கேள்விக்கணை கேசவமூர்த்தியும், வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தியும்.
என்னப்பா,
வயிறு எப்படியிருக்கே ?
வா கேசு நல்லாயிருக்கேன், நீ எப்படியிருக்கே ? துபாயில இருந்து எப்ப வந்தே ? கல்யாணமெல்லாம் முடிச்சுட்டியா ?
இல்லே வா இப்படி உட்காரு,
நம்ம ஊருலதான் கட்டுப்பாடு இருக்கே, உள்ளூருலதான் பொண்ணு எடுக்கனும்னு.
இங்கே,
எந்தச் சிறுக்கியிருக்கா ?
என்னா...சொல்றே ? வீணை வாசிச்சுகிட்டு இருந்தாளே, வீணா அவ எங்கே
போனா ?
அந்த
வீணாப் போனவதான் நம்ம வீரபாண்டிய கல்யாணம் செய்துட்டாளே...
சந்தா
வசூலிச்சுகிட்டு இருந்தாளே, சாந்தா அவ எங்கே ?
சாந்தமானவ,
மாதிரி இருப்பாளே அவ, நம்ம சாந்தகுமார கல்யாணம் செய்துட்டாளே...
களை எடுப்பாளே
கலாவதி அவ என்ன ஆனா ?
அந்தக் காலாவதி ஆனவதான்,
நம்ம கலாநிதிய கல்யாணம் செய்துட்டாளே...
குண்டா
இருப்பாளே, குயிலி அவ எங்கே ?
அந்த குந்திதான்,
நம்ம குருநாதனை கல்யாணம் செய்துட்டாளே...
ராங்காவே
பேசுவாளே, ராணி அவ எங்கே ?
அந்த ராங்கிதான்,
நம்ம ரங்கசாமிய கல்யாணம் செய்துட்டாளே...
கோதுமை கடை
வச்சிருந்தாளே, பூங்கோதை அவ எங்கே ?
அந்தக் கோந்தைதான்
நம்ம கோதண்டராமனை கல்யாணம் செய்துட்டாளே...
மாலை
கோர்த்து விப்பாளே மாலா அவ எங்கே ?
அந்த மாடுதான்
நம்ம மாடசாமிய கல்யாணம் செய்துட்டாளே...
பழக்கடை
வச்சிருந்தாளே பழனியம்மா அவ என்ன ஆனா ?
அந்தப் பாழாப்போனவதான்
நம்ம பழனியாண்டிய கல்யாணம் செய்துட்டாளே...
பூ
வியாபாரம் செய்வாளே, நம்ம பூமயிலு அவ எங்கே ?
அந்த பூதந்தேன்,
நம்ம பூமிநாதனே கல்யாணம் செய்துட்டாளே...
முருக்குகடை
வச்சிருந்தாளே, முனியம்மா அவ என்ன ஆனா ?
அந்த முண்டந்தேன்,
நம்ம முனீஸ்வரனே கல்யாணம் செய்துட்டாளே...
சவுக்குகடை
வச்சிருந்தாளே, சந்தியா அவ என்ன ஆனா ?
அந்த
சந்திசிரிச்சவதான், நம்ம சத்யாவே கல்யாணம் செய்துட்டாளே...
நரஸுவேலை
பார்த்தாளே நர்மதா அவ எங்கே ?
அந்த நாசமா
போறவதான், நம்ம நடராஜனைக் கல்யாணம் செய்துட்டாளே...
பார்மஸியில
வேலை பார்த்தாளே பார்வதி அவ எங்கே ?
அந்தப்
பாதகத்திதான் நம்ம பாண்டுரங்கனை, கல்யாணம் செய்துட்டாளே...
காய்கறிக்கடை
வச்சிருந்தாளே, காளியம்மா அவ என்ன ஆனா ?
அந்தக் காவாலி
சிருக்கிதான் நம்ம காளிமுத்தனை கல்யாணம் செய்துட்டாளே...
வழவழன்னு
பேசுவாளே, வள்ளி அவ என்ன ஆனா ?
அந்த வள்ளுகிராக்கிதான்
நம்ம வரதராஜனை கல்யாணம் செய்துட்டாளே...
இருமிக்கிட்டே
இருப்பாளே இருளாயி அவ எங்கே ?
அந்த
இருமி கொட்டாந்தான், நம்ம இருளப்பனை கல்யாணம் செய்துட்டாளே...
மூக்குத்தி
போட்ருப்பாளே, மூக்காயி அவ எங்கே ?
அந்த மூதேவிதேன்,
நம்ம மூர்த்திய கல்யாணம் செய்துட்டாளே...
ஓடிக்கிட்டே
இருப்பாளே ஒச்சாயி அவ எங்கே ?
அந்த ஓடுகாலிதான்,
நம்ம ஓம்பிரகாஷே கல்யாணம் செய்துட்டாளே...
என்னடா இது,
எல்லாப் பொண்ணுக்குமே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்றே, அப்ப நீ யாரைத்தான் கல்யாணம்
செஞ்சே ?
யேண்டா அத இப்பத்தான் கேக்றியா ? நானே பொண்ணு கிடைக்காம நம்ம
வைரவன்பட்டி, பைரவன் பொண்டாட்டி வைதேகிய வச்சுக்கிட்டு இருக்கேன். கேக்றான் பாரு
கேள்வி கேணபய மாதிரி.
சாம்பசிவம்-
மனுசனுக்கு வயித்தெரிச்சல் இருக்கும் தான் அதுக்காக இப்படியா ?
குறிப்பு
- இந்தப் பெயர்களில் வரும் சகோதரிகள் இதை படித்தால் ?
வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தி சார்பாக, எனது SORRY-- Killergee
F.P- 20 Mar 2012
யோவ்,Killergee நீயே எழுதிப்புட்டு, வயிரவமூர்த்தி மேலே வழியப்போடுறியா ?
பதிலளிநீக்குMalar Vizi
வேண்டுமானால் ? வயிரவமூர்த்தி டெலிபோண் நம்பர் தர்றேன் அவருட்டயே கேட்டுகங்க...
பதிலளிநீக்குஎப்படிங்க பாஸ் இப்படியெல்லாம் அடைமொழியை சிந்திக்கறீங்க! இன்னிக்கு நிறைய குத்து கிடைக்கும்னு நினைக்கறேன்! பார்த்து இருந்துக்கங்க!
பதிலளிநீக்குஅதான் சொல்லிட்டீங்களே,,, அடைகாக்கும்போது...
நீக்குடிஆர்.வசனம் மாதிரி இருக்கு...
பதிலளிநீக்குநல்லவேளை சகோதரி டி,ஆர் விட்டுனு சொல்லாம போனீங்களே...
நீக்குதுபாய்ல இருந்து வந்த வயித்தெரிச்சலுக்கு இம்புட்டு வெவரமுங் கிடைச்சதே பெரிய ஆச்சர்யம்!...
பதிலளிநீக்குஅதானே சரியா சொன்னீங்க...
நீக்குஎதுகையும் மோனையும் போட்டிப் போட்டுக் கொண்டு கிச்சுக் கிச்சு மூட்டுகின்றன நண்பரே!
பதிலளிநீக்குநன்றி!
அப்படீனாக்கா கூசுமே...
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகேள்வி பதில் சொல்லி அசத்தி விட்டீங்கள் வித்தியாசமான பகிர்வு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தவறாது வருகைதரும் தங்களுக்கும் நன்றி நண்பரே...
பதிலளிநீக்குஇது கேள்வி பதிலல்ல
பதிலளிநீக்குவாசிப்போருக்கான நாடகம்
சிறந்த பதிவு
தொடருங்கள்
வருகைக்கு நன்றி ஐயா.
நீக்குஆகா
பதிலளிநீக்குஅருமை நண்பரே
தங்களின் வருகைக்கும் நன்றி ஐயா.
நீக்குஇந்த பதிவை படிக்க, படிக்க எனக்கு ஒரு தலை ராகத்தில் வரும் பாடல் ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வந்தது.
பதிலளிநீக்குஎந்தபாடல் ?
நீக்குஉருப்படியா "வைச்சிக்கிட்டு" இருந்தா சரி தான்... ஹா... ஹா...
பதிலளிநீக்குஎது ? பைரவன் பொண்டாட்டியை வச்சுக்கிறது சரியா ?
நீக்குமுடியல.....!!!
பதிலளிநீக்குஇத்தனை பொண்ணுங்க இருந்தும் உனக்கு ஏன் எவனும் தரல.....
அம்புட்டு நல்லவனா நீ ?
நான் கேக்கல வயிறு......
சரி... கேசுட்டே சொல்லிட்டாப்போச்சு.
நீக்குஊருல இருக்கிற பொண்ணுக எல்லாம் நம்ம பொண்ணுகதான்னு சொல்லும் பொன்சாமிய விட்டுடிங்களே.....தலிவா............
பதிலளிநீக்குசாரித்தலிவா,,, மறந்துட்டேன்மே மன்சுக்கோ தலிவா,,,,
நீக்குஜீ !
பதிலளிநீக்குமிக அருமையான கற்பனை வளம்ஜீ உங்களுக்கு ! இதை படித்தபோது நான் பத்தாம் வகுப்பில் எழுதிய " அறுவை அதிபர்கள் " நாடகம் நினைவுக்கு வருகிறது ! ஏறக்குறைய இதே பாணியில் எழுதியது.
இத்தனை பெயர்களையும் சேகரித்து முன்னும் பின்னும் எதுகை மோனைக்கெற்ற வார்த்தைகளை போட்டு எழுதுவது சுலபமல்ல.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
நண்பா, எனது நகைச்சுவையை மட்டுமல்ல, மனதை கசக்குகின்ற பதிவுகளை இனிமேல்தான் காணப்போகிறீர்கள் ஏனெனில் தங்களை போன்றவர்களெல்லாம் இப்பொழுதுதானே வரஆரம்பித்திருக்கிறார்கள் இருப்பினும் தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குபோகப்போக தெரியும் இந்த(வலை)பூவின் வாசம் புரியும்...
தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி
பதிலளிநீக்குசகோதரியின் தகவலுக்கும், எம்மை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் ஒரு கன்டெய்னரில் நன்றியை அனுப்பி வைத்துள்ளேன்.
பதிலளிநீக்குகேள்வி பதில் ஊடாகவே ஒரு செய்தி. தாங்கள் தந்துள்ளவிதம் வித்தியாசமானதாக இருந்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவித்தியாசமா இருந்ததால்தானே தங்களின் பாராட்டு கிடைத்தது நன்றி ஐயா.
நீக்குவலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
கில்லர் ஜி யம்மாடியோ இத்தனை பொண்ணுங்களா?!!!!!!!!!! தாங்குமா.....இத்தனை பொண்ணுங்கள் இருந்தும் கேசுக்கு வைச்சுக்கற கேசாகிப் போச்சேனுதான்....
பதிலளிநீக்குடி.ஆர். நினைவுக்கு வந்தார்.....ஒருதலை ராகம் படத்துல வருமே அந்தப்பாட்டு.....
அவன் ஒரு ராசியில்லா கேசா....
நீக்குஇவண் வாசத்துக்கில்லை
ஒருத்தி கூட லேசா...
நான் நேற்று போட்ட கமெண்ட் எங்கே ஒழுகிப் போச்சுன்னு தெரியலே ,சரி ,மறுபடியும் போட்டுட்டா போச்சு !
நீக்குவைரவன் பட்டி பைரவன் வெறும் வையுடன் நிறுத்திக்க மாட்டார் ,நூறு பைரவர்களை ஏவி உங்களைக் கடிக்க விட்டு வேடிக்கைப் பார்க்கப் போறார் ,ஜாக்கிரதை !
என்னை கடிக்க வந்தால் ? நான் வயிரவமூர்த்தியை காண்பிச்சுட்டு போறேன்.
நீக்குபெண்கள் கிடைக்கலன்னா இவ்ளோ பட்டப்பேர் கொடுப்பீங்களா தோழர்.நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅதானே ? நானும்கூட வயிரவமூர்த்தியை பார்த்தால் ? கேட்கிறேன் சகோதரி
பதிலளிநீக்குபதிவு புதுமையாக, அருமையாக,,எதுகை, மோனையுடன் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்து படிக்க “திக் திக்” கென்று இருந்தது. (காரணம் பெயர்கள்தாம்! சுயநலம் என்றும் வைத்துக் கொள்ளலாம்!) எல்லா சகோதரிகளும் மன்னிப்பார்களாக!!! வலைச்சர அறிமுகத்திற்கும், புதுமையான பதிவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநட்புடன்,
கமலா ஹரிஹரன்.
உண்மைதான் வலைப்பதிவு சகோதரிகளின் பெயர் வராமல் இருப்பதற்க்கு நான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டேன் உங்களுக்கு படிக்கும்போது ''திக் திக்'' எனக்கு எழுதும் போதே ''பக் பக்''
பதிலளிநீக்கு