தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 10, 2015

பழங்குடி, பழமொழி பழனிச்சாமி


ஏண்டா, பழனி உனக்கு பல மொழிகள் தெரியுமாமே அப்படியா ?
ஆமாண்ணே,
பரவாயில்லையே  எங்க பார்ப்போம்.
ஏட்டுச் சொரைக்காய் கூட்டுக்கு உதவாது.
என்னடா இது ? 
வேற சொல்லட்டுமாண்ணே ?
சொல்லு.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.
டேய்,
வேற சொல்றேன்ணே,
ம்,
முண்டைக்கு போட்றா முருங்கைக்காயும், சோறும்.
டேய் திண்ணி முண்டே, என்னடா... சொல்றே நீ ? 
பளமொலிண்ணே..
பளமொலியா ? ஏண்டா, உனக்கு பல மொழிகள் பேசத் தெரியும்னு ஊருக்குள்ளே சொல்றாங்களே, அது இதுதானா ?
வேற புதுசா சொல்லட்டுமாண்ணே ?
டேய் இப்பவே இடத்தைக் காலி பண்ணு இல்லே உன் முழியப் பேத்துடுவேன்.

52 கருத்துகள்:

 1. ஆசை தோசை அப்பளம் வடை
  பூசையை செய்தால்?
  மீசையை கேட்டதாம்
  மியாவ் மியாவ் பூனை!

  இடத்தை காலி பண்ணியாச்சா?
  இல்லை வேலி போட்ட்டாச்சா?

  பள பளன்னுது நண்பா பழமொழி!!

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா விடுமுறை எல்லாம் முடிந்து விட்டதா ?

   நீக்கு
 2. எனக்கும் தெரியுமே பளமொழி. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. உங்களைச் சொல்லலீங்க. தப்பா நெனைக்காதீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதில் கோவிப்பதற்க்கு என்ன இருக்கிறது ? தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 3. எழுத்துப் பிழைகள்
  தவறான மொழி உச்சரிப்புகள்
  எமது
  அடையாளத்தையே மாற்றி விடும்!

  பதிலளிநீக்கு
 4. பல பழமொழிகள் தெரிந்ததே. சில புதியனவாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 6. இந்த ‘ழ’ ‘ல’ எழுத்துக்களை சரியாக உச்சரிக்காவிட்டால் திரு பழனிசாமி போல் நாமும் தடுமாறவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உச்சரிப்பில்தானே தமிழின் மதிப்பு இருக்கின்றது.

   நீக்கு
 7. சரி.. கடைசி வரைக்கும் ஏன் ராஜா வேஷத்தைக் கலைக்கலே!?..

  ராஜா - வேஷத்தைக் கலைக்கலையா!?..

  ராஜா வேஷத்தைக் கலைக்கலையா!?..

  ஓடிடு.. சாமீ.. ஓடிடு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ராஜா, வேஷத்தை கலைக்க மாட்டாராம்.

   நீக்கு
 8. ஐயோ நம்ம கந்தசாமி ஐயாவோட அப்பாவை பழங்குடி பழமொழி பழனிசாமி என்று இப்படி வாங்குறீங்களே?

  இப்போ புரியுதா. பதிவுன்னு வந்துட்டால் எப்படியும் எல்லாத்திலேயும் மாத்தி யோசிக்கிறவர்கள் உண்டு.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் முதல் வருகைக்கு நன்றி தங்களின் கருத்து எனக்கு பிடிபடவில்லையே...

   நீக்கு
 9. படத்தைப் பார்த்தால் ....முழியைப் பெயர்த்து எடுத்த மாதிரிதான் இருக்கு ..உற்றுப் பார்த்தால்தான் சோறும் ,முருங்கைக் காயும் தெரியுது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருங்கைக்காயை வைத்துதான் பெயர்த்து எடுப்பாரோ ?

   நீக்கு
 10. முதலில் பதிவர் கந்தசாமி பற்றிய பதிவோ என்று நினைத்தேன் அப்புறம்தான் தெரிந்தது பள மொளிக் கந்தசாமி என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஏன் ? எல்லோரும் திரு. கந்தசாமி ஐயாவைக் குறிப்பிடுகின்றீர்கள் 80 புரியவில்லையே... இது 2013ல் எழுதி யாருமே படிக்காத மீள்பதிவு ஆகவே இப்பொழுது மீண்டும் விட்டேன் மேலும் ஐயாவின் பெயரிலேயே ஒரு பதிவு எழுதி வைத்திருக்கின்றேன் இப்பொழுது அதை என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கின்றது.

   நீக்கு
 11. ஓகோ,,, இதற்கு பெயர் தான் பழமொழியா???????
  பல மொழி,
  அருமை சகோ,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை மா3 புரியாதவன் இப்படித்தான் இருப்பான் சகோ.

   நீக்கு
 12. முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா.... ;))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியாது நண்பா அதனால்தானே குட்டு உடைபட்டது.

   நீக்கு
 13. பழ மொழி பள மொளி யாகிடுச்சோ....அஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நாட்டுல இப்படித்தான் நிறையபேரு திரியுறானுங்க...

   நீக்கு
 14. பலமொழிகள் பேசி மகிழ்விப்பார் என்று பார்த்தால் பழைய பழமொழிகளை பேசி எரிச்சல் ஊட்டிவிட்டாரோ? ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கே எரிச்சல் வந்தால் கேட்டவனுக்கு எப்படி இருந்திருக்கும் நண்பரே...

   நீக்கு
 15. பதில்கள்
  1. தமாஸுக்கு சொன்ன மொழி நண்பரே.. இனியெனும் பரவட்டுமே.. உலகெங்கும்...

   நீக்கு
 16. அன்புள்ள ஜி,

  பல மொழிகள் - பள மொழிகள் - பழ மொழிகள் விழிக்க வைத்தீர்...!

  த.ம.13.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வகையில் முன் மொழிந்தமைக்கு நன்றி மணவையாரே...

   நீக்கு
 17. ஓ தமாசா ...சரி சரி ...ரசித்தேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க ரசிக்க வந்தவங்க வாங்க...

   நீக்கு
 18. பலமொழியின் பளபளப்பு அருமை!..:)

  பதிலளிநீக்கு
 19. பல மொலி நல்லாத்தான் இருந்தது....

  பதிலளிநீக்கு
 20. பளமொழி நல்லாயிருக்கே....

  அறுக்கத் தெரியாதவன் கையில அஞ்சாறு கறுக்கருவாவாம்... அப்படித்தான் இருக்கு அவன் சொன்ன பழமொழிகள்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே தங்களின் பளமொலியும் ஸூப்பர்
   வெட்டத்தெரியாத வெட்டிப்பயலுக்கு வெள்ளரிப்பிஞ்சும் வெறகு கட்டையாம்.

   நீக்கு
 21. தாமதமாக வாசித்தேன். ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 22. எல்லாம் லா - ழ - பிரச்சனை தான்

  பதிலளிநீக்கு