தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 29, 2019

மூஸாலி கோயில் (8)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

‘’ய்யோ... ஆத்தா...’’ சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு வடங்காடு கிராமமே எழுந்திருக்கும் அப்படியொரு அலறல் அவனது கயிற்றுக் கட்டிலுக்கு அருகில் பாயை விரித்து படுத்துக் கிடந்த அவனது ஆத்தா வீராயி திடுக்கிட்டு எழுந்து சிமிழி விளக்கை ஏற்றி விட்டு, ஏண்டா பேதியில போக பொழுது சாய்ஞ்சா கணாக் கண்டுக்கிட்டு கத்தி ஊரைக்கூட்டுறியே எருமை மாடு நல்லா பொழிகழுதை மாதிரி தின்னுப்புட்டு ஊரைச்சுத்துறியே... நான் காடு கரையில வேலை செஞ்சுட்டு வந்து ஒனக்கு கஞ்சி ஊத்துறேன்ல.. என்னைச் சொல்லணும் காலாகாலத்துல ஒனக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் நீ சரிப்பட்டு வருவே நாளைக்கே போறேன் வலசைக்காட்டுக்கு எந்தம்பி மக கோமளவள்ளிய பரிசம் போட...


ஏ... ஆத்தா யேன் இப்படிக் கத்துறே.. .? ஊரே வந்துரும் போல...
ஆமாடா நான் கத்துறதுதான் ஊரு கூடப்போகுது காத்தால எவ சண்டைக்கு வர்போறாளோ... அவளுகளோட நான் எலவு கூட்டணும்...

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே.. வெளிக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது வீராயி கேட்டாள் ஆரு ?
ஏத்தா, வீராயி ஓம்மயேன் செவமணி ய்யேன்... கத்துனான் நாங்க, பொண்ணு, பொடுசுக தூங்குறதா யென்ன ? பக்கத்தி வீட்டு பங்கஜத்தின் குரல் கேட்டது.
ஆத்தா ய்யேன் மயந்தேன் கனாக்கண்டுப்புட்டு கத்திட்டான்.

ஓம்மயனுக்கு வேற வேலக்கழுதையில்ல... கொங்காப் பயவில்லை நாளைப்பின்னே கத்தினான் ய்யேன் வீட்டுப்பக்கம் வரட்டும் காப்பித் தண்ணியிலே அரளி வெதையை நச்சுப்போட்டு குடுக்குறேன்.. கத்தி விட்டு போய் விட்டாள் பங்கஜம்.
பாத்தீயா... எப்பவோ போய்ச் சேந்த நொப்பனை திட்டிட்டு போறா பொழுதன்னைக்கும் நீ இப்படியே கனாக்கண்டுக்கிட்டு இருந்தா... பொழப்பு ?
ஆத்தா ஓவ்வாயை மூடு காலையிலே பேசிக்கிடலாம்..


இப்படித்தானடா... தெனம் சொல்லுறே... பாவி பறப்பான்... நாளைக்குப் போறேன் ய்யேன் தம்பி வீட்டுக்கு..
இஞ்சே பாரு ஓந்தம்பி மக கோமளவள்ளியெ நான் கட்டமாட்டேன்.
ய்யேன் இந்த துப்பக்கெட்ட மூஞ்சிக்கு அவ போதாது... அவளைக் கட்டிக்கிட்டு டவுனுக்குப் போயி எப்படியோ பொழைச்சுக்க... நான் வடங்காட்டுலயே கெடந்து வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாகுறேன்.
மொதல்லே தூங்கு என்று ஆத்தாவை அதட்டி விட்டு போர்வையை போர்த்திக்கொண்டு உறங்கினான் சிவமணி மறு கனவைக்காண...

வீராயி மறுநாள் காலை முதல் வேலையாக வலசைக்காட்டுக்குப் போயி தம்பி மகள் கோமளவள்ளியை பரிசம் போட்டு அடுத்த முகூர்த்தத்தில் நாள் குறிக்க சிவமணி – கோமளவள்ளி திருமணம் வடங்காடு ஜனங்கள் கூடி வாழ்த்த கோலாகலமாக நடைபெற்றது அவனது நண்பன் தவசி மனைவி (From Uganda) மல்கோத்ராவுடன் வந்து வாழ்த்தினான். கில்லர்ஜி திருமணத்தில் கலந்து கொள்ள. அவரிடம் தவசி தனது மனைவியை அறிமுகப்படுத்த கில்லர்ஜியும், மல்கோத்ராவும் வெகுநேரம் உகாண்டி மொழியில் பேசிக் குழாவிக்கொண்டு இருந்தனர். 

மூஸாலி அடுத்த வருஷம் யேங் கையிலே ஒரு பேரப்புள்ளையை கொடுத்துரு என்று மலையிலிருக்கும் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு காசு முடிந்து வைத்தாள் சிவமணி ஆத்தாள் வீராயி.

சுபம்
நீங்களும் மணமக்களை வாழ்த்தி விட்டு விருந்துண்டு போகலாமே ?

காணொளி

49 கருத்துகள்:

 1. இரண்டாம் பகுதியில் புதையல் தேடி போவதை கணித்து கருத்துரை தந்த அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கும்,

  பதிவின் இரண்டாம் பகுதியிலேயே இது கனவுவாக இருக்கலாம் என்று கணித்து சொன்ன நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கும்,

  மூன்றாம் பகுதியில் இதையே வழியுறுத்திய ஐயா திரு .டி.பி.ஆர். ஜோசப் அவர்களுக்கும்,

  இதற்கே ஆசைப்பட்ட நண்பர் திரு. குமார் ராஜசேகர் அவர்களுக்கும்,

  ஐந்தாவது பகுதியில் இது சிவமணியின் கனவாக இருக்கும் என்று சொன்ன திரு. தில்லை அகத்து திருமதி. கீதா அவர்களுக்கும்,

  ஆறாவது பகுதியில் இது கனவாக இருக்குமோ என்ற தில்லை அகத்து திரு. துளசிதரன் அவர்களுக்கும்,

  ஆறாவது பகுதியில் இதையே ஆமோதித்த திருமதி. கீதா  சாம்பசிவம் அவர்களுக்கும்,

  வாழ்த்துகள் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோஓஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீதான் 1ச்ட்டூஊஊ:)...
   நல்லவேளை ஜாமீ மீ எதுவும் ஜொள்ளள்ள:)... சொல்லியிருந்தா எனக்கும் “ வாத்துக்கால்” கிடைச்சிருக்கும்:) நேக்கு வாணாம் மீ டைவம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)...

   நீக்கு
  2. கில்லர்ஜி.... பதிவு முடிந்த பிறகு எல்லாப் பதிவுகளையும் படித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கீங்க.

   1. நீங்க உங்க திறமைனால கிராபிக்ஸ் செய்து போட்டிருந்த படங்கள் அனைத்தும் (அல்லது தேர்ந்தெடுத்த படங்கள்) மிக அருமை. அதிலும் முதல் பாகத்திலேயே மரம் என்னைக் கவர்ந்தது.

   2. 'தேவகோட்டை' என்று இடையில் சொல்லும்போதே, கதையின் அந்த மர்மம் கொஞ்சம் விலகிடுது.

   3. சுற்றிவர பெண்கள் இருந்தாங்கன்னு சொல்லி போன தொடர் வரை ஒரு பெண் படம் கூட போடலை. அதையும் கொஞ்சம் கிராபிக்ஸ் செய்து போட்டிருக்கணும்.

   நான் தொடர்கதை என்று நினைத்ததாலேயே படிக்க ஆரம்பிக்கலை. நல்லா எழுதியிருக்கீங்க.

   காணொளி இப்போ பார்த்த பிறகு எழுதறேன்.

   நீக்கு
  3. வருக நண்பரே இந்த தொடரின் முடிவில் நீங்கள் வருவீர்கள் என்று எதிர் பார்த்தது போலவே வந்து விட்டீர்கள். முதலில் நன்றி.

   "அந்த" வகையான பெண்கள் படம் அமையவேயில்லை.

   தேவகோட்டை வந்தது பதிவை முடிக்கும் தருவாயில்தான்.

   தொடர்கதை என்றதால் முடிவில்தான் படித்து கருத்துரை இடவேண்டுமென்ற உங்களது கொள்கை எனக்கு பிடிக்கவில்லை.

   மேலும் உங்களைப் போலவே எல்லோருமே நினைத்து விட்டால் நான் கருத்துரை பெட்டியை வாடகைக்கு எடுத்து வைத்து இருக்கிறேனே... அதற்கு வெட்டியாக வாடகை கொடுப்பது யார் அதிராவா ?

   அடுத்து அத்தி வரதர் விடைபெறும் நேரத்தில் நான் தொடரை தொடங்கினேன் ஒருவேளை அத்தி அடுத்த விசிட் வரும்வரை (2059) தொடரை இழுத்து இருந்தால் ???

   நீங்களும் அத்தி வரதரோடு 2059-ல் வந்துதான் கருத்துரை தருவீர்களோ ?

   நீக்கு
  4. தொடர்கதை என்பதால் நான் பொதுவா முடிந்த பிறகுதான் படிப்பேன். நான் படித்துவிட்டேன் என்பதனால் இங்கு கருத்துரைகள்.

   மெதுவா அந்த அந்தப் பகுதிக்கும் எழுதுவேன். ஹா ஹா

   /வெட்டியாக வாடகை கொடுப்பது அதிராவா// - இவ்வளவு அனுபவம் இருக்கு உங்களுக்கு. பெண்கள் எப்போதாவது பைசா செலவழிப்பாங்களா? செலவு என்றாலே அது ஆணின் வேலை என்று நகர்ந்துவிடுவாங்க. அதிரா மட்டும் என்ன வித்தியாசமாகவா இருப்பாங்க?

   நீக்கு
  5. //அதிரா மட்டும் என்ன வித்தியாசமாகவா இருப்பாங்க ?//

   நீங்களே தடுத்து விடுவீர்கள் போலயே...

   நீக்கு
 2. என்ன இது இம்முறை டேவடைப் பாடையைக் காணம்:)....

  முடிஞ்சிடுச்சா?:).. கல்யாண வீடியோ ஆரு பெத்த பிள்ளையோ:)...
  அந்த சாப்பிடும் வீடியோ நீங்கதானே முன்பும் போட்டீங்க... பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது பாடை இல்லை பாடை எனச் சொன்னேன் டை ஆச்சு கர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  2. ஹையோ ஆண்டவா மொபைல் ரைப்பிங் திரும்பவும் தப்பு ... அது பாசை எனச் சொன்னேன்

   நீக்கு
  3. அதிரா இதுவரை பதிவை படிக்கவில்லையோ ஆனால் காணொளி கண்டு இருக்கின்றீர்கள்
   என்பது உறுதி.

   இன்று முதல் அதிரா
   "பாசையை, பாடையேற்றிய பாவை" என்று அம்போடு அழைக்கப்படுவார்.

   நீக்கு
  4. கடசி மூன்று பகுதிகள் மட்டும்தானே நான் படிச்சேன்ன்.. நான் போஸ்ட் படிச்சால்.. அதில் என் கொமெண்ட் இருக்கும்:).

   முதல் பாகங்கள் ஹொலிடே மூட் இல் போய் விட்டதே:))..

   ஹா ஹா ஹா நேக்கு அந்தப் பாடைப்பட்டம்:)) வாணாம்ம் நீங்க அந்த டேவடைக்கே குடுத்திடுங்கோ:))

   நீக்கு
  5. நான் சொன்னது இப்பதிவை முழுமையாக படிக்கவில்லை என்பதே...

   நீக்கு
 3. நல்ல நல்முத்தாய்ப்பு நண்பரே.நனவை கனவாகியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அட, கனவென்று முடித்து விட்டீர்களே.... இன்னும் சுவாரஸ்யம் எதிர்பார்த்தேனே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தேவதை சிவமணி கழுத்துல போடாமல் இருந்திருந்தால் இன்னும் இழுத்து இருக்கலாம்.

   நீக்கு
 5. அந்தக் காணொளி முன்னரே கண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. கதையை கனவாக்கி விட்டீர்கள்.
  புதையலை தேடி போவது போல் அமைத்து ஏமாற்றி விட்டீர்கள்.
  கனவால் வ்லசைக்காட்டு கோமள்வள்ளியுடன் சடுதியில் கல்யாணம் ஆச்சு.
  காணொளியில் சாப்பிடுவது போல் சாப்பிட்டால் அவர் வயிறு என்னாவது ! அதை இப்படி காணொளி ஆக்கினால் அவருக்கு வயிறு வலிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆமாம் கனவே கல்யாணத்துக்கு வழி அமைத்தது.

   அந்த ஆளு இப்பொழுது முன்பைவிட கூடுதல் உண்ணுகிறானாம்.

   நீக்கு
 7. நினைத்த்படி கனவு தான். வேறு விதமாக முடித்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது....

  மல்கோ(ஹோ)த்ரா - உகாண்டாவில் செட்டில் ஆன பஞ்சாபி பெண்ணோ? :) பஞ்சாபிகள் தான் மல்ஹோத்ரா என்ற கடைசி பெயர் வைத்துக் கொள்வார்கள்.

  சாப்பிடும் காணொளி முன்னர் பார்த்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் மல்கோத்ரா இந்திய வம்சா வழியினர்தான் உகாண்டாவுக்கு விசிட்டிங் போன தவசி மல்கோத்ராவை ப்ராக்கெட் போட்டு வடங்காடு கொண்டு வந்து விட்டான்.

   நீக்கு
 8. விருந்தென்ன விருந்து...நீங்கள் கொடுக்கும் விருந்து இந்த ‘விறு விறு’ மர்மக்கதைக்கு ஈடாகாது.

  மணமக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் என் வாழ்த்துகள்; பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 9. அப்பாடா சுபமாக முடித்து விட்டீர்கள் ஜி...!

  காணொளி முன்பே பார்த்தது என்றாலும், உருட்டலை காண முடியும் அளவிற்கு, ஒரு நொடியில் காணாமல் போய் விடுகிறது...! ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அவன்தான் மலை முழுங்கி மலையப்பன் ஆயிற்றே...

   நீக்கு
 10. கனவாத்தான் இருக்கும்னு தெரிஞ்சாலும் அதை கொண்டு சென்ற விதம் அருமை. கடைசியில அந்த வீடியோ. சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா கதையை தொடக்கம் முதலே ரசித்து வந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 11. அனைத்தையும் ஏற்கிறேன். ஆனால் வீராயின் புகைப்படத்தைதான் என்னால் ஏற்கமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி... ஹா... ஹா... வருக முனைவரே
   தங்களது கேள்விக்கு பதில் சொல்வது கடினமாகி விட்டதே...

   நீக்கு
  2. முனைவரின் பதில் கண்டு, இவ்வளவு ஹாஸ்யமாகவும் எழுதுவீர்களா என்று ஆச்சர்யப்பட்டேன்.

   நீக்கு
 12. ஹாஹா, முதல் இரண்டு பகுதிகளிலேயே கனவாக இருக்குமோ எனத் தான் தோன்றியது. என்றாலும் அடுத்தடுத்துப் படித்த பின்னரே உறுதியானது. எப்படியோ மாமன் மகள் கோமளவள்ளியை மறுப்புச் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டாரே, அதுக்கு வாழ்த்தணும். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகள். ஆசிகள், பிரார்த்தனைகள். காணொளியைப் பின்னர் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது யூகத்துக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 13. எனக்கும் கனவு நிகழ்ச்சிகள் கதை செய்யும் வழக்கம் உண்டு ஆனால் எனக்கு எல்லாம் சாத்வீகக் கனவுகள் தான் வருகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நான் கதையில் சொன்ன நிகழ்வுகள் நடக்க சாத்தியமில்லை ஆகவே கனவு என்று சொல்லி முடித்து விட்டேன்.

   நீக்கு
 14. சாப்பிடும் காணொளி இதற்காகவே எடுக்கப்பட்டதோ? இப்படி எல்லாம் சாப்பிட முடியுமா? ஆனால் திரைப்படங்களிலும் நெடுந்தொடர்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் காட்டப்படும் இம்மாதிரிக் காட்சிகள் வெறுப்பையே உண்டு பண்ணுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி கண்டமைக்கு நன்றி.
   அவர் இப்படி சாப்பிட முடிகிறதே இதுவே அரிய விசயம்தானே...

   நீக்கு
  2. கீசா மேடம்... கேரளாவில், ஒரு சாப்பாடு இவ்வளவு ரூபாய்தான் அன்லிமிடெட் என்று விளம்பரப்படுத்தி (ரப்பாய் என்று பெயர்னு நினைக்கிறேன்), அந்த ஹோட்டலுக்கு ரப்பாய் என்பவர் போய், சட்டி சட்டியாக சாதம் சாப்பிட்டு, செய்த சாதம் அனைத்தும் வேகமாக காலியாவதைப் பார்த்து, ஹோட்டல்லேர்ந்து வெளியே போகச்சொன்னார்கள். அவர் நேரா போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்கவும். ரப்பாயின் புகழை அறிந்து (அதாவது சாப்பிடுவதில் எமகாதகர் என்பதை அறிந்து) அவரிடம் சமாதானம் பேசி, தினமும் இலவச உணவு அந்த ஹோட்டல்லயே சாப்பிட்டுக்கொள்ளலாம் (கொஞ்சம் அளவாக) என்று சொன்னார்களாம்.

   நான் ஒரு பந்தியில் எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த ஒல்லி ஆசாமி (என்னில் பாதி சைஸ் ஹா ஹா) 8 மைசூர் பாக்குகளை சாப்பிட்டதைப் பார்த்து அசந்து போயிட்டேன். எனக்குத் தெரிந்து நிறைய ஒல்லிக்குச்சிகள், சாதத்தில் பாத்தி கட்டி, குழம்பு ஊற்றி மலையைப்போல் குழைத்து அடிப்பார்கள்.

   நீக்கு
  3. ஹா.. ஹா.. இப்படி ஆசாமிகள் நிறைய உண்டு நண்பரே...

   அபுதாபியில் நண்பர் ஒருவர் கம்பெனி மெஸ்ஸில் சாப்பிடுவோம் புளிக்குழம்புகூட பாத்தி கட்டி அடிப்பார்.

   நீக்கு
 15. எல்லாம் கனவாக இருந்ததால் சிவமணி தப்பித்தாலும், திருமண பந்தத்திலிருந்து தப்பிக்க இயலவில்லை போலும். சிவமணி - கோமளவள்ளி திருமண விழாவிற்கு வந்து வாழ்த்தியிருந்தாலும் காணொளி(லி) யில் உள்ளவர் சாப்பிடுவதைப் பார்த்ததும், மற்றவர்கள் விருந்துண்ண ஒன்றும் இருந்திருக்காது போல் தெரிகிறதே.

  அது சரி கில்லர்ஜிக்கு தெரியாத மொழியே ஒன்றும் இல்லை போல! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் நன்றி.

   நீக்கு
 16. காணொளி பார்த்தேன். எனக்கு சிரிப்பெல்லாம் வரலை. கடவுள் அவருக்கு நல்ல செரிக்கும் வயிற்றைக் கொடுத்திருக்கிறார் என்று மனதில் மகிழ்ச்சியாத்தான் இருந்தது. அவர் நல்லா இருக்கட்டும்.

  என்ன ஒண்ணு... சமையல்காரர்ட இத்தனை பேர் விருந்துக்கு வருவாங்கன்னு சொல்லும்போது, இவரை ஒருவராக கணக்கில் எடுப்பதா இல்லை எத்தனை பேராக கணக்கில் எடுப்பது என்பதில்தான் பிரச்சனை வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இதெல்லாம் கடவுள் கொடுத்த வரமே...

   இவருக்கு குத்து மதிப்பாக எட்டு பேர் கணக்கு எடுக்க வேண்டியதுதான்.

   நீக்கு
 17. என்னமோ.. நடக்கட்டும்!...

  குலை நடுங்குற மாதிரி படத்தையெல்லாம் போட்டு - கடசியில
  உங்களுக்குக் கொஞ்சமும் புடிக்காத சினிமாக்காரங்க பாணியில

  இதெல்லாம் கனவு தான்.. கண்டு ரசிச்சுப் போட்டு கல்யாணச் சாப்பாட்டை
  அவங்க அவங்க வூட்ட்லயே சாப்புட்டுக்கோங்க...ன்னு
  கடுக்காய் கொடுத்துட்டீங்களே!...

  இது நல்லாருக்கா!?...

  அந்த மூஸாலி வேற
  மூளை குருமா, மூட்டுக்கால் சூப், ஈரல் வறுவல், நெஞ்செலும்பு புரட்டல்..
  தொடைக்கறியில அரேபியன் ஷவர்மா (Shawarma)... இதெல்லாம் எப்போ வரும்..ன்னு காத்துக்கிட்டு இருக்குதாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   பதிவை முடிக்கிறதுக்கு வேறவழி அதான் கனவு போல முடிச்சாச்சு.

   நீங்க அரேபியன் ரேஞ்சுக்கு அடுக்கிகொண்டே போறீங்களே...

   நீக்கு
 18. ..நான் வருவதற்குள் முடிந்துவிட்டதா??? அப்பநான் பெயிலா...??????

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  மர்ம கதை இப்படியாக விட்டதே... என்று சிறிது வருத்தம் வந்தது. இறுதிப்பகுதி கனவென்று கூறி எங்களை விழித்துக் கொள்ள வைத்து விட்டீர்கள். எனினும் சிவமணி மாமன் மகளை மறுப்பேதும் சொல்லாமல் மணந்து கொண்டது சந்தோஷமே..! ஆனால் மர்ம கதையில் படங்களின் தேர்வுகளுக்கு ஆங்கில படங்களின் ரீதியில் முயற்சி செய்திருந்தீர்கள். கதையும் அதே மாதிரி திகில் நிரம்பியதாக மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருந்தது. அதற்கு மறுபடியும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  இந்த கவளச் சாப்பாடு காட்சி ஏற்கனவே தங்கள் பதிவில் பார்த்திருந்தாலும், இங்கும் மிகவும் ரசிக்கும்படியாக பொருந்தி வந்துள்ளது. மிகவும் அழகாக உருட்டி உருட்டி விருப்பமாய் சாப்பிடுகிறார். வாழ்க அவர் உடல்நலம்! என வாழ்த்தவும் தோன்றுகிறது. இந்த காலத்தில் இப்படி யார் அரிசி சாப்பாட்டை விரும்பி உண்ணுகின்றனர். பீட்சா, பர்கர் என்று வாயில் நுழையாத பெயருடைய உணவை வாய்க்குள் நுழைக்க முடியாமல் சிரமப்பட்டு கடித்து சாப்பிடுவதே இன்றைய நாகரீகமாகி விட்டது.

  கதையின் தீடிரென திரும்பிய திருப்பம் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை விரிவாக ரசித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு