தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

ராயபுரம், ராயல்டி ராயப்பன்

திரைப்படத் துறையில் எத்தனையோ தொழில் நுற்ப கலைஞர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் அனைவருக்குமே சம்பளம் கொடுக்கும் முதலாளி தயாரிப்பாளர்தான். மிகப் பெரிய திறமை வாய்ந்த நடிகர்கள், நடிகைகள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனையாளர்கள், இறுதியில் லைட்பாய்கள் என்று சொல்லப்படும் விளக்குப் பிடிப்பவர்கள் வரையில்... சம்பளம் கொடுக்கும் பிரம்மன் தயாரிப்பாளர்தான்.
 
தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் யாரும் வேலை செய்ய முடியாது. எனது தலைவன் பெரிய நடிகன் என்று சொல்லித் திரியும் விசிலடிச்சான் குஞ்சுகளே...உனது தலைவனை எங்காவது சாலையோரமாக நின்று நடிக்கச்சொல் பார்க்கலாம் ? யார் கேமராவைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கலாம் ? தயாரிப்பாளர் வரவில்லை என்றால் எவனும் வரமாட்டான் இவர்களால்தான் உலக்கை நாயகன், சூப்பு ஸாரு, எலைய தலவிதி தல, கால் என்று சொல்லிக் கொண்டு அலைகின்றீர்கள். இராயல்டி என்று சொல்லப்படும் காப்புரிமை இதனை பெற்றுக் கொள்ள இசையமைப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?
 
சமீபத்தில் இளையராஜா தனது பாடல்களை மேடையில் இசைக்கச்சேரி நடத்துபவர்களிடம் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். இவர் அந்தப் பாடல்களுக்கு சம்பளம் வாங்கவில்லையா ? இவரது இசையால் மட்டுமே பாடலை கேட்க முடியுமா ? பாடலாசிரியரின் நல்ல வரிகள் வேண்டாமா ? பாடகர்களின் இதமான குரல்வளம் இல்லாமல் இவரது இசையை ரசிக்க இயலுமா ? சமீபத்தில் ரஜினி தான் நடித்து காசு வாங்கிய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைக்ககூடாது என்று அறிவித்ததாக தெரிகிறது அதேநேரம் தனது முன்னாள் மருமகனுக்கு மட்டும் கொடுக்கலாம்.
 
முதலில் பழைய படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதே தவறுதானே தமிழக மக்கள் இதற்காக புறக்கணித்து படம் பார்க்காமல் இருக்கப் போகின்றார்களா ? இல்லையே... சரி இதை சொல்வதற்க்கான உரிமை நடிகனுக்கு எப்படி வரும் ? முதல் போட்ட முதலாளி தயாரிப்பாளர்தானே சொல்ல வேண்டும் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடலை எம்ஜிஆர் பாடல், சிவாஜி பாடல் என்று சொல்லி வந்த பரம்பரைதானே நாம். எல்லா வகையான உரிமைகளும் தயாரிப்பாளரையே சாரும். தமிழகத்தை பொருத்தவரையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் ஆகி விட்டது. அன்று படிக்காதவர்கள்தான் கூத்தாடிகளிடம் அடிமையாகி இருந்தார்கள் என்றால் இன்று பட்டதாரிகளும் பதாகைகளுக்கு பாலூற்றிக் கொண்டு வாழ்வது இன்னும் எத்தனை காலம் ?

36 கருத்துகள்:

  1. // பதாகைகளுக்கு பாலூற்றிக் கொண்டு வாழ்வது இன்னும் எத்தனை காலம்?.. //

    ஒருக்காலும் திருந்த மாட்டானுங்க ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இன்றைய நிலைப்பாடு இதுதான்...

      நீக்கு
  2. நான் படித்தது
    இளையராஜா தன் பாடல்களின் உரிமையை
    தனக்கு 25%
    பாடல் ஆசிரியர் 25%
    தயாரிப்பாளர் 50%

    என்று பங்கிடுவதாக படித்தேன்.
    உண்மையா என தெரியவில்லை நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் அறிந்தவரை இதில் தயாரிப்பாளர்கள் வரவில்லை‌ மேலும் இதில் பாடகர், பாடகிகளின் பங்கு வேண்டாமா ?

      நீக்கு
  3. திரை உலகம் யாருடைய கைகளில் இருக்கிறதோ அவங்க தான் இதை எல்லாம் மாற்ற வேண்டும். எல்லோருமே பயத்துடன் தானே சொந்தக் கருத்தைக் கூடச் சொல்ல முடியாமல் சொன்னப்புறம் அப்படி எல்லாம் இல்லைனு சொல்லிடறாங்க! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. திரைப்படங்களுக்கு பாடலும் இசையும் அவசியம் தானா? இசை பாடல் இல்லாமல் டாக்குமெண்டரி போல படம் எடுத்தால் ஓடாதா? கதையும் நடிப்பும் போதாதா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்து மிகச்சரியே ஆனால் நாம் தொடக்கம் முதலே பாடலை மைய்யமாக வைத்தே பழகி விட்டோமே...

      நீக்கு
    2. பாதிக்கு மேற்பட்ட படங்கள்ல கதை கிடையாது. அதுக்கு மேல் நடிப்பும் கிடையாது. அப்போ என்னத்தைத்தான் பார்ப்பது?

      நீக்கு
    3. இன்றும் மலையாள படங்களில் தரமான கதை இருக்கிறது.

      டப்பா படமெடுத்த ஆந்திராக்காரர்கள் நல்ல படமெடுக்கின்றார்கள்.

      நீக்கு
  5. கூட்டு முயற்சியால்தான் ஒரு படம் வெற்றி பெறுகிறது. பாடகர் நான் மட்டுமே என்று சொல்லமுடியாது, இசை அமைத்தவர் என்னால்தான் என்று சொல்லமுடியாது.
    நீங்கள் சொல்வது போல ஒரு படத்தில் வேலை பார்க்கும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களின் பங்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  6. ஆதங்கம் சொல்லும் பதிவு. சினிமாவால் சீரழிவு மட்டுமே எனும்படி ஆகிவிட்டது. கூட்டு முயற்சியாக உருவாகும் படங்களுக்கு தனித் தனியே உரிமை கோறுவது சரியல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனது கருத்தோடு இணைந்து வந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. கனவுலகம் கண்றாவி ஆகி விட்டது ஜி...

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜி உங்கள் கருத்துகள் சரியே. கலைஞர்கள் ஒருவர் இல்ல்லை என்றாலும் சினிமா எடுக்க முடியாது. பாடல்கள் இல்லாமல் கூடப் படம் எடுக்க முடியும், அதாவது பாடலாசிரியர், பாடகர். ஆனால் பின்னணி இசைக்குத் தேவை...தயாரிப்பாளர் இல்லை என்றால் எதுவும் இல்லை. தனி உரிமை கோருவது சரியல்ல.

    கில்லர்ஜி ஆனா இப்பல்லாம் நடிக்கறவங்களே அல்லது அவங்க குடும்பமே தயாரிக்கவும் செய்யறாங்களே. அதிலும் கூட எல்லாரது ஒத்துழைப்பும் இருந்தால்தான் படமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நடிகர்கள் படம் எடுக்கட்டும் அப்பொழுது தயாரிப்பாளர் என்ற நிலையை தொட்டு விடுவார்கள்.

      முழுமையான அதிகாரம் தயாரிப்பாளர்களுக்கே இருக்க வேண்டும்.

      நீக்கு
  9. திரைஉலகம் என்பது மாய உலகம். அதில் சிலரது ஆதிக்கம் தான் அங்கு கோலோச்சுகிறது. அதை எதிர்த்து நிற்பவர்கள் என்பது மிகவும் குறைவு. ஒவ்வொரு துறை அதாவது தயாரிப்பாளர், நடிகர், ஸ்டன்ட் என்று ஒவ்வொருசங்கம் இருந்தாலும் இது போன்ற உரிமை கோரல்களைப் பற்றி அவரள் சில விதிமுறைகள் கொண்டுவந்தால் நல்லது.

    உங்கள் கருத்துகள் ஆதங்கம்மிக்கவையாக சரியாக உள்ளன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எனது கருத்தை ஆமோதித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. கில்லர்ஜி, திரை உலகில் ரிஸ்க் எடுத்து வேலைசெய்பவர் யார் என்றால் ஸ்டன்ட் கலைஞர்கள், குறிப்பாக டூப் போடுபவர்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் நான் அறிவதுஅது இல்லை என்பதே. ஹீரோவுக்காக டூப் போட்டு நடிப்பவர் அதாவது உயிரைப் பணயம்வைத்து நடிப்பவருக்கு நடிகரின் சம்பள்த்தோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தலைவரை உயிரைக் குடுத்துப் பாதுகாப்பது கருப்புப் பூனைகள்தாம். அவர்களுக்கு தலைவரைவிட சம்பளம் கொடுக்கச் சொல்லுவாங்க போலிருக்கே

      நீக்கு
    2. ஆம் உண்மையாக பல்டி அடிப்பவர்கள் டூம் மாஸ்டராம். ஹூம் காலக்கெரகம்..‌

      நீக்கு
    3. பணம் உள்ளவனே பலசாலி.

      நீக்கு
  11. திரைப்படத் தயாரிப்பாளர்களை முதலாளிகள் என்று மதிக்கும் போக்கு எப்போது நின்றதோ அப்போதே திரைப்படத்துறை நலிவடைய ஆரம்பித்துவிட்டது. லாட்டரிச்சீட்டு மாதிரி ஆகிவிட்டது. இதற்கும் காரணம் வேலை வெட்டியற்ற ரசிகக்குஞ்சுகள்தாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே...
      //வெட்டியற்ற ரசிகக் குஞ்சுகள்தாம்//
      இவர்கள் அனைவரையும் துபாய்க்கு அனுப்பினால்தான் சரியாக வரும்.

      நீக்கு
    2. தசாவதாரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த உதவியாளர், பஹ்ரைனில், ஆபீஸ் க்ளீன் செய்யும் வேலையில் (காண்டிராக்ட் கம்பெனி) இருந்தார். ரசிகனுங்களுக்கு வேலை இல்லாததால், பால் ஊத்துவது விசிலடிப்பதுன்னு பொழுதைப் போக்கறாங்க. இவனுகளுக்கு வேலை கொடுத்து சாலை பராமரிப்பு, சாலை போடும் வேலைகள்னு கொடுத்தாத்தான் சரிப்படும்

      நீக்கு
    3. இதன் அடிப்படை காரணமே எவனுக்கும் வேலை இல்லை என்பதே... இருக்கும் வேலை வாய்ப்பையும் வடநாட்டார்கள் பக்குவமாக எடுத்துக் கொண்டனர்...

      நீக்கு
  12. ரசிகர்கள்தான் இப்படிப்பட்ட நடிகர்களை வளர்த்து விடுகின்றனர்.  அவர்கள் மாறப்போவதில்லை.  

    இளையராஜா விஷயத்தில் இந்த ராயல்டி விவகாரத்தை ஏ ஆர் ரெஹ்மான் ஆரம்பம் முதலே சரியாக வாங்கி வருகிறார்.  அவரை யாரும் சொல்வதில்லை.  பொது வாழ்க்கையில் சிலவற்றை சிலர் செய்தால் குற்றம், சிலர் செய்தால் குற்றமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ரகுமான் புதிய தலைமுறை தொடக்கம் முதலே விபரமாக கைப்பற்றிக் கொண்டார்.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    நான் கொடுத்த கருத்து வரவில்லையே. எங்கேயோ போய் விட்டது போலும். மீண்டும் அதையை தொகுப்பது சிரமந்தான். பார்க்கலாம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவில் தங்கள் மன ஆதங்கத்தை விரிவாக அலசி இருக்கிறீர்கள். பதிவுக்கு வந்த கருத்துக்களும் அதை ஆமோதிக்கின்றன. கூட்டு முயற்சியில் உருவாகும் ஒரு படத்தில் அதில் பங்கு பெறும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனி உரிமை எடுத்துக் கொள்வது தவறுதான். தங்கள் கருத்து முற்றிலும் உண்மையே.. நன்றாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    எப்படியோ எழுதியதை நினைவாக இழுத்துப் பிடித்து கொண்டு வந்து விட்டேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், பாராட்டியமைக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  15. ஒரு நல்ல அலசல். நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது.

    சொகுசு காரில் வந்த தயாரிப்பாளன் நடந்து செல்கிறான், நடந்து வந்து வாய்ப்புக்கேட்டு நடிகனானவன் பல சொகுசுக்கார்களுக்கு அதிபனாகிறான்.

    சம்பளத்திற்கான அளவுகோலும் - வரம்பும் இந்த துறையில் இல்லாமல் இருப்பதும், நடிகர்கள் மற்றும் சில(??) தொழில் நுட்ப கலைஞர்களையும் இறைவனை போல பாவிக்கும் நடைமுறையும் அவலத்தின் உச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...

      நீக்கு