ஒரு
பேரழகியை கண்டு...
ஓவியம்
தீட்டுகின்றான் ஓவியன்
கவிதை வடிக்கின்றான் கவிஞன்
சிலை செதுக்குகின்றான் சிற்பி
படம் எடுக்கின்றான் கலைஞன்
சீரழிக்க நினைக்கிறான் கொடூரன்
கொலை செய்கிறான் கொலைகாரன்
பேரம் பேசிட துடிக்கிறான் தரகன்
விலை கொடுக்கிறான் காமுகன்
அனுபவித்து ரசிக்கிறான் கணவன்
இவளை படைத்தவன் பிரம்மன்.
ChavasRegal சிவசம்போ-
கேட்பதற்கு நல்லாருக்கு இப்பத்தான் இப்படி பேரழகியை கண்டால் கொன்று பேயா... அலைய விடுறாய்ங்களே...
கவிதை வடிக்கின்றான் கவிஞன்
சிலை செதுக்குகின்றான் சிற்பி
படம் எடுக்கின்றான் கலைஞன்
சீரழிக்க நினைக்கிறான் கொடூரன்
கொலை செய்கிறான் கொலைகாரன்
பேரம் பேசிட துடிக்கிறான் தரகன்
விலை கொடுக்கிறான் காமுகன்
அனுபவித்து ரசிக்கிறான் கணவன்
இவளை படைத்தவன் பிரம்மன்.
கேட்பதற்கு நல்லாருக்கு இப்பத்தான் இப்படி பேரழகியை கண்டால் கொன்று பேயா... அலைய விடுறாய்ங்களே...
கவிதை.. கவிதை..
பதிலளிநீக்குநன்று, நன்றி ஜி
நீக்குஇலவச எண்ணெய் சட்டி கொடுக்கிறான் அரசியல்வாதி..
பதிலளிநீக்குஉங்களை வறுத்து எடுக்கப் போகிறேன் என்பதை மறைமுகமாக சொல்கிறான் இதை நாம்தான் உணர்தல் வேண்டும்.
நீக்குஎல்லாம் சரிதான். மிக அழகாகப் பிறந்ததற்கு எப்போதுமே சந்தோஷப்பட்டுக்கொண்டே இருப்பாளா அந்தப் பேரழகி இல்லை வருந்துவாளா?
பதிலளிநீக்குஅவளுக்கு அந்தத்த நேரத்தில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து சந்தோஷமும் வருத்தமும்! ஆராதிப்பவர் வந்தால் சந்தோஷம். அடக்கி அனுபவிக்க / அழிக்க நினைப்பவர் வந்தால் வருத்தம், துயரம்.
நீக்குஇந்தியாவில் பிறந்ததற்காக பயப்பட வேண்டும் தமிழரே...
நீக்குஅவரவர் ஆசை, மனநிலைக்கேற்ப செயல்கள். கொடூரன்கள் கையில் சிக்காமல் இருந்தால் போதும்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்ஜி இதுவே போதும்.
நீக்குபெண்ணின் பெருந்தக்க யாவுள என்கிறார் வள்ளுவன்...
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி.
நீக்குபேரழகு சில சமயம் விலை கொடுத்து ஆபத்தையும் வாங்குகிறது.
பதிலளிநீக்குகீதா
ஆம் இந்தியாவில் அழகு ஆபத்தில்தான் முடிகிறது.
நீக்குபேரழகி என்பது பார்ப்பவரின் மனக்கண்ணில் இருக்கிறது!
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
அதீதமான அழகு என்றுமே ஆபத்துதானதுதான். அழகான உடலழகை பெறுவதை விட நல்ல சிந்தனையுள்ள மனத்தூய்மையான அழகை பெறுகிறவர்களே பாக்கியசாலிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கொடூரன் கையில் சிக்காமல் இருந்தால் மிக நல்லது.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஒண்ணுமே புரியலை!
பதிலளிநீக்குகடந்த மாதம் ஓர் வெளிநாட்டு அழகியை சிதைத்து கொன்று விட்டார்கள்.
நீக்குஅந்த செய்தியை படித்ததில் விளைவு.
கவிதை நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவர் மனநிலையை சொன்னீர்கள்.
பதிலளிநீக்குஇதற்கு போட்ட பின்னூட்டத்தை காணோமே!
பெண்ணை பெற்றவர்கள் ஒரு வித அச்சத்தில் தினம் இருக்கிறார்கள். இப்போது உள்ள சூழ்நிலை பெண்களுக்கு பாதுகாப்பு குறைவே.
ஆம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
நீக்குஅழகான பெண்ணுக்கு மட்டும் ஆபத்து இல்லை. நல்ல புத்தி உள்ள , சம்பாதிக்கும் அழகில்லா பெண்களுக்கும் ஆபத்துதான். அவர்களை வார்த்தைகளால் மயக்கி திருமணம் புரிந்து பின் பணத்தை கொள்ளை அடிப்பவர்களையும் கேள்வி படுகிறோம்.
பதிலளிநீக்குஇன்றைய சூழலில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பெண்களும் உணர்வதில்லை.
நீக்கு