௵ 2014 ஒருநாள் கோயமுத்தூர்
பேருந்து நிலையம் தி கிரேட் தேவகோட்டை போவதற்கு பேருந்துக்காக நின்றிருந்தேன்
இயற்கையின் சீற்றம் காரணமாகய் கட்டண கழிப்றைக்கு போனேன் நீண்ட...................
வரிசையில் மக்கள் வெள்ளத்தை கண்டு மிரண்டு விட்டேன் காரணம் அவ்வளவு அவசரம் என்ன
செய்யலாம் ? வேறு வழியின்றி நடைபாதை
மேம்பாலம் ஓரமாய் இருந்த சிறிய சந்தில் நுழைந்தேன் ஏற்கனவே தோழர்கள் சிலர்
குட்டிச்சுவற்றின் எதிர்புறமாய் கம்பீரமாய் நின்றிருந்தார்கள் சரியென நானும் வந்த
வேலைக்கு ஆயத்தமாகும் போதுதான் பார்த்தேன்... எதிர்புற சுவற்றில் எழுதியிருந்த
வாசகத்தை படித்ததும் சுருக்கென்று மனம் வலித்தது நமக்கு ஆறறிவு என்று சொல்லி
விட்டார்களே அய்யகோ நானென்ன செய்வேன் ?
நாம் ஐந்தறிவு ஜீவியாக பிறந்திருக்க கூடாதா ? இந்தப் பாழாப்போன மானிடர்களுடன் பேச்சுக்
கொடுக்காமல், இந்த வாசகத்தை படிக்காமல், இந்த வேலையை எந்த இடத்திலும் முடித்துக்
கொண்டு போய்க்கொண்டே இருக்கலாமே... மனம் சுருக்கென்று வலித்த காரணத்தால் தொடங்கிய
வேலையை உடன் நிறுத்தி விட்டு திரும்பி விட்டேன் திரும்பும்போது... திரும்பி
பார்த்தேன்
(காரணம் வந்த பாதையை திரும்பி
பார்ப்பது எனது சிறுவயது தொடங்கிய பழக்கம் நல்ல பழக்கம்தானே தோழர்களே)
அந்த தோழர்கள்
கம்பீரமாகவே நின்றிருந்தார்கள் சரி இவர்கள் அதை படிக்கவில்லையா ? ஒருவேளை என் இனிய தமிழ் படிக்கத் தெரியாதோ ? கோயமுத்தூரில்தான் இப்போது தமிழர்களைவிட பிற
மாநிலத்தினர் அதிகமாகி விட்டதாகவும் விரைவில் இதை கேரளத்தோடு இணைப்பதாகவும் நமக்கு
ரகசிய செய்தியொன்று வந்ததே உண்மைதானோ ? ஒருவேளை மலையாளியோ ? இல்லை தெலுங்கரோ ? இல்லை கன்னடரோ ? இல்லை ஹிந்திக்காரரோ ? அதெப்படி ? ஒருவர்கூட தமிழர் இல்லையா ? எப்படியோ போகட்டும் நமக்கென்ன ? ‘’நான் தமிழன்டா’’ என்று பெருமையோடு ஓடினேன்
கட்டண கழிப்பறையை நோக்கி வரிசையில் நிற்க. சொல்ல மறந்து
விட்டேனே... அந்த வாசகம் என்ன தெரியுமா ?
‘’பன்றிகளும், நாய்களும்
மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்’’
Chivas Regal சிவசம்போ-
ஆரம்பத்துலயே
வரிசையில் நின்றிருந்தால் இந்நேரம் தேவகோட்டை பேருந்தை பிடிச்சு அப்படியே ‘’வலைச்சித்தர்’’ தனபாலனை பார்த்து டவுட்டு
கேட்டுப்புட்டு திண்டுக்கல்லை தாண்டி இருக்கலாம், நாம சொன்னால் குடிகாரப்பய’’னு சொல்லுவாங்க.
காணொளி
இதுக்குத்தான் எழுதப் படிக்க கத்துக்கக்கூடாது சொல்றது :)
பதிலளிநீக்குவாங்க ஜி இது தெரியாமல்தான் நான் M.B.B.S வரை படிச்சுட்டேன்
நீக்குகோயமுத்தூரை கேரளாவுடன் இணைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
பதிலளிநீக்குவாங்க ஐயா கோவையில் எங்கும் மலையாள எழுத்துகள், ஓணம் அரசு விடுமுறை இதனைக்குறித்து நான் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
நீக்குஅருமையான அலசல்
பதிலளிநீக்குசூழலைச் சுத்தப் படுத்துவோம்
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஹா.... ஹா..... ஹா....
பதிலளிநீக்கு'நான் எப்போதுமே வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பேன்'
சூப்பர்!
ரசித்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குசொல்லொணாத் துயரம்!..
பதிலளிநீக்குஇதெல்லாம் அந்த ஒரு வேளையில் வந்த பழக்கமில்லை..
ஜன்மங்கள் தோறும் தொடர்ந்து வரும் பிறவிக் குணம்...
காலகாலமாக குட்டிசுவர்களிலும் சாக்கடை ஓரங்களிலும் (பேருந்து நிலையங்களில்) பேருந்தின் டயர்களிலும் சிறுநீர் கழித்துப் பழக்கப்பட்ட சிறுமதியாளர்கள்...
அக்கம் பக்கம் பெண்கள் இருக்கின்றார்களே - என்ற அவல உணர்வு கூட அற்றுப் போயிருக்கும் இவர்களிடம்...
இதுகளைப் பற்றி மேலும் எழுதலாம்.. ஆனால் -
வேலைத் தளம் அழைக்கின்றது... பிழைப்பைப் பார்க்க வேண்டும்.. (குவைத் நேரம் பின்னிரவு 1.45)
உண்மைதான் ஜி ஊருக்கு வந்தபொழுது தாராபுரம், சேலம், புதுக்கோட்டை போன்ற ஊர்களில் புகைப்படம் எடுத்துள்ளேன் இவைகளைப்பற்றி எழுத வேண்டும்.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குசிறுநீரைப் பெருநீர் அழி(டி)த்துவிட்டதோ...?!
த.ம. 4
வருகை மணவையாரே உண்மைதான்.
நீக்கு
பதிலளிநீக்குசூழலைச் சுத்தப்படுத்தியாக வேண்டும் நண்பரே
தம+1
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குVERY INTERESTING ALSO VERY SAD TO KNOW THE REALITIES
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி
நீக்குஹா ஹாஹாஹா, நம்ம நாட்டில் இது ஒரு தர்மசங்கடம் தான்! :(
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குஆண்களுக்காவது பரவாயில்லை சிறிது நேரத்துக்குப் பன்றியாகவோ நாயாகவோ இருந்து விட்டுப் போகலாம் பெண்கள் கதி.?மலையாளத்தில் வெட்டு தடுக்கும் முட்டு தடுக்கில்லா என்று சொல்வார்கள் எப்படி அடக்கிக் கொண்டீர்கள்.
பதிலளிநீக்குவாங்க ஐயா வார்த்தைகள் வலித்தது ஆகவே அடக்கி கொண்டே்ன் வருகைக்கு நன்றி
நீக்குஎல்லா ஊர் சுவற்றிலும் இந்த வாசகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சில பன்றிகளும் நாய்களும் அசுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அவைகளுக்கு படிக்கத்தெரியாது இல்லையா?
பதிலளிநீக்குஆம் நண்பரே எனக்கு படிக்கத்தெரிந்த காரணத்தால் திரும்பி விட்டேன்
நீக்குஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாதுன்னு சும்மவா சொல்லியருப்பாங்க.....?????
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே சரியாக சொன்னீர்கள்
நீக்குஇந்த விளம்பரத்தில் பன்றியைச் சேர்த்துள்ளார்கள். பொதுவாக நாய்கள் என்றுதான் பல இடங்களில் படித்துள்ளேன். எது எப்படியோ, நீங்கள் திருந்தியதறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குஎவ்வளவு சொன்னாலும்/எழுதினாலும் நம்மவர்கள் திருந்தமாட்டார்கள். காணொளியில் நடப்பதுபோல் செய்தால்தான் இதைத் தடுக்கலாம் என நினைக்கிறேன். காணொளியை இரசித்தேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி இது இன்னும் தமிழ்நாட்டுக்குள் வரவில்லை கண்டிப்பாக வரவேண்டும்.
நீக்குகாணொளி கலக்கல்......
பதிலளிநீக்குநம் நாட்டின் பல பகுதிகளில் இந்த பிரச்சனை! சரியான கழிப்பறைகளும் இல்லை.....
வருக ஜி தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குஅருமையான வாசகம்....
பதிலளிநீக்குஅது பன்றிகளுக்கும் நாய்களுக்கும் தானே
நமக்கு இல்லேயே....!!!
ஆஹா இப்படியும் யோசிக்கலாமோ....
நீக்கு9ஜஹஹஹஹஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் சிரிச்சு முடிலப்பாஅ....வீடியோ கலக்கல்...மட்டுமில்லை சரிதானே ஜி அந்த வாசகம்.....அதான் அங்க நிமிர்ந்து நின்றார்களே....அவங்க பன்றியும் நாயும் தானே!!!!!!!!
பதிலளிநீக்குநல்லவேளை நான் ஓடியாந்துட்டேன்.
நீக்கு