வரவேற்பு பதாகை.
அன்பு நண்பர்களே...
நண்பிகளே... எல்லா பெருந்தலை பதிவர்களும் புதுக்கோட்டை பதிவர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து எழுதி விட்டார்கள் இருப்பினும் இந்தக் கத்துக்குட்டியும் எனது
பங்கு அழைப்பு விட வேண்டுமல்லவா ! ஆகவே இதை வித்தியாசமாக முளைக்கொட்டு பாட்டு
மாதிரி அழைப்பு விடுப்போமே.. என்று மனதில் தோன்ற
அப்படியே என் மனக்குறையும் வந்து விழுந்து விட்டது குறுக்கு கேள்வி கேட்பவர்களுக்கு
நீங்கள் வராமல் அபுதாபியில் உட்கார்ந்து கொண்டு அழைப்பு விடுவது முறையா ? எனக்கேட்டு விடாதீர்கள் நானே வர முடியவில்லையேனு வேதனையில்
இருக்கிறேன்.
(கனவிலாவது வந்து கலந்து கொல்வேன்)
மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான் மாளிகை
மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை போவோமடி
தன்னானே... னானே...
வலைப்பதிவர் மாநாடாம்
தில்லாலே... லேலோ...
பதிவர்களைக் காணலாமே
தன்னானே... னானே...
வலையைப்பற்றி வாதிடலாம்
தில்லாலே... லேலோ...
தொண்டைமான் கோட்டையடி
தன்னானே... னானே...
தொண்டு செய்யும் கூட்டமடி
தில்லாலே... லேலோ...
மனம் விட்டு பேசிடலாம்
தன்னானே... னானே...
மனக்குறையை போக்கிடலாம்
தில்லாலே... லேலோ...
புத்தகமும் வெளியீடாம்
தன்னானே... னானே...
புதுமையான திருவிழாவாம்
தில்லாலே... லேலோ...
கரந்தையாரின் புத்தகமாம்
தன்னானே... னானே...
கரகோஷம் செய்திடுவோம்
தில்லாலே... லேலோ...
முத்து நிலவர் தலைமையிலே
தன்னானே... னானே...
முத்து முத்தாய்
திட்டங்களாம் தில்லாலே... லேலோ...
எட்டுத் திக்கும்
ஒலிக்குதடி தன்னானே... னானே...
ஏட்டினிலே எழுத வைப்போம்
தில்லாலே... லேலோ...
அறிஞர்களின் கோட்டையடி
தன்னானே... னானே...
அறிந்திடலாம் அறிவுலகம்
தில்லாலே... லேலோ...
புலவர்களும், கவிஞர்களும்
தன்னானே... னானே...
புறப்பட்டாங்க புதுக்கோட்டை
தில்லாலே... லேலோ...
ஆரோக்கிய மாதா மன்றத்திலே
தன்னானே... னானே...
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம்
தில்லாலே... லேலோ...
மதிய விருந்தும்
இருக்குதடி தன்னானே... னானே...
மகிழ்ச்சியோடு
களித்திடலாம் தில்லாலே... லேலோ...
விழா சிறக்க வாழ்த்திடுவோம்
தன்னானே... னானே...
விசித்திரமாய் வியக்க
வைப்போம் தில்லாலே... லேலோ...
சந்தோஷமாய் கூடிடுவோம்
தன்னானே... னானே...
சரித்திரமும் பேச வைப்போம்
தில்லாலே... லேலோ...
ஆண்டுதோறும் நடத்திடுவோம் தன்னானே... னானே...
அடுத்து எங்கு
முடிவெடுப்போம் தில்லாலே... லேலோ...
தமிழ் வாழச் செய்திடுவோம்
தன்னானே... னானே...
தமிழர் என தலை நிமிர்வோம்
தில்லாலே... லேலோ...
அகிலமெல்லாம்
அழைப்புகளாம் தன்னானே... னானே...
அபுதாபிக்கும் வந்துருச்சே
தில்லாலே... லேலோ...
விரைந்து நானும் வந்திடவும்
தன்னானே... னானே...
விடுமுறைதான் கிடைக்கலையே
தில்லாலே... லேலோ...
புதுக்கோட்டை போவோமடி
தன்னானே... னானே...
வலைப்பதிவர் மாநாடாம்
தில்லாலே... லேலோ...
பதிவர்களைக் காணலாமே
தன்னானே... னானே...
வலையைப்பற்றி வாதிடலாம்
தில்லாலே... லேலோ...
தேவகோட்டை கில்லர்ஜி
அபுதாபி
(ஏதோ கவிதை மாதிரி நினைத்து எழுதினேன்)
மையத்தில் சொடுக்கி பெரிதாக காண்பீர்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இன்று தேதி11.09.2015 அடுத்த மாதம் இதே தேதியில் 11.10.2015
இலவச பேரூந்து வசதி.
முட்டை மாஸ்’’சுடன் அருசுவை
உணவு.
இடையே தேநீரும் உண்டு.
இயன்றவர் நிதி தாரீர்.
வழித்தடங்கள் அறிய அரியநாயகத்தை அழைக்க...
9876543210
நண்பர்களே... நண்பிகளே...
எனது சார்பாக எனது மகன் தமிழ்வாணன் அல்லது தங்கை மகன் விவேக் கலந்து கொள்வார்கள் இதைப் படித்த கையோடு கையேடு மற்றும் பணம் அனுப்புவதற்க்கான விபரங்களை கண்டு
தங்களது விடயங்களை அனுப்புவீரே... இணைப்பு இதோ...
என்னை சொடுக்குவீரே... பிறகு பணம் அனுப்புவீரே
https://www.youtube.com/watch?v=uUqs5TQ9FRs
அன்பு நெஞ்சங்களே நமது மரியாதைக்குறிய திரு. சுப்பு தாத்தா அவர்கள் உடனே இதைப்பாடி You Tube இணைத்து விட்டார்கள் அதையும் கேட்டு தாத்தாவுக்கு வாழ்த்து சொல்வீரே... இதோ இணைப்பு.
https://www.youtube.com/watch?v=uUqs5TQ9FRs
முத்துநிலவன் அய்யா கவனத்திற்கு ,
பதிலளிநீக்குவிழா மேடையில் இந்த பாட்டை பாடிட சொல்லலாமே :)
ஹா ஹ் ஹா வாங்க ஜி...
நீக்குடிக் டிக் டிக்
பதிலளிநீக்குடிக்கெட்டு
டில்லிக்கு ராசாவே
டிராவிட் போல் எடுத்தாயோ
கவி விக்கெட்டு!
வாழ்த்துகள் கில் கில் கில்லர்ஜி
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா ராக்கெட்டு போல வந்து விட்டீர்களே...
நீக்குஅருமை, வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவிழா சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஆகா
பதிலளிநீக்குதங்களின் கை வண்ணத்தில்
அருமையான பாட்டு நண்பரே
பாடிப் பாடி அழைத்திருக்கின்றீர்
நன்றி நண்பரே
தம +1
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குபுதுக்கோட்டைக்கு தாங்கள் வராவிட்டாலும் தங்களின் இப்பாடலைப் பற்றிப் பலர் பேசுவர். நன்றி.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரை சந்தோஷமளிக்கின்றது நன்றி
நீக்குஉங்களால் வெளி நாட்டிலிருப்பதால் வர இயலவில்லை. என்னால் உள் நாட்டில் இருந்தும் வேறொரு பணி காரணமாக கலந்துகொள்ள முடியாது. மாநாட்டைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள தெம்மாங்கு பாட்டை இரசித்தேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே எல்லோருக்கும் சூழ்நிலைகள் ஒருங்கே அமைவதில்லையே...
நீக்குவணக்கம் ஜி!!! அடடடா என்னமா பாடுரிங்க!!! அழகு!!! கண்டிப்பா மாநாடுக்கு போகனும்!!!!
பதிலளிநீக்குவாங்க நண்பா தங்களின் வருகைக்கு நன்றி ஒருபதிவு கடந்து விட்டதே...
நீக்குவிழா மேடையில் இந்தப் பாடலை பாடி விடுவோம் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி ரசிக்கும்படி இருந்தால் நல்லதே....
நீக்குதமிழ் வலைப்பதிவர் கையேட்டில் உங்களது பாடல் இடம்பெறப்போகிறது ... வாழ்த்துக்களுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் -ரேடியோ மார்கோனி.
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே... அப்படி நடந்தால் சந்தோஷமே...
நீக்குஅருமை அண்ணா....
பதிலளிநீக்குஅழகான தன்னானே... தில்லாலோவில் விவரம் சொல்லிட்டீங்க...
வாழ்த்துக்கள்.
நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஉற்சாகப் பாட்டு.. உல்லாசம் தான்..
பதிலளிநீக்குதில்லாலே பாட்டு.. சந்தோஷந்தான்!..
வாங்க ஜி பொழுது சாயவும் குவைத்துக்கு வர்றேன் அப்படியே நம்ம ஒட்டகத்தை தயார் செய்யுங்க இப்ப புறப்பட்டால்தான் விழாவுக்கு புதுக்கோட்டை போய் சேரலாம்.
நீக்குஅதைத் தான் ரெண்டு நாளா தேடிக்கிட்டு இருக்கேன்!..
நீக்குஏன் ? ஜி அவுத்தா விட்டு இருந்தீங்க ?
நீக்குநாந்தான் இன்னும் ஒட்டகம் வாங்கவே இல்லையே!..
நீக்குஅப்படீனாக்கா ? வேலைக்கு எப்படி போறீங்க ?
நீக்குஆஹா! சூப்பரான பாட்டு பாடி பதிவா்களை சந்திக்க வருகிறீா்கள் போல... வாங்க! வாங்க!
பதிலளிநீக்குவரமுடியவில்லை என்றாலும் அன்றைய தினம் அனைவா் மனமும் அங்கு தான் இருக்கும்.
பதிலளிநீக்குஉண்மைதான் சகோ வருகைக்கு நன்றி வரத்தான் இயலவில்லை பாடியாவது பார்ப்போம் (சுப்பு) தாத்தா மா3
நீக்குhttps://www.youtube.com/watch?v=uUqs5TQ9FRs
பதிலளிநீக்குyour song here.
நன்றி தாத்தா உடனே மேலே இணைப்பை இணைத்து விட்டேன்.
நீக்குஅழகான படங்களோடு அருமையான பாடல்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குகேட்டாலே நடுங்கவைக்கும் பெயரோன்
பதிலளிநீக்குபுதுக்கோட்டைப் பதிவர் மாநாடு பற்றி
பாட்டாலே அவிட்டாரே... கண்டியளோ!
காட்டினாரே பேரூந்து வழி
நீட்டுவார் சிற்றுண்டி எல்லாம் என
சாட்டினார் பாட்டாலே எல்லாம்...
வருக நண்பரே புதுமையாக கருத்தளித்தமைக்கு நன்றி
நீக்குபாட்டு அருமை சகோ, வருவதாக செய்தி வந்தது,,,,,,,,
பதிலளிநீக்குவாங்க வாங்க புதுக்கோட்டைக்கு,,,,
வாழ்த்துக்கள்.
வாங்க சகோ கண்டிப்பாக சந்திக்KALAM
நீக்குவாழ்த்துக்கள் பாடிய சுப்புத்தாத்தாவுக்கும்.... எழுதிய தங்களுக்கும்...
பதிலளிநீக்குதாத்தா சார்பாகவும் நன்றி நண்பரே...
நீக்குதமிழ்மணத்தில் வாக்கும் சேர்த்தாச்சு...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு விழாவுக்கான தீம் பாட்டாக தங்களது பாடலை மாற்றிவிடலாம் போல, விழாவில் நடைபெறப் போகும் அத்தனை நிகழ்வுகளையும் பாடலிலே சொல்லி அசத்திவிட்டீர்கள். அருமை நண்பரே!
பதிலளிநீக்குத ம +1
வருக நண்பரே என்னையும் நினைவில் வைத்து வருகை தந்தமைக்கு நன்றி...
நீக்கு6 பதிவுகள் கடந்து விட்டது இதில் தங்களைப்பற்றிய குறிப்புகள் 2 பதிவு
பாடியே பட்டையை கிளப்பீட்டீங்க சகோதரரே!
பதிலளிநீக்குஎன்னமாதிரி சொற்களெல்லாம் சோடனையோட
வரிசை கட்டி வந்திருக்கு..! அருமையோ அருமைதான்!
மனம் கவர்ந்த பாடல்!
உளமார்ந்த வாழ்த்து சகோதரரே!
த ம +1
வருக கவிஞரே பொய் சொல்ல மாட்டீர்கள் 80 எமது கருத்து வாழ்த்தியமைக்கு நன்றி தங்களின் என்.எஸ் கிருஷ்ணன் - டி.ஏ. மதுரமும் பாடியது போன்ற கவிதையும் கண்டேன் தங்களை வாழ்த்தும் பக்குவம் எமக்குப் போறா மிகவும் இரசித்தேன்.
நீக்குபட்டையை கிளப்பி பாட்டையும் தந்துவிட்டீர்கள் நண்பரே.......
பதிலளிநீக்குவருக நண்பரே நல்லவேளை பட்டையை ''கிளப்பினேன்'' என்று சொன்னார்கள்
நீக்குசாரி நண்பரே சொன்னீர்கள் 80சொன்னார்கள் என்று வந்து விட்டது
நீக்குதங்கள் பாணியில் அசத்தலான பதிவு
பதிலளிநீக்குஆமாம்
ஷோக்கா தேனீர் அருந்தும் இந்த
ஷேக்கு யாரு பாத்தா நம்ம ஊருக்காரர் மா3 தெரியலையே!!!
நண்பரே தாங்களாவது அவரைப்பற்றி கேட்டீர்களே... ஒருவேளை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையோ என்று நினைத்தேன் நன்றி
நீக்குஅடையாளம் தெரிந்து என்ன செய்யப்போகின்றோம் .. ஜி?..
நீக்குSuper Dust Tea.. குடிக்கிறதுக்கு தங்க ஸ்டிக்கானா!..
ஆனா பாருங்க.. தலைக்கயிறு மட்டும் கொஞ்சம் முரடா தெரியுது!..
ஆளும் முரடுதானே... ஜி
நீக்குஅருமை அருமை சகோதரா!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ
நீக்குநீங்கள் செல்லாவிட்டாலும் அங்கு ஒலிக்கப் போவது உங்கள் பாட்டுதான்!
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்குப் போகலாம் என்றே கைதட்டி கும்மியடித்து ஆடிப்பாடி அழைத்தது நன்றாக இரசிக்க வைத்தது பாடல். வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.
நன்றி.
த.ம.14.
வருக மணவையாரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குமுத்துநிலவன் ஐயா அவர்களின் குரல் மிக அழகாக இருக்கும் அவர் விசுவின் புத்தகவெளியீட்டு விழாவில் ஒரு 4 வரி தமிழ் பெருமை பற்றி பாடினார் அருமை....எனவே இந்தப் பாட்டையும் அவரே பாடிடலாம் அங்கு.....ஐயா எங்களுக்கு இதைப் பற்றித்தான் எழுதியிருந்தார். நாங்கள் ஐயாவிடமே சொல்லிவிட்டால் ஆச்சு....அருமை ஜி!!!
பதிலளிநீக்குவருக தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஅந்த மோதி ஷேக் என்ன ஷேக்கு குடிக்கிறாருங்கோ?!!!
பதிலளிநீக்குமோதிலால் நேரு பேரன் சுக்கு கசாயம் குடிக்கிறாரு...
நீக்குஅந்த அரியநாயகம் வய்சான கில்லர்ஜி மாம்ம்ம்ம்ம்திரிலா இருக்கு...ஹஹஹ்...அம்புட்டு பெரிசா மீசை....
பதிலளிநீக்குஹாஹாஹா அப்படியா இருக்கூகூகூகூகூகூகூ.....
நீக்குகருத்து போட பயமாயிருக்கு...!! என்னமா கலக்கிறீங்க. சூப்பர் அண்ணா ஜி. வாழ்த்துக்கள். கவலைப்படாதீங்க. பதிவர் விழா வேறு நடக்காமலா இருக்கபோகுது. அப்போ கலந்து ஜமாய்ங்க.!!
பதிலளிநீக்குவாங்க சகோ எதற்க்கு பயம் உள்ளதை உள்ளபடி சொன்னால் போதும் அடுத்த வருடம் கண்டிப்பாக கலந்து கொள்வேன் வருகைக்கு நன்றி
நீக்குபாட்டு அற்புதம் சகோ. விழா சிறக்க வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநன்றி சகோ வருகைக்கு.
நீக்குஎல்லாமே சரி ஜி. வலை பற்றி வாதிடலாம் என்பதுதான் இடிக்குது. பார்ப்பவரை எல்லாம் புகழ்ந்து தளுவோம் என்பதே சரி. இர்ண்டாவது சைவ உணவு என்றுதான் கேள்விப்பட்டேன் . அருமையான ஆக்கம்
பதிலளிநீக்குவலைப்பூவைப்பற்றி நிறைய பேசலாம் என்ற ரீதியில் எழுதினேன் ஐயா (அ)சைவமா ? பரவாயில்லை நான் சைவமும் சாப்பிடுவேன்
நீக்குவிழாவினைப் பற்றி அருமையான பாட்டுப் பாடி அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள் கில்லர்ஜி சார்!
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குவலைப்பதிவர்களுக்கான விழா பற்றிய பதிவு அழகு !( வண்ணப்படங்கள்) அருமை.(கவிதை)!..வாழ்த்துக்கள் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்களுக்கு...
பதிலளிநீக்குதங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே...
நீக்குஅருமையான பாடல்.எனக்கும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற கவலையுண்டு.
பதிலளிநீக்குவருக நண்பரே அடுத்த வருடம் போவோம்
நீக்குஆஹா...எ ன்னவொரு அழகான பாடலால் அழைப்பு... சந்தநயம் கொஞ்சுகிறது. பாராட்டுகள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி சகோ பாராட்டுகளுக்கு.
நீக்குஅய்யா பதிவு போட்டீர்கள்...பாட்டுப் போட்டீர்கள்...பணமும் போட்டீர்கள்.. அந்த விட்ஜெட் இணைப்பையும் உஙகள் தளத்தில் நிலையாக நிறுத்திப் போட்டிருக்கலாம்ல? நீங்கள் போட்டு வைப்பீர்கள் என்பதால் உங்களுக்கு எங்கள் முன்கூட்டிய நன்றி.
பதிலளிநீக்குமுயன்றுகொண்டுதான் இருக்கிறேன் அன்பர்களே... அவ்வளவு விஞ்ஞான அறிவு எனக்கு இருந்திருந்தால் இந்நேரம் மோடியுடன் மோதி ஆட்சியைப்பிடிச்சு இருப்பேன் இருப்பினும் எனது பதிவுகளில் இணைப்பைக் கொடுத்துக் கொண்டு வருவேன் வருகைக்கு நன்றி ஐயா.
நீக்குஆஹா! அசத்தலான பாடல் சகோ!
பதிலளிநீக்குவிடுமுறை கிடைக்கலையின்னா என்ன? உங்க பாட்டு புதுக்கோட்டை போயிடுச்சே.. புதுக்கோட்டை மட்டுமா, வலையுலகம் எல்லாம்!
வாழ்த்துகள் சகோ.
வாழ்த்துகளுக்கு நன்றி சகோ...
நீக்கு