தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 14, 2014

முதல் மரியாதை


சமூகத்தில் உயர்ந்த மரியாதை கிடைப்பது பணம் படைத்தவனுக்கா ? படித்து பட்டம் பெற்றவனுக்கா ? வீரம் உள்ள பலசாலிக்கா ? பண்டைய காலத்தில் புலவர்கள், வழக்காடுகள் நடத்தினார்கள், முடிவில் படித்தவனே உயர்ந்தவன் எனமுடிவும் செய்தார்கள், இதனை வலியுறுத்தி சரஸ்வதி சபதம் (1966) என்ற பெயரில் ஐயா A. P. நாகராஜன் அவர்கள் ஒருதிரைப்படம் இயக்கி மிகப்பெரிய வெற்றியும் கண்டார்.

 காலப்போக்கில் இதில் உயர்ந்தவன் பணம் படைத்தவனே என்ற முடிவுக்கும் வந்தார்கள், மக்களும் இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தது, இன்று இந்த மூவரையுமே பின்னுக்கு தள்ளக்கூடிய நிலைக்கு நாம், நம்மையறியாமல்... மாற்றிக் கொண்டிருக்கிறோம், என்பது மறைந்து கொண்டுள்ள உண்மை. 

ஒரு கோவிலில் விஷேச உற்சவம் சிறப்பு விருந்தினராக.. ஒரு படித்தவரும், ஒரு பணக்காரரும், ஒரு பலசாலியும் வருகிறார்கள் என்றால் யாருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது ?

பணக்காரருக்கு காரணம் அவர் தனது பணத்தால் அனைவரையுமே விலை பேசிவிடுவார் இது என்னைப் போன்ற பாமரனுக்குகூட தெரிந்த உண்மை, 

இதே சூழ்நிலையில் இந்த மூன்று மனிதர்களும் வருகிறார்கள் அந்த மூன்று நபர்களும், சரிசமமான பணக்காரர்கள் என்றுகூட வைத்துக் கொள்வோம், படித்தவன் அந்த இடத்தில் உயர்ந்து நிற்கின்றான்.

இதே சூழ்நிலையில் இந்த மூன்று மனிதர்களையும், ஓரத்தில் தள்ளி விடக்கூடிய ஒரு மனிதர் இருக்கிரார், அவர் ? ? ? இந்த மூன்று மனிதரிடம் இருக்கும் பணத்தில் துளியளவுகூட இவரிடம் இல்லையென்று வைத்துக் கொள்வோம், இவர் மழைக்குகூட பள்ளியருகில் ஒதுங்கியவரும் இல்லை, மிகப்பெரிய வீரனும் இல்லை, இருப்பினும் இவருக்கே முதல் மரியாதை காரணம் என்ன ? அவர்தான் பதவி வகித்துள்ள வார்டு ஆம். இன்று பதவியாளனுக்குத்தான் மரியாதை.

நமது வீட்டுக்கு ஒரு பணக்காரர் வருகிறார், என வைத்துக் கொள்வோம் எங்க வீட்டுக்கு பணக்காரர் வருகிறார் என வெளியில் பீற்றிக் கொள்ள முடியுமா ? இல்லை ஒரு படித்தவர் வருகிறார் என்பதால் எங்க வீட்டுக்கு படித்தவர் வருகிறார், என வெளியில் பீற்றிக் கொள்ள முடியுமா ? இல்லை முஹம்மது அலி ஜின்னாவைப் போலொரு குத்துச்சண்டை வீரர் வருகிறார் என்பதால், எங்க வீட்டுக்கு வீரன் வருகிறார், என வெளியில் பீற்றிக் கொள்ள முடியுமா ? அதே நேரம் ஒரு M.L.A வருகிறார் என்றால் ? எங்க வீட்டுக்கு M.L.A வருகிறார் என மொழி தெரியாதவனிடம் கூட பெருமைபேசி மகிழ்கிறோம்.

ஒரு கவுன்சிலருக்கே இப்படி என்றால், மேலாளர், தாசில்தார், கலெக்டர், சேர்மன், மேயர், I.P.S, M.L.A,  M.L.C,  M.P  சபாநாயகர், முதல்வர், பிரதமர், ஜனாதிபதி, இவர்களைவிட நாளைய இந்தியாவின் ஆட்சியை நிர்மானிக்கும் திரைப்பட நடிகர், நடிகைகள் ? 

ஆக.... இன்றைய வாழ்வில் படித்தவனையும், செல்வந்தனையும், வீரனையும், சுலபமாக பதவியாளர்கள் பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள் காரணம், பதவி கொண்டு பணக்காரராகி விடலாம், அந்த பணம் கொண்டு படித்தவனை தனக்கு கீழ் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம், அந்த பணம் கொண்டு வீரர்களை அடியாட்களாக மாற்றி விடலாம்.

ஆக இன்றைய வாழ்வாதாரத்தில் படித்தவரைவிட, பணக்காரரைவிட, பலசாலியைவிட, பதவியாளனே உயர்ந்தவன், அவனுக்கே  SORRY அவருக்கே, FIRST RESPECT.   

CHIVAS REGAL சிவசம்போ-
போட்டோவை பார்த்தா முதல் மரியாதை கிடைக்காது போல முதல் வெட்டுதான் கிடைக்குமோ ?

அன்பு நெஞ்சங்களே... வலைச்சரத்தில் தற்போது நான் ஆசிரியராகி வெளியிட்ட பதிவு கிளிக் நாந்தாங்கோ......கில்லர்ஜி. கலாமே.....

54 கருத்துகள்:

  1. பதவி எல்லா இடத்துலயும் நாற்காலியை முதலில் போட்டு விடுகிறது...
    தம.1 தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்.சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு தங்களுக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது...
      இணைத்தமைக்கும், ஓட்டுக்கும் டபுள் டக்கர் நன்றிகள்.

      நீக்கு
  2. நம்மூர்ல மட்டும் சொல்லுங்க இந்த பதவி படுத்தும் பாடு...வளர்ந்த நாடுகளில் எல்லாம் அப்படி இல்லைஜி! நம்மூர்லதான் இந்த வட்டம், மாவட்டம் எல்லாம் அதனாலதான் அந்த நாற்காலிக்கும் இத்தனை அடிதடி...பதவி வெறி, ஊழல் .எல்லாமே! புகழ் நம்மைத்தேடி வரணுமே அல்லாமல் நாம் அதைத்தேடிப் போகக் கூடாது. மாறி நடப்பதால்தான் உலகில் பல பிரச்சினைகள். நல்ல பதிவு ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை ஏற்க்கிறேன் வருகைக்கும் கருத்துகைக்கும் நன்றி

      நீக்கு
  3. அறிவுக்கும், படிப்புக்கும் மரியாதை குறைந்து வெற்று பந்தாவுக்கே தற்போது மரியாதை பெருகிவிட்டது. நியாயமான விவாதம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த பதவிக்குத்தானே, அரசியல்வாதிகள் ஓட்டு கேட்கும்போது கை எடுத்துக் கும்பிட்டு, காலில் விழுகிறார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நாம் ஏன் ஏமாற வேண்டும் ?
      வருகைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  5. வலைச் சரத்திலும் எழுதிக் கொண்டு
    தனிப் பதிவும் எழுதுகிறீர்களே நண்பரே
    எப்படி நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்று
    எண்ணினால் வியப்பாக இருக்கிறது நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான்தான் சொல்லி இருக்கிறேனே.... மூச்சு விடுவதை நிறுத்த முடியாது என்று வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம்
    பதவியில் இருக்கும் போதுதான் எல்ல மரியாதையும்.. பதவி வரும் போது பணிவு வரவேண்டும்
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்..த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபனின், வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  7. சரியா சொன்னீர்கள், நம்மூர்ல பதவிக்கு அப்புறம் தான் பாஸ், மேலும் பதவி வந்தால் படிப்பை தவிர எல்லாம் கிடைத்துவிடும். வீரத்திற்கு அடியாட்கள் வைத்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பராக சொன்னீர்கள் தங்களது பாணியில் நன்றி

      நீக்கு
  8. பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வர வேண்டும் தோழா...
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வர வேண்டும் தோழா...

    பதிலளிநீக்கு
  9. ’வேறு போக்கிடம் இல்லாதவன்தான் அரசியலுக்கு வருகிறான்’ என்பதாக யாரோ ஓர் அறிஞர் சொன்னதைத் தங்கள் பதிவு நினைவுபடுத்துகிறது. எதார்த்தத்தைக் காட்சிப்படுத்தும் தரமான பதிவு.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய போக்கு இப்படி இருந்தாலும் ,இந்த உயர்வு பதவியில் இருக்கும் வரை மட்டுமேதானே ?தற்காலிகம் எப்படி என்றும் தலை நிமிர்ந்து நிற்கும் ?
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே தகுதியில்லாதவன் சிலநேரங்களில் முதல் மரியாதை வாங்கி விடுகிறானே....

      நீக்கு
  11. பணம் பத்தும் செய்யும்...அதிகாரம் பதினொன்றையும் செய்யும்

    பதிலளிநீக்கு
  12. அருமை ஜீ ! அருமை ! நிதர்சனமான ஆனால் மிகவும் வேதனையளிக்கும் சமூக உண்மையை மிக இலகுவாக உடைத்துள்ளீர்கள் !

    ஆமாம் ! பவுடர் டப்பா பாப்பாக்களுக்கு தான் முதல் மரியாதை !!!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பவுடர் டப்பா பாப்பா மட்டுமா ? டோப்பா டூப்பர்களுக்கும்தான் நன்றி நண்பரே..

      நீக்கு
  13. நண்பரே!
    ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்!
    பிரம்பெடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது தெரியும்தானே?
    நடத்துங்கள் நடத்துங்கள்!
    உங்கள் வழியில் நாங்களும் தொடர்ந்து வருகிறோம்!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே, தொடர்ந்தால் ? நலமே நன்றி

      நீக்கு
  14. இன்று பதவிதான் பட்டொளி வீசூகின்றது காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பா இந்தக் கோலத்தை வரைந்தது நாம்தானே,,,, வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. அன்புள்ள ஜி,

    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே...! தங்களின் முதல்மாரியாதை யாருக்குச் செலுத்தப்படுகிறது என்பதைக் கொடுவாய் மீசைக்கார நண்பரே நன்றாகச் சொன்னீர்கள். பதிவிக்காரனுக்குத்தான் எல்லாப் பவிசும்.

    பிள்ளையார் பெரியப்பா என்றால்...(பிள்ளையார் சுளிபோட்டு) ஆரம்பித்து இருக்கிறீர்கள். முருகன் சித்தாப்பா என்கிற முறைமாறாமல் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.... குருந்தன் வாத்தியார் முறையில்லாமல்தான் அடித்திருக்கிறார்! இப்ப என்றால் அப்படிச் செய்திருக்க முடியுமா? நீதிமன்றம் சென்றிருப்பீர்கள்...! அல்லது அவரைக் காது மருத்துவமனையில் படுக்க வைத்திருப்பீர்கள்! பரவாயில்லை... அவருக்கு அந்தக் காலம் நல்ல காலம்!

    காணொளியில் சிலருக்கும் பலருக்கும் மதம்பிடித்த விச(ய)த்தை எம்மதமும் சம்மதம் என்று நன்றாகக் காட்டி இருந்தீர்கள்.

    திருவாளர்களின் திருத்தளங்களைப் பற்றி....
    திரு.துரை செல்வராஜு,
    திரு.பெரியார் G.M.B.
    திரு.புலவர் இராமாநுசம்
    திரு.ரமணி.S
    திருமதி.ராஜலட்சுமி பரமசிவம்
    திரு.பழனி கந்தசாமி
    கவிஞர்.நா.முத்து நிலவன் அய்யா
    திரு.கவியாழி கண்ணதாசன்
    திருமதி.மஞ்சுபாஷிணி சம்பத்குமார்

    இவர்களின் வலைத்தளம் பற்றிட வாய்ப்பு கொடுத்து... அவர்களைப் பற்றி நல்ல பல கருத்துகளை வழங்கியது அருமை.

    அரபு எமிரேட் 43ஆவது தேசியதினவிழவில் கம்பீரமாக நிற்கிறீர்கள். தங்களுக்கு சல்யூட்!

    தொடர்ந்து அசத்துங்கள்...!
    பாராட்டும்... வாழ்த்துகளும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  16. அன்பின் ஜி..
    வியப்பூட்டுகின்றது - தங்களின் உழைப்பு!..

    காலத்திற்கேற்ற - விழிப்புணர்வு பதிவு தங்களுடையது..
    அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி காலத்திகேற்க கொடுப்பதே சிறந்த பதிவாக இருக்க முடியும் நண்பரே நன்றி

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே!

    தாங்கள் அலசி ஆராய்ந்து சொன்ன கருத்துக்கள் உண்மைதான்.

    "கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு!" என்பதெல்லாம் அந்தக் காலமாக போய் விட்டதோ. என எண்ண வைக்கிறது தங்கள் பதிவு.

    அற்புதமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
    வலைச்சரத்தில், முதல்நாள் என் தாமத கருத்துக்கு வருந்துகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கற்றோரின் சிறப்பு இன்று காணாமல் போய் விட்டேதே இதுவே எமது ஆதங்கம் வருகைக்கு நன்றி சகோதரி

      நீக்கு
  18. இன்றைய உலகில் எது முதன்மை பெறுகிறதோ அதை அழகாய் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் ! கொலை கொள்ளை வன்கொடுமை செய்பவன் கூட அரசியலுக்கு வந்தால் அவனுக்கும் சல்யூட் அடிக்கும் காவல்துறை ..அதுதான் அரசியலை தேர்ந்தெடுக்கிறார்கள் போல இருக்கே ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர்கள் தேர்ந்தெடுப்பது இருக்கட்டும் நாமேன் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. நல் அலசல்! பாராட்டு!

    பதிலளிநீக்கு
  20. ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியப்பணிக்கு முதல் மரியாதை கொடுத்த ஆசிரியருக்கு நன்றி

      நீக்கு
  21. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  22. பதவி வரும் போகும். ஆனால் பெற்ற கல்வி? எனவே ‘கற்றோருக்கு சென்றவிடமெல்லாம சிறப்பு’ என்பதே சரி என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தாங்கள் சொல்வது உண்மையே இன்று மாறி விட்டதே 80த்தான் வருந்தி வலியுறுத்திகிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே!

    வலைச்சரம் சென்று தங்களின் சிறப்பான பதிவை கண்டு கருத்துரையும் பதிந்து வந்தேன்.

    வலைச்சரத்தில், என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். என் தளத்திற்கும் வந்து என் பதிவுகளுக்கு கருத்து தந்து நான் எழுதுவதற்கு ஊக்கமளிப்பதற்கும்,என் நன்றிகள்.

    வலைசரக்கருத்துரையில் விளையாட்டுக்குத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன். தவறெனின் வருந்துகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோதரி இதில் மன்னிப்பு எதற்க்கு ? உகாண்டா மொழியில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  24. சகோதரரே!..

    பதவி(யில்) இருக்கும்வரை தானே இந்த மரியாதையும் சிறப்பும்!
    அது இல்லாமற் போகும்போது அவரும் உதவி என்று
    வந்துதானே ஆகவேண்டும்!..

    நல்ல சிந்தனை!. வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பதவி போனவரும் பதவி உள்ளவனுக்கே மரியாதை கொடுக்கவேண்டிய நினைத்து தள்ளப்படுகிறானே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. பதவியைப்பற்றி பேசவேண்டியநேரம்தான் இது. வழ்த்துக்கள்சகோ
    ”காலம் பொன் போன்றது” நிரூபிக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  26. அதிகாரம்.பதவி இரண்டையும் வைத்து மரியாதை --?

    சித்தார்த்தர் புத்தரானபின் /அசோகர் புத்தமதம் தழுவியபின் ,ஏசுநாதர் சிலுவையில் அடித்தபின் ஆழமான மக்கள் மரியாதை . பண்பு அன்பு சேவைகே .நல்ல எண்ணங்கள் நிலைத்து மரியாதை பெறுபவை.திருக்குறள் ,கபீர் தோகை இது உணர்ந்து போற்றப்படும் மரியாதை. தற்காலிகமல்ல. நிரந்தர மரியாதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் முதல் வருகைக்கு முதல் மரியாதை கொடுத்து வரவேற்கிறேன்
      தெளிவான விளக்கவுரைக்கு நன்றி ஐயா.

      நீக்கு