தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 22, 2024

இருள் முகங்கள்

 

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இது உ.பி.யில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல இடங்களிலும் இப்படி கணவன் – மனைவிகள் போலியாக வாழ்க்கின்றார்கள். இது விஞ்ஞான வளர்ச்சியால் நமக்கு கிடைத்த சாபக்கேடு. எனக்கு நீ துரோகம் செய்தால் உனக்கு நான் செய்வேன். குட்டு உடைபட்டு விட்டதா ? பரவாயில்லை அமைதியாக நீ உன் வழியில் போ, நான் என் வழியில் போகிறேன்.
 
ஒரு தமிழ்ப்படத்தில் நகைச்சுவை இருக்கிறது முதலிரவு காட்சி கணவன் ஏதோ நினைவில் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து கொடுக்க, மனைவியும் ஏதோ நினைவில் பணத்தை வாங்கி ஜாக்கெட்டினுள் திணிப்பாள். பிறகுதான இருவரும் சுயநினைவுக்கு வருவார்கள். அந்த ஏதோ நினைவு என்னவென்று விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இக்காட்சியை சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே அபுதாபியில் மலையாளப்படம் ஒன்றில் பார்த்து விட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இக்காட்சி இழிவாக இருப்பினும் சமூகத்தில் நிகழும் உண்மையைத்தான் விவரிக்கிறது இல்லையா ? இதற்கு ஆண்-பெண் இருபாலரும் வெட்கப்பட வேண்டும். இதோ மேலேயுள்ள விடயங்களும் இதைத்தானே சொல்கிறது. ஒழுக்கம் என்பது நமக்கு போதிக்கப்படவில்லை காரணம் இது இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது பிறகு யார் போதிப்பது ? இணையம் நமக்கு இப்படியான இழிவான சிந்தனையை தருகிறது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பதும், மண்ணானாலும் மனைவி, துரும்பானாலும் துணைவி போன்ற போதனைகள் நமக்கு நினைவை விட்டு விலகி விட்டது.
 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற சொல்லுக்கு மதிப்பு இல்லை. பெரியோர்களை உதாசீனப்படுத்தியதின் பாவம் நமது சந்ததிகளை ஆட்டிப்படைக்கிறது இது இன்னும் இழிவாகும் என்பதில் ஐயமில்லை. அயல் நாட்டு கலாச்சாரங்களுக்கு நாம் மயங்கியதின் விளைவு. அவன் செய்கின்றான் என்பதற்காக நாமும் செய்வோம் என்ற மெத்ததனப்போக்கு அவன் மது அருந்தினான் என்பதற்காக அவனோடு போட்டி போட்டு நாமும்... அவனது நாட்டின் சீதோஷன நிலை குளிர் அதை விரட்டுவதற்கு இறுக்கமான உடையணிந்தான், சிறிய அவுன்ஸ் அளவில் மதுவை சூப்பினான்.
 
நாம் கந்தக பூமியில் பிறந்தவர்கள் என்பதை மறந்து அவனுக்கு போட்டியாக ஜீன்ஸ் பேண்ட் அணிவது நமக்கு காற்றோற்றமான வேட்டிதான் சரியான உடை என்பதை நமது முன்னோர் தீர்மானித்துதான் உடையணிந்தார்கள். கந்தக பூமியில் இருக்கும் நாம் அவனோடு போட்டி போட்டு மதுவை அவனைப் போல் சூப்புவதும் இல்லை, உணவு அருந்துவதும் இல்லை.
 
திறந்த பாட்டிலை முடித்தால்தான் நிம்மதி அதற்கு தகுந்த உணவையும் உட்கொள்வதில்லை. காரணம் பணம் இல்லை. இந்த நிலை நீடித்து அவனைப்போல் பிறர் மனை நோக்கி மனம் அல்லோலப்பட்டு இப்படி போலியான முகவரி, போலியான படங்கள் கொடுத்து. நேரில் சந்திக்கும் பொழுது உண்மையான கணவன்–மனைவி. வீட்டில் முக்தில் முகம் பார்க்கலாம் என்று பாடியவர்கள் இன்று ? ? ? சம்போ மஹாதேவா
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
இந்நிலை மாற மதத்தை மறக்கணும், இல்லை அதனுள் கட்டுப்படணும்.
 
Chivas Regal சிவசம்போ-
வாய்ச்சவங்களுக்கு வாசமுல்லை, வாய்க்காட்டினா மோசமில்லை.

3 கருத்துகள்:

  1. மாற்றம் தேடுகிறார்கள் போலும்....  எதில் மாற்றம் தேடுவது என்கிற விவஸ்தை இல்லாமல்...

    பதிலளிநீக்கு
  2. அது சரி, கடந்த இரண்டு நாட்களில் சென்னை கடற்கரையில் நடந்த அமர்க்களம் படித்தீர்களா?  ஒரு ஜோடி போலீசை ஆபாசமாக, அநாகரீகமாக பேசி வெளியான வீடியோ...  அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் மன்னிப்பு கேட்கும் விடியோவும் வெளியானது.  காவலர்கள் பிடித்து லாடம் கட்டியபின்!  

    இதில் ஹைலைட் என்ன என்றால் அவருடன் கூத்து கட்டிய பெண்மணி அவர் மனைவி அல்ல.  வேறொருவர் மனைவி!

    பதிலளிநீக்கு
  3. இருள் முகங்கள் தலைப்பு, முதல் பட செய்தி மற்றும் பகிர்ந்த செய்திகள் கவலை அளிக்கிறது.
    அல்லவை மறைந்து நல்லது நடக்க வேண்டும். நல்லதை மக்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு