தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 13, 2022

தர்மாவின் கர்மா

நீ செய்த பாவத்தை நீ கடந்தே தீரவேண்டும். நான் ஒரு பாவமும் செய்யவில்லையே என்று கதறலாம். பாவங்கள் உனது அகக்கண்ணுக்கும், முகக்கண்ணுக்கும் அறியாத Wi-Fi போன்ற ஊடல்கள். இதை இறைவன் மட்டுமே அறிவான். ஓர் தினம் நீயும் அதை காணவோ, உணரவோ வேண்டிய தருணம் வரும் அன்று நீ இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறளுக்கு வேண்டி நிற்பாய்.
 
உனக்கு துரோகமும், கேடும் விளைவித்தவன் நன்றாகவே வாழ்வான், தான் ஒரு பாவமும் செய்யவில்லை என்று சொல்லும் நீ மேலும் அல்லல் பட்டுக்கொண்டு இருப்பாய். உனக்கு காரணம் புரியாது. காரணம், காரணம் இன்றி காரியமில்லை என்பது மூத்தோர் வாக்கு. அந்தக் காரணத்துக்கு காரணவாதியே நீதான். மனதில் நல்லதையே நினை. இந்த மனித ஜீவராசிகளில் பெரும்பாலானோர் தீயவர்களே இவர்களை நீ ஒன்றும் செய்ய முடியாது. உனது பாதையை மட்டும் தூய்மையாக்கு.
 
மனிதர்களிடம் உனது பிரச்சனையை சொல்லாதே அது மறுநொடியே கேளிக்கையாகலாம். அது அறிந்து உனது மனப்பாரம் மேலும் கூடலாம். உனக்கு சொல்ல வேண்டுமெனில் இறைவனிடம் சொல்லி அழு வேண்டுமானால் கதறி அழு, மனப்பாரம் நிச்சயம் குறையும். அவன் ஒருபோதும் உனது பிரச்சனையை பிறரிடம் சொல்ல மாட்டான். கோயிலில் சென்று இறையிடம் சொல்லி அழுவதற்கு வெட்கமாயின் தனிமையில் சொல்லி அழு இறைவன் உன்னை மட்டுமல்ல அனைத்து மனிதர்களையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.
 
தனிமையில் அழுவதற்கு சாத்தியமில்லையெனில் உறங்கும்போது மௌனமாக அழு. இறைவன் எங்கும் நிறைந்தவன் தூரிலும் இருப்பான், வாழைத்தாரிலும் இருப்பான், பாறையில் வாழும் தேரைக்கும் உணவு செல்கிறதே எப்படி ? இதுவும் அவனது செயலே... நீ மரணிக்க நினைத்தாலும் நடக்காது காரணம் அவன் அழைக்கும் நேரம் வரவேண்டும். அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பிழைத்தவரும் உண்டு, தரையில் புல் தடுக்கி விழுந்து மரணித்தவரும் உண்டு. இதுவும் அவன் செயலே...
 
ஒரு அகவையே நிரம்பிய குழந்தை சர்ப்பம் தீண்டி மரணிக்கிறது அது என்ன பாவம் செய்தது ? அதனுடைய கர்மாவைத் தீர்ப்பதற்கு, இந்தப் பாவிப்பயலால் இந்தப் பாதகத்தியின் வயிற்றில் ஜனித்து மருத்துவனின் பழைய கடனை தீர்த்து விட்டு தனது கர்மாவை முடித்துக் கொண்டு மீண்டும் இறைவனை நாடி விட்டது இதுவே அந்தக் குழந்தையின் கர்மா.
 
உனது கர்மா என்ன ?
 
ஆலோசித்துப்பார் மார்க்கம் கிடைக்கவில்லை எனில் தர்மம் செய்து பழகு, தர்மம் உன்னை தலை காக்கும். தலை என்றால் உனது தலையை அல்ல உனது தலைக்குள் தேவையற்ற கவலைகளை, கனங்களை நுழைய விடாமல் காக்கும் இதுவே அதன் பொருள். தர்மம் கேட்பவர்களை நேசிக்கா விட்டாலும் பரவாயில்லை வெறுக்காதே... அவர் இறைவனாககூட இருக்கலாம் உன்னை சோதிக்க வந்திருக்கலாம். மே பி ஆர் மே நாட் பி.
 
இறைவன் நேரடியாக வந்து உதவி செய்யவோ, உபத்திரவம் கொடுக்கவோ மாட்டார் உனது வாழ்வில் உனக்கு இதுவரை உதவியவர்களும், உபத்திரவம் கொடுத்தவர்களும் மனித ஜீவராசிகளே... உதவியவர்கள் நன்மையின் பாதையிலும், உபத்திரவம் செய்தவர்கள் தீமையின் பாதையிலும் அவர்களின் கர்மாவை கழிப்பதற்காக பயணிப்பவர்கள்.
 
