தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 25, 2024

தலைப்பு இலவசம்

 

டப்பேதியில ஓயிருவியலா... திரைப்படத்துக்கு தலைப்பு வைக்கணும்னா... தேவகோட்டை வாங்கடா.. பணமும் வேண்டாம், பெயரும் வேண்டாம் சமூகசேவைக்காக இலவசம்டா... நீங்களெல்லாம் படம் ஓடணும்னு நினைச்சுத்தான் படம் எடுக்கிறீங்களா ? இல்லை தயாரிப்பாளர் தலையில் துண்டை போடணும்னு பேசி வச்சுட்டு வாறீங்களாடா ? உங்களுக்கு கதையே எழுத வராதா ? அருபது ஆண்டு காலமாக அரைச்ச மாவையே வெட்கமே இல்லாமல் ஊற்றிக் காண்பிக்கிறீங்க... அதை வெட்கமே இல்லாமல்......
 
கதைக்கு தகுந்த தலைப்பும் இல்லை, தலைப்புக்கேற்ற கதையும் இல்லை. கசாநாயகனை உயர்த்திக்காட்டி அரசியல் வசனங்களை பேச விட்டு, விசலடிச்சான் குஞ்சுகளை கதற விட்டு, பதாகைகளுக்கு பாலூற்ற வைத்து, அவன் கீழே விழுந்து அவனது வீட்டில் இலவு ஆக்கி கதற விட்டு, இதற்கெல்லாம் கசாநாயகன் செலவு செய்வதுதானே முறை ? எல்லா செலவையும் தயாரிப்பாளர் தலையில் கட்டி, அவர் வீட்டை விற்று வட்டி கட்டி, கடைசியாக அவர் கோவணமும் கட்டி தெருவில் போவார்.
 
ஆனால் கசாநாயகன் பத்துப்பைசா செலவு செய்யாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து குடும்பத்து சொத்துகளை மேலும் ஏழு தலைமுறைகளுக்கு உயர்த்தி சேர்த்து பாதுகாக்கணும். இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் அறியாமை ரசிகர்கள் ? நல்ல திரைப்படத்தை பணத்தை செலவு செய்து வெளியிட்ட தயாரிப்பாளரை முதல்வராக வரவேண்டும் என்று எவனாவது கூவுகின்றானா ? அல்லது நல்ல கருத்தை படமாக்கி சமூகத்துக்கு தந்த இயக்குனரை எவனாவது முதல்வராக வரவேண்டும் என்று கூவுகின்றானா ?
 
பலநூறு தொழில் நுற்ப கலைஞர்கள் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் வெற்றி அடைகிறது. ஆனால் படம் வெற்றியடைந்தால் கசாநாயகனுக்கு மட்டும் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்கிறதே அது எப்படி ? மற்றவர்களுக்கு அதே அத்தக்கூலி. உங்கள் கசாநாயகன் நடந்து வரும் பொழுது ஒரு இசையை தெறிக்க விடுகின்றீர்களே... அவன் சாதாரணமாக சாலையில் நடந்து வரும் பொழுது சப்தமே வந்ததில்லையே ஏன் ? இசை இல்லை என்றால் திரைப்படமே இல்லையடா... அவர்கள்தான் முன்னோடி.
 
கில்லர்ஜி தேவகோட்டை 
 
Chivas Regal சிவசம்போ-
இவங்கே விரலை மடக்கும்போதுகூட விசுக்குனு சப்தம் கொடுக்குறாங்களே...

6 கருத்துகள்:

  1. ஹீரோக்களின் மிக அநியாய சம்பளம் குறைக்கப்பட வேண்டும். இந்த வழக்கம் மாற்றப்பட வேண்டும்.

    யார் சொல்வது? யார் கேட்பது?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் மன ஆதங்கம் புரிகிறது. உலகில் யார் யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதானே நடக்கும். நாம் வாங்கி வந்த வரத்தை மாற்ற முடியாதல்லவா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி, முதல்ல தயாரிப்பாளர் கதையைக் கேட்டு முடிவு எடுக்கணும். அவர் பணம் முதலீடு செய்வதால்....

    ஹீரோக்களின் சம்பளம் அளவுக்கு மீறி இருப்பது கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.. எல்லா தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்தால் நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா)... மலையாளத்தில் 1 லட்சம் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் தமிழ் படம் என்றால் 35 லட்சம்-55 லட்சம், என்று வாங்குகிறார்கள். அதை எப்படித் தடுப்பது?

      நீக்கு
  4. //படம் ஓடினால் கதாநாயகனுக்கு மாத்திரம் சம்பளம் உயர்வா?// இந்தக் கேள்வியில் நியாயம் இல்லை. படம் பெரும்பாலும் கதாநாயகனுக்காகவே பார்க்கப்படுகிறது, குறைந்த பட்சம் ஆரம்ப வாரத்தில். இதுபோலத்தானே கட்சியும்? எத்தனையோபேரின் உழைப்பில் தேர்தலில் வெற்றி பெற்றபிறகு ஒரு சிலர்தானே அறுவடை செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கேள்வி ஆனால் நாம் கேட்பதால் ஒன்று மாற போவது இல்லை.
    சினிமா கூட்டு முயற்சி ஆனால் முக்கியமான கதாநாய்கி, கதாநாயகர் மட்டுமே பலன் அடைகிறார்கள்.

    பதிலளிநீக்கு