இடம்: மதராசப்பட்டினம், மயில் ஆடும் பூங்கா. (தற்போது மயிலாப்பூர்)
திருவள்ளுவர் ஆண்டு 1745, சுரவம் மாதம், 21 ஆம்த திகதி, அறிவன் கிழமை
திடீரென எனக்கு தோன்றியது... வலைப்பதிவர் நகையை வித்தவர் SORRY நகைச்சுவை வித்தகர் பகவான்ஜியும், கில்லர்ஜியும் சந்தித்து பேசிக் கொண்டால் எப்படி இருக்கும் வேறெப்படி இப்படித்தான்.
ஆமா நீ
ஆரு ஜோக்காளி
மாரிகீரே நாடகத்துல நடிச்சுகினு அப்பிடியே வந்துட்டியா ?
யாம் பூலோகத்தை காணவே வந்தோம்.
ஒராளு வந்துகினு வந்தோம்கீறே நான் ஆரு தெரியுமா ?
தெரியும் எமக்கு.
மானிடன்.
இன்னாது மானிட்டரா ?
உமக்கு மானிடன் என்றால் ? என்னவென்றே தெரியவில்லை வேடிக்கை வேடிக்கை
யோவ் யாருய்யா நீ ய்யேன்
ஏரியாவுல வந்து என்னையவே சத்தாய்க்கிறே...
மானிடா நீ என்ன மொழி
பேசுகின்றாய் ?
மொதலே நீ இன்னா பேசுறே சொல்லுமே மானிட்டருங்கிறே குவாட்டருங்கிறே...
மானிடா நான் பகவான்ஜி எமக்கு நீர்
பணிந்தே தீரவேண்டும்
நான் கில்லர்ஜி சும்மா போட்டுட்டு போய்கினே... இருப்பேன் தாமாஷூ பண்ணிகினுகீறே
? உனது பணி என்ன
இன்னாது பனியா அப்பிடினா ?
உனது அன்றாட வேலை என்ன ?
மானிடா இது தவறு, இதை இன்றோடு நிறுத்தி விடு நாளை என்னிடம் நீ சரணடைந்தே தீரவேண்டும்
சட்டென கில்லர்ஜி பட்டன் கத்தியை எடுத்து...
இன்னாங்கிறே இப்ப நீ போறீயா ? இல்லை உட்சுற வுடுறியா ?
பகவான்ஜி கையை உயர்த்தி
ஆசீர்வாதம் செய்ய சட்டென கத்தி மறைந்து விட்டது.
நீ யாரு மந்திரவாதியா மேஜிக் எல்லாம் காட்றே ?
மானிடா நான் பகவான்ஜி உன்னை படைத்தவன், நான் நினைத்தால்
உன்னை அழித்து விடுவேன்.
நானு கில்லர்ஜி இப்ப இன்னா
செய்றேன் பாரு ?
கில்லர்ஜி கையை மடக்கி குத்தவர... பகவான்ஜி ஆசீர்வாதம் செய்ய... கில்லர்ஜிக்கு கழுத்துவரை சிலையாகி தலை மட்டும் அசைந்தது
சாமி... மன்னிச்சுடுங்கோ... மன்னிச்சுடுங்கோ... இனிமே இந்த, யாபாரமே வச்சுக்க மாட்டேன்... ஏதாவது பொட்டிக்கடை வச்சுகினு பொழ்சுகிறேன், மன்னிசுக்க சாமி.
நல்லது மானிடா, நீ திருந்தியது உண்மை எனில் உனது வணிகம் நல்ல விதமாக யாம் அருள் புரிவோம் நீ மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் நடந்தால் நீ அழிந்து போகக்கடவது.
பகவான்ஜி அருள் பாவித்து, கில்லர்ஜியை பழைய நிலைக்கு திரும்ப வைத்து மறைந்து விட்டார்.
நான்
இந்த பதிவை வெளியிட, எமக்கு பச்சைக்கொடி காட்டி அனுமதியளித்த இனிய
நண்பர் பகவான்ஜி அவர்கள் கையின் விரலுக்கு மோதிரம் மாட்ட வேண்டும் ஆனால் எமது நண்பர் ‘’தங்கம் நமக்குள் ஏற்படுத்தும் பங்கம்’’ எனசொல்லி விட்ட காரணத்தால் அந்த எண்ணத்தை ‘’ச்சே‘’ என்னத்த என பரணில் தூக்கிப் போட்டு விட்டு.... பகவான்ஜிக்கு, கில்லர்ஜி in THANKSஸை
மட்டும்
ஒரு கன்டெய்னரில் அனுப்பி விட்டேன்.
ஆகா அபாரம் நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
நீக்குசிறந்த உரையாடல்
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்
தங்களுக்கும் நன்றி.
நீக்குஇப்படியெல்லாம் நீங்க பதிவைத் தேத்துவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நானும் அனுமதி கொடுத்திருப்பேனே....
பதிலளிநீக்கு"தங்கம் தானே நமக்குள் பங்கம் ஏற்படுத்தும்" - எனக்கு வைரத்தால் ஒரு மோதிரம் கொடுத்தால் கூட போதும், சந்தோஷமாக ஏத்துப்பேன்.
நல்ல நகைச்சுவை. மெட்ராஸ் பாஷை சரளமாக வருகிறது நண்பரே...
நேரம் இருப்பின் என்னுடைய இந்த மெட்ராஸ் பாஷை நாடகத்தையும் படித்துப் பாருங்கள் - http://unmaiyanavan.blogspot.com.au/2013/10/blog-post_17.html
அனுமதி கொடுத்துட்டீங்கள்ல, இதுபோதும் எனக்கு.
நீக்குநாடகத்தை பார்த்து விட்டு சொல்கிறேன் நண்பரே...
ஹே! கில்லர்ஜி அண்ணா , நம்ம பாஸ் பகவான்ஜி யை வைச்சு ஒரு காமெடி பதிவு:))))) நல்ல முயற்சி! தொடருங்கள்:)
பதிலளிநீக்குதொடருங்கள் அப்படீனா ? அடுத்தும் கடவுளை அழைக்கவா ?
நீக்குஎன்னய்யா இது? அனுமதிதான் கொடுத்துவிட்டாரே, இன்னும் நீளமாகக் கலாய்க்கவேண்டியதுதானே? ...சுவையான கற்பனை.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி ஐயா, உண்மைதான் இன்னும் இழுத்து....... இருக்கலாமென்று நானும் நினைத்தேன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகலக்கிடீங்கள்... நண்பா... நன்றாக உள்ளது உரையாடல்கள் பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நன்பா, கண்டுதான் வருகிறேன் பேனாவை.
நீக்குஹா.... ஹா....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஜி + ஜி
ஆளுக்கு ஒரு ''ஹா'' வா ? நல்லதுஜி.
நீக்குசிரிக்கவே பூத்தது சிந்தனைப் பூக்கள்!
பதிலளிநீக்குவிரித்த மணமோ விருந்து!
ரசித்தேன்! சிரித்தேன்!..
வாழ்த்தினேன் சகோ!
வாழ்த்தை ஏற்றேன் சகோதரி.
நீக்குஹா..ஹா...கற்பனை ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குரசிக்கத்தானே சகோதி இந்த கற்பனை.
நீக்குவேடிக்கை.. உண்மையிலேயே பகவான்ஜிக்கு இப்படி ஒரு சக்தி இருந்தால் என்ன ஆவது!?.. எதற்கும் உஷாராகவே இருக்க வேண்டியதுதான்!..
பதிலளிநீக்குதன்னோட ''பவரை'' காமிச்சு எல்லோருடைய ''தமிழ்மணம்'' வாக்கையும் ஆட்டோமேட்டிக்கா நம்மள்ட்டருந்து போட்டுக்கிருவாரு....
நீக்குஇன்னாபா இது? ரெண்டு ஜி க்களும் சேர்ந்து நல்லாத்தான் கீசுறீங்க....அதான்பா....எள்தி.....கீசுறீங்கனு......ஏதேன் கனா கண்டினியாப்பா,,,கில்லர் ஜி?!!!!...ஹாஹாஹா...
பதிலளிநீக்குரசித்தோம்! படம் அருமைங்க! அதுவும் பகவான் ஜி சூப்பருங்க....
பகவான்ஜி பக்கமா... சாஞ்சிட்டீங்களே அவரு போட்டோ ஸூப்பர், அப்படினா ? நான் நல்லாயில்லை அப்படித்தானே ?
நீக்குஇதை வேற தனியா சொல்லனுமாக்கும்!!!!
நீக்குஅப்படீனா ? அபுதாபி நல்லாயில்லையாக்கும்... ஆஸ்த்ரேலியாவுக்கு...
நீக்குஅருமை அருமை.....
பதிலளிநீக்குநன்றி, நன்றி.
நீக்குகில்லர்ஜியும் பகவான் ஜியும் சேர்ந்து அசத்திட்டீங்க ஜீ! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஸ்ஜி
பதிலளிநீக்குஉங்கள் கற்பனையை ரசித்தோம்... ச்சே...ரசித்தேன் ! வேட்டிக் கட்ட தெரியாத எனக்கு ,உங்களின் கை வண்ணத்தில் வேட்டி கூட அம்சமா இருக்கு,ஆனால் இந்த கோலத்தில் என்னை ஜிம்கானா க்ளப்பில் நுழையவிட மாட்டாங்களே!
பதிலளிநீக்குஉங்களின் தேங்க்ஸ் கண்டைனர் வந்து சேர்ந்தது ,என் நன்றியை ஏற்றி அனுப்பியுள்ளேன் ,பத்திரமாய் இறக்கிக் கொள்ளவும் !
நல்லது வரட்டும்.
நீக்குபகவான்ன்ஜியை வைத்து வந்திருக்கும் இரண்டாவது பதிவு இது. இல்லையா.... சரியான உரையாடல் பாஸ்!
பதிலளிநீக்குஸ்ரீ ராம் ஜி ,இரண்டாவது இல்லே இது ,மூன்றாவது ...முதலில் ரமணி சார் ,என்னை கற்பனை பேட்டி கண்டார் .இரண்டாவது யாழ் பாவாணன் அவர்கள் ஜோக்காளியை அலசி ஆராய்ந்து காயப் போட்டார் ,முன்றாவது நம்ம கில்லர்ஜி,என்னை கடவுளாக்கி வியக்க வைத்துள்ளார் !
நீக்குஎனக்கு மட்டுமே இது ஏன்னு கேட்டா ...காய்க்கிற மரம்தானே கல்லடி படும்னு சொல்றார் ,நம்ம யாழ் பாவாணன் !
நன்றிங்க... பாஸூ
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநகைச்சுவை மன்னனை வைத்தே நகைச்சுவை பதிவா? சென்னை ‘பாஷை’யைக் கேட்டு வெகு நாளாகிவிட்டது. நகைச்சுவையை இரசித்தேன்!
(எனது இணைய இணைப்பில் கோளாறு இருந்ததால் உங்கள் வலைப்பக்கம் பக்கம் வர இயலவில்லை.)
23ம் புலி கேசியின் வரிசையில் என்னை சேர்த்ததற்கு நன்றி !
நீக்குரசிப்புக்கு ஒரு கன்டெய்னர் நன்றி ஐயா.
பதிலளிநீக்குகல கல
பதிலளிநீக்குகலக்கலா ?
நீக்குஆகா...இப்படியும் நகைச்சுவையாய் சிரிக்கலாமா..... பிந்திட்டேனே........வாழ்த்துக்கள்! சிரிக்க வைத்தற்கு...
பதிலளிநீக்குபிந்தாமல் இருக்கணும்னா... முந்தனும்.
நீக்குஹாஹா மிக அருமை...ரொம்ப நல்லாருக்கு :)
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரி.
பதிலளிநீக்குபார்க்கும் இடமெங்கும் சிரிப்பினை சிந்திப் போகிறது உங்கள் எழுத்து......!
பதிலளிநீக்குஜி க்களின் ராஜ்யத்தில் நானெல்லாம் பூஜ்ஜியமாகி விட்டேன், கில்லர் ஜி!
நல்ல பகிர்வு!
நன்றி!
உங்களது பூஜ்ஜியம் என்ற வட்டத்திற்க்குள் நானொரு புள்ளியாய் இருப்பதில் பெருமையே...நண்பரே,
நீக்குஜீ !
பதிலளிநீக்குநல்லவேலை பகவான் ஜீயை வைத்து பட்டன் கத்தியோடு நிறுத்திகொண்டீர்கள்... ஓபாமாவை கூட்டிக்கினு வந்து ஆட்டம் பாம் அளவுக்கெல்லாம் போயிருந்தாஆஆஆஅ !
நல்ல நகைச்சுவை பதிவு.
நன்றி
சாமானியன்
அப்படினா,,, பகவான்ஜி ஒபாமாவையும் சிலையாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பனும்னு சொல்றீங்க... இதெல்லாம் தப்பு நண்பா,
நீக்குஅருமை... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், கருத்துரைக்கும், இணைத்து கொண்டமைக்கும் முதற்கண் நன்றி மிஸ்டர். குமார்.
நீக்குமிக இயல்பான காமெடிப் பதிவு!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி தமிழ்த்தோழரே.....
நீக்குதொடக்கத்திலிருந்து இறுதிவரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமிக இயல்பாக அமைந்த உரையாடல். வெகுவாகச் சுவைத்து மகிழ்ந்தேன்.
கூகிள்+ இல் கணக்கைத் தொடங்கியிருக்கிறேன். இப்போது இணைக்க முடிகிறதா பாருங்கள்.
நன்றி கில்லர்ஜி.
இணைக்க முயற்சிக்கிறேன் திரு.உலகளந்த நம்பி. அவர்களே...
நீக்குகூகிள்+ இல் எனக்குப் போதிய அனுபவம் இல்லை. உங்களை இணைத்துக்கொள்ள முயல்வேன்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...
பதிலளிநீக்குமுரட்டு மீசைக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா? அருமை அருமை நண்பரே தொடருங்கள் தொடர்கிறோம். இன்றைய தினமல்ரில் உங்கள் மீசை மேலும் பிரபலமாகிவிட்டது பார்த்தீர்களா? பார்க்காவிடில் பார்க்க வருக -http://valarumkavithai.blogspot.in/2014/11/blog-post_2.html
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே.... பாறைக்குள்ளும் தேரை வாழ்வதில்லையா ?
நீக்கு