தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 16, 2016

மூலகாரணம் யார் ?

நமது பிரச்சனைகள் அதனால் ஏற்படும் மனவேதனைகள் கவலைகளுக்கு காரணம் நமது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள மனிதர்களால்தான்.

ஆனாலும் இதற்கு மூலகாரணம் யார் ? இறைவன் ஆம் அவனிடமிருந்து தொடங்குவதுதான் பிரச்சனை.

நடந்த தவறுகளுக்கு நாம் காரணகர்த்தா அல்ல ! இது நமக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் தெரியும். இருப்பினும் தவறுக்கு நாம் பொருப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் நான் தவறு செய்யவில்லையே என அழுது புலம்புகின்றோம் அதிலிருந்து விடுபட வழி கிடைப்பதில்லை.

இதற்கு காரணம் என்ன ? இதை இறைவன் எதற்கு நமக்கு கொடுக்கின்றான் ? நாம் செய்திருந்த, செய்து கொண்டிருக்கிற, மற்றொரு தவறிலிருந்து நாம் நம்மை மறைத்துக் கொண்டிருக்கின்றோம் அதற்கு பகரமாகத்தான் இறைவன் நம்மை இதில் சிக்க வைத்துள்ளான்.

இதுவும் ஒருவகை பண்டமாற்று முறைதான்.

இதை மனதால் உணர்ந்து கொண்டால் இதற்கு காரணமான மனிதர்கள் மீது நமக்கு கோபம் வராது நாம் நமது தவறுகளை உணரத் தொடங்கி திருந்தத் தொடங்கி விடுவோம்.

சரி நம்மை இந்தச் சிக்கலில் மாட்டி விட்ட மற்றவர்களுக்கு தண்டனை கிடையாதா ?

அது நமக்கு அவசியமில்லை அதை இறைவன் பார்த்துக் கொள்வான். நமக்கு மற்ற வேலைகள் நிறைய இருக்கிறது.


ஒரு சிலர் இறைவனிடம் பிரார்த்திப்பார்கள் எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு கூலியை கொடு, தாலியை எடு என்று.

இந்த வகையான எண்ணங்கள்தான் ஒரு சிலரை கோயிலில் காசு வெட்டிப்போடுவது, மந்திரவாதியிடம் போய் செய்வினை செய்வது போன்ற, இழி செயல்களில் கொண்டு போய் விடுகிறது.

இது அவசியமில்லாத வேலை அப்படி பிரார்த்திக்கத்தான் வேண்டும் என்றால், இப்படிப் பிரார்த்திக்கலாமே.

எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை அமைந்து அவர்கள் என்னை விட்டு, வெகுதூரம் சென்றுவிட அருள் கொடு இறைவா என பிரார்த்திக்களாமே ! இது நம்மை மேலும் தவறுகள் செய்ய விடாமல் தடுப்பதுடன், எதிரிக்கும் நன்மை நினைக்கும் நற்பண்பை வளர்க்கும் இது எனது சின்ன வயது முதல் உள்ள அனுபவ பழக்கம் எனக்கு இடையூறாக இருந்த மேலாளருக்கு இப்படி பிராத்தித்து இருக்கிறேன் அவர் என்னை விட்டு வெகுதூரம் சென்று உயர்ந்த நிலையிலும் இருக்கின்றார் இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு கொய்யா அடிக்கலாமே !

சாம்பசிவம்-
அடங்கொய்யாலே நல்லாத்தான் இருக்கு. ஆனால் நம்ம பரம்பரையில யாருமே இப்படி பிரார்த்திக்கலையே இப்ப நாம மட்டும் எப்படி மாத்திக்கிறது ?

39 கருத்துகள்:

  1. நல்லது ஜி... எண்ணம் போல் வாழ்வு...

    பதிலளிநீக்கு
  2. நல்லா எழுதியிருக்கீங்க. நியாயமான அவசியமான சிந்தனை.

    ஊருக்குப் போய் ஆன்மீகப் புத்தகங்களைப் படித்து, ஆன்மீகச் சிந்தனையை வளர்த்துக்கொண்டு, காவி கட்டி ஆன்மீக விற்பனை நிலையம் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா? நல்ல பிஸினெஸ் ஆச்சே

    பதிலளிநீக்கு
  3. அபுதாபியில் இருந்து நீங்களும் இங்கே வந்ததுக்கு ,அங்கேயுள்ள அன்புள்ள எதிரியின் பிரார்த்தனை காரணமா இருக்குமா ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு இல்லை ஆனால் எனக்கு இந்தியாவில் எதிரிகள் உண்டு ஜி

      நீக்கு
  4. அநியாயம் செஞ்சவுகளுக்குத்தான் தான தருமம் செய்தால்(கடவுளுக்கு அன்பளிப்பு) அந்த கருமம் விட்டு விலகி போயிடுமாம். நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. ஜி...நலமா?
    கடந்து வருவதற்கான வழிகளைச் சுட்டி உள்ளீர்கள். மனதளவில் அதற்குப் பழகுவது அல்லது மனதை அதற்குப் பக்குவப்படுத்துவது தான் சிரமம்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. இந்தப் பதிவுக்கு நான் சதுரகிரியில் எடுத்த டவாலி சக்திவேல் காளிதேவியை வணங்கும் புகைப்படம் பொருத்தமாக அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி!
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரு காரியம் உண்டு என்பார்கள். இதன் அடிப்படையிலேயே ஆன்மீக சிந்தனை ஓடுகிறது. நடைமுறையில், போர்த் தந்திரத்தில் எதிரியை இல்லாமல் பண்ண வேண்டுமானால், ஒன்று எதிரியை அழிக்க வேண்டும் அல்லது அவனோடு சமாதானமாகப் போய் விட வேண்டும்; இரண்டுமே ஆகாத பட்சத்தில் துஷ்டனைக் கண்டால் தூர விலகி விடுவது நல்லது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல எண்ணம் நண்பரே
    ஆனால் இன்று அக்கிரமம் செய்பவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  9. அருமையாகச் சொன்னீர்கள்
    அதுஒன்றே அமைதிபெறச்
    சிறந்த வழி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. உலகில் எல்லாருமே நன்றாக இருந்து விடமுடியாது..
    அவரவர்க்கு என்று ஒரு நிலை இருக்கின்றது..

    ரொம்பவும் குனிந்தால் இடுப்பு எலும்பு முறிந்து போகும்..
    ரொம்பவும் நிமிர்த்திக் கொண்டால் நெற்றி தெறித்துப் போகும்..

    எது வசதி என்பது அவரவர் விருப்பம் தான்..

    மற்றபடி எதிரிகளுக்காக வேண்டிக் கொள்வது பன்னெடுங்காலத்துப் பயிர்..

    இடையில் காலசூழ்நிலைகளால் கருகிப் போனது..
    தங்களால் மீண்டும் தழைப்பது கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஜி அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  12. நாம் செய்யும் காரண காரியங்களுக்கு இல்லாத அல்லது தெரியாத இறைவனை குறை கூறல் மூலம் நாம் பொறுப்பேற்கத் தயங்குகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா எல்லாம் அவன் செயல் என்றது இப்படித்தானோ ?

      நீக்கு
  13. வணக்கம் இந்தியா வந்துவிட்டீர்களாமே..கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி.நாளை பயிற்சியில் சந்திப்போம்..நன்றி சகோ?!சகோ வந்தது கூட தெரியாத ஒரு சகோதரியாக நான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக...
      மௌண்ட் ஜியோனிலிருந்து... கில்லர்ஜி

      நீக்கு
  14. நல்ல சிந்தனை. நல்ல மனம் கொண்டவர்களுக்குத் துன்பங்கள் (அதிகம்) நேர்வதில்லை என்று நாம் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறோம் நம் மனதை! மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்.. நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  15. மிக மிக நல்ல சிந்தனை கில்லர்ஜி!!! எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் நன்மைதான். ஆனால் அப்படி இல்லையே! நாங்க உங்க கட்சி ஜி!!!

    சரி உங்கள் பதிவுகள் பெட்டிக்கு வருவதே இல்லை ஏன் என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை மோடியிடம் சொல்லி சட்டமாக்க வேண்டும்

      நீக்கு
  16. பெயரில்லா12/18/2016 3:09 PM

    நல்ல பிரார்த்தனை
    ரசித்தேன் சகோதரா.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பகிர்வு. எதிரிக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற சிந்தனை வந்து விட்டால் சுகமே....

    பதிலளிநீக்கு
  18. நல்லது...
    இன்று பிறந்தநாள் என்று அறிந்தேன்...
    போனில் கூப்பிட வேண்டும் என்று நினைத்தேன்... அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது....

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா....

    பதிலளிநீக்கு
  19. நல்ல சிந்தனைகள் தான். ஆனால் பல சமயங்களிலும் நமக்குத் துரோகம் செய்தவர்களைக் கடவுள் பார்த்துப்பான் என்று நினைத்தாலும் அடுத்த கணமே அதுவும் தப்புத் தானே என்று மனம் குத்திக்காட்டும். நாம் யார் கடவுள் பார்த்துக்கட்டும்னு சொல்வதற்கு என்று தோன்றும்! மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல் ‘என்ற ஐய்யன் திருவள்ளுவர் வாக்குப்படி நடந்து வருகிறீர்கள் என்றரிய மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு