தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 21, 2025

சுட்டிக்கு அகவை தினம்

Shivanya 

குறும்புக்கார 
குட்டிப்பயலுக்கு
குதூகலமான 
ஐந்தாம் அகவை
தின வாழ்த்துகள்.

எனது பெயர்த்தி ஷிவன்யாவை வாழ்த்துங்கள் நட்பூக்களே...

தேவகோட்டை கில்லர்ஜி துபாய்

தேவகோட்டை வீட்டில்....
(நெடுங்கால கனவு நனவானது)

மதுரையில்...

காணொளிகள்

இதம்பாடலில் ஷிவன்யா

இதம்பாடல் கோயிலில் பெயர்த்திகள்.

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் பேத்தி ஷிவன்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரின் வாழ்வில் பல சிறப்புக்களைப் பெற்று, நீடூழி வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    காணொளிகளை கண்டேன். உங்கள் நெடுநாளைய விருப்பம் நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள் இருவரும் உங்களுடன் பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்து உங்களை மகிழ்வாக வைத்திருந்தற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    இதம்பாடல் கோவில் அழகாக இருக்கிறது. குழந்தைகளின் தெய்வீக வழிபாடுகளை ரசித்தேன். குழந்தைகளுக்கு என் அன்பான ஆசிகள். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. ஐந்தாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அன்புப் பெயர்த்திக்கு அன்பான வாழ்த்துகள்.  வாழ்க பல்லாண்டு...  வாழி நலம்... 

    உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் தருகிறது   சந்தோஷம் ஒரு இன்பமான தொற்றுநோய்.

    பதிலளிநீக்கு
  3. பேத்திக்கு முதலில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
    ராதையாக , நேருவாக பார்கவே அழகாய் இருக்கிறார் .

    காணொளிகள் பார்த்தேன், பிரச்சனை என்றால் கை கொடுக்கும் சொந்தம் மிகவும் அருமை.
    அவர்கள் பேசுவது கேட்க நன்றாக இருக்கிறது.

    அடுத்து தாத்தா வழிகாட்ட பேத்திகளும் கோயிலை வலம் வருவதும் வீபூதியை எடுத்து பூசிக் கொள்வதும் உக்கி போடுவதும் அழகு.

    பேத்தி முன்னல்நடக்க தாத்தா பேசிக் கொண்டே பின்னால் போவது அருமை.
    இதம்பாடலில் மனதுக்கு இதமான உறவுகளுடன் பொழுது போனது மகிழ்ச்சி.
    நெடுங்கால கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. இந்த இனிய நினைவுகள் அடிக்கடி தொடரட்டும். குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களது பேத்திக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனியதாய் அமைந்திடட்டும். காணொளிகள் கண்டு மகிழ்ச்சி.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு