சனி, டிசம்பர் 13, 2014

விளம்பரம், என்ற விழும்பாரம்விளம்பரங்களால், மக்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உள்ளதா ? இந்த விளம்பரங்களால் மக்கள் ஏமாறுகிறார்களா ? அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா? அல்லது மக்களை ஏமாற்றிக் கொண்டு தானும் ஏமாறுகிறார்களா ? எனக்கென்னவோ இது அவசியமில்லாத வேலை என்றே தோன்றுகிறது. ஒரு பொருளின் தரத்தைப் பார்த்து யாரும் வாங்குவதில்லை ! 

தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என இவர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

 உதாரணத்திற்கு கண்ணாடி (GLASS) இதை விற்கவேண்டும் என்பதற்காக பிரபலமான திரைப்படநடிகர் "மோல்டிங்ஸ்டார்" மொக்ஸ் வந்து ஸ்டைலாக மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து விட்டு அவருக்கு வேண்டிய CHEQUEகை அவர் வாங்கி கொண்டு போய் விடுவார். இந்தக் கண்ணாடியின் தரம்பற்றி அவருக்கு சத்தியமாக தெரியாது.


அதைப் போல புதுமையான சுருட்டு ஒன்றை தயாரிக்கிறார்கள் அதை விளம்பரப்படுத்துவதற்கு "வால்டர்" வடுகநாத் வந்து ஸ்டைலாக புகைத்து காண்பித்து இதை புகைக்கும்போது மெய் மறந்து பறப்பதுபோல் முகபாவனையை காண்பித்து விட்டு அவருக்கு வேண்டிய CHEQUEகை அவர் வாங்கி கொண்டு போய் விடுவார்.

(புகைத்து காண்பித்ததிற்காக அவர் மூன்று நாளும் தொடர்ந்து வாயை கழுவி இருப்பார் என்பது வேறுவிசயம்) 

அதைப் போல புதிதாக தோன்றிய நிறுவனம் ஒன்றின் வேஷ்டியை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த "மாஸ்டர்" மாவுடியான் வருகிறார், அவரும் வேஷ்டியை கட்டிக் கொண்டு அழகாக நடந்து காண்பித்து விட்டு அவருக்கு வேண்டிய CHEQUE கோடு ஒரு பெட்டி நிறைய வேஷ்டியையும் வாங்கி கொண்டு போய் விடுவார். 

COMPANYகாரர்கள் இவர்களுக்கு கொடுக்கும் பணத்தை தனது லாபத்திலிருந்து கொடுப்பதில்லை, விலையை உயர்த்தி நமது தலையில் வைக்கிறார்கள். 

இவர்களுக்கு கொடுக்கும் பணம்  பொருள் வாங்கும் மக்கள் பணமே ! இது ஏன் மக்களுக்கு தெரிவதில்லை ? எந்தப் பொருளையும் தரம் பார்த்து வாங்கத்தொடங்கினால் இவர்கள் மக்களை ஏமாற்றுவார்களா ? நானும்கூட விளம்பரப் பொருள்களை வாங்குவதை தவிர்த்து வந்தேன், தவிர்த்து, தவிர்த்து கடைசியில் என்ன ஆனது ? 
பருப்பு தொடங்கி, செருப்பு முதல் சமூக பொருப்பு இல்லாத கருப்பு உள்ளம் படைத்தவர்கள் உறுப்பு சாதனங்கள் வரை காண்பித்து வெறுப்பு ஏற்றுகிறார்கள் இதற்க்கு யாராவது மறுப்பு சொல்ல முடியுமா ? 

விளம்பரங்களில்லாத பொருளே இல்லை என்றாகி விட்டது. இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது இவர்கள் மக்களை ஏமாற்றவில்லை மக்கள் தங்களை ஏமாற்றச் சொல்கிறார்கள் என்பது.


 எதிர் காலத்தில் புகழ் பெறப்போகும், கொங்கனி எழுத்தாளர் சிவாதாமஸ்அலி சொல்லி வைக்கிகிறார் எந்த விசயத்திலும் நீயாக முடிவெடு பிறர் சொல்லி எடுத்தால் ? உனது மூளையை அவன் ஆட்சி செய்கிறான் நீ ஒரு நடை பிணத்திற்கு சமம் என்று. 

விளம்பரம் நமது தலையில், விழும்,பாரம் ஆகவே இனியெனும், விளம்பரப் பொருள்களை தவிர்த்து நமது பணம், நமக்குமில்லாமல், COMPANYகாரர்களுக்கும் இல்லாமல், பணமுதலைகளிடம் போய் வெட்டியாக SWITZERLAND BANKல் போய் வீணாக உறங்கி கிடந்து INDIA வுக்கு திரும்பாமல் போவதை தவிர்க்க முயற்சிப்போம்.
F.P- 2012/6

57 கருத்துகள்:

 1. நீங்கள் சுருட்டு பிடிக்கிறமாதிரியான புகைப்படம் எங்களை ஏமாற்றவா இல்லை உங்களையே எம்ற்றக்கொள்ளவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் யாரை நண்பா ஏமாற்றப்போறேன் ஒரு ஆளுக்கிட்டே விசிட் விசா கேட்டுக்கிட்டே இருக்கேன் அவருதான் என்னை ஏமாத்துறாரு....

   பரவாயில்லையே முதல் ஆளா வந்துட்டீங்களே.... அதற்க்கு மட்டும் நன்றி.

   நீக்கு
  2. அந்த விசிட்டர் விசாவை நான் உங்களுக்கு எப்பவோ அனுப்பிவிட்டேனே!!!

   இந்த பதிவை நீங்க வார நாட்கள்ல எழுதினதுனால, நான் சீக்கிரம் படிச்சுட்டேன்.
   கருத்துக்கு நன்றி இல்லையா?

   நீக்கு
  3. ஹி,,, ஹி,,, விசா அனுப்பிட்டீங்களா.... அப்படீனாக்க கருத்துக்கு டபுள் நன்றி.

   நீக்கு
 2. பல பேர்கள் ஆட்சி செய்வது உண்மை...!

  ஜி... புகைப்படத்திற்கு தானே Stills... மற்றபடி....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே போஸ் கொடுப்பதற்காக வாயில் சுருட்டை வைத்து மற்றவரின் சிகரெட் புகையை எனது முகத்தில் ஊதவிட்டு எப்படியோ இருமி சமாளித்து விட்டேன், காரணம் வால்டர் வடுகநாத் மெய்மறந்து பறப்பதுபோல் என்று வேறு எழுதிவிட்டேனே... ஆகவேதான் இத்தனை கஷ்டம் மற்றபடி நான் புகைப்பது நஹி....

   நீக்கு
 3. விளம்பரங்களைக் கண்டு பொருட்களை வாங்கிக்
  குவிப்பவர்களுக்கு நல்ல அறிவுரை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அறிவுரை சொன்னதாக நினைக்கவில்லை நண்பரே எனது வேதனையை (இருமி )கொட்டி இருக்கிறேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. விளம்பரப்படமாக
  விளம்பரம் பற்றி
  விழிப்புணர்வு பதிவு....
  சூப்பர் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழிப்புணர்வு ஆஹா சரியாகச்சொன்னீர்கள் சகோதரி இந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் நம்ம தேவகோட்டை காரவுங்களுக்குத்தான் வரும் காரைக்குடிகாரர்களுக்கு வரும்..... ஆனா வராது.....

   நீக்கு
 5. ஓட்டு போடுவதிலிருந்தே...ஏமாற்றுகிறார்கள் அவர்கள். பிறந்ததிலிருந்து ஏமாற்றப்படுகிறார்கள் இவர்கள்... வால்டர் வடுகநாத் கையில் சுருட்டு இல்லாமல் காட்சியளித்தால் அட்டகாசமாய் இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே... சுருட்டை வாங்கிட்டாப்போச்சு.

   நீக்கு
 6. மிக அருமையான கட்டுரை! விளம்பரங்கள் இல்லாத பொருளே இல்லாது போய்விட்டன! மிக அருமையாக மக்களை மூளைச்சலவை செய்கின்றன விளம்பரங்கள்! நல்லதொருபதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்தை பதிந்தமைக்கும் நன்றி நண்பரே....

   நீக்கு
 7. கில்லர்ஜி. உங்களுக்கு விளம்பரங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் தெரியவில்லை.விளம்பரங்களால் ஒரு பொருள் அறிமுகமாகலாம், வாடிக்கையாளரின் திருப்தியைப் பெறாமல் ஒரு பொருள் சந்தையில் செல்லுபடியாகாது.வாடிக்கையாளர் விலை பொருளின் நம்பகத்தன்மை, விற்பனையாளரின் சேவை இதையெல்லாம் தெரிந்துதான் வாங்க முற்படுகிறார். விளம்பரங்கள் மக்களைக் கவரவே உபயோகமாகும்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அவர்களின் வருகைக்கு வணக்கம்,
   ஐயா 20 வருடங்களுக்கு முன்பு இந்த எழவு எல்லாம் இல்லாம நாம பொருட்கள் வாங்க வில்லையா ? ஒரே ஆளு நடிகைனு வச்சுக்கங்களேன் இந்த சோப்பை வாங்குங்க அப்படினு சொல்கிறாள், மறுநிமிடமே மற்றொரு சோப்பை வாங்கச்சொல்கிறாள் ஏன் நமக்கு தெரியாதா ? சோப்பின் தரம் இவள் சொல்லி வாங்குவோம் பிரட்சினை இல்லை அவளுக்கு கொடுக்கின்ற சம்பளம் நம்ம காசுதானே நமது உழைப்பை நமது பணத்தை ஏன் ? இப்படி சோப்புபோல கரைக்கனும் பணத்தை வீண்விரையும் செய்யும் மனிதன் மட்டுமல்ல நாடும் முன்னேற வழியேது ஒருவேலைக்கு பால் இல்லாமல் எத்தனையோ குழந்தைகள் நலிந்தே இறக்கிறார்களே அதற்க்கு கொடுக்கலாமே அந்த பணத்தை எப்படி ? இந்த சிந்தனை வரும் நம்நாட்டானுக்கு…. நாட்டுக்காக, நமக்காக, உயிர் நீத்த இராணுவ வீரர்களின் சவப்பெட்டியில் ஊழல் செய்தவனுக்கே நாம் மீண்டும் வாக்களிக்க வில்லையா ? விஞ்ஞான வளர்ச்சி எமது பார்வையில் மனித வாழ்வுக்கு வீழ்ச்சியாகத்தான் தெரிகிறது ஐயா தவறாக தர்க்கம் செய்யவில்லை தவறெனில் மன்னிக்கவும். நன்றி.

   நீக்கு
 8. விளம்பரத்தின் இழிவுகளை
  விளம்பரம் மூலமே சொன்ன
  வித்தகரே! விளம்பரம்
  மக்களின் தலையில்
  விழும் பாரம் மட்டுமல்ல
  பண்பாட்டுக்கு வெகு தூரம்!
  ஆணின் உள்ளாடைக்கு
  பெண்மூலம் விளம்பரம்!
  மிட்டாய்க்காக விலைபோகும்
  பண்பாட்டு அவலம்.!
  விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவிதை போன்றே கருத்துரையா ? என்து வேதனையைத்தான் பகிர்ந்தேன் நண்பரே...

   நீக்கு
 9. அனைவரும் அவசியம் யோசிக்க வேண்டிய விஷயம்
  இடையில் டி ஆர் பாணி அடுக்கு மொழியை
  அதிகம் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களின் வாழ்த்துக்காகவே இன்னும் இதனைக்குறித்து மூன்று பதிவு இடலாம் என்ற எண்ணம் விளைகிறது நன்றி.

   நீக்கு
 10. விளம்பரமே வேண்டா என்கிற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அண்மைக்காலமாகச் சில விளம்பரங்கள் நம் பொறுமையையும் மானத்தையும் சோதிப்பதென்னவோ உண்மைதான். இது பற்றி நான் விரைவில் கட்டுரை எழுத இருந்தேன் 'யுவா' இதழில். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். இருந்தாலும், என் கட்டுரை வந்ததும் தெரிவிக்கிறேன், படித்துப் பாருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே விளம்பரத்தால் நமது பணம் விரையமாகிறது என்பதைத்தான் நான் வலியுருத்துகிறேன் இன்றைக்குப் பாருங்கள் கடலை மிட்டாய்க்குகூட தொலைக்காட்சியில் விளம்பரம் அதன் செலவு யார் ? தலையில் இது தேவையா ? இதுதான் எமது கேள்வி, இவர்கள் சொல்லாவிட்டால் நமக்கு ருசி தெரியாதா ? இப்பொழுது உள்ளாடை விளம்பரங்கள் சாதாரணம் ஆகிவிட்டது வீட்டில் உட்கார்ந்து குடும்பத்துடன் எப்படி பார்ப்பது ?

   நீக்கு
 11. நீங்க சொல்வது சரிதான் ,ஒரு தக்காளியைக் கூட அவன் வைத்த விலைக்கே மாலில் வாங்கி ,அது பில் போட ஒரு மணி நேரம் காத்துக்கிடக்கிறதுக்குப் பதிலா கூடை தூக்கி வருபவர்களிடம் வாங்கி உதவலாமே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸூப்பர் பகவான்ஜி நம்ம இருவருக்குமே ஒரே வழியில் சிந்தனை நன்றி.

   நீக்கு
 12. விளம்பரம் செய்யாமல் மக்களிடம் பொருட்களை கொண்டு செல்ல முடியாது, விளம்பரம் பலமான ஆயுதம். அமீர் கான், ஷாரூக் கான், சூர்யா, விஜய் இவங்க கையில் பன்றி மூத்திரம் அடைத்த பாட்டிலை கொடுத்து போஸ் குடுக்கச் சொன்னாலும் அது பிச்சுகிட்டு விற்கும், எல்லோரும் வாங்கிக் குடிப்பான்.

  தற்போது வரும் விளம்பரகளில் உண்மையை பேசும் விளம்பரங்கள் மிகவும் குறைவு. ஆறே வாரங்களில் சிகப்பாக ஆக முடியாது, ஒரு வேளை அது உண்மையாயிருந்தால் அவன் ஆறே வாரத்தில் கம்பனியை இழுத்து மூடியிருப்பான். பெப்சி தினமும் குடித்திருந்தால் டெண்டுல்கர் பத்து வருடங்களுக்கு முன்னாடியே ஆப்பு கழண்டு வீட்டுக்குப் போயிருப்பான். பூஸ்ட், போர்விட்டா, மதர் ஹார்லிக்ஸ்,டாட்டர் ஹார்லிக்ஸ், எதிலும் உடலுக்கு தெம்பு ஒருபோதும் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கோயம்புத்தூரில் ஈமு கோழிக்கு முதலீடு செய்யும்படி சொன்ன வீரத் தமிழன் சத்தியராஜ், அந்த முதலாளிகள் ஊரை விட்டு ஓடிய பின்னர் அந்த கோழிகள் பட்டினால் நீரின்றி சாகக் கிடந்த பொது மானங் கெட்ட தமிழனானான். பணம் போட்டவன் தலையில் துண்டு.

  ஆம், விளம்பரத்தில் போடும் பணத்தையும் பொருள் மீது தான் வைத்து விற்பான், அது அவன் சாமர்த்தியம். மக்கள் விழிப்புணர்வோடு தரத்தை மட்டுமே பார்த்து பொருளை வாங்க வேண்டுமா? எழுதிக் கொள்ளுங்கள் உங்கள் நிறைவேறாத ஆசைகள் லிஸ்டில், ஒருக்காலும் இது நடக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரை கண்டு பிரமித்து விட்டேன் நண்பரே... சவுக்கால் அடித்தது போலிருக்கிறது வார்த்தைகள்.
   நான் எழுதிவைக்காமலேயே தெரியும் நண்பா மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் கூத்தாடிகள் கையில் ஆட்சியை கொடுத்து தும்பை விட்டு வாலைப்பிடிக்க அலைய வேண்டிய அவசியமிருக்காதே....

