தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

பார்’அடியார் பாட்டு



ஜாதிகள் உள்ளதடி டாப்பா-குலம்
தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் லாபம்
நிதி கொடுத்தால் மதிப்பெண்-கல்வி
நிறைந்து கிடக்கிறதே நாட்டிலெங்கும்

இருந்து விளையாடு பாப்பா-நீ
இருப்பதற்க்கு வீட்டிலுண்டு சோபா
கூண்டில் விளையாடு பாப்பா-ஒரு
ரோபோட்டை வாங்கி கொள் டாப்பா

சின்னச் சிறுகருவி போலே-நீ
தெருவில் புரண்டு வா பாப்பா
வர்ணக் கலவைகளை கண்டு-நீ
மணலில் புரண்டு கொள்ளு பாப்பா

கொளுத்து திரியுமந்தக் கோழி-அதை
கொளுத்தீ சுட்டுத்தின்னு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்கா-அதை
எட்டி எறிந்து கொல்லு கல்லால்.
பார்அடியார்
பாரதீ இன்று உனது பிறந்தநாள் நீ இருந்திருந்தால் இன்றைய நிலைப்பாட்டில் இப்படித்தான் பாடல் எழுதி இருப்பாய் தவறுக்கு மன்னிப்பாயாக - கில்லர்ஜி.

16 கருத்துகள்:

  1. உங்களுக்கு பாப்பா இல்லாததால் மற்ற பாப்பாக்களை இப்படி வழிப்படுத்துவதா?
    சிரிக்க என்றாலும் நல்லதையே நினைப்போம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஜி

    சொல்லிய விதம் நகைச்சுவை கலந்தவை படிக்கும் போது சிரிப்போ சிரிப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பாரதி போற்றுவோம்
    நண்பரே தம வாக்குப் பட்டையை காண வில்லையே

    பதிலளிநீக்கு
  4. நல்லாருக்கு. தவறவிட்ட காலத்தை மீள் உருவாக்கம் செய்ய நினைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. நகைச்சுவையாக இருந்தாலும் வருத்தம் தந்தது இன்றைய நிலை....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  6. கொழுத்துத் திரியுது அந்தக் கோழி
    அதைக் கொளுத்தி திங்கனும் பாப்பா!..

    அப்படித் தின்னுட்டுத் தான் பலபேருக்கு
    குருத்து தெறித்துப் போய்விட்டதாம்!..

    பாரதி வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. பாரதியாரின் நினைவைப் போற்றுவோம்,,,/

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன் அண்ணா...
    பாரதியை நினைவில் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  9. இதையெல்லாம் பார்க்காமல் பாரதி போய் சேர்ந்ததே நல்லது :)

    பதிலளிநீக்கு
  10. பார் அடியார் நிச்சயமாக பாரதியார் ஆக முடியாது கற்பனை நன்று

    பதிலளிநீக்கு
  11. படத்தில் கோழி கொளுத்ததாக தெரியவில்லையே.....

    பதிலளிநீக்கு
  12. ம்ம்ம்ம் என்ன ஒரு வருத்தம் தோய்ந்த நடைமுறை. அதை நீங்கள் நக்கல், வருத்தத்துடன் வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்!

    பார்அடியார்!! "பார்" அடியார் எழுதியதா...(உங்களைச் சொல்லவில்லை ஜி! ரீகல் சாம்பசிவம் போல யாராவது!!ஹிஹி)

    பதிலளிநீக்கு
  13. சொல்லி இருப்பது தவறே இல்லை. உண்மை நிலவரத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். :( உண்மையில் பாரதி இருந்திருந்தால் இப்படித் தான் பாடி இருக்கணும். அருமையான அஞ்சலியும் பிறந்த நாள் வாழ்த்தும் பாரதிக்கு. உங்கள் மன வருத்தம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  14. உண்மை நிலவரத்தை விளக்கும் கவிதையை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு