மன்னா...என்னா ?
எதிரி நாட்டு படையை தோற்கடிப்பதற்கு சிறந்த யோசனை ஒன்று நேற்று நள்ளிரவில் டாய்லெட் போகும் போது எமக்கு உதித்தது...
சொல்லுங்கள் மந்திரியாரே....
போர்க்களத்தில் திடீரென நமது அந்தப்புரத்து அழகிகளை ஆடவிட்டு வீரர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவர்கள் மயங்கும் தருணத்தில் டாஸ்மாக்கில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டால் சுலபமாக வென்று விடலாமே...
ஹூம் மங்குனி அமைச்சரே, அவர்கள் மதுவுக்கு மயங்காமல் மாதுவுக்கு மயங்கி அழகிகளை அள்ளிக் கொண்டு பரியில் ஏறிப்பறந்து விட்டால் நாளை நான் என்ன சிங்கி அடிப்பதா ?
மன்னிக்கவும் மன்னா, நான் இந்த வழியை யோசிக்கவில்லை.
இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் வேறு நல்ல யோசனை கூறாவிடில் உமது வாயில் ¾ படி அமிலம் ஊற்றப்படும்.
? ? ?
***********************************************************************
மன்னா, சந்தோஷமான செய்தியொன்றை தங்களுக்காக தாங்கி வந்துள்ளேன்.
அப்படியா... உடன் அந்தச் செய்தியை சொல்லுங்கள் படை வீரரே...?
எதிரி நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பினேன் உடன் மறு ஓலை வந்திருக்கிறது இனி சோழக்காட்டு திசையை நோக்கித் தலையை வைத்துக்கூட படுக்க மாட்டோம் என்று.
ஆஹா கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது படை வீரரே... அப்படி என்ன செய்தி சொல்லி அனுப்பினீர்கள் பாலக்காட்டு படைகளுக்கு ?
எங்கள் மீது போர் தொடுத்தால் ? போர்க்களத்தில் திரைப்பட முன்னணி, பின்னணி நடிகைகளை மேக்கப் இல்லாமல் நிறுத்தி வைப்போம் என்று.
ஆஹா அற்புதமான யோசனை, வெல்டன் படை வீரரே...
***********************************************************************
மந்திரியாரே, நொங்கு நாட்டு மன்னருக்கு படை உதவி அனுப்பினோமே... உடன் திருப்பி அனுப்பி விட்டாரே... ஏன் ?
மன்னரே படை வீரர்கள் 100 பேரும் சொறி, சிரங்கு, படை, பத்தோடு போனார்களாம் ஆகவே கோபப்பட்டு நம் மீது போர் தொடுப்பதாக அறிவித்துள்ளார் மன்னா.
அப்படியா... அறிவித்தார் உடன் நமது நாட்டு வீரர்கள் 1000 பேரை அந்த நாட்டுக்குள் ஊடுறுவி குடிபுக ஏற்பாடு செய்யுங்கள்.
மன்னிக்க வேண்டும் அரசே... அப்படிச் செய்யமுடியாது...
ஏன் ?
நம்மிடம் உள்ள 1000 படை வீரர்களுமே ஏற்கனவே அந்த நாட்டு ‘’குடி’’மகன்களே ஆகவே அவர்கள் பயந்து கொண்டு போக மறுக்கிறார்கள்.
? ? ?
***********************************************************************
மந்திரியாரே, மங்களதேசத்து மன்னர் தங்குவதற்கு நமது பங்களாவை தயார் செய்து விட்டீர்களா ?
இல்லை அரசே...
ஏன் ?
அந்தப் பங்களாவில்தானே பங்களாதேஷிலிருந்து வந்த தங்களது மங்களாவின் தாயார் தங்கி இருக்கிறார்கள்.
அப்படியானால், ராமாவரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யலாமே...
அதில்தான் மன்னா, தங்களது புவனேஷ்வரம் புவனா தங்கி இருக்கிறார்கள்.
அப்படியானால், நமது நீலாம்பூர் அரண்மனையில் தங்க வைக்கலாமே...
நேற்றுதானே மன்னா, நீடாமங்கலம் நீலாம்பரியை தங்க வைத்தோம்.
? ? ?
***********************************************************************
என்ன மந்திரியாரே சொல்கிறீர்கள் நண்பர் அலிக்கு போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த உணவுகள் திரும்பி விட்டனாவா ?
ஆம் மன்னா அவர்கள் சொன்னபடிதான் கேப்பைக்களியும், புளிக்குழம்பும் வைத்து அனுப்பினோம் இப்பொழுது சொல்கிறார்கள் நாங்கள் கேட்டது புலிக்குழம்பு என்று குழப்புகிறார்கள்
அப்படியா... சொன்னார்கள், இது நமது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் தாங்கள் உடனடியாக 1000 எலிகளை பிடித்து ஆச்சி மசாலாவில் கலந்து எலிக்குழம்பு வைத்து புலிக்குழம்புதான் எனச்சொல்லி அவர்களை குழப்பி பழி வாங்கி விடுங்கள்.
நல்லது மன்னா, அப்படியே ஏற்பாடு செய்கிறேன்.
***********************************************************************
மறுநாள்....
மன்னரே நேற்று தாங்கள் சொன்னதைப்போலவே 1000 எலிகளை பிடித்து புலிக்குழம்பு எனக்குழப்பி விட்டோம் ஆனால் இப்பொழுது அதேபோல் கேட்கிறார்களே... தினமும் எலிகளுக்கு எங்கே போவது ? ஆச்சி மசாலாவாவது நிறுவனத்தை மிரட்டி ஓசி வாங்கி விடலாம்.
அப்படியானால் இன்று பல்லிகளை பிடித்து குழம்பு வைத்துக் கொடுங்கள்.
எல்லாம் சரி மன்னா, ஆனால்..... திடீரென்று பல்லிகளுக்கு....
உடன் மக்களுக்கு அறிவியுங்கள் வீட்டிலிருக்கும் பல்லிகளை இன்றே பிடித்து கொடுப்பவருக்கு ஒரு பல்லிக்கு 2 ½ குவைத் தினார் வரும் வைகாசி முதல் நாளில் கொடுக்கப்படுமென அறிவியுங்கள்.
மன்னா, அப்படிச் செய்தால்....... வீரர்கள் அனைவரும் இறந்து விடுவார்களே...
விளங்கா முடுமை அமைச்சரே நான் பல்லியை போடச்சொல்வதே... அவர்களை பலி கொடுக்கத்தானே... அந்த வீரர்களை வைத்துக் கொண்டுதானே மன்னன் அலி நம்மை எள்ளி நகையாடுகின்றான்.
சரி மன்னரே அப்படியே செய்து விடுகிறேன், உடனே தங்களது குவைத் நண்பர் தஞ்சையம்பதி திருவாளர். துரை செல்வராஜூ அவர்களுக்கும் ஓலை அனுப்பி விடுகிறேன் மன்னா.
அவருக்கு எதற்காக ?
வைகாசி முதல் தேதி மக்கள் கூடி விடுவார்களே, குவைத் தினார் வேண்டுமே....
மண்ணு முக்குழி அமைச்சரே அதெல்லாம் வேண்டாம் தினார் வேண்டும் என்பவர்கள் காளி கோயிலின் பலி பீடத்தில் வலது கையின் கட்டை விரலை பலி கொடுத்து விட்டு தினார் பெற்றுச் செல்லவும் என அன்று காலை அறிவியுங்கள் மறு நொடியே கூட்டம் காவல்துறை கண்ணீர் புகை விட்டது போல் கலைந்து விடும்.
? ? ?
***********************************************************************
சுகமான சுமைகள்.
அனைவருக்கும் இனிய
சுதந்திர தின வாழ்த்துகள்.
நல்ல மன்ஆ-ம் அறிவாளி மந்தியும் இருந்தால்அந்த நாட்டு மக்கள் குடி(கார) மக்களாகவே இருப்பார்கள் ..அருமை....
பதிலளிநீக்குமன்னர் எவ்வழியோ... மக்களும் அவ்வழி.
நீக்குஹா..... ஹா...... ஹா.... ரசித்தேன்.
பதிலளிநீக்குஇனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.
ரசித்தமைக்கு நன்றி நண்பரே... தங்களுக்கும் வாழ்த்துகள்
நீக்குமன்னருக்கு சுதந்திர தினத்தன்றும் விடுமுறை கிடையாதா!?..
பதிலளிநீக்குஅந்தப்புரமெல்லாம் - House Full!?...
மன்னர் எப்பொழுதும் சுதந்திரமாகத்தான் திரிவாராம்.
நீக்குவைகாசி வருவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கின்றன.. அதற்குள் என்னய்யா அவசரம்!..
பதிலளிநீக்குகட்டை விரல் போனாலும் கவலையில்லை.. குவைத் தினார் கிடைத்தால் போதும்.. - என்று வறட்டு நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக இப்போது தான் ரகசிய ஓலை வந்தது..
அதிலும் ஓலையின் ஒரு ஓரத்தில் கறையான் அரித்திருந்தது..
குவைத் தினார் கொண்டு வருவதற்கு குதிரைகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கவும்..
.......!?
என்னது!?.. குதிரையெல்லாம் குருமா ஆகி விட்டதா!.. கோட்டான்காட்டு ராஜாவுக்கு விருந்து பரிமாறிவிட்டார்களா!..
அத்துடன் - தஞ்சையம்பதிக்கு மயக்கம் வந்து விட்டது!?..
இப்பவே சொல்லி வைச்சாத்தானே குதிரையிலே தினார் வந்தசு சேரும்
நீக்குகுதிரையெல்லாம குருமா ஆகிடுச்சா... ராஜாவோட நாட்டின் பெயரே சரியில்லையே....
ரசிக்க வைத்த மன்னர் நகைச்சுவைகள்! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி நண்பரே....
நீக்குஎப்படியெல்லாம் சுதந்திரமாகச் சிந்திக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க ஐயா நம் முன்னோர்கள் சுதந்திரம் பெற்றுத்தந்தமை இதற்க்கும் சேர்த்துதானே...
நீக்குநலமா சகோ?. நீண்ட நாட்களின் பின்பு. ரசித்து சிரித்தேன் மன் ஆ நகைச்சுவை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
வாங்க சகோ விடுமுறை நல்லவண்ணம் சென்றதா ? தங்களுக்கும் வாழ்த்துகள்
நீக்குநல்லதொரு அரசாங்கம்... ஹஹஹ
பதிலளிநீக்குவாங்க இது நல்ல அரசாங்கமா ?
நீக்குவிளங்கா முடுமை அமைச்சர்,
பதிலளிநீக்குமண்ணு முக்குழி அமைச்சர்,
பட்டங்கள் அருமை,
நல்ல ஆக்கம் சகோ,
சுதந்திர தனி நல்வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்கு
பதிலளிநீக்குகில்லர்ஜி மன்னா!
என்னா?
பல்லி பிடித்து தந்தால் 31/2 தினார் இலவசம் என்பது உண்மைதானே?
பொய் சொல்லினால்?
உமது மீசை கருகிவிடும் என்று காளியிடம் வரம் வாங்கி வருவேன் எச்சரிக்கை கில் கில் மன்னா!
சொல்! சொல் என்னா?
காளி கோயில் பலி பீடத்தில் காணிக்கை செய்ய
எனது கட்டை விரலை அனுப்பி வைத்தேனே
"பென் ட்ரைவ்" வடிவில் கிடைக்க வில்லையா?
வாரும் !
உமது மீசை, ஆசை, தோசை படைகளோடு
எமது "சிந்தனை சிரிப்பு "பதிவுக்கு வந்து
கட்டை விரலை பெற்றுக் கொண்டு
தினாரை கொடுத்துவிட்டு திவாலாகி போகவும்.
ஆஹா! அவன் தான் நான்!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா நீங்கதானா அது.....
நீக்குதங்களுக்கும் எமது சுதந்திர தின வாழ்த்துகள்
"குழலின்னிசையின்"
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வாக்குடன், வாழ்த்துகளும் அளித்தமைக்கு நன்றி நண்பா...
நீக்குஹா.... ஹா... கலக்கிட்டீங்க...
பதிலளிநீக்குநீங்கதான் மன்னருன்னு கடைசியிலதான் தெரிஞ்சது போங்க....
சூப்பர் அண்ணா... இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
வருக நண்பரே கடைசியிலாவது தெரிந்ததே... நன்றி.
நீக்குவழக்கம்போல் கலக்கல், அசத்தல். அனைவரையும் நன்கு சிரிக்க வைத்துவிட்டீர்கள்.நன்றி.
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
முனைவரின் வருகைக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குசுதந்திர தினத்தன்று கற்பனைக் குதிரை கட்டவிழ்த்துக்கொண்டு சுதந்திரமாகப் பறக்கிறதே.
பதிலளிநீக்குவருக ஐயா இன்றாவது சுதந்திரம் கொடுப்போமே... வருகைக்கு நன்றி.
நீக்குஇரசித்து மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் வருகைக்கு நன்றி.
நீக்குமன் ஆ நகைச்சவை பதிவை ரசித்தேன் சகோ. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குவருக சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமன்னா.
மன்னா கலக்கி விட்டீர்கள்... நகைச்சுவை கலந்த கலவை... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் மன்னனில்லை நண்பா வருகைக்கு நன்றி.
நீக்குநகைச் சுவை உண்டேன்!
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி.
நீக்குகலாம் அய்யா கனவு காணச் சொன்னார் என்பதற்காக.... இப்படி எல்லாம் கனவு விரிந்து பதிவு போடுமளவிற்கு.... நகைச்சுவையுடன்....சபாஷ்!
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே.... கனவை நனவாக்குவோம் வருகைக்கு நன்றி
நீக்குஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய வாழ்த்துகள் நண்பரே....
நீக்குநையாண்டி தர்பார். நல்ல கற்பனை வளம். எல்லாவற்றையும் படித்து ரசித்தேன். இது மாதிரி மன்னர்களை எல்லாம் அடித்து துரத்தும் காலம் இது.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் ரசிப்புக்கு நன்றி.
நீக்கு1. பங்களா,
பதிலளிநீக்கு2. ராமாவரம் தோட்டம்,
3. நீலாம்பூர் அரண்மனை,
-அவ்வளவுதானா?
யாருக்குத்தெரியும் எவ்வளவு வச்சு இருக்காரோ.... எவளை வச்சு இருக்காரோ...
நீக்குஇந்த மன்னரின் வாரிசுகள் தான் இன்று அரசியல்வாதிகளாய் கொடிகட்டி பறக்கிறார்களோ :)
பதிலளிநீக்குஇருக்கலாம் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது ஜி.
நீக்குஆத்தாடி சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடும் போலவே..
பதிலளிநீக்குவாங்க வாங்க அதுனாலதான் தொடர்வது இல்லையோ...
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குமன்ன ஆ... என்னே ..மன்னனின் சிந்தனை... நல்ல காமெடி...யாரங்கே... யாரடா அங்கே...!? அந்த பொற்கி(ழி)ளியை எடுத்துவா...ஓ... அதைத்தானே அடித்து கொழம்பு வைத்துவிட்டோமே...!
நன்றி.
த.ம.15
வாங்க ஜி பொற்கிளியைக் கிழித்து என் மனதில் கிலியை உண்டாக்கி விட்டீரே...
நீக்குஅருமை
பதிலளிநீக்குரசித்தேன் சிரித்தேன் நண்பரே
நன்றி
தம +1
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குதங்களின் கற்பனைக்கு எல்லையே இல்லையா? இரசித்தேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே கற்பனைக்கு எல்லையிருந்தால் விஞ்ஞானம் இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காதே... பறவையைக் கண்ட மனிதன் விமானம் படைத்தததுக்கு காரணம் கற்பனையே... மனிதன் இதுவரை மூளையை உபயோகப்படுத்தியதின் அளவு 10 சதவீதமே இன்னும் இருக்கிறதே... பாக்கி இது நமது ஐயா திரு. அப்துல் கலாம் போன்றவர்களுக்கு சொல்லப்பட்டது எமக்கெல்லாம் ஒன்று என்ன ½ சதவீதம் 80 கூட ஐயமே...
நீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே...
ம்..ம் பொல்லாத ஆளுய்யா நீரு இப்படி எல்லாமா ...........ம்..ம் ரொம்பவே ரசித்தேன்.
பதிலளிநீக்குவாங்க யாரைச்சொல்றீங்க... என்னையா ? மன்னரையா ?
நீக்குமன்னனின் அலப்பறைகள் அனைத்தையும் ரசித்தேன்...
பதிலளிநீக்குரசிக்கத்தானே நண்பரே அலப்பறைகள் வருகைக்கு நன்றி.
நீக்குஹஹஹஹஹ் செம ...மன்னர் செம உதார் பார்ட்டி போலருக்கே..அபுதாபி மன்னர்ல ஹஹஹ்..சரி பாலக்காட்டு மன்னரும் இருக்கின்றாரே! இருங்கள் பாலக்காட்டிலிருந்து எப்படிப்பட்ட படை வரப்போகின்றது என்று....நாங்க யாருன்னு நினைச்சீங்க....
பதிலளிநீக்குரசித்தோம் நண்பரே!
பாலக்காட்டு மன்னர் ஓலை அனுப்பிட்டாரே இனி சோலக்காட்டு பக்கம் தலை வச்சு படுக்கமாட்டேனு.....
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல நகைச்சவை பதிவு. ஒவ்வொன்றையும் நிதானமாக ரசித்துப் படித்தேன். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்.? தங்களுக்கு அருமையான கற்பனை வளம்.. என் மன்மார்ந்த வாழ்த்துக்கள்.
தாமதமாக வந்து கருத்திடுவதற்கு முதலில் மன்னிக்கவும். நாட்களின் நேரக்குறைவு காரணமாக மொத்தமாக அனைவரின் பதிவுகளை படித்து உடனே கருத்திடுகிறேன்.ஆனால் என் கருத்துதான் தாமதமாகிறது கண்டு வருந்துகிறேன். என்ன செய்வது.?
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி லேட்டானாலும், லேட்டஸ்டாக கருத்துரை தருகின்றீர்கள்.
நீக்கு