நீ உனது கர்மாவை நல்வழியில் கடக்க இறுதிவரை முயற்சி, தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் இதை ஆத்மார்த்தமாக துளியும் ஐயமின்றி நம்பு. நிகழ்காலத்தில் இறைவனை உணர மட்டுமே இயலும் அதுவும் உனது தூய்மையான மனதால் மட்டுமே... உனது ஆத்மா பிரியும்போது சர்வ நிச்சயமாய் இறைவனை சந்தித்தே தீரவேண்டும். அன்று இறைவனை நீ கேள்வி கேட்கும் தகுதியோடு வாழ்ந்து மரணிக்க இன்றிலிருந்து முயற்சி. நீ நல்ல ஆத்மாவெனில் இறைவனை கேள்வி கேட்கலாம் காரணம் அங்கு பொய் பேசவே முடியாது.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
நம்ம பர்மா பஜாரில் கோல்மால் வேலை செய்து சம்பாரிக்கிறானே ரவி வர்மா மகன் தர்மா அவனும் கர்மாவை கழிக்கத்தான் பிறந்தானா ?
 
காணொளி

30 கருத்துகள்:


 1. கில்லர்ஜி போற போக்கில் பார்த்தால் வெகு சீக்கிரமே நீங்கள் ஞானியாவதறகான அறிகுறிகள் தென்படுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே அப்படியானால் அமெரிக்காவில் ஆசிரமம் அமைத்து விடலாமா ?

   நீக்கு
 2. பதிவில் காணப்படும் பல வரிகள் உண்மையானவை. நல்ல சிந்தனை. அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. மனதின் எண்ணங்களை விரிவாக சொன்னது நன்றாக உள்ளது. உண்மை.. கர்மாவின் பயன்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இதிலிருந்து தப்ப முடியாது. இறைவனே துணை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது விரிவான கருத்தை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 4. பதிவு மிக அருமை. யாரோ எழுதிய வாசகம் உண்மை. மனம் விட்டு பேசினால் மரண வலி கூட மரத்துபோகும் என்பது உண்மை.

  அது போல கஷ்டங்களை இறைவனிடம் மட்டும் சொல்ல வேண்டும் என்பதையும் ஆமோதிக்கிறேன். அவர் அளிக்கும் நல்லவைகளுக்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
  கர்ம வினை கழியவே சிலர் நமக்கு துன்பம் கொடுக்கிறார்கள். அவர்களையும் வாழ்க வளமுடன் என்று சொல்லி கடந்து விட முயல வேண்டும்.

  காணொளி நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பகைவனையும் வாழ்த்தும் தங்களது மனதுக்கு எமது வாழ்த்துகள்.

   எல்லோருக்கும் இது வராது.

   நீக்கு
 5. காணொளியை பார்த்தவுடன்" கலங்காது இரு மனமே! ஒரு போதும் அவனின்று ஒரு அணுவும் அசையாதே "பாடல் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 6. எழுதியிருப்பது உண்மை. நாம் செய்யும் வினைகள், சிலருக்கு நன்மை சிலருக்குத் தீமை என்றே அமையும். நாம் எந்த மனத்துடன் அதனைச் செய்தோம் என்பதுதான் வினையின் பயனைத் தீர்மானிக்கும்.

  காணொளி நன்று. பேசாம நீங்க பேசி காணொளி வெளியிட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.

   அந்த பெண்மணி பேசிய கருத்தை நான் பேசி வெளியிடுவது தவறாகுமே...

   நீக்கு
 7. அருமையான அனுபவ வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 8. எண்ணங்கள் அருமை...

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு

  பதிலளிநீக்கு
 9. சிந்தனையைத் தூண்டும் பதிவு

  பதிலளிநீக்கு
 10. தர்மாவின் குருமா என்று கண்ணில் பட்டது..

  பதிலளிநீக்கு
 11. ஆகச் சிறந்த பதிவு.. வேதங்களின் சாரம்.. இதை அன்றைய பெரியவர்கள் போகின்ற போக்கில் சொல்லிச் சென்றார்கள்.. ஊரும் உறவும் நன்றாக இருந்தன..

  இரண்டு தலைமுறைகளாக இதெல்லாம் மறக்கடிக்கப்பட்டதன் விளைவு எது எதுகளோ வந்து இன்றைக்கு ஆன்மீகத்தில் வகுப்பு எடுக்கின்றன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது மீள் வருகை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 12. சிறப்பான பதிவு. ஆரம்பத்தில் இருக்கும் அந்தப் பொன் மொழியை வேறே எங்கேயோ பார்த்த நினைவும் கூட. எங்கே? நீதி போதனை வகுப்புகளை இந்த அரசுகள் மாறி மாறி இருக்கும்வரை பள்ளிகளில் எதிர்பார்க்கவே முடியாது. ஆன்மிகம் தேவை இல்லை. பக்தி இருக்கலாமே. அதையும் கெடுக்கிறாங்க! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 13. நல்ல சிந்தனை பகிர்வு.
  ' நல்லதையே நினை' முயற்சிப்போம்.

  பதிலளிநீக்கு
 14. சூப்பர் கில்லர்ஜி!!!

  அது சரி எங்க நிலம் வாங்கிப் போட்டிருக்கீங்க....இல்லை தனித் தீவையே உங்க நாடா வாங்கிட்டீங்களா ஹிஹிஹி வேற ஒன்னுமில்ல....எங்க ஆசிரமம் அமைக்கலாம்னு யோசனை.......கில்லரானந்தா!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நாடு வாங்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லையே...

   நீக்கு