பாட்டி பட்டம்மாவும்,
பேத்தி ப்ரீத்தியும்.
பாட்டி, எனக்கு கதை சொல்லு.
சரி, ஊர்க்கதை சொல்றேன்.
தெருமுனையில் உள்ள பிள்ளையாரை
வணங்காதவன் பிள்ளையார்பட்டி போய்த்தான் வணங்குவேன்னானாம்.
கரிசல்குளத்திலே பரிசல்ல
போகும்போது விரிசல் விழுந்ததால் பரிமளாவுக்கு பரிசம் போடாமலே திரும்பினாங்களாம்.
தேவகோட்டைக்கு, தேவயானியை
தேடிப்போனவன் தேவாங்கு தைலம் வாங்கிட்டு தேவிபட்டணம் போனானாம.
கமுதியிலிருந்து
பரமக்குடிக்கு கமுதக்குடி வழியா நடந்து போனவன், குளிக்கும்போது முதலை கடிச்சு
செத்தானாம்
கண்டமனூர் கண்டக்டர்
கண்ணுச்சாமி, கண் டாக்டர் கண்ணபிரானை கண்டந்துண்டமா வெட்டிட்டானாம்.
வெள்ளையபுரம்
வெள்ளைச்சாமி, வேலாண்டி பாளையம் வேலுச்சாமிய வேல்க்கம்பால குத்திட்டானாம்.
சிங்கம்புணரி நரிகிட்ட
தோற்றுப் போன செங்கல்பட்டு சிங்கம், அசிங்கப்ட்டு சிங்கமுத்துவை கடிச்சுப்புட்டு
ஓடிருச்சாம்.
வேல் இருக்க பயமேன்னு
சொல்லிகிட்டே போன, வேலாயுதம் தேர்வேலியில தேர்ல நசுங்கி செத்தானாம்.
திண்டுக்கல்லுக்கு
முண்டுக்கல் வாங்கபோன, சிக்கல் பாண்டுரங்கன் வண்டு கடிச்சு வத்தலக்குண்டு
போனானாம்.
அண்ணாமலை பொண்டாட்டி
உண்ணாமலை, திருவண்ணாமலைக்கு வண்ணான்குண்டு வழியாத்தான் போவேன்னாளாம்.
தாராபுரம் ராதாவும், ராதானூர்
தாராவும் ஏகாம்பரத்துக்குத்தான் வாக்கப்படுவேன்னாங்களாம்.
காயல்பட்டணம்
கயல்விழியும், ராமேஷ்வரம் ரமேஷும் கல்யாணமாலை மூலமாத்தான் கல்யாணம் செஞ்சாங்களாம்.
காஞ்சிபுரத்துல கஞ்சிக்கு
வழியில்லாதவன் குளித்தலை வந்து தலைக்கறிதான் வேணும்னு கேட்டானாம்.
வண்டலுக்கு,
வியாபாரத்துக்கு அனுப்புன சுண்டல் பண்டலை தண்டல்காரன் தூக்கிட்டு ஓடிட்டானாம்.
பல்லாவரம் பல் பாக்டர்
பல்ராமும், கண்ணங்குடி கண் டாக்டர் கண்ணகியும் காரைக்கால் காலேஜுல படிக்கும்போதே
விவாகரத்து செஞ்சுகிட்டாங்களாம்.
கீழக்கரை கீர்த்திவாசனை
கொன்ன, சேதுக்கரை சேதுவை வேலூரிலிருந்து, ஜெய்ப்பூர் ஜெயிலுக்கு
மாத்திட்டாங்களாம்.
திருநெல்வேலியில நெல்லை வித்த
அய்யாச்சாமி, நெய்வேலியில போயி நெய் வியாபாரம் பார்த்தானாம்.
தீராக்கொடுமை தீரும்னு
கொடுமலூர் போனவன், தீராம கோபப்பட்டு கோபாலபட்டணம் போனானாம்.
பீதாம்பரம் விட்ட, பம்பரம்
சிதம்பரம் கண்ணுல அடிச்சு தாம்பரம் ஆஸ்பெட்டல்ல சேர்த்துட்டாங்களாம்.
ஏண்டி... பாபநாசம் குரங்கு
படியவிட்டு எறங்குன்னு பேத்திகிட்ட என்ன கதை சொல்றே... வந்து சோத்தை வெய்யிடி,
ஆக்கங்கெட்டகூவை.
இரு, உங்க தாத்தாவுக்கு
சோறு ஊட்டி விட்டு வந்து சொல்றேன்.
பாட்டி, நீ பாட்டுப்பாடி
தாத்தாவுக்கு ஊட்டி முடிக்குறதுக்குள்ள ஊட்டிக்கே போயிட்டு வந்துருவேன் நான் போயி,
சேடபட்டி செவிட்டு பாட்டி செல்லாயிகிட்டே கேட்டுக்கிறேன்.
அன்பு நெஞ்சங்களே, 15.12.2014 முதல் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கும் எமக்கு வலைச்சரத்திற்கு வருகை தந்து தங்களது கருத்துரையை பரிமாறிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்(ல்)கிறேன்.
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வணக்கம்
பதிலளிநீக்குஜீ
பாட்டி சொன்ன கதை மிக அருமையாக உள்ளது... அறியாத புதிய கதை தங்களின் பதிவுவழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
நிச்சயம் எங்களின் ஒத்துழைப்பு எப்போதும் இருங்கும் தொடருங்கள் ஆசிரியர் பணியை.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதை கேட்டு, கதை கேட்டு வளர்ந்ததுதான் நமது நாடு நன்றி நண்பர் ரூபன் அவர்களே...
நீக்குவலைசர ஆசிரியர்கிட்டே..போயி.. அவருகிடடயே.. சொல்லிட்டு பரிமாறிவிட்டு வந்து..பிறகு செல்லாயிகிட்டே கேட்டுக்கிறேன்.
பதிலளிநீக்குசரி சரி வாங்க,,,,
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் பதிவை தமிழ் மணத்தில் இணைக்க வில்லை நான் இணைத்து விட்டேன்...
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு நன்றிகள் நண்பரே,,,
நீக்குஎன்னது..ஓட்டுப்பெட்டிய .......துாக்கிட்டு ...... ஓடிப்...போயிட்டாங்களா....!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஇருக்கு நண்பா...
நீக்குஇந்த கதையை படிச்சு புறிஞ்சுக்கிறதுக்குள்ள நான் தாத்தாவாகி விடுவேன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவலைச்சரத்துக்கு வரச் சொல்லிட்டீங்க இல்ல, நீங்க ஆசிரியரான உடனே, உங்களை கேள்வி மேல கேள்வி கேட்டு திணறடிக்கிறேன் பாருங்க .
ஹலோ உங்க லெவலுக்கு நான் கிடையாது அப்புறம் நான் அழுதுடுவேன்.....
நீக்குகில்லர்ஜி ரூம் போட்டு யோசிச்சிருப்பிங் போல. வலைச்சரம் ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குரூமுக்குள்ளே இருந்துதான் யோசிக்கிறேன் சில நேரங்களில் கும்முனு யோசனை வரும் கும்மாச்சி வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா....
நீக்குகதை கதையாம் காரணமாம்...
பதிலளிநீக்குஆசிரியப்பணிக்கு பணிசெய்ய ஆரம்பித்து விட்டீர்கள் போலும். அசத்துங்கள்...அங்கும் தொடரும் எங்கள் ஆதரவு. தம 2
வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்குக்கும், நன்றி. தேவகோட்டை சகோதரியின் ஆதரவு இல்லாமலா ? வலைச்சரம்.
நீக்குஎங்கெங்கோ போய் எதையெதையோ வாங்கியவர்கள் புதுக்கோட்டை போய் புத்தகம் வாங்கியிருக்கலாமே?நேரமிருந்தால் முத்து நிலவன் சாரையும் பார்த்துவந்திருக்கலாமே?முடிந்தால் சொல்லுங்கள் அப்படியாய் போனவர்களிடம்/
பதிலளிநீக்குபுதுக்கோட்டைக்கு புத்தகம் வாங்கப்போன புருஷோத்தமன் முத்து நிலவன் ஐயா மலேசியா போய்விட்டதால் பித்துப்புடிச்சு பித்துக்குளி போயிட்டானாம்.
நீக்குவருகைக்கு நன்றி விமலன் ஸார்.
வலைச்சர ஆசிரியர் பணியா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே....
நீக்குதம 4
பதிலளிநீக்குவலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அம்மா
நீக்குமுன்பு ஒரு திருமண அழைப்பு. இப்போது ஒரு ஊர்க்கதையா.? பேஷ்... பேஷ்.
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.
நீக்குகில்லர்ஜி பிளாக்குக்கு வந்து
பதிலளிநீக்குகிங்ராஜ் பல்லைக்காட்டி சிரிச்சி
பல்லுக்கு வைத்தியம் பாக்க
பாலக்காடு போனானாம். த ம 5
பரவாயில்லையே... என்னை வைத்து பாலக்காடு போயிட்டீங்களே.... நமது நண்பர் திரு.துளசிதரன் வீட்டுக்கு போயிட்டு வாங்க.
நீக்குபாட்டியிடம் கதை கேட்டு கேட்டு பேத்தி ரொம்பத்தான் விவரம் ஆயிடுச்சு ,இந்த போடு போடுதே :)
பதிலளிநீக்குத ம 6
கரைக்டா பாய்ண்டை பிடிச்சுறீங்களே,,, பகவான்ஜிவருகைக்கு நன்றி
நீக்குஊர்க்கதையின்னு சொன்னதும் பாட்டி எதோ கதை சொல்லப் போகுதுன்னு பார்த்தா... ஊர்ப் பெயரை வைத்து கட்டங்கட்டி கலக்கிட்டீங்க போங்க...
பதிலளிநீக்குஅருமை அண்ணா... ஏழாவது ஓட்டு நாமதான்... மாலையில் படித்து இப்போ கருத்திடுறேன்....
வருகைக்கு நன்றி நண்பரே....
நீக்குஆஹா.... ஆரம்பமே கலகல:-)))))
பதிலளிநீக்குஇந்த வார வலைச்சர ஆசிரியருக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்
'குந்தினியா குரங்கே....உன் சந்தடி எல்லாம் அடங்க'ன்னு..... அடங்கிக் கிடக்கறோம்:-))))
வாங்க மேடம் வாழ்த்துகளுக்கு நன்றி தொடர் ஆதரவு தருக...
நீக்குபாட்டி வடை சுட்ட கதை போய்
பதிலளிநீக்குபாட்டுப்பாடித் தாத்தாவுக்கு ஊட்டிவிடுகிற கதை வந்திச்சா...
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்
வருக நண்பரே,,, எவ்வளவு நாள்தான் வடை சுட்டகதை சொல்வது ?
நீக்குஹா....ஹா....ஹா,,, நல்ல எதுகை, மோனை கதை:))))
பதிலளிநீக்குஎதுகை மோனை... இனிமேல்தான். சகோ
நீக்குத ம எட்டு
பதிலளிநீக்குஎங்கே ரூம் போட்டு யோசிச்சிங்க ?
பதிலளிநீக்குஎனது ரூமில்தான் தோழரே.... நன்றி.
நீக்குஎன்னவொரு வார்த்தை விளையாடல்...! + சொல்லாடல்...!
பதிலளிநீக்குஅசத்துங்க ஜி...
அசத்தல் இனிமேல்தான் நண்பரே...
நீக்குபல்ஆடல் இல்லாத பாட்டி சொன்ன கதை -
பதிலளிநீக்குதூத்துக்குடி முத்து போல அழகான சொல்லாடல்!..
வலைச்சர ஆசிரியர் பணியேற்கும் தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
வாஞ்சையோடு வாழ்த்திய தஞ்சை நண்பரின் வாழ்த்து கண்டு மகிழ்ச்சி.
நீக்குஎல்லார்க்கும் எல்லா நல்லதும் வல்லதும் தருவது வல்லாரை மட்டும் இல்லீங்கோ. இந்த கில்லாடி கில்லர்ஜி கதையும்தான்
பதிலளிநீக்குமாடிப்படியிலிருந்து வந்த மாதுவே... தெ(லு)ங்கு பட டைட்டில் எல்லாம் கொடுக்கிறீங்களே... வருகைக்கு நன்றி.
நீக்குஇந்த பாட்டி கதை அனைத்து பேரன் பேத்திகளுக்கும் பொருந்தும். வலைச்சரத்தில் சந்திப்போம்.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தாங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு அந்தப்பாக்கியம் இல்லையே.... என்பதுதான் வேதனை.
நீக்குபுதிய பணியும் ஆண்டும் சிறக்கட்டும் நன்றாக. நன்றி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தர்மரே...
நீக்குஊரெல்லாம் சுத்தினீங்க ஆனா "பாலக்காட்டு பக்கதுல ஒரு அப்பாவி ராஜா" இருக்கறத கண்டுக்காம போயிட்டீங்க..ம்ம்ம் வந்துருந்தா இன்னும் உங்க கதைல சேர்க்கறதுக்கு விஷயம் கிடைச்சுருக்கும்ல...என்ன வடுகப்பட்டி வடுக நாதனை விட்டுட்டீங்க போல...
பதிலளிநீக்குவலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துக்கள்! கலக்கிடுவீங்க! நண்பரே! சார், சாரி நாங்க பொல்லாத குறும்பு பிள்ளைங்களா இருப்போம்...உங்கள ஒருவழி பண்ணிடுவோம்ல....எங்களுக்கு பனிஷ்மென்ட் எல்லாம் தரக் கூடாது...தந்தீங்கனு வையுங்க......ஹஹஹாஹ்
பாலக்காடு தெரியும் அப்பாவி யாரு ? அதுதான் குழப்பம் ?
நீக்குசரி மேலே கிங்ராஜ் கருத்துரையும், எனது பின்னூட்டமும் பாருங்க..
என்னை ஒருவழி பண்ணிடுவீங்களா ? (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
சார் சார் என்ன சார் ஊர் கதைனு சொல்லிட்டு அப்படி அப்படியே விட்டுப்புட்டீங்க....ஒவ்வொரு கதையையும் முடிக்காம சஸ்பென்ஸ் வேற...ம்ம்ம அடுத்த க்ளாஸ்லயாவது சொல்லி முடிங்க சார்! ஹஹாஹ்
பதிலளிநீக்குஇரண்டாம் பாகத்துக்கு வழி சொல்லிட்டீங்க... நன்றி
நீக்குதேவக்கோட்டை தேவயானியைத் தேடிப் போனது நீங்கள் தானே கில்லர்ஜீ!!
பதிலளிநீக்குடாக்டர், ஆஸ்பிடல் போன்ற வார்த்தைகளைப் பார்க்கும் போது இவை பழ மொழிகள் அல்ல, இரண்டு தலைமுறைக்கு முன் தோன்றியவை போல இருக்கிறது.
சிலவற்றுக்கு அர்த்தம் புரிகிறது, பலவற்றுக்குப் புரியவில்லை. அதாவது எந்த சூழ்நிலையில் சொல்லியுள்ளார்கள் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இவற்றின் பின்னணிக் கதைகளும் தெரிந்தால் மேலும் சுவராஷ்யமாக இருக்கும்.......................!!
தேவகோட்டைக்கு தேவயானியை...
பதிலளிநீக்குநண்பா, நானே தேவகோட்டைதானே...
இவை பழமொழிகள் அல்ல..
நண்பா கதை சொன்ன பாட்டியே லேட்டஸ்ட் லேடிதானு நினைக்கலாமே...
அர்த்தம் புரியவில்லை...
கதைக்கு கால் உண்டா ? அப்படினு நான் கேட்கலாமோ...
பிண்ணனி கதைகள்...
எழுதிட்டாப்போச்சு பார்ட் - 2
வருகைக்கு நன்றி நண்பா....
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஊரும் பேரும் உறவாட, பாட்டி சொன்ன கதை, எங்களையும்,பேத்திகளாக்கியது.
சுவாரஸ்யமான நகைச்சுவையுடன் ௬டிய பதிவு. உங்கள் நகைச்சுவை வாழ்கவென வாழ்த்துகிறேன் .எங்கள் கவலைகளை தூசியாக்க இனியும் தொடருங்கள் ! பகிர்ந்தமைக்கு நன்றி !
வலைச்சர ஆசிரியர் பணி,சிறக்கவும்,என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களின் வருகையும், விரிவாக்கமான கருத்துரைகளும் என்னை இன்னும் இதுபோல 100 பதிவுகளை எழுத வைக்கும் கண்டிப்பாக எழுதுவேன் நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே!
நீக்குஇப்போதுதான் வலைச்சரம் கண்டு வந்தேன். நன்றாக தொகுத்திருக்கும் வலைச்சர முதல் அறிமுக பதிவுக்கு வாழ்த்துக்கள்!
தங்களுக்கு நேரமிருப்பின் என் புது பதிவினை கண்டு கருத்துரை இட்டால், மகிழ்ச்சியடைவேன். நன்றி!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கண்டு கருத்துரை இட்டு வந்தேன் சகோதரி இறை கவிதை அருமை தங்களுக்கு இறையருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்...
நீக்குஹா ஹா ஹா...
பதிலளிநீக்குபதிவும் பின்னோட்டங்களும் அருமை கில்லர் ஜி.
வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம்.
நன்றி சகோதரி வாருங்கள் வலைச்சரத்துக்கும்,,,,,,
நீக்குஅன்பு நண்பர் கில்லர்ஜி,
பதிலளிநீக்குவணக்கம்.
வரும் வாரம் வாராது வந்த மாமணிபோல ‘வலைச்சரம்’ ஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டி வடை சுட்ட கதையத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.... அட என்னடி அம்மா .... இந்தப் பேத்திக்கிட்ட சொன்ன கதை ரொம்ப புதுசா இருக்கு.... இந்தப் பாட்டிக்கு எகனைக்கு மொகனையா... நல்லா பேசுதே! அப்பா இதுட்ட வாயக்குடுத்தா... வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்!
‘ வேல் இருக்க பயமேன்னு சொல்லிக்கிட்டே போன,
வேலாயுதம் தேர்வேலியில தேர்ல நசுங்கி செத்தானாம் ’
பாட்டி பல மொழிகள.... பழமொழிபோல அடிச்சு எறியுதே....அருமையா அசத்திப்புடுச்சு போங்க!
தாத்தாவுக்கு சோறு ஊட்டிவிட்டு....பாட்டி
தாத்தய்யங்கார் பேட்டைக்கு போயிடுச்சா?
மீண்டு(ம்) வந்திருக்குமே! வந்தாக் கேட்டதாக சொல்லுங்க...
பேத்தியயில்ல... பாட்டிய!
ரொம்ப நன்றிங்க....
மீண்டும் வாழ்த்துக்களுடன் நன்றி சொல்லி விடை பெறுவது....
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வருக தோழமையே... பட்டம்மா பாட்டியை ஐயாச்சாமி ஐயா இப்பத்தான் //பாட்டி சொல்லைத் தட்டாதே// சினிமாவுக்கு ஸ்கூட்டியில, கூட்டிக்கிட்டு போனாரு வந்ததும் சொல்கிறேன் நன்றி மணவையாரே...
நீக்குகில்லர்ஜி,
பதிலளிநீக்குஎன்னை இப்படிப் பழிவாங்கலாமா?
கொஞ்சம் புரியாமல் எழுதுவது உண்மைதான்!
சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்!
அதற்காக உங்கள் பதிவைப் படிக்க வைத்து நாவை சுளுக்கெடுத்து விட்டீர்களே... அய்யா!
ஊமை எப்படிப் படிக்கும் என்பீர்கள.?
உங்கள் பதிவைப் படித்தபின் ஊமை திடீரெனப் பேசத் தொடங்கிவிட்டது.
எல்லாரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்!
ஆங்கிலத்தில் டங்டிவிஸ்டர் என்பார்கள்.
அது போல இருக்கின்றன உங்கள் சொல்லாடல்கள்!
அனைத்தும் அருமை!!
நன்றி அய்யா!
வலைச்சரத்தினைத் தொடுக்கப் போகிறீர்கள்!
ஆசிரியர் வேறு!
நாங்கள் தொடர்கிறோம் அய்யா!
நன்றி!
கலிஞரே,,, வருக எமக்குத்தான் புரிந்து கொள்ளும் பக்குவம் போறா.... என்றேனே தவிற தங்களது கவியில் குற்றம் சொல்லும் தகுதியுண்டோ... எமக்கு கவிஞருக்கு பொய்யுரை தேவையில்லையே.... நன்றி கவிஞரே... தொடர்க வலைச்சரத்தை.
நீக்குஉங்க ஊர்க்கதையை சொல்லுவீங்கன்னு பார்த்தா பல ஊர்களின் கதையை புட்டு புட்டு வச்சிட்டீங்களே! சூப்பர்! நன்றி!
பதிலளிநீக்குவாங்க சுரேஷ் நமக்கு முடிஞ்சது இவ்வளவுதானே...
நீக்குகில்லர்ஜி பாட்டி நல்லாருக்கு கதை. ம் போடமுடியல...ஆ..அய்...ஓ....செம...
பதிலளிநீக்கும் ஹூம்.... வருகைக்கு நன்றி
நீக்குவலைசர ஆசிரியர் ருக்கு வாழ்த்துக்கள் , அங்க பார்த்துட்டு தான் வருகிறேன், அங்கும் கலக்கலாக இருக்கு அறிமுகங்கள் , இங்கும் கலக்கலாக இருக்கிறது
பதிலளிநீக்குஜலீலா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி தொடர் வருகைக்கு எக்ஸ்ட்ரா நன்றி.
நீக்குநாவலூரு நாகம்மா நறுக்குன்னு நாலு வார்த்தை
பதிலளிநீக்குசொல்லிப்புட்டு நகைக்கடைக்குப் போனளாம்.
கைகாட்டிரோட்டுல கனக்கா குமிச்சிருந்த
கத்தரிக்காயையெல்லா கருப்பாயி பார்த்தாளாம்.
எப்புடி..........., .அருமை சகோ ,சிரிக்கனு அதுவு மனசார
சிரிக்கனூன்னா சகோ தங்களின்தளம் நோக்கிவந்து விடுவேன்
நன்றி சகோ.,
அடடே... ஸூப்பர் சுப்பம்மா சுப்பையாகூட போனாளாம் அருமையாக சொன்னீங்க...
நீக்குஆஹா ! அண்ணே பட்டாசு கிளப்பிரிக்கிங்களே ! சூப்பர் உங்கள் வார்த்தை நெறியாடல்கள்
பதிலளிநீக்குவாங்க, பாஸூ இனி பட்டையை கிளப்புறதுதானே... நம்ம வேலை.
நீக்கு