தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

மூஸாலி கோயில் (5)



முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

சிவமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசைந்து அசைந்து அவனருகில் வந்தது அவனுக்கு முன்புறம் நின்று வானத்தை நோக்கி யானையைப் போன்றே பிளிர அந்த உருவத்துக்குப் பின்னால் வெள்ளையாக ஒளிவட்டம் சிவமணிக்கு சர்வநாடியும் ஒடுங்கி விட்டது அருகில் அவனின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தது


தலைவன் கத்தினான்
முள்வாசி படாக்கோ...

உடனே.. இரண்டு சீடர்கள் பக்கதில் கட்டையில் தலையை சாய்த்து கிடந்த அந்த ஆடோ, நாயோ அதைத்தூக்கி வந்து அதன் பக்கத்தில் கிடத்தி தலையை வடக்கு திசையை நோக்கி திருப்பினார்கள் அந்த உருவம் பிளிரிக்கொண்டு இரண்டு கை விரல்களையும் அதன் வயிற்றின் அடிப்பாகத்தில் நுழைத்துக் கிழித்துக்கொண்டு ’’ஜளப்’’ ’’சழப்’’ ’’ஸலப்’’ ’’ஷழப் என்று சப்தத்துடன் குருதியைக் குடித்தது இப்பொழுது அந்த ஆட்டில் உடல் துடித்து அசைவதைக் காணமுடிந்தது உயிர் இருக்கின்றது... நிமிர்ந்து சிவமணியைப் பார்த்தது அதனது முகம் குருதியால் வடிய நரகாசுரன் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் அது இப்படித்தான் இருக்குமோ.. கடவுளே பயத்தால் உடல் நடுங்கி கண்களை இறுக மூடிக்கொண்டான் திடீரென வினோதமான சப்தம் கேட்டு விழித்தான்.

’’ப்புளிச்’’


சட்டீரென அவனது முகத்தில் குருதியை உமிழ்ந்தது அந்த உருவம் முகம் முழுவதும் பிசுபிசுவென குருதியின் வாடை குமட்டிக்கொண்டு வர, வாயைத் திறந்து கத்தக்கூட முடியவில்லை

குருதியை உமிழ்ந்ததும் அதன் உருவம் எழுந்து நின்றதும் உடல் கூனிக்குறுகி மீண்டும் அந்த குகை மண்டபத்தை நோக்கி நடந்து போனது சிவமணிக்கு போன உயிர் மீண்டும் வந்தது போல் இருந்தது அப்பாடா நம்மை விட்டுவாங்களோ... மனதில் கொஞ்சம் நிம்மதி வரும்போதுதான் உணர்ந்தான் அவனது தலைமாட்டுக்கு அருகிலிருந்து தொடங்கியது பிளவு ஆம் பூமியை மெதுவாக பிளந்து கொண்டு மண்ணுக்குள்ளிருந்து எழுந்தது அந்த உருவம் முழுவதும் வெளியே வரவில்லை தலை முதலில் வந்தது பிறகு ஒரு கை வெளியே வர அடுத்த கையை தலையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு உருண்டையான மொட்டை தலையுடன் உருண்டை விழிகளை உருட்டிப் பார்த்தது மொத்தமே மண்ணால் செய்த உருவமே கை விரலில் இருந்த மண் வளையத்தை உருவி சிவமணியின் தலையின் வழியே கோர்த்து அவனது வயிற்றுப் பகுதியில் நிறுத்தியது பிறகு தனது உடலில் இருந்து மண்ணை சுரண்டி அவன்மீது தூவி விட்டு, சிவமணியின் காதருகே....


ஜோஸி... முஸூங்கீ...
என்று மெதுவாக சொல்லி விட்டு மீண்டும் மண்ணுக்குள் கிழிறங்கி மறையவும் தலைவன் கத்தினான்.

ஜட கோண்டியா...
சப்தத்தின் ஒலி கேட்டு மீண்டும் மயக்கத்திற்கு போனான் சிவமணி.
   
தொடரும்....

45 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ பூஸோ கொக்கோ?:)).. வேறு யாரையாவது மாஃபியா போபியா செய்து 1ஸ்ட்டா கில்லர்ஜி வெளியிட்டாரோ அவ்ளோதேன்ன்ன்.. மூஸாலி கோயிலுக்கு அனுப்புவோம் கில்லர்ஜியை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...
      என்னையே மூஸாலி கோயிலுக்கு அனுப்மிடுவோம்னு சொல்றதை பார்த்தால்...

      இவ்வளவு காலமாக பதிவுலகம் வராத அதிரா இப்பொழுது நள்ளிரவில் வந்து இருப்பது புதையலை லவட்டிக் கொண்டு போவதற்குத்தான் இருக்குமோ...

      என்ற ஐயம் நமக்கு வருவது இயல்புதான்...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா எனக்குப் புதையல் வாணாம்:) பிக்கோஸ் ட்றம்ப் அங்கிள் சொத்தை எழுதித் தந்திட்டார்ர்ர்:) ஆனா ஒரு உண்மை தெரியுமோ கில்லர்ஜி... அவர் இப்போ ஜெயில் கைதியாம்... பதவி விலகினால் ஜெயில்தானாம்... ஹையோ மீ அவர்ட பேசனல் செக் என்பதை தெரியாமல் உளறிட்டேனே:)

      நீக்கு
    3. ட்றம்ப் அங்கிள் சொத்து தந்தாரா ?
      அவர் ஒரு ட்ரம்செட்கூட வாங்கித் தரமாட்டாரே...

      நீக்கு
  2. ஹா ஹா ஹா முஸாலிக்கோயிலில் பேசப்படும் பாசைதான் டொப்பூஊஊஊஊ:)).. இனி நானும் இப்பூடிப் பூனைப்பாஷையில் பேசி எல்லோரையும் மிரட்டப்போறேன்ன்ன்:).. ஒரு இடத்தில் எழுத்துத் தவறு இருக்கு கில்லர்ஜி.. குறுதி என எழுதிட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான்... இதுதான்... இதுதான் விபரீதமே.... தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம்.. அப்படி இருக்கிறது!

      நீக்கு
    2. வீரகேசரி எடிட்டருக்கு... மாற்றி விட்டேன் நன்றி.

      ஸ்ரீராம்ஜி இதற்காக அதிராவை தேளென்பதா...?

      நீக்கு
    3. அதிரா பூனைப் பாஷையில் மிரட்டப் போகிறார். போட்டியைச் சமாளிப்பாரா கில்லர்ஜி?!?!?!

      நீக்கு
    4. ஆஹா நீங்கள் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிட்டீங்களே... நண்பரே

      நீக்கு
    5. தென்னை மரத்தில தேள் எப்போ கொட்டினதூஊஊ?.. அடிக்கடி நுளம்புதான் கடிக்கும் ஹா ஹா ஹா:)...
      ஆர் என்னதான் ஜொன்னாலும் அதிரா வந்திட்டேன் இனி ஆபத்துத்தான் எல்லோரும் அலேர்ட்டா இருங்கோ:)... நேக்கு டமில்ல ஆரும் பிழை விட்டால் கெட்ட கோபமா வரும் தெரியுமோ:) பிக்கோஸ்ஸ்ஸ் மீக்கு டமில்ல டி .... ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்

      நீக்கு
    6. அறிவுப்பசிஜி நலம்தானே உங்கள் புத்தகண்க்கள் கிண்டிலில் பார்த்தேனே.....
      கில்லர்ஜியை மூஸாலி கோயிலுக்குள் அனுப்பாமல் ஓய மாட்டேன் நான் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    7. ஆஹா இனி தமிழ் வாழுமா ?

      //கில்லர்ஜியை மூஸாலி கோயிலுக்குள் அனுப்பாமல் ஓய மாட்டேன்//

      அடப்பாவமே நான் என்ன தப்பு செய்தேன் ?

      நீக்கு
    8. கில்லர்ஜி கவலையே படாதீங்க....அதிரா வந்துட்டாங்கல்ல மூஸாலி கோயில் அந்த உருவங்கள் எல்லாம் குயம்பிப் போயிடும் அதிராவோட டமில் டி பாஷைல அப்ப சிவமணி தப்பிச்சுடலாம்...!!!

      கீதா

      நீக்கு
    9. அதானே அதிராவைத்தான் கோயிலுக்கு அனுப்பணும் போலயே...

      நீக்கு
    10. // டமில்ல ஆரும் பிழை இட்டால் //

      ஓம் ரீரீரீரீ ராராரா டிங்டிங்டிங்டிங்

      https://arivumaiyam.blogspot.com/2012/09/blog-post_1529.html

      ஓடிடு DD...!

      நீக்கு
  3. இந்த வாரம் காரம் மணம் கம்மியாக இருக்கிறதே...

    திகில் கதை சும்மா குப்..என்று இருக்க வேண்டாமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அடுத்து ஆச்சி மிளகாய்ப்பொடி போடுருவோம்.

      நீக்கு
  4. பூமியைப் பிளந்து கொண்டு உருவமா? விட்டலாச்சார்யா படம் ஏதாவது பார்த்தீர்களா சமீபத்தில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பெரியப்பா படங்கள் பார்த்து ரொம்ப காலமாகி விட்டது ஜி.

      நீக்கு
  5. இப்போ தான் சூடு பிடிக்குது போல.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிவமணியை இப்பத்தானே தீயில வாட்டுனாங்கே...

      நீக்கு
  6. சிவமணியை விடுவதாக இல்லை போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  7. மண்ணுக்குள் இருந்து வந்த மனிதன் மண் வளையத்தால் சிவமணியை கோர்த்து படிக்கும் போதே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மந்திர வளையமோ!

    ஆரம்பத்தில் வரும் இரத்தம் குடிக்கும் உருவம் பயம் காட்டுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ கதையை ரசித்து படிக்கின்றீர்கள் நன்றி.

      நீக்கு
  8. ஒரு முடிவோடத்தானே எழுதறீங்க பயமுறுத்தத் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நானே பயந்து போயித்தான் இருக்கேன்.

      நீக்கு
  9. மிக பொருத்தமான படங்கள். எங்கிருந்து எடுக்கிறீர்கள்? அருமை.தொடர்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ரசனையோடு கூகுளாண்டியிடம் தேடினால் எல்லாமே அமையும் ஐயா.

      கிடைக்காதபோது எனது ரசனைக்கு ஏற்ப நானே உருவாக்குகிறேன்.

      அல்லது நானே புகைப்படம் எடுப்பேன் ஏதோ கிடைத்ததை போடுவோம் என்று என்றுமே நினைத்ததில்லை.

      தளத்தில் பல படங்களிலும் எனது உழைப்பை காணலாம்.

      நன்றி ஐயா கேள்விக்கணை தொடுத்தமைக்கு...

      நீக்கு
  10. மண்ணுக்குள் இந்து வந்த உருவம்... குருதி குடித்த உருவம்... இன்னும் என்னென்ன உருவங்கள் வரப் போகிறதோ... இந்த தவசி வேறு இன்னும் காணோம்! இருக்காரா இல்லையா? பார்க்கலாம். அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தவசி, தவமிருந்து பெற்றபிள்ளை அவன் நலமுடன் வருவான் என்று நம்புவோம்.

      நீக்கு
  11. திகில் கதை...
    ஆரம்பத்தில் இருந்து வாசிக்கிறேன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  12. சிவமணி ‘சவமணி’யாக ஆகிவிடுவாரோ என்ற பதபதைப்பு ஏற்படுகிறது. அந்த தலைவன் பேசிய சொல்லின் பொருள் தெரியாததால், அடுத்து என்ன நடந்தது அறிய காத்திருக்கிறேன்.

    கில்லர்ஜி என்பதால் ‘கில்லர்’ கதையை எழுதத்தொடங்கிவிட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. பாவம் சிவமணி இப்படி எல்லாம் அபசகுணமாக பேசாதீங்கோ...

      அவன் நல்லபடியாக திரும்பிட நான் வியாழக்கிழமை தெட்சிணா மூர்த்திக்கு விரதம் இருக்கிறேன் நண்பரே...

      நீக்கு
  13. தவசி தான் இப்படி மாறுவேஷத்தில் வந்திருக்காரோ? ஆனாலும் சிவமணிக்கு தைரியம் ஜாஸ்தி தான். இத்தனையையும் பார்த்தும் கொஞ்சம் கூடப் பயப்படாமல் மயங்கி மட்டும் விழுந்திருக்கார். இந்த பாஷையில் என்ன சொல்றாங்கனு அருஞ்சொற்பொருள் கொடுத்திருக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிவமணிக்கு தைரியம் ஜாஸ்திதான்//

      நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிவமணிக்கு பூர்வீகம் தேவகோட்டையாக இருக்குமோ...

      இது என்ன பாஷைனு எனக்கென்ன தெரியும் ? அவர்கள் பேசுவதை கேட்டு எழுதினேன் அம்புட்டுதேன்.

      ஒருவேளை இதன் அர்த்தங்கள் அதிராவுக்கு தெரியலாம்.

      நீக்கு
  14. கில்லர்ஜி இது சமீபத்துல நீங்க ஏதோ படம் பார்த்து கனவுல எல்லாம் வந்துச்சோ...ஹா ஹா ஹா ஹாஎனக்கென்னவோ இதுவே சிவமணி கண்ட கனவுன்னே தோணுது. ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிவமணி கனவு கண்டால் நான் எப்படி பார்க்க முடியும் ?

      நீக்கு
  15. ஜட கோண்டியா... = அட கொன்னியா...?

    நேற்று பயணத்தால், வர முடிவில்லை ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அடடே இந்த மொழி பெயர்ப்பு பொருந்தி வருதே...

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    கதை மர்மமாய் மிகவும் பயங்கரமாக உலகில் புரியாத பேய் பாஷைகளுடன் தொடர்கிறது. புரியாத பல்லை உடைக்கும் மொழிகள் பேசப்படும் போது, சிவமணியோடு நானும் அவ்வப்போது அதிர்கிறேன். குருதி குடித்த உருவமும், மற்ற படங்களும் ஆங்கில பேய் படங்களை தோற்கடிக்கிறது. படங்கள் தேர்வு மிக அருமை. அடுத்து என்னவோ என நானும் சிவமணி மாதிரி பயந்து கொண்டே காண ஆவலாக உள்ளேன்.திகில் கதையை நன்றாக கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    இரண்டு தினங்கள் நான் வலையுலகம் வரவில்லையாததால், தாமத வருகை. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //பல்லை உடைக்கும் மொழி//
      ஹா.. ஹா.. ரசித்தேன் வார்த்தையை...

      கதையை பாராட்டியமைக்கு நன்றி
      சிவமணிக்காக பிரார்த்திப்போம்.

      நீக்கு
  17. http://mathysblog.blogspot.com/2019/08/blog-post_18.html?showComment=1566368247463&m=1#c5044565306178154776

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே "லாடன் வசிய மந்திரம்" பதிவுக்கு போனேன் ஜி

      நீக்கு