?
நீக்குநம் தமிழகத்திலும் பெண்கள் இப்போது ஆட்டோ, லாரி,கார் என கனரக வாகனங்கள் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். பெண்களின் திறமைகளுக்கு வானமே எல்லை. தகவல்களுக்கு நன்றி! வாழ்த்துகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி.
நீக்குரெம்ப பெருமை. இருக்கு நண்பரே.... அந்த அரேபியன் குதிரை தேவகோட்டையை சேர்நதது என்று... அதைவிட பெருமை.. எந்த அரேபியன் குதிரையாய் இருந்தாலும் ஒடச்சு பீசு பீசாக்கிறவாங்க தமிழ்நாட்டை சேர்ந்தவுகன்னு... அறியும்போது.....
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது பெருமை கண்டு மகிழ்ச்சி.
நீக்கு