தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 08, 2022

கடசி மருவாத...


ணக்கம் நண்பர்களே... ‘’வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்’’ என்ற வைரமுத்துவின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
பெண்
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
 
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
சாவுக்கு மாசம் உண்டு
சாமிக்கும் பாரம் கண்டு
 
ஆண்
நாருக்கு பாசம்
தந்ததுண்டோ தேனே
பெண்
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
 
நச்ச எலியோ பட்டுக்கிருச்சு
சொச்ச எலியோ கத்துகிருச்சு
பெண்
இச்ச கருப்பு கத்துகிருச்சு
இச்ச தினுசு சுத்திகிருச்சு
 
ஆண்
தேனை வெட்டி நக்கி தின்னா
நாட்டு வெல்லம் பத்தாது
பெண்
காவல் போட்டும் ஆடாதுனா
சாமி அங்கு கத்தாது
 
ஆண்
மாமி போட்ட ஆளு
சாமி சொட்ட மாடு
பெண்
நஞ்சுக்குள்ளே நீயே தச்சு
பத்தி வச்சது பாரு
 
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
பெண்
சாவுக்கு மாசம் உண்டு
சாமிக்கும் பாரம் கண்டு
 
ஆண்
நாருக்கு பாசம்
தந்ததுண்டோ தேனே
பெண்
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
 
என்னை கொண்டுதான்
திக்கி நிக்கிறேன்
மண்ணுக்குள்ளேதான்
கன்னி வெக்கிறேன்
 
ஆண்
நில்லாமத்தான் கொந்தளிக்கிறேன்
காணாமல்தான் கொள்ளி வக்கிறேன்
பெண்
வேசம் உள்ள சொந்தம் அது
லாபம்முன்னு செல்லாது
 
ஆண்
கருமி கொட்டும் வீட்டுக்குள்ள
நண்டு வெக்க நாடாது
பெண்
முத்தி கேட்ட மாசம்
பாடி வச்சு வீசும்
 
ஆண்
ஆதி மாத வேதம் கொள்ளும்
மன்னவங்க கொஞ்ச பாசம்
பெண்
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
 
கெட்டிச்சோறு நாசம்
சுடலைமுத்து மோசம்
சாவுக்கு மாசம் உண்டு
சாமிக்கும் பாரம் கண்டு
ஆண்
நாருக்கு பாசம்
தந்ததுண்டோ தேனே
 
பெண்
கெட்டிச்சோறு நாசம்
ஆண்
சுடலைமுத்து மோசம்
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1985
படம்: முதல் மரியாதை
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன், எஸ். ஜானகி
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=ZbSZ75T5bks
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

34 கருத்துகள்:

 1. உங்கள் கற்பனை வளம் மிகப் பிரமாதம்.
  அன்பு தேவகோட்டைஜி.
  கவிதை வரிகள் அத்தனையும் உண்மை.

  பதிலளிநீக்கு
 2. படுபயங்கரமான பாடல் பதிவாக இருக்கின்றதே!...

  நீங்கள் எல்லாம் குடத்தில் விளக்காக இருப்பதால பலருக்குக் கொண்டாட்டம்!...

  வாழ்க உங்கள் திறமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 3. ஹா.. ஹா.. ஹா.. நான் கூட படம் பார்த்து அரசியல் பதிவோ என்று பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 4. தேன் திரவம்தானே எப்படி வெட்டி எடுத்து?  

  'தேனெடுத்து நக்கி தின்னா' என்றோ, 'நக்கி நக்கி தின்னா' என்று இரண்டு நக்கி போட்டாலோ இசைந்து வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   //கைய கட்டி நிக்க சொன்னா
   காட்டு வெள்ளம் நிக்காது//

   இது உண்மையான வரிகள்.
   அந்த நேரத்தில் இதுதான் உதித்தது.

   Chivas regal சிவசம்போ-
   தேன் என்றால் திரவத்தை ஏன் நினைக்கணும், தேவகோட்டை, தேனப்பன் கொழுந்தியாள் தேன்மொழி"யை வர்ணிக்க கூடாதா ?

   நீக்கு
  2. தேனடையை வெட்டித் தேன் எடுத்திருப்பாங்களோ?

   நீக்கு
 5. வைரமுத்து பாடலை கேட்டேன், நீங்கள் மாற்றி எழுதிய பாடல் வாசித்தேன்.

  பேர குழந்தைகள் படிக்க நிறைய எழுதி வையுங்கள். ஒரு நாள் உங்களிடம் பேர புள்ளைகள் வரும் போது தாத்தாவின் திறமையை கண்டு வியக்கும் குழந்தைகள்.
  இயற்கையை , ஒடி விளையாடும் குழந்தைகளைபற்றி, காற்றை, மழையை என்று நிறைய எழுதுங்கள் குழந்தைகளுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தாங்கள் சொல்வது போல் இனி குழந்தைகளுக்காக எழுதுகிறேன் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருக நண்பரே
   //பச்ச கிளியோ போட்டுக்கிருச்சு
   இச்ச கிளியோ ஒத்துகிருச்சு//

   இதுதான் உண்மையான பாடல் வரிகள் நண்பரே

   "பச்ச எலி" பண்டைய காலத்தில் விவசாயம் நலிந்து பஞ்சம் தாண்டவமாடிய காலகட்டம் வந்தது அப்பொழுது வயல்காட்டில் எலிகளை பிடித்து நச்சுப் போட்டு சுட்டு உண்டு வாழ்ந்தது வரலாறு. அதுவே "நச்ச எலி"

   மைண்ட் வாய்ஸ்
   உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா சமாளிச்சாச்சு.

   நீக்கு
  2. ஹாஹாஹா. விளக்கத்திற்கு நன்றி நண்பரே

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 7. கில்லர்ஜி, வரிகளை வாசித்து சிரித்துவிட்டேன். உங்கள் கற்பனையைக் கண்டு வியக்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 8. கில்லர்ஜி வழக்கம் போல சூப்பர்! கலக்கறீங்க. மனசுக்குள்ளப் பாடி பாத்தேன்...முன்ன மாதிரி பாட வரமாட்டேங்குது. அதுவும் கொரோனா வந்து போனதுக்கு அப்புறம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடி முயன்றமைக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்...

   நீக்கு
 9. ஸ்டாலின் படம் பார்த்ததும் இன்னிக்கு ஒன்னு கில்லர்ஜி அவரை வைச்சு ஏதொ கதாகாலட்சேபம் பண்ணப் போறாரு இல்லைனா ஸ்டாலின இவர் பாட வைச்சிருப்பாரோன்னு...பாருங்க அவர் உக்கார்ந்திருக்கற படம் கச்சேரி மேடை போல!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எனக்கு அரசியல் தெளி"யாது.

   இந்த மைக் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் பந்தம் உண்டு

   நீக்கு
 10. வைரமுத்துவின் பாடலே நான் கேட்டதில்லை. ஆகையால் இரண்டுக்கும் உள்ள ஒப்புவமை இன்னமும் புரியலை. ஆனாலும் உங்கள் திறமை வியக்கத்தான் வைக்கிறது. படத்தைப் பார்த்ததும் என்னவோ ஏதோ எனத் தோன்றியது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பாடலின் சுட்டியை சொடுக்கி கேட்கலாமே...

   பாடல் வரிகள் நீளம் என்பதால் உண்மையான பாடலை நீக்கி விட்டேன்.

   நீக்கு
 11. அப்படியே அச்சு பிழை இல்லாமல் இருக்கிறது பாட்டுப்புலவரே!!! தாங்கள் பாட, நான் கேட்கும் காலம் வருமோ...??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக. நண்பரே இப்படி எல்லாம் ஆசை கூடாது நடக்கும் ஆனா... நடக்காது.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  நலமா? தாங்கள் இயற்றிய பாடல் உண்மை பாடலுக்கு வெகு பொருத்தமாக உள்ளது. நல்ல திறமை உங்களுக்குள்... ஒரு பாடலை வைத்து அதற்கு தகுந்தாற் போல வார்த்தைகளை இயற்றி விடுகிறீர்களே ...¡ மனமார்ந்த பாராட்டுக்கள்.

  நானும் அரசியல் பதிவென்றுதான் நினைத்தேன்... எனக்கு அரசியல் பற்றி எதுவும் சொல்லத் தெரியாதே என்றுதான் பதிவுக்கு வந்தேன். ஆனால் படத்தில் அவர் கால் மடக்கி அமர்ந்திருந்து கட்சிக்கு தரும் மரியாதை உண்மையிலேயே வியக்க வைக்கிறது. தலைப்புக்கேற்ற படத்தை தேர்ந்தெடுத்ததற்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 13. உங்கள் கற்பனைத்திறனுக்கு எல்லையேயில்லை.

  பதிலளிநீக்கு
 14. வியக்க வைக்கும் கற்பனைத் திறன் உங்களிடம் இருக்கிறது கில்லர்ஜி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி

   நீக்கு