தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

சுட்டபழம்

சுட்ம்.
இவரின் உபதேசம்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார்.

இதம்பாடல் மலையடிவாரத்தில் ஸ்ரீபூவலிங்கா ஆச்சார்யா என்றொரு ஞானி இருந்தார் அவர் ஒருநாள் தன்சீடர்களான சங்குனி, மங்குனி  இருவர்களையும் அழைத்து தாங்கள் இருவரும் தனித்தனியாக சென்று எமக்கு சுட்டபழம் ஒன்றும், சுடாதபழம் ஒன்றும் கொண்டு வாருங்கள் என்றார்.
அரைநாளிகை கழித்து சீடர்கள் இருவரும் வந்தார்கள்.

சீடர்களில் சங்குனி, குருவே இந்தாருங்கள் தாங்கள் கேட்ட சுட்டதும், சுடாததும் என்று ஒருபெரிய அளவிலான கொட்டானை கொடுத்தான் ஞானி ஸ்ரீபூவு திறந்து பார்த்தார் உள்ளே சிறிது அப்பளமும், சிறிது பணமும் இருந்தது ஞானி ஸ்ரீபூவு சங்குனியைப் பார்த்து கோபத்துடன் கேட்டார் என்ன இது ? சங்குனி சொன்னான்

சுட்டது அப்பளம் சுடாதது எனது சம்பளம்
கோபப்பட்ட ஞானி ஸ்ரீபூவு மங்குனியை நோக்கி கேட்டார் நீ என்ன கொண்டு வந்தாய் ?

மங்குனியும் ஒருபெரிய கொட்டானை இந்தாருங்கள் குருவே என்று கொடுத்தான்.

ஞானி ஸ்ரீபூவு திறந்து பார்த்தார் உள்ளே நிறையபணம் இருந்தது ஞானி ஸ்ரீபூவு கோபத்துடன் மங்குனி என்ன இது ? என்றார்.

மங்குனி அந்தபணத்தை எடுத்து ஒன்றில் கூடுதலாகவும், மற்றொன்டில் குறைவாகவும் இரண்டு பிரிவாக வைத்து, குருவே இது கிம்பளம், இது சம்பளம் என்றான்.

ஞானி ஸ்ரீபூவுக்கு கோபம் சிரசுக்கு ஏறியது இது இரண்டுமே பணம்தானே இது எப்படி ? சுட்டதும், சுடாததுமாகும்.

மங்குனி சொன்னான் குருவே இது கிம்பளம் சுடாதது, இது...
திடீரென்று சங்குனி அலறினான் அய்யோ யேம்போனமாத சம்பளத்தைக் காணோம்.

சாம்பசிவம்-
நல்லவேளை நடிகர் பொன்னம்பலத்தை GUN னால சுட்டு கம்பளத்துல சுருட்டிக்கொண்டு வந்து இதுதான், சுட்ட, பொன்அம்பலம்னு சொல்லாம போனாங்களே...
F.P- 25 Aug 2011


57 கருத்துகள்:

  1. சுட்ட பழம் விளக்கம் அமர்க்களம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வந்து அமர்க்களப்படுத்தி விட்டீர்கள் நண்பா...

      நீக்கு
  2. அப்பளம்
    சம்பளம்
    கிம்பளம்
    கம்பளம்.....ஆஹா...

    சுட்டபழம்,சுடாதபழம் நல்லா இருக்கு சகோதரரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க மட்டும் வகைவகையா சுடுறீங்க, நாங்களும் சுடுவோம்.

      நீக்கு
    2. நாங்க அடுப்பில சுடுறோம்...நீங்க வாயிலவே பிரமாதமா சுடுறீங்க.

      நீக்கு
    3. எப்படியோ... சுட்டது சுவையெனில் நலமே...

      நீக்கு
  3. வணக்கம்
    அண்ணா.

    பல தடவை இரசித்துப்படித்தேன்.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலதடவை ரசிக்கும்படி இருந்ததா ? சந்தோஷம் நண்பா...

      நீக்கு
  4. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! கலக்கல் பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சுட்டது அப்பளம். சுடாதது சம்பளம்...இன்றைக்கு சம்பளத்தையும் சுட்டுறான்கள்ஜீ

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் அறிவாளிகளா.. ஆச்சர்யம் தான்!..

    நல்லவேளை - மரத்தின் மீது ஏறி சாலையில் செல்லும் கிழவிகளை மடக்க வில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலதான், மறுநாளே ரெண்டு பேரும் டிஸ்மிஸ்சாம்.

      நீக்கு
  7. சிவப் பழமா காட்சி தருகிற(உங்க சாயலே இல்லையே )ஞானி ஸ்ரீ பூவுக்கு ஏன் இந்த வேண்டாட ஆசையெல்லாம் ?சங்குனி ,மங்குனி நல்லாவே பல்பு ..இல்லை இல்லை ,பழம்கொடுத்து இருக்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா நேரா இருக்காரு, பேரன் சாய்வா இருக்கேன்.

      நீக்கு
  8. நல்ல நகைச்சுவைதான்

    பதிலளிநீக்கு
  9. நகைச்சுவைக்கு நீங்கள் தொல்காப்பியர் பக்கம் எல்லாம் போக வேண்டியதில்லை கில்லர்ஜி.
    உங்களுக்கு அது இயல்பாகவே வருகிறது.
    பதிவுஅருமை!
    சற்று முன் பார்த்திருந்தால்
    உங்கள் பெயரையும் என் பதிவில் சேர்த்துக் கொண்டிருப்பேன்!
    மனம் லேசாகி விட்டது!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப்போன்ற இலக்கியவாதிகள் எனது பதிவுக்கு கருத்துரை இடுவதே பெரும்பேறு. நன்றி நண்பா...

      நீக்கு
  10. இடையினத்தில் மூன்று படுத்தும் பாடு! அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையினம், நடைபயின்றதால்தானே இந்தபதிவு, சகோதரியின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. படிக்க ஆரம்பிச்சி, கடைசியில நீங்க பொன்னம்பலத்தையும் " அம்பலத்துல " ஏத்துனதை நெனைச்சி சிரிச்சதில கண்ல தண்ணீ !

    " நல்லவேலை நடிகர் பொன்னம்பலத்தை... "

    அப்புறம் சுட்டபழம், "பலத்தை" சுட்ட கதையால்ல மாறியிருக்கும் !

    ஒரு சில எதுகை மோனை வார்த்தைகளை வைத்துகொண்டு நகைச்சுவையாய் விளையாடி சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்.

    அதுசரிஜீ ! உங்க காட் பாதரோட கண்ல ஒரு கொலவெறி தெரியற மாதிரி இருக்கே...

    நன்றி
    சாமானியன்

    லேட்டஸ்ட்டாவே வந்துட்டேன்... லேட்டா நன்றி சொன்னாலும் பரவாயில்ல !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றியும், தங்களின் கண்ணீருக்கு வாழ்த்துக்களும், கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்க தெய்வீககலை தெரியும்.

      நீக்கு
  12. சுட்ட பழம் பகிர்வு வேறு எங்கிருந்தும் தங்களால் சுடப்படவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை 228 பதிவுகளை வெளியிட்டு விட்டேன் அந்த மாதிரியான கீழ்த்தரமான எண்ணங்கள் இதுவரையிலும் இல்லை எனது மரணகாலம் வரை இந்த கொள்கை தொடரும் ஐயா.

      நீக்கு
  13. இரசித்தேன்! சிரித்தேன்!!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  14. நயமான நகைச்சுவை! அருமை!

    ரசித்தேன் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... :) தொடருங்கள் சகோதரரே!..

      நகைச்சுவை மனதிற்கு மிக அவசியமானதொன்றே.
      சுற்றுச் சூழலால் பாதிப்புற்று மன இறுக்கம் கொண்டிருக்கும் நேரம் சற்று மாறுதலாக, யாரையும் தாக்காத, நோகடிக்காத நகைச்சுவை சமூகத்தில் என்றுமே வரவேற்கப்படுபவையே...

      தொடருங்கள்.. காணக் காத்திருக்கின்றோம்.
      வாழ்த்துக்கள்!

      நீக்கு
    2. Just Wait Coming Soooooooon. August, September & Next...

      நீக்கு
  15. தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்.
    இதைத்தான் ஒவ்வையார் பாட்டியும் கேட்டாங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒளவையார் கேட்டது ரொம்ப பிர'பலம்' ஆனதாயிற்றே...
      உங்க கேள்வியிலே ஏதோ ப்ரா'பளம்' இருக்கிறதே...

      நீக்கு
  16. லேட்டாகி விட்டது! அதனால் சுட்ட பழம் அதிகமாகச் சுட்டு விட்டதோ/சுடப்பட்டுவிட்டதோ என்றும், சுடாத பழம் சுட்டு விட்டதோ/சுடப்பட்டு விட்டதோ என்று பயந்து கொண்டே வந்தோம். பரவாயில்லை......இரண்டுமே சுட்டதும், சுடாததும் சுவையாகவே இருந்தது! ரசித்து, நகைத்தோம்.(இந்த நகைக்கு அர்த்தம் விஜு ஜோசப் ஐயா அவர்கள் சொன்ன நகை அல்ல...அவர் சொன்ன பெருநகை!!!)

    பொன் அம்பலத்தைச் சுட்டு விட்டு சுடாத பழம் என்று அம்பலப்படுத்த முடியாதே! (முதல்ல அவரத் தூக்க முடியமாங்க?!!!)

    நல்ல நகைச்சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னம்பலத்தை GUN னால்சுட்டு விட்டால் ? சுட்ட பொன்னம்''பலம்'' தானே...?
      இதுக்கு மேலே பிரட்சினையை கிளப்பி POLICE கேஸாக்கி விட்றாதீங்க...

      நீக்கு
  17. வணக்கம் ஹில்லர்ஜி !

    சுட்டபழம் நன்றாய் இருக்கு ஆனால் !

    ழகர ளகர வேறுபாடுகளை சீடனுக்கு தெளிவு படுத்தாத அந்த ஞானிய மட்டும் நான் சந்திக்கவே கூடாது ........சிக்கினால் சிறுத்தையும் மானும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சீராளரே... வேண்டாம் மறப்போம், மன்னிப்போம். என்று சீரான வழியில் செல்வோமே...

      நீக்கு
  18. அசத்தலான சுட்டபழம்
    நகைச்சுவை சுடாதபழம்

    பாவம் பொன்னம் பலம்
    வித்தியாசம் கில்லர்ஜி பலம்

    தொடருங்கள் சகோதரரே. தாமதத்திற்கு மன்னிக்கவும். தங்கள் கருத்திற்கு பதிலிட்டு விட்டு உடனே விரந்து வந்தேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை போன்றவர்கள், கம்''பளம்'' விரித்து பக்க''பலம்'' கொடுத்தால் ? உடன் வரும் முளைக்காத ''பழம்''

      நீக்கு
  19. படத்தில் பெரியவர் படத்தைப் பார்த்ததும் ஏதோ புரியாத த்த்துவம் ஒன்றை புரிய வைக்கப் போகீறீர்கள் என்றுதான் நினைத்தேன். சங்குனி, மங்குனி என்றவுடன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன். ஆனாலும் அநியாயமாக சங்குனியை அலற வைத்து விட்டீர்கள். நல்ல கற்பனை!

    பதிலளிநீக்கு
  20. சுட்ட பழம்ன உடனே அவ்வையார் கதையைத்தான் சொல்வீங்கன்னு பார்த்தா இந்தக் காலத்துக் கதையைச் சொல்லியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பழமையை விரும்பும் புதுமைச்சித்தன்.

      நீக்கு
  21. சுட்ட பழம் என்றால் ஔவையார் தான் ஞாபகத்திற்கு வருவார் இனி நீங்களும் வருவீர்களே சகோ அசத்திட்டீங்க. அடடா தாமதமாகா வந்துவிட்டேன் இல்ல ... இனி தொடர்கிறேன். ஆமா தேவ கோட்டைக்கு வந்தா இப்படியா கண்ணாடி எல்லாம் போட்டு வெருட்டிறது. பயமா இருக்கில்ல. நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி, ஔவையாரோடு நானா ? இது கொஞ்சம் ஓவராக இல்லை,,, ஆமா கண்ணாடி எங்கே போட்டுருக்கேன் ?

      நீக்கு
  22. காலத்துக்கேற்ற கதை. நல்ல நகைச்சுவை ரசித்தேன் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி ஐயா தொடர்ந்தால் ? நலம்.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே!
    தங்கள் நகைச்சுவைப்பதிவு எப்போதும் போல் படு அமர்களமாக, அருமையாக இருக்கிறது.! முருகக்கடவுளின் சுட்டபழம், சுடாதபழம் விளக்கத்திற்குப்பின் புதுமையான முறையில் சுட்ட, சுடாத பழங்களுக்கு புது விளக்கவுரை, தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். சிறு வித்தியாசம் அது "பழம்" இது "பளம்" அவ்வளவே.! (இனி யாராவது ஞானிகள் தம் சீடர்களிடம் "பழம்" கொண்டு வரவேண்டி கேட்பார்களா என்ன..?)
    இனியும் நகைச்சுவைகள் தொடர வாழ்த்துக்கள்.!

    என் பதிவுக்கும் தொடர்ந்து வந்து நட்புக்கரம் நீட்டி வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை ௬றிக்கொள்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி சகோதரி தங்களின் அவா நிறைவேறும் எனது நகைச்சுவை பதிவின்மூலம், தொடரவும்.

      நீக்கு
  24. ஹா....ஹா...
    சுட்ட பொன்னம்பலமா??????
    நல்லவேளை தப்பித்தார். தாத்தா பெரிய சித்தர் போல் இருக்கிறார் அண்ணா!
    ரொம்ப மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா சித்தர் சார்பிலும், பேரன் சித்தன் சார்பிலும் நன்றி.

      நீக்கு
  25. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_10.html?showComment=1407632115925#c853170747686434206

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு