தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 06, 2022

தங்ககனிக்கு பிறந்தநாள்

 

ன்னழகு செல்லமே தங்கக்கனி முத்தே
ன்றும் உன் நினைவால் நான் பித்தே
ங்கள் வம்சம் தழைக்க வந்த சொத்தே

ம்மை பிரித்தது சகுனிகளின் சதியே
ல்ல உள்ளம் கள்ளமாக்கியது மதியே
லம் வேண்டுவேன் நாளும் விதியே
 
ங்காத புகழில் வாழ்வாய் தங்கமே
கிழம்பூவே இதயத்தில் நீ அங்கமே
னம் நிறைந்தாய் தமிழ்ச் சங்கமே
 
ன்பே உருவமாய் வளர்வாய் கனியே
ழகு நிறை பெறுவாய் பொன் மணியே
ண்டாது உனை என்றென்றும் பிணியே
 
ண்டவன் அறிய உண்மை பாசம் உண்டு
சை இருக்கிறது என்றாவது உனை கண்டு
னந்தமாய் சுற்றுவேன் நான் பூவின் வண்டு
 
ன்று வரையில் உன்மீது கோபம் இல்லை
தோ வந்து விட்டேன் வாழ்வின் எல்லை
றுதி நாளில் பிறர் தரலாம் தொல்லை
 
என்றாவது உங்களை காண்பேன் ஒருக்கால் இல்லை எனினும் என்னைப்பற்றி நீ நிச்சயமாக அறிந்து கொள்வாய் அன்று நீங்கள் கேட்டு வளர்ந்த பொய்கள் எல்லாம் முடிவுக்கு வரும். உங்களது நலத்துக்காக இறுதி மூச்சுவரை பிரார்த்திக்கும் உங்கள் ஐயா.
 

எனது அன்பு மூத்த பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு இன்று (06.11.2022) மூன்றாவது பிறந்தநாள் அவளது வாழ்வு வளம் பெற நட்பூக்களின் ஆசிகளை வேண்டி...
 
சகோ திருமதி.கோமதி அரசு அவர்கள் முன்பு எமது பெயர்த்திகளுக்கு கவிதை எழுதச் சொல்லி இருந்தார்கள் அவர்களின் வேண்டுகோளுக்காக பிறந்தநாள் கவிதை எழுதினேன். அவர் தமக்கு இனிய நன்றிகள்.
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

 1. க்ரிஷன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  உங்கள் அன்பே உங்களை ஒன்று சேர்க்கட்டும்.  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  கவிதையில் அன்பும் நேசமும் தேனாய் வழிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வாழ்த்துகளை தந்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 2. தங்கள் பேத்திக்கு அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

  அன்பு வெற்றி பெற்றே தீரும்..
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவில் உங்கள் கவிதை அருமையாக உள்ளது. தங்களின் அன்பு பேத்தி க்ரிஷ்ண்யாவுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். நூறாண்டு காலம் மேலும் சிறப்பாக வளர வாழ ஆண்டவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன். உங்கள் கவிதையில் உங்கள் அன்பும் பாசமும் மெய் சிலிர்க்கிறது. இவ்வளவு பாசத்தையும் குழந்தை புரிந்து கொள்ளும் நாள் விரைவில் வர வேண்டுமெனவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். .அந்த நாள் விரைவில் வந்து விடும். கவலை வேண்டாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தும், வாழ்த்துகளும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 4. உங்கள் அன்பு பெயர்த்திக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம்...

  பதிலளிநீக்கு
 6. தங்களின் அன்புப் பெயர்த்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 7. அன்புப் பெயர்த்திக்கு இனிய பிறந்தநாள் ஆசிகள்.

  உங்களின் வார்த்தைகள் உங்கள் மனத்தின் ஆழத்திலிருந்து வந்திருக்கின்றன. மிகவும் வருத்தத்தைத் தருகின்றன. ஒருவர் போன பிறகு, செய்த தவறுகளை எண்ணி வருந்தி என்ன பயன்? உங்கள் மகனும் மருமகளும் மீண்டும் உங்களுடன் சேர்ந்திருக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது ஆசிகளுக்கு நன்றி.
   அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்கு சுமையாக வாழும் எண்ணம் இறுதி வரையில் இல்லை. நாளை எனக்கு வாக்கரிசி போடும் வேலையைக்கூட அவர்களுக்கு கொடுக்ககூடாது என்று உறுதியாக இருக்கிறேன்.

   பெயர்த்திகளை தொட்டுப் பார்க்கும் பாக்கியத்தையாவது இறைவன் கொடுத்தால் போதுமானது. இதற்கு காரணமானவர்களின் அழிவை நான் கண்ட பிறகே மரணிப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

   நீக்கு
 8. உங்கள் அன்பு பெயர்த்தி "க்ரிஷன்யா" விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கவிதை மிக மிக அருமை. நெஞ்சை ஊடுருவும் விதமாக அமைந்துள்ளது.

  கோடி இருந்தாலும் கூடி இருந்தால்தான் சிறப்பு.... இந்நன்நாளில் பிரிவை மறந்து உறவை நினைந்து அனைவரும் கூடி வாழவேண்டும் என இந்த வலைப்பூ வழியாக தங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கின்றேன்... வாழ்க பல்லாண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது உளப்பூர்வமான ஆசிகளுக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும்

  அருமையான வாழ்த்து ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. தங்களின் பேத்திக்கு வாழ்த்துகள்!

  வாழ்வாங்கு வாழிய செல்லம்!

  பதிலளிநீக்கு
 11. மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்களை "ஐயா" எனக் கூப்பிடும் நாள் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 12. தாத்தாவுக்கும் பேத்திக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தாமதமாக தெரிவிக்கிறேன்.
  மன்னிக்கவும்.
  உங்கள் கவிதை வரிகளை அன்பு பேத்தி படித்தால் ஓடி வந்து விடுவார்.
  என்னுடைய வேண்டுகோள் படி கவிதை எழுதியதற்கு நன்றி.
  வாழ்த்தி கொண்டே இருங்கள். பேத்தி வந்து உங்களிடம் வந்து மகிழ்ச்சியாக விளையாடுவதாக கற்பனையாக மன கண்ணில் நினைத்து கொண்டே இருங்கள். ஐயா ! ஐயா! என்று உங்களுடன் மகிழ்ச்சியாக பேசுவார்.
  உங்கள் வீட்டில் பிஞ்சு பாதங்களின் கொலுசு சத்தம் கேட்க போகும் நாள் விரைவில் வரும்.
  பேத்தி கிரிஷண்யாவிற்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  தவிர்க்க முடியாத காரணத்தால் வலை பக்கம் வரவில்லை.
  மூன்று நாள் முன்பு திருநெல்வேலி பயணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்தும், ஆசிகளும் கிடைத்தமைக்கு நன்றி.

   எந்நேரமும் பெயர்த்திகளின் நினைவேதான் ஆகவே நேற்றிரவு கனவில் கண்டு இருக்கிறேன்.

   தங்களது திருநெல்வேலி விபரம் அறிந்தேன் எனது இரங்கல்கள்.

   நீக்கு
 14. உங்களின் பேத்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் . தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்திய மைக்கு நன்றி.

   நீக்கு