தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 29, 2016

என்னதான் நினைக்கிறாங்கே.... ?


மக்களை இவங்கே என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்கே ? அரசியல்வாதி ஏமாத்துறான், சினிமாக்காரன் ஏமாத்துறான், கிரிக்கெட் வீரர் (?) ஏமாத்துறான் நீங்களுமாடா ? தரமாக தயாரிச்சு விளம்பரத்துக்கு கொடுக்கிற காசை விலையைக் குறைச்சு விற்றால் விற்காதா ? ஒருவேளை விற்காதோ ? காரணம் நம்ம ஆளுக்கு பகட்டு வாழ்க்கை மேலேதானே மோகமாக இருக்கு இது கடைசியில் மோசமாகும் என்பது விளங்காதுதான்.

நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கிருவோமே அப்படின்னு தொ(ல்)லைக் காட்சியை திறந்தால் ஒரு நடிகன் அந்த வேஷ்டியை வாங்குங்கிறான், இன்னொரு நடிகன் இந்த வேஷ்டியை வாங்குங்கிறான், அங்கிட்டு ஒரு நடிகன் இதை மட்டுமே வாங்குங்கங்றான் சரி ஸூட்டிங் போக மற்ற நேரத்தில் அவன் வேஷ்டி கட்டுறானான்னு பார்த்தால் கோட்டு ஸூட்டு போட்ட கோமானாகவே காட்சி தர்றான் ஏண்டா.... டோய் விவசாயிக்கு கோவணம் கட்டத் துணியில்லையே உங்களுக்கு தெரியுமாடா ? சரியின்னு இவங்கே யாருன்னு.... இணையத்துல தேடிப்பார்த்தால் ? எல்லா வேஷ்டிக்குமே ஒருத்தன்தான் முதலாளியாக இருக்கான் இந்த மக்களை கஞ்சி தண்ணி குடிக்க விடமாட்டீங்களாடா ? பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான் ஏழை ஏழையாகவே இருக்கான்.

நண்பர் மதுரைத்தமிழன் எழுதி இருந்தார் நடிகர் சங்க கட்டிடம் கட்ட 26 கோடி ரூபாய் தேவையாம் அதுக்கு கிரிக்கெட் நடத்தப் போறாங்களாம் ஏண்டா டோய் நேற்று வந்தவன்கூட கோடிகள் சம்பளம் வாங்குறீங்களேடா... உங்களுக்கு மனசாட்சி இல்லையா ? உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்பது எல்லா மடப்பய ரசிகனுக்கும் தெரியும் தெரிஞ்சும் உங்களைப் பார்க்கத் துடிக்கிறான் நீங்களும் சோத்தை தின்னுட்டு பீயைத்தானேடா பேளுறீங்க.. எதுக்குத்தான் இவங்கே உங்களிடம் மயங்குறானோ புரியலையே.... ஏண்டா நாசமாப் போறவங்களா ? கொஞ்சமாவது யோசிங்களேன்டா ? உங்களைத்தானடா ஐயா திரு. A.P.J. அப்துல் கலாம் கனவு காணுங்கள்’’னு சொன்னாரு... இன்னும் தூக்கத்துலயே... இருக்கீங்களடா.... உங்களை எல்லாம் கேப்டனை விட்டு தூக்கி அடிச்சாத்தான் சரியா வருமா ? இதோ போடுறேன்டா போனு.

சிவாதாமஸ்அலி-
போனை கீழே போட்டுறாம.....
Chivas Regal சிவசம்போ-
எந்தக் கேப்டனை சொல்றாரு.... டோணியவா ? அவருக்கு பின்னால காலை தூக்கத் தெரியாதே... ?
சாம்பசிவம்-
அம்மணத்தான் ஊருல கோவணம் கட்டுனவன் கிறுக்குப்பயலாம் சில பேருக்கு இது கடைசியிலதான் புரியும்.

48 கருத்துகள்:

  1. வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் இருக்கும் வரை,, இங்கு எதுவும் மாறப்போவதில்லை சகோ,,,

    பதிலளிநீக்கு
  2. இதுகூட அந்த லுங்கிக்கு விளம்பரம்தான் ,இப்படிப்பட்டவைகளை தவிர்க்கலாமே ஜி ?
    கேப்டனா அது யாரு ?அவரென்ன பதான்கோட் தாக்குதலை முறியடித்தாரா:)

    பதிலளிநீக்கு
  3. .வணக்கம்
    ஜி

    உலகம் 1நாடக மேடை இந்த கொடுமை எல்லாம் பார்க்கவேண்டிய காலம் ஜீ சரியாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  4. எதுக்கு ஃபோனு? நீங்க தானே அந்த கேப்டன்???!!!!!ஜி!!! ஹஹ்ஹஹ்

    பதிலளிநீக்கு
  5. இது மட்டுமா ஒரு நடிகர் நகையை வாங்கலாம் என்பார். இன்னொரு நடிகரோ நகையை வைத்து கடனை எளிதாக வாங்கலாம் என்பார். திரைப்பட மாயை நம்மவர்களிடையே இருக்கும் வரை இது போன்ற விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். காலம் மாறும் காட்சிகளும் மாறும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  6. நாட்டு நடப்பை தோலுரித்துவிட்டீர்கள்.எல்லாம் மார்க்கெட்டிங்

    பதிலளிநீக்கு
  7. விளம்பரம் வியாபார ரகசியம் யாராவது விளம்பரப்படுத்தப்படாத பொருளை வாங்குகிறார்களாஅதுவும் அவர்கள் விரும்பும் நபர்களே விளம்பரப் படுத்தும் போது. யார் என்ன சொன்னாலும் நாம் நாமாக இருப்போமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம சும்மா எவ்வளவு காலம்தான் இருப்பது ஐயா ?

      நீக்கு
  8. ஆண்களின் அடையாளம்
    நண்டு மார்க் லுங்கியா
    அதெல்லாம், பொய்
    கட்டிக்கோ ஒட்டிக்கோ என
    சுறா மார்க் வேட்டி இருக்கே
    இரண்டுமே
    உடுக்கத் தெரியாவிட்டால்
    அம்மணத்தான் ஊரில
    கோவணம் கட்டுறது மேல்...

    பதிலளிநீக்கு
  9. வருக நண்பரே நாளை இதுவே ஃபேஷனாகலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவணம் கட்டாம சும்மா இருக்கறது கூட ஃபேஷனாகப் போகின்றது..

      அதுக்கும் ரெண்டு பயலுங்க வருவானுங்க
      தெக்காலயும் வடக்காலயுமா!..

      நீக்கு
    2. நிச்சயம் நடக்கும் ஜி

      நீக்கு
  10. room pottu yosikkiranga....kavukka...ennathai sollurathu

    பதிலளிநீக்கு
  11. அட போங்க சகோ... ஒன்றும் சொல்வதற்கில்லை. வலிதான் அதிகம்

    பதிலளிநீக்கு
  12. நான் லுங்கி கட்டுவதை விட்டு 23 வருஷங்கள் ஆகுதுங்க..

    அடேய்!...

    அதெல்லாம் இல்லைங்க.. வேலைக்குப் போற நேரம் போக மீந்த நேரமெல்லாம் வேட்டிதான்.. நாலு முழ வேட்டி தானுங்க..

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் நலமா சார்? ஊருலகம் எப்படி இருக்கின்றது? மாதம் மும்மாரி பொழிகின்றதோ? வெயில் கொழுத்தலையோ? அரிசி, பருப்புல்லாம் ரேசன்ல ஒழுங்கா கிடைக்குதோ?

    விளம்பரத்தின் மூலம் வியாபாரம் இருப்பதனால் தானே அவர்கள் இத்தனை மெனக்கெட்டு செலவிட்டு தயார் செய்கின்றார்கள்.இப்படி பதிவுகள் கூட அவர்களுக்கு இலவச விளம்பரம் தானாக்கும்.

    நான் இந்த விளம்பரம்லம பார்த்து எதையும் வாங்குவதில்லை, கண்டுப்பதும் இல்லை, எங்க கம்பெனிக்கு இப்படில்லாம் இல்லாததை இருப்பதா சொல்லி விளம்பரம் செய்யவும் இல்லையாக்கும்ம்ம்ம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நலமே... அதுவே விளைவு
      நாடு நலமே, ஆள்பவர்கள் நலமே... மக்களின் நிலைதான் வழ(ழு)க்கம்போல...

      நீக்கு
  14. மக்களுக்கு சினிமா மோகம் மட்டும் விடுவதேயில்லை! ஆமாம், இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வோட் போட்டது யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      நண்டு கம்பெனி ஓனராக இருக்குமோ ?

      நீக்கு
  15. விளம்பரத்தையும் விடவில்லையா நீங்கள்?

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    உண்மை நிலையை எழுதியிருக்கிறீர்கள். விளம