   நீக்கு
 13. ஆமாங்க ஏன் ஈமு கோழிகளுடன் போஸ் கொடுக்கவில்லை?......

  அருமை அய்யா. ஏமாறுவதால் ஏமாற்றுகிறார்களா? ஏமாற்றுவதால் ஏமாறுகிறோமா?.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாறுவதால்தான் ஏமாற்றுகிறார்கள்,
   ஏமாந்து விட்டு ஏமாற்றுகிறான், என்பவன் ஏமாளி மட்டுமல்ல முட்டாளும்கூட வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 14. விளம்பரம் விழும்பாரம் தான் ஆனா ரசிச்சு .....போலவே இருக்கே

  பதிலளிநீக்கு
 15. இந்த விழும்பாரத்தை இறக்கி வைக்கும் காலம் வராமலா..போகும்.

  பதிலளிநீக்கு
 16. விழிப்புணர்வூட்டும் பதிவு நண்பரே
  படங்கள் அருமை அருமை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  நல்ல பதிவு ..
  உங்களுக்கான செக்கை தந்துவிட்டேன்... ஹ ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ''செக் ''வரவில்லையே தோழரே முகவரி சரியாகத்தானே எழுதினீர்கள் ?

   நீக்கு
  2. அட அட இப்படிக் கூட பரிமாற்றங்கள் எல்லாமும் நடக்குதா?!!

   நீக்கு
 18. கில்லர் ஜி இடுகை நல்ல இடுகை! ம்ம்ம் விளம்பரங்கள் என்பது ஒரு பொருள் சந்தைக்கு வரும் போது அப்படி ஒரு பொருள் வந்திருக்கின்றது என்பதை அறிவிக்கத்தான். அதை மக்கள் தான் தங்கள் மூளையை உபயோகித்து வாங்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். விளம்பரம் இல்லை என்றால் எப்படித் தெரியும் ஒரு பொருள் வந்துள்ளது என்பது பற்றி?! பதிவர்களையே எடுத்துக் கொள்வோம். நாம் மற்ற தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் இடும் போது நம் இடுகையின் லிங்கைக் கொடுத்து வாசிக்கச் சொல்கின்றோம் இல்லையா? நமது இடுகை அவர்களது ரீடரில் அப் லோட் ஆகாமல் இருந்தால் நாம் சொன்னால்தானே தெரியும் இல்லையா? (நாங்கள் சொல்லுவதில்லை என்பது வேறு விஷயம் ஹாஹஹ்). அதைப் படிப்பதும், படிக்காததும், பின்னூட்டம் இடுவதும் இடாததும், பின்னூட்டம் நேர் மறையாகவோ, எதிர் மறையாகவோ இடுவதும் அவரவர் விருப்பம்! அது போலத்தான்! என்ன நாம் செய்வது வணிகம் அல்ல. அவை வணிகம் அவ்வளவுதான் வித்தியாசம்!! ரொம்ப ஓவரோ?!!! விளக்கம்!!!

  அத விடுங்க....என்ன சொக்கன் நண்பர் சொன்னத இப்ப க்ராஃபிக்ஸ்ல வேட்டி கட்டி புகைப்படம் போட்டு அவரை சமாதானப் படுத்தினீங்களா இல்லை உங்களையேவா?!! ஹீஹீஹீஹீ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே,,,, மேலே ஐயா திரு.ஜியெம்பி அவர்களுக்கு நான் கொடுத்த பின்னூட்டத்தை படிக்கவும், நமது பரிமாற்றங்களால் யாருக்கும் செலவு இல்லையே,,, இன்னும் சொல்லப்போனால் நாம் நெட்டுக்கு செலவு சமூகத்திற்க்கு நல்ல விசயங்களை அளிக்கிறோம் இதனால் நமக்கு வருமானம் இருக்கிறதா ? இல்லையே ஆண்களின் உள்ளாடைக்கு பெண்களை ஏன் ? உபயோகப்படுத்த வேண்டும் கடலை மிட்டாய்க்கு தொலைக்காட்சியில் விளம்பரம் அந்தச்செலவு எல்லாம் யார் தலையில் விழுகிறது ? இவர்கள் சொல்லாவிட்டால் நமக்கு கடலை மிட்டாயின் ருசி தெரியாதா ?

   நீக்கு
 19. நல்ல பொருளுக்கு
  விளம்பரம் தேவையில்லையே!
  ஆயினும்,
  நல்ல பொருளை அறிமுகம் செய்ய
  விளம்பரம் தேவை தான் - அந்த
  விளம்பரங்களில்
  பொய் இருப்பதை விட
  வெளிப்படுத்தும் முறை
  நமது பண்பாட்டை மீறுகிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே,,,, நமது பண்பாட்டை மீறுகிறதே..... உண்மைதான் இதைத்தான் நான் குற்றம் சுமத்துகிறேன்,

   நீக்கு
 20. நல்ல அறிவுரை சார் ஆனால் விளம்பரமோகத்தில் விழும் மக்கள் பலர்!ம்ம்

  பதிலளிநீக்கு
 21. Your comment will be visible after approval. // தனிக்கையை கொஞ்சம் தயவுகூர்ந்து நீக்கலாமே பிரபல்யம் உங்களுக்கு யார் சார் கோடாரி போடுவார்கள்§ஈஈ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தணிக்கை தற்போது எமக்கு அவசியமென்றே கருதுகிறேன் விரைவில் எடுத்து விடுகிறேன் சிலர் இதை வெளியிட வேண்டாமென சொல்லி அறிவுரை கூறுபவர்களும் உண்டு, மேலும் எம்மை தாக்கும் வார்த்தைகளை நான் இதுவரை மறைத்ததில்லை அதற்க்கு தகுந்த பதில் கூறி வெளியிடுவேன். ஆலோசனைக்கு நன்றி நண்பா,

   நீக்கு
 22. விளம்பரம் வியாபாரத்தின் உக்தி என்பதால் அடிக்கடி விளம்பரம் போட்டு அந்த பொருளையே வாங்காமலும் இருக்கச் செய்துவிடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகை தரும் கவிஞர் ஐயா அவர்களுக்கு நன்றி.

   நீக்கு
 23. விளம்பரம்
  வியாபாரம் விளம்பும்
  தன்னிலை ஏற்றமே...
  அதனைத் தொடர்வது வெறும் பாரமே...

  அருமையான பதிவு நண்பரே...

  பதிலளிநீக்கு
 24. விளம்பரங்களே இவ் உலகை ஆள்கிறது!.
  விளம்பரங்கள் இல்லை என்றால் நாம் கற்காலத்தில்தான் வாழ முடியும்.
  விளம்பரங்கள் இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு எந்த டிவி சேனலும் வராது. படிக்க பத்திரிகைகளும், நாளிதழ்களும் கிடைக்காது. விளம்பரங்கள் இல்லை என்றால் விளையாட்டுப் போட்டிகள் கிடையாது. விளம்பரங்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை!.

  பதிலளிநீக்கு
 25. வருக தோழரே,,,, இந்த நிலைக்கு நம்மை கொண்டுவந்து செலவு வைத்ததது யாரு ? சொந்த பணத்துல சூனியம் வச்சுக்கிட்டது போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 26. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  பதிலளிநீக்கு
 27. என்னது நண்பரே!....“கனவில் வந்த காந்தி” பதிவையே காணோம்.????

  பதிலளிநீக்கு
 28. சொல்லால் மட்டும் நம்பாதே! சுயமாய் சிந்தித்து நீ தெளிவாய் . நான் சொல்லவில்லை ஞானி சொன்னது.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...