என் வாழ்வில் நான் கண்ட, காணும் ஆத்திகம் பேசும், பேசிய மானிடர்களில்,
பெரும்பாலானோர் நடைமுறை வாழ்வில் நியாயமாக நடந்தவர்கள் இல்லை, அதேநேரம் நாத்திகம்
பேசும் பல மனிதர்களை நான் பார்த்து விட்டேன் பெரும்பாலானவர்கள் யோக்கியர்களாகத்தான்
இருக்கிறார்கள், நாத்திகர்களை உயர்த்தி பேசுவதால் நான் நாத்திகஜாதி என அவசரப்பட்டு
எண்ண வேண்டாம்.
நான் நாத்திகத்திலும்,
ஆத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக் கொண்டிருப்பவன்,
விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் குழைத்து என் ஞானம் பேசமுயல்பவன்.
இறைவன்
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றால் ? உயிரற்ற தாதுப்பொருள்களில் இருக்கும் இறைவன், உயிர் ஜீவனான
உன் மனசாட்சியுடன், இருக்கமாட்டானா ? பிறருடைய பொருளை அபகறிப்பது தவறான செயல் என, உன் மனசாட்சிக்கு
தெரியும்போது அந்த மனசாட்சியை உருவாக்கிய இறைவனுக்கு தெரியாதா ? தெரியுமென
நீ நிச்சயமாக நம்புவாய்யென நான் நம்புகிறேன் ஏனெனில் நீ ஆத்திகன், உயர்பிறவியான
மனிதப்பிறவியாக இறைவன் உன்னை படைத்து பூமியில் விட்டு விட்டான், மனிதானான நீ மனிதனாக
வாழ்ந்து மனிதனாகவே மரணித்தால் என்ன ?
என்னைப் பொருத்தவரை இறைவணக்கத்தை நாடுவதுகூட ஒரு வகையில்
மன்னிப்பை தேடுவது போல்தான், மன்னிப்பு யாருக்கு தேவை ? குற்றவாளிக்கு, நீயோ குற்றமற்றவன் பிறகு நீயேன் இறைவனை
வணங்கவேண்டும் ? நீ போடும் ஊழைக்கும்பிடு இறைவனை திருப்திபடுத்துமென
நினைத்து நீ திருப்தி கொள்கிறாய் அப்படித்தானே ! இறைவனுக்கு படைக்கிறேன் எனக்கூறி விட்டு அனைத்தையும் நீயே
உண்கிறாய், ஒருக்கால் இறைவன் உண்டால் ? நீ உணவுகளை உண்டாக்க மாட்டாய்.
(காரணம் இன்றைய விலைவாசி அப்படி)
இறைவன்
ஆசாபாசம், விருப்பு, வெறுப்பு, பசி, பட்டினி, உறக்கம், உறவுகளுக்கு
அப்பாற்பட்டசக்தி.
மனிதர்கள் அனைவரும் தன்னிடம் அடிபணிய வேண்டுமென இறைவன்
நினைத்தான் என்றால் ? அவன் இறைவனே அல்ல ! நம்மைப் போல, ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதியைப்போல,
சராசரி மனிதப்பிண்டமே...... இறைவனுக்கு நிச்சயமாக உருவம் இல்லை அதேநேரம் நீ அந்த
இறைவனை, இறைசக்தியை சந்தித்தே தீரவேண்டும் அதுதான் உன் மரணநாள். மலம் கழித்து
வாழ்ந்த மனிதர்களை வணங்கியவனைக்கூட மன்னித்து விடுவான் ஆனால் அவன் போலியென தெரிந்த
பின்னும் அவனை வணங்கிய ஆத்திகனை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான், நாத்திகன்
இந்த வட்டத்திற்குள் வரமாட்டான் காரணம் அவன் இறைவனையே வணங்குவதில்லையே ! நாத்திகனை அவன் தண்டிக்க சாத்தியமில்லை
என்பதே என்வாதம் எமது பார்வையில், பெரும்பாலான நாத்திகர்கள் நல்லவரே...
மரணநாளை நினைத்துப்பார் நீ மனிதனாகி விடுவாய்.
வணக்கம்
பதிலளிநீக்குஆத்திகம்...
நாத்திகம்...
விசித்திகம்...
ஆஹா...
உங்கள் பதிவே வித்தியாசமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரரே...
நன்றி
சகோதரி துளசி.
முதல் வருகைக்கு முதற்கண் நன்றி சகோதரி எனது பதிவுக(ல்)ள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையாளன் நான்.
நீக்குசகோ... இறைவன் தூரிலும் இருப்பான் எனப்போட்டு இருக்கிறீர்கள்.. தூணிலும் அல்லவா..வரும். பாருங்கள்.
பதிலளிநீக்குசகோதரி வந்தவுடன், தலையில் குட்டி விட்டீர்கள் அது எனது தவறல்ல தெரிந்தே எழுதியவன் வித்தியாசத்திற்காக ஆத்திகம், நாத்திகம் தெரியும் விசித்திகம் தெரியுமா? அதைப்போல் இருப்பினும் அதை சரிசெய்து விட்டேன் மாற்றாவிடில் கீழே விழுந்து விட்டு ‘’புருவத்துல மண்ணு ஒட்டவில்லை’’ யென நான் சொன்னதுபோல் ஆகிவிடும், இருப்பினும் தாங்கள் தவறுகளை சு(கு)ட்டிக்காட்ட தயங்கவேண்டாம் காரணம் நான் தவறுகளை ஒத்துக்கொள்ளும், திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவன், அத்தனை தூரம் நேசத்துடன் படித்திருக்கிறீர்களே... சந்தோசம், தொடர்ந்து வருவதற்க்கும் வருவியலா? ? ?
நீக்குநியாயமான சிந்தனை.. இப்படியே அனைவரும் சிந்தித்தால் - நாடும் வீடும் நலம் பெறும்.. வாழ்க வளமுடன்!..
பதிலளிநீக்குநாடும் வீடும் மட்டுமா ? உலகமும்தான் ஐயா.
நீக்குஅருமையான வாதம் நண்பரே
பதிலளிநீக்குகுறிப்பு - எமது வாதம் என்பதை இப்பொழுதான் ஐயா துவங்கியிருக்கிறேன், தங்களை போன்றவர்களின் தொடர் வரவுகளால்....
நீக்கு// என்ஞானம் பேசமுயல்பவன் // சிறக்கட்டும்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குமுடிவில் நச்...!
நன்றி நண்பரே.. நிச்சயமாக பேசுவேன்.
நீக்குசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
பதிலளிநீக்குதங்கள் மாறுபட்ட எண்ணங்களை
வரவேற்கிறேன்
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றியுறைக்கிறேன் ஐயா.
நீக்குஅருமையான பதிவு கில்லர்ஜி!
பதிலளிநீக்குநாத்திகம் பேசுபவர் யாரும் கெட்டவர் அல்லர். நல்லோரே! அது போல ஆத்திகம் பேசுபவர் எல்லோரும் நல்லவர் என்று சொல்ல முடியாது! சரியே!
இறைவன் நம் மனசாட்சியுடன் இருக்கும் போது ...அதைத்தானே எல்லோருள்ளும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று சொன்னார்கள் மெய்ஞானிகள்! மனிதன் என்பவன் இருகுணங்களும் கலந்த கலவைதான். நாம் எப்படி நம்மை வளர்த்துக் கொள்கின்றோமே அப்படியே ஆகின்றோம். இறைவன் என்பவன் இந்த உலகம் நினைப்பது போல அல்ல. அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட சக்தி. மூடநம்பிக்கைகள் எதுவும் அதில் கிடையாது. அவை எல்லாம் மனிதானல் உருவாக்கப்பட்டவை! இறைவன் எந்தக் கட்டளையும் இடுவதில்லை. அன்பு ஒன்றுதான்!
அன்பே கடவு(உ)ள் என்பதை கருத்துரை மூலம் அழகாக சொன்னவிதம் நன்று, நன்றி ஐயா.
நீக்குஇது உங்களின் சிந்தனை மட்டுமல்ல ,என் சிந்தனையும் கூட !சில நாட்களுக்கு முன் நான் எழுதியது ....சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?
பதிலளிநீக்குஎல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க
எந்த சிற்பியாலும் முடியவில்லை !
அப்ப கில்லர்ஜிக்கும், பகவான்ஜிக்கும் ஒரே''மூளை''னு சொல்றீங்க....
நீக்குவிசித்திகம் வித்தியாசமான சிந்தனை.
பதிலளிநீக்குமரண நாளை நினைத்துப்பார்... மனிதனாகிவிடுவாய் முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள் அய்யா.
மனம் நிறைந்த நன்றி அய்யா.
பதிலளிநீக்குஆத்திகம், நாத்திகம் குறித்த கருத்துக்கள் அருமை! விசித்திகம் புதுமையான சொல்லாடல்! கடைசி வரிகள் கலக்கல்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு.''தளிர்'' சுரேஸ்.
நீக்குவிசித்திகம் தலைப்பே நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகோவிலின் முன் கும்பிட்டும் வெளியே
கோவிலுக்கு பின்திருட்டும் வேண்டாம்
கோவிலை வணங்காவிடினும் அன்னதானம் செய்தல்
அதைவிட அழகுச் செயல்.
நன்றி சகோதரரே.
சரியாக சொன்னீர்கள் சகோதரி.
நீக்குஆத்துல ஒரு கால், சோத்துல ஒரு கால் என்பதுதான் விசித்திகம் என்று எண்ணுகிறேன் சரிங்களா??????
பதிலளிநீக்குஉங்களது பார்வையில் சரிதானோ ? ? ?
நீக்குசிந்திக்க வைக்கும் பகிர்வு ஆண்டவனை வணங்குவோம் அதுக்காக நான் நாத்திகன் இல்லை ஆத்திகமும் அதிகம் பேசாதவன்:))
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள் நடுநிலையாளரே...
நீக்குஅருமையயான பதிவு
பதிலளிநீக்கு"அனைவரும் தன் அடிபணிய வேண்டும் எனக் கருதினால் அவன் இறைவனே இல்லை..."
அருமை
வருகைக்கு நன்றி டாக்டர் ஐயா அவர்களே...
நீக்குநம்மில் ஆத்திகர்கள் அதிகம்.
பதிலளிநீக்குநாத்திகர்கள் கம்மி.
அதாவது நீங்கள் பார்த்த ஆத்திகர்கள் அதிகம். நாத்திகர்கள் கம்மி..
அதனால் நீங்க பார்த்த ஆத்திகர்களில் பெரும்பாலோர் கெட்டவர்களாக இருக்காங்க. அதே போல் நாத்திகர்களிலும் தான் என்னும் அகந்தையுடன் அயோக்கியத்தனம் செய்பவர்ளும் இருக்காங்க. அவர்களை எப்போதுமே நீங்கள் விமர்சிபதில்லை! நாத்திகன் அயோக்கிய்னா இருந்தா தப்பில்லைனு எவன் சொன்னான்னு தெரியலை உங்களுக்கு! நாத்திகர்களில் அயோக்கியர்கள் குறைவு என்பது ஏனென்றால். நாத்திகர்களே குறைவு. என்பதால்தான்.
ஆத்திகன் கடவுளை வணங்குவது அவன் செய்யும் அயோக்கியத்தனத்தை மன்னிக்ககூறி..
நாத்திகன் கடவுளை வணங்காதது, கடவுள் இல்லை என்று அவன் நம்புவதால். நிற்கு, அதனால் நாத்திகன் அயோக்கியத்தனமே செய்வதில்லை என்று ஒரு தவறான "முடிவுக்கு" போகவேண்டாம்.
உங்க தியரி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் உங்க "கன்க்ளூசன்" தவறு.
* நாத்திகர்களில் முழு அயோக்கியனும் இருக்கானுக.
* ஆத்திகர்களில், கடவுளை வணங்கிக்கொண்டே மனசாட்சியுடன் வாழும் நல்லவர்களும் இருக்கிறார்.
என்கிற உண்மகளை உங்க பதிவு "மறைக்க"ப் பார்க்கிறது.
இது உங்களைப் போல் "நான் நாத்திகவாதி இல்லை"னு சொல்லி நாத்திகர்கள் பரவாயில்லைனு அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு சிலர் செய்து கொண்டு வருவது- ஆமாம், காலங்காலமாக!
நண்பர் வருண் அவர்களின் வருகைக்கு நன்றி, நான் நாத்திகன் அல்ல என்பது முதல் விசயம் எனது அனுபவத்தில் கண்ட மனிதர்களைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன் இதில் எனக்கு பெரும்பான்மையான நாத்திகர்களை கண்டிருக்கிறேன் தங்களுக்காகவே எனது வாழ்வில் கண்ட ஆத்திகரை அறிமுகப்படுத்தி ஒருபதிவு இடப்போகிறேன் எனது வாழ்வில் எனக்கு நன்மையை செய்தவர்களை விட தீமையை செய்தவர்கள் அதிகம்.
பதிலளிநீக்குபதிவின் தலைப்பு ''பக்திமான்'' விரைவில்...
தேவகோட்டை நண்பரே:
பதிலளிநீக்குஎனக்காக நீங்க சிரமப்பட வேண்டாம்..நாம் ஆத்திகர்கள் பற்றி நன்கு அறிவோம்! :))) ஆனால் உங்க அனுபவத்தை என்னால் யூகிக்க முடியுது. :))
ஒண்ணு மட்டும் தெளிவு படுத்திக்கிறேன். உங்களை மாதிரி தயங்காமல் என்னை "நான் நாத்திகன்"னு பச்சையாக சொல்லிக் கொள்பவர்களில் நானும் ஒருவன்! :)
கீழே உள்ளது நம்ம "கவிதை மாரி ஒண்ணூ"!!!
http://timeforsomelove.blogspot.com/2012/10/blog-post_8669.html
------------------------
நாத்திகன் என்பவன் யார்?
பண்பில்லாதவன்
பாசமில்லாதவன்
அன்பில்லாதவன்
இரக்கமில்லாதவன்
ஆணவம் பிடித்தவன்
அநாகரிகமானவன்
என்றெல்லாம் இகழப்படுபவன்!
உண்மையானவன்
கன்னியமானவன்
மனிதாபமுள்ளவன்
மனசாட்சியுள்ளவன்
தன்மானமுள்ளவன்
நேர்மையானவன்
என்று ஒருநாளும் மதிக்கப்படாதவன்!
கடவுளை வாழ்த்தி
கடவுளை வணங்கி
கடவுளைப் புகழ்ந்து
கடவுளைத் தாலாட்டி
கடவுளைப் பாராட்டி
கடவுளை ஏமாற்றி
தன்னையும் ஏமாற்றி வாழத்தெரியாதவன்!
----------------------
அதாவது ஆத்திகர்கள் மெஜாரிட்டியாக வாழும் இவ்வுலகில், "நாத்திகன் என்பவனை" இப்படித்தான் நினைக்கொண்டு வாழ்கிறார்கள் பலர்! என்கிற அர்த்தத்தில் எழுத முயன்றது. :)
நன்றி, வணக்கம்! :)
கவிதை அருமையாக இருக்கிறது நண்பரே,,, இந்த,
நீக்குஇகழப்படுபவன்,
மதிக்கப்படாதவன்,
வாழத்தெரியாதவன்,
என்பது சமூகம் நினைப்பது உண்மையே,, ஆனால் பசுத்தோல் போர்த்திய புலியாக வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் ஆத்திகனும் இருக்கிறான், நாத்திகனும் இருக்கிறான், என்பது தான் எனது கருத்து.
ஆஹா சூப்பர்....நாத்திகனோ ஆத்திகனோ மனிதநேயத்தோடு வாழ்ந்தாலே போதும்...அருமை சகோ
பதிலளிநீக்குஆஹா ''மனதநேயம்'' இப்படி வாழ்ந்தால் ? எல்லோரும் நலமே,,, நன்றி சகோதரி.
நீக்குவிசித்திகம் என்கிற சொல்லாடலை நான் மிக ரசித்தேன். ஆத்திகம், நாத்திகம் என்பதெல்லாம் அவரவர் நிலைப்பாடு தானே தவிர அவை நிர்ணயிப்பதல்லவே மனித குணங்கள்? மனிதாபிமானமும் அன்பும் உடையவர்கள் இருதரப்பிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். மரணநாளை நினைத்துப் பார் என்று நீங்கள் குறிப்பிட்டது மிகமிகச் சரி. ஒரு கணம் நமக்கும் மரணம் உண்டு, அது எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்பதை உணர்ந்தாலே ஒவ்வொருவரும் தன்னளவில் சிறந்த மனிதராக மாறிவிடுவார்கள். நல்லதொரு அலசலை முன்னெடுத்திருக்கீங்க. தொடர்கிறேன் உங்களை. (உங்க பேரைப் பார்த்துதான் கொன்னுடுவீங்களோ இந்தப் பக்கம் வந்தான்னு பயந்துட்டேன். ஹி... ஹி... ஹி....)
பதிலளிநீக்குபாலகணேஷ் ஸார் அவர்களுக்கு தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குபயப்படாதீங்க நானொரு மீசை வச்ச கொயந்தே அவ்வளவுதான்.
வித்தியாசமான தலைப்பு.
பதிலளிநீக்குஉண்மை தான் ஆத்திகனிலும், கெட்டவர்கள் இருக்கிறார்கள், நாத்திகனிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் சிந்திக்கிரதுனால தான் நீங்க 300 வருஷம் முன்னாடி பிறந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ?
ஒருவேளை நீங்களெல்லாம் இதை படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் தாமதமாக பிறந்தேனோ ? என்னவோ ?
நீக்குமிக உண்மையான பதிவு. இறைவன் பற்றிய என் எண்ணாவோட்டங்களும் உங்களை போலத்தான் நண்பரே ! நாத்திகம் பேசும் பலர் யோக்கியமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் இறைவனை தேடி நேரத்தை வீணாக்காமல் தன் முன்னால் இருக்கும் மனிதனை மனிதநேயத்தோடு பார்க்க முயல்வதுதான் என தோன்றுகிறது !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
சமீப காலமாக லேட்டாகவே வருவதற்கு லேட்டஸ்ட் நன்றி நண்பா...
நீக்குவித்தியாசமான சிந்தனை. விசித்தகன்... இது குறித்து நான் பகிர்ந்த ஒரு கருத்து.....என்னை மட்டும் சுகமாய் வைக்கும் இறைவனை விடுத்து எல்லோரையும் மகிழ்வாய் வைக்கும் ஒருவனைத் தேடுகிறேன்
பதிலளிநீக்குதங்களின் தேடுதல் வித்தியாசமாக இருக்கிறதே.... ஆனால் ?
பதிலளிநீக்குஇறைவன்றி வேறு ''ஒருவனால்'' முயலுமோ ?
வணக்கம்
பதிலளிநீக்குஎப்போது மனிதனை மனிதன் மதிக்கும் பண்பு மேல் ஓங்குதோ. அப்போது.. எல்லாம் சரிந்துவிடும் நன்றாக பதிவில் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனிதனும் மாறி விட்டான்.
நீக்கு