தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 30, 2021

கலைஞர்களின் நிலைப்பாடு

 

கலைவாணர் NSK (Nagarkovil Sudalaimuthu Krishnan) என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது தமிழ் திரைப்படங்களின் முன்னோடிகளில் முக்கியமானவர் இவர் மனிதநேயமுள்ள மாமனிதர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். அவரைத் தொடர்ந்து பல நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள் பலர் நின்றார்கள், சிலர் வென்றார்கள், சென்றார்கள்.

டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராமச்சந்திரன், டணால் தங்கவேல், ஏ.கருணாநிதி, சந்திரபாபு, புளிமூட்டை ராமசாமி, சோ, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், வி.கே.இராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், ஐசரிவேலன், கல்லாப்பெட்டி சிங்காரம், இடிச்சபுளி செல்வராஜ், லூஸ் மோகன், பக்கோடா காதர், உசிலைமணி, குள்ளமணி, ஒருவிரல் கிருஷ்ணாராவ், என்னத்த கன்னையா, கொடுக்காபுளி செல்வராஜ், ஓமக்குச்சி நரசிம்மன், பி.பாண்டு, போண்டா மணி, ஜூனியர் பாலையா, குமரிமுத்து, ஜனகராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், தியாகு, சார்லி, மதன்பாபு, சிட்டிபாபு, கிரேஸி மோகன், சின்னி ஜெயந்த், தாடி பாலாஜி, மணிவண்ணன், எம்.ஆர்.ஆர்.வாசு, எம்.எஸ்.பாஸ்கர், கவுண்டமணி, செந்தில்.
 
இவர்களில் கவுண்டமணி செந்தில் கூட்டணி பல ஆண்டுகளாக நீடித்தது காரணமென்ன ? அந்த நாட்களில் வேறு எந்த நடிகரும் நகைச்சுவை நடிகராக விரும்பியதில்லை இதன் காரணமாக மக்கள் இவர்களின் நகைச்சுவையை ரசித்தே தீர வேண்டுமென்ற நிலைப்பாடு. மேலும் கவுண்டமணியிடம் யாரையும் மதிக்கும் பண்பு கிடையாது இது தொடக்கம் முதலே... உள்ள பிறவிக்குணம் தானொரு பழம்பெரும் நடிகர் என்ற கர்வம் அவரிடம் எப்பொழுதுமே இருந்தது சக நடிகர்களை ரஜினி உள்பட வாடா, போடா என்று அழைப்பதை யாராலும் தடுக்க இயலாத தமிழ் திரைப்படத்துறையின் நிலை.
 
இந்த நேரத்தில்தான் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர் இதை உணர்ந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மட்டுமல்ல நடிகர்களுமே கவுண்டமணியை தவிர்க்க ஆரம்பித்தனர். நான் கடந்த பதிவில் சொன்னதைப்போல் சுக்ரதிசை வடிவேலு, விவேக் பக்கமாக திரும்பியது. கவுண்டமணி தனது குணாதிசியத்தை மாற்றிக்கொண்டு இருந்தால் ஒருக்கால் மேலும் நீடித்து இருக்கலாம். இதன் காரணமாக செந்திலும் வாய்ப்புகளை இழந்தார் காரணம் இவரால் நல்ல நகைச்சுவையை தனியாக தருவதற்கு இயலாது கவுண்டமணியிடம் அடி வாங்கியே தனது காலத்தை ஓட்டி சம்பாரித்து கொண்டார். பல நேரங்களில் உண்மையாகவே அடி வாங்கி இருக்கிறார். ஆனால் கவுண்டமணியை இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட யாருமே கேட்க முடியாது. என்பதே நிதர்சனமான உண்மை. (இவைகள் திரு. செந்தில் அவர்களே சொன்ன, விடயம்)
 
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் வடிவேலு, விவேக் இவர்களுக்கு முன்னால் கவுண்டமணி, செந்தில் நடிப்பு எடுபடாது காலத்தின் சூழலும் இவர்களின் விதியும், இந்த வெற்றிக் கூட்டணியின் வசனகர்த்தா திரு. ஏ. கருணாநிதி அவர்களின் திறமையாளும் இவர்களை நெடுநாளாக நடிக்க வைத்து விட்டது. இவர் மரணமடைந்து இவரது குடும்பம் கஷ்டப்பட்டபோது இவரது மனைவி கவுண்டமணியிடம் உதவி கேட்க நானே படம் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று உதவ மறுத்து விட்டார். ஆனால் விசயத்தை கேள்விப்பட்ட திரு. விவேக் அவர்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார். திரு. ஏ. கருணாநிதி அவரகள் விவேக்கின் படத்துக்கு வசனம் எழுதியது கிடையாது என்பது குறிப்பிட வேண்டியது.
 
வடிவேல் தனது திறமையால் வெகு சாதுர்யமாக பெரிய அளவில் புகழை எட்டினார். அவரது சம்பளம் ஒரு திரைப்படத்துக்கு இவ்வளவு என்ற நிலை மாறி, ஒரு மணிநேர படப்பிடிப்புக்கு இரண்டு லட்சங்கள் என்ற நிலையானது. இரவு பகல் என்று கடினமாகவே உழைத்தார். இருப்பினும் நண்டு கொழுத்தால் வலையில் நிற்காது என்பார்களே...
 
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதின் பின்னணி உங்களில் யாருக்காவது முழுமையாக தெரியுமா ? நமது முன்னோர்களின் பழஞ்சொல் ஒன்று உண்டு காரணமின்றி காரியமில்லை ஆம் இன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு நாளைய ஓர் முக்கிய காரணம் உண்டு அதை மனிதர்களால் அறிய முடியாது ஆனால் உணர முடியும் ஆம் நமது ஞானத்தால் உணர முடியும். ரோபோ சங்கர், சிங்கமுத்து, ரமேஸ்கண்ணா, வீராசாமி, வையாபுரி, தாணு, சந்தானம், கருணாஸ், அப்புக்குட்டி, யோகிபாபு, டெலிபோன் ராஜ், மொட்டை ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, சாரைப்பாம்பு சுப்புராஜ், வெங்கல்ராவ் போன்றவர்களின் வாழ்வாதாரமும் உயர வேண்டும் என்பதே விதி. ஆகவேதான் திமுக தொடங்கப்பட்டது. ஏதாவது புரிகிறதா
?
 
நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு வடிவேலுவுக்கு எதற்காக அரசியல் ஆசை இதோ நட்டாற்றில் விட்டு விட்டு திமுக வழக்கம் போல பயணிக்கிறது உனது பயணம் என்ன ஆச்சு ? மேயிற மாட்ட நக்குற மாடு கெடுத்த கதையாகிப் போச்சு. ஒரு மணிநேர படப்பிடிப்புக்கு இரண்டு லட்சம் வாங்கிய உனது நேரம் இன்று வெட்டியாக பத்து பைசாவுக்கு உபயோகமில்லாமல் போச்சு. உமது நாக்குல சனி திமுக பேச்சைக் கேட்டு ஏற்றி விட்ட விஜயகாந்தை விமர்சித்தாய் மேலே நான் குறிப்பிட்டவர்களும் வாழ வேண்டுமே... ஆகவேதான் உமது வழி மாறியது விதி வலியது.
 
பாத்திரமறிந்து பிச்சை போடு கோத்திரம் அறிந்து பொண்ணைக் கொடு என்றார்கள். இவைகளின் அர்த்தங்களை நாம் மனதில் அசைவு போட்டுக் கொண்டே வாழவேண்டும். இறைவன் உனக்கு போட்ட பிச்சை இவ்வளவுதான் போலும். எப்படியோ நீர் வீட்டில் ஓய்வெடுப்பதால் பல நடிகர்கள் இன்று தங்களது திறமையை காண்பித்து முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள் வாழ்க அவர்களும்...
 
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும். என்று சொல்வார்கள். கவுண்டமணி தனது வாயால் கெட்டார், வடிவேலுவும் அரசியலுக்கு சென்றதால் தனது வாயால் கெட்டார், அந்த வரிசையில் இன்று திரைப்படங்களில் தலைக்கனமாக யாரையும் மதிக்காமல் பேசுவது சந்தானம். இவரது பயணம் அவ
ரது கையில். நற்பண்பை நாடே வணங்கும் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் வாழ்க வளமுடன்.
 
இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக...
கலைகளின் நிலைப்பாடு
தேவகோட்டை கில்லர்ஜி

17 கருத்துகள்:

  1. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியின் சோர்வு

    பொச்சாவாமை அதிகாரத்தின் முதல் குறள் : 531

    பதிலளிநீக்கு
  2. இனி குறளின் குரல் :- அளவிற்கு மீறிய கோபம் அதிக கேடு உண்டாக்குவதை விட, மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் வரும் அலட்சிய மனப்பான்மை, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவிடாமல் தளர்வு அடையச் செய்து, அதிக துன்பங்களை வாரி வழங்கும்...!

    மேலும் 540 வரை...?!

    நல்ல அலசல் ஜி...

    பதிலளிநீக்கு
  3. பா திறன் அறிந்து பிச்சை இடு...
    கோ திறன் அறிந்து பெண்ணை கொடு...

    இப்படியும் பிரிக்கலாம்... (அறிந்து - தெரிந்து - புரிந்து :- கொள்க)

    ஆனால் பழமொழி சொன்னால் அனுபவிக்கணுமாம்...! அப்போது தான் புரியுமாம் ஜி...!

    பதிலளிநீக்கு
  4. பல நகைச்சுவை நடிகர்கள் பற்றிய நல்ல அலசல்.
    ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் புகழ்பெற்று விளங்கினார்கள்.
    வல்லி அக்காவும் இரண்டு நகைச்சுவை நடிகரைப்பற்றி பகிர்ந்து இருக்கிறார்கள் இன்று.

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோமதி மா.

    நம் மனதில் ஒரே சமயத்தில் இப்படி
    எண்ணங்கள் தோன்றும் போலிருக்கிறது.

    திரு
    என் எஸ்கே நகைச்சுவை தாண்டி வேறெதும் செய்ய மாட்டார்.
    அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கும் அன்பு தேவகோட்டைஜிக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நீண்ட நடிகர் பட்டியல் அருமை நண்பரே. அப்புறம் எனக்கு தெரிந்து அது A கருணாநிதி இல்லை, வாழைப் பழ வசனம் எழுதியது, வீரப்பன். சோப்பு சீப்பு கண்ணாடி படத்தில் நாகேஷ்வுடன் வருபவர்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு அலசல். நான் பொதுவாக இப்போதைய நடிகர்களின் நகைச்சுவைகள் ஒளிபரப்புவதைப் பார்த்தது இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்ததே பிடிக்கவில்லை. செந்தில்/கவுண்டமணி பிடிக்கவே பிடிக்காது. வடிவேலு/பார்த்திபன் மட்டும் கொஞ்சம் ரசிக்க முடியும். நன்றாக அலசி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல அலசல். சிலர் ஆரம்பத்தில் கடும் வறுமையில் கஷ்டப்பட்டதை எண்ணி கஞ்சனாகிவிடுகிறார்கள். கவுண்டமணி சொந்தப் படம் எடுத்ததில்லை.

    வடிவேலுவின் காமெடியை மிகவும் ரசிப்பேன்.

    வாழ்வில் உயரும்போது பணிவு அனேகமாக எல்லோருக்கும் காணாமல் போய்விடுகிறது. எம் எஸ் வி. விஜயகாந்த் போன்ற சிலர் விதிவிலக்கு.

    வடிவேலு, இந்த வருடத்தில் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அழுது மன்னிப்பு கேட்டாராமே

    பதிலளிநீக்கு
  9. திரைத்துறை மட்டுமன்றி பிற துறையில் பரிமணிப்பவர்களுக்கும், பின் மறந்து அல்லது மறைந்து போவோருக்கும் இது பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நலமா? பல நாட்களாக உங்களை பதிவுலகில் பார்க்க இயலவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன்.

    நல்ல அலசலுடன் கூடிய பதிவு. நிறைய நகைச்சுவை நடிகர்களை நினைவு வைத்து குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். நகைச்சுவை பொதுவாக நம் மனதின் இறுக்கங்களை குறைப்பதுதானே... அந்த வகையில் நகைச்சுவையுடன் பேசி நடிக்கும் இந்த நடிகர்களின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். இரண்டாவதாக எல்லோரும் அவரவர் விதியின் பின்னால் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். இதில் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரும் ஒன்றுதானே.. ஆனால், எல்லோரையும் நினைவுக்கு கொண்டு வந்து சுவாரஸ்யமாக அலசி திரட்டித் தந்த பதிவுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. நகைச்சுவைநடிகர்களில் சிலரைத் தெரியவில்லை ஆனால். கருத்து நல்ல கருத்து கில்லர்ஜி. இக்கருத்து எல்லாருக்கும் எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும். நா அடக்கம், சபை நாகரிகம், பொதுவெளி நாகரிகம், பிறரை, தன்னுடன் பணிபுரிவோரை தன் தொழில் சார்ந்தோரை இழிவுபடுத்தாமல், தரக் குறைவாகப் பேசாமல், மதித்து நடக்க வேண்டும் இல்லை என்றால் மனிதனுக்குக் கண்டிப்பாகச் சரிவு நிச்சயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நல்ல கருத்து, கில்லர்ஜி. எல்லா நகைச்சுவை நடிகர்களைப் பற்றியும் நன்றாகத் தொகுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். உங்களின் கடைசி இக்கருத்து எல்லாருக்குமே பொருந்தும்தான். நா அடக்கம், பொது இட நாகரிகம், பிறரையும் தன்னுடன் பணிபுரிபவர்களையும் இழிவுபடுத்தாமல்,குறைவாக நினைக்காமல் சபை நாகரிகம் எல்லாம் இல்லை என்றால் அந்த நபர் சரிவை நோக்கிச் செல்ல நேரிடும்தான். எல்லாருக்குமா? என்று கேட்டால் இல்லை எனவும் சொல்லலாம். ஆனால் பொதுவாக அப்படித்தான் நடக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு பகிர்வு. உங்கள் எண்ணங்களைச் சொல்லும் பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு