தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

Mr. திருவாளி.


கஷ்டம், நஷ்டம், இழப்பு., வேதனை, துக்கம், அவமானம், ஏமாற்றம், துன்பம், கவலை இத்தனை விசயங்களையும் ஒரு எழுத்தாளன் உணர்வுப்பூர்வமாக வாசகனுக்கு கொடுக்கமுடிகிறது என்றால் ? அவனும் தனது வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்திருக்கிறான், என்றுதானே பொருள், இந்த விசயங்களை தொட்டுப்பார்க்காதவனால், பட்டும்படாமலும்கூட எழுதமுடியாது என்பதே எமது கருத்து, அந்த எழுத்தாளன் தனது எழுத்தாற்றலால் அனைவரையும் கவரும்போது இந்த விசயங்களையெல்லாம் வெகுதூரத்தில் நிறுத்திவிட்டு வேறொரு வட்டத்துக்குள் நுளைந்து விடுகிறான் அப்பொழுது அவனுக்கு கிடைப்பது பெருமை, சந்தோஷம், கௌரவம், பதவி, விருது, செல்வந்தன், இன்பம், அங்கீகாரம், பாராட்டு, கைதட்டல், பரிசு இத்தனை உயர்ந்த வாழ்க்கை அவனுக்கு வந்தடைந்த போதும்... அன்பு, பண்பு, அமைதி, அடக்கம், கனிவு, ஒழுக்கம், எளிமை, பணிவு, புன்னகை, பொருமை காத்து வாழும்பொழுது கடைசிவரை வாழ்வை இந்த வகையில் நிலை நிறுத்திக்கொள்கிறான், மாறாக அகங்காரம், ஆனவம், திமிர், தலைக்கனம், இறுமாப்பு, கெட்டசெயல், சர்வாதிகாரம் நிலைக்கு அவன் மாறும்பொழுது பழைய நிலைக்கே அவன் கொண்டு செல்லப்படுகிறான்... இது ஒரு எழுத்தாளனுக்கு மட்டுமல்ல ! கைவண்டி இழுக்கும் தொழிலாளி முதல் நாட்டை ஆளும் ஜனாதிபதி வரைக்கும் இதே நியதிதான்.... இந்த சட்டத்தை வகுத்தது யாமல்ல ! நமக்கு மேலேயுள்ள, Mr.திருவாளியத்தவன்.
CHIVAS REGAL சிவசம்போ-
இதனாலதான், பதவி வரும்போது.... பணிவு வரவேண்டும் தோழா.... னு கவிஞர் வாலி 1964 ல்-எழுதி, T.M. சௌந்தரராஜன் பாடுனாரோ ?
குறிப்பு – நண்பர் ஊமைக்கனவுகள் அவர்களின் ‘’படைப்பின் உயிர்’’ என்ற பதிவை படித்ததின் காரணமாய் இதை எழுதினேன் திரு. ஊமைக்கனவுகள் அவர்களுக்கு நன்றி, அன்புடன். Killergee.
Video
(Please ask Audio Voice)


44 கருத்துகள்:

 1. வணக்கம்
  நீங்கள் சொன்னது சரியானது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல சக மனிதனுக்கும் கூட இந்த பண்புகள் இருக்கவேண்டும் ... மிக அருமையான கருத்தை முன்வைத்துள்ளீர்கள் அதற்கு எனதுபாராட்டுக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

   நீக்கு
 2. உணர்ந்தெழுதி உச்சிக்கேறா வரை புகழ்
  உள்ளதை உள்ளத்தில் நிறுத்து.

  பதிலளிநீக்கு
 3. எழுத்து என்பது அனுபவத்தின் வாயிலாக வருகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்! அருமையான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்.. நல்ல கருத்துக்கள்.. அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி இருப்பினும் இது அவசரக்கோலம் ஐயா.

   நீக்கு
 5. சரியாக சொன்னீர்கள் அகங்காரம், ஆணவம், திமிர், தலைக்கனம் எல்லாம் ஒருவனுக்கு வந்துவிட்டால், அவனால் மனிதனாகவே இருக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 6. மிகச் சரியே நண்பா......அனுபவம் தான் ஒருவனை எழுத வைக்கின்றது....எழுதும் கலை அறிந்தால்........அதை வெளிப்படுத்தும் வகை அறிந்தால்....என்னதான் அனுபவங்கள் இருந்தாலும், அதையும் சொல்லும் வகையில் சொன்னால்தானே சுவாரசியமாக இருக்கும்?!! அந்தக் கலை , நாடகம் மூலமோ, ஓவியத்தின் மூலமோ, கட்டுரை,கதையாகவோ, திரைப்படம் மூலமோ, பாட்டின் மூலமோ எப்படி எந்த வகையானாலும், அந்தக் கலை அறிந்தால் மட்டுமே அனுபவங்களும் சிலையாய் உளி வைத்து செதுக்கப்பட்டு வடிக்கப்படும். சிலருக்கு அனுபவங்கள் இல்லையென்றாலும்,,,அந்தல் கலை இருந்தால் கற்பனையாகக் கூட சிலை வடிக்கின்றனர்.....அதுவும் ஒரு திறமைதான்...

  அது சரி ஸ்ரீபூவு என்ன சொல்கின்றார் இதற்கு?!!!! ஸ்ரீபூவு சாமிகள் என்றால் அவருக்கு நிறையவே அனுபவங்கள் இருக்கும்.....!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீபூவு ஸ்வாமிகளின் அனுபவங்கள் வேறு வகையானது நண்பரே..
   கவலை வேண்டாம் மீண்டும் வருவார்.

   நீக்கு
 7. வாழ்க்கையில் எதனாலும் பாதிக்கப்படாத ஒருவரால் கண்டிப்பாக எழுத முடியாது.உண்மையே. .நல்லதொரு கருத்தை பதிவாக்கியதற்கு நன்றி .
  வாழ்த்துக்கள்.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் அம்மா... தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே!

  அருமையான பதிவு! ஒரு எழுத்தாளருக்கும், அவர்தம் அனுபவங்கள், எழுத்து நடையை மேம்படுத்துகிறது என்பது நூறு சதவிகிதம் உண்மை! எழுதுகிறவர்களுக்கு, மட்டுமில்லை,! ஏனையோரும் வரக்௬டாத குணங்களை சுட்டிக்காட்டியிருப்பதும், சிறப்பு.!

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. இதுவும் அந்த திருவாளியின் திருவிளையாடல்தானா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்கு சித்தமெல்லாம் சிவன் செயலே பகவான்ஜி.

   நீக்கு
  2. இன்னும் சிலருக்கு சித்தமெல்லாம் டிரிபிள் செவன் மேல்தான் இருக்கிறது !

   நீக்கு
  3. டிரிபிள் ஒண் மேலிருந்து ''நாமம்'' போட்டுக்கொள்ளாமல் இருந்தால் ? சரிதான்ஜி.

   நீக்கு
 10. அருமையான கருத்துக்கள் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 11. பதவி வரும் போது பணிவு வரவேண்டும் உண்மை உண்மை நல்ல பாடல். பதவி இல்லாவிட்டாலும் பணிவு வேண்டும் தான் இல்லையா. ஆணவம் அகங்காரம் எல்லாம் இருந்தால் என்னபயன் இருப்பவர் உட்பட எல்லோருக்கும் வேதனை தான். நல்ல கருத்தும் பதிவும் சகோ தொடர வாழ்த்துக்கள் ...!
  சித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி புதிய பதிவு என் வலையில். முடிந்தால் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி.
   ஸ்ரீசாயி பாமாலை நேற்றே படித்து கருத்துரை இட்டேன். அருமை.

   நீக்கு
 12. சிறந்த கருத்துப் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துகைக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 13. எல்லாவற்றுக்கும் காரணம் மிஸ்டர் திருவாளியத்தவனா நண்பரே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன்தானே நண்பா நம்மளை ஆட்டுறான்...
   நாம ஆடுறோம்.

   நீக்கு
 14. \\மாறாக அகங்காரம், ஆனவம், திமிர், தலைக்கனம், இறுமாப்பு, கெட்டசெயல், சர்வாதிகாரம் நிலைக்கு அவன் மாறும்பொழுது பழைய நிலைக்கே அவன் கொண்டு செல்லப்படுகிறான்... இது ஒரு எழுத்தாளனுக்கு மட்டுமல்ல ! கைவண்டி இழுக்கும் தொழிலாளி முதல் நாட்டை ஆளும் ஜனாதிபதி வரைக்கும் இதே நியதிதான்.\\ இதற்க்கு இதற்க்கு நிரூபணம் என்ன? எந்த ஒரு சட்டத்தையும் அமல் படுத்த அதிகாரம் படைத்த தலைமை வேண்டும். அப்படி அமல் படுத்தி, பின்பற்றாதவர்களை தண்டித்து வழிக்கு கொண்டுவருவது யார்?

  \\இந்த சட்டத்தை வகுத்தது யாமல்ல ! நமக்கு மேலேயுள்ள, Mr.திருவாளியத்தவன்.\\யார் இவர்?

  பதிலளிநீக்கு
 15. இதற்க்கு ''தலைமை'' மேலே உள்ளவனே, ''தண்டனை'' மரணத்திற்க்கு பின் கிடைக்கலாம் ? ? ? Mr. திருவாளியத்தவன் நம்பியோருக்கு நாராயணன் நம்பாதோருக்கு ? ? ? யாமறியோம் பராபரமே...

  பதிலளிநீக்கு
 16. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்று சொன்னதும் Mr.திருவாளியத்தவன் தானோ?
  நறுக் கென்று சொல்லியிருக்கிறீர்கள் கில்லர்ஜி!
  //இந்த விசயங்களை தொட்டுப்பார்க்காதவனால், பட்டும்படாமலும்கூட எழுதமுடியாது என்பதே எமது கருத்து, //
  நீங்கள் சொல்லுகிறபடி பார்த்தால்
  கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரை அல்லவா முதலில் உள்ளே வைக்க வேண்டிவரும்?
  ஹாஹா ஹா
  பேச்சுக்குச் சொன்னேன் கில்லர்ஜி.
  தங்களைத் தொடர்கிறேன்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பதிவை நான் எழுத காரணமான தங்களுக்கு நன்றி நண்பரே... R.K. மேட்டர் ரசித்தேன் ஆமா, அவரை எத்தனை தடவை உள்ளே வைப்பது ?

   நீக்கு
 17. தலைக்கனம் வந்துவிட்டால் எல்லாம் போய்விடும். அருமையான கருத்துக்களைப் பகிர்ந்த நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 18. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் நன்றி முனைவர் அவர்களே...

   நீக்கு
 19. அனுபவம் எழுத்தாய் அவதரிக்கு உண்மை தான் பின் தலைக்கு ஏறக்கூடாது சரியாக சொன்னீர்கள்.
  அன்றே வந்து கருத்திட்டேன். நெட் ப்ராபளம் போல அதான் கருத்து பதிவாக வில்லை என நினைக்கிறேன். அதான் பார்த்து விட்டு இப்போது இட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. உண்மைதான்...எந்த இடத்திலும் இருக்கும் மனிதனுக்கும் இது பொருந்தும்..

  பதிலளிநீக்கு
 21. எழுத்தாளனின் அனுபவங்கள் படைப்பிற்கு ஆழமான உணர்வைக் கொடுக்கின்றன..
  எவ்வளவு புகழ் அடைந்தாலும் ஆணவம் வந்துவிடக் கூடாது என்பதை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 22. வருகைக்கும், ஆழமான கருத்துரைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 23. அனுபவம் பெற்றவர்களால்தான் கஷ்ட நஷ்டம். சந்தோஷம், துக்கம், வேதனை, சாதனை, அவமானம், அங்கீகாரம் போன்ற விஷயங்களை பட்டறிவு பெற்ற ஒரு எழுத்தாளனால் தான் முடியும் என்று Mr திருவாளியத்தவன் சொல்வதை நானும் வழிமொழிகின்றேன்.

  இந்த இடத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதை எடுத்துக்காட்டுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன்


  பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
  பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
  படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
  படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
  அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
  அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
  அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
  அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
  பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
  பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
  மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
  மணந்து பாரென இறைவன் பணித்தான்!
  பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
  பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
  முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
  முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
  வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
  வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
  இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
  இறந்து பாரென இறைவன் பணித்தான்!
  'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
  ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
  ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
  'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்

  அருமையான பதிவு வாழ்த்துகள்!

  ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா.’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் வாலி அவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் நீண்ட கருத்துரையுடன் கூடிய கண்ணதாசனின் தத்துவங்களையும் ரசித்தேன்... தவறுக்கு வருந்தி திருத்தி விட்டேன் கவிஞர் வாலிதான் நண்பரே.. குறிப்பு- தவறுகளை சுட்டிகாட்ட தயங்கவேண்டாம்.நன்றி.

   நீக்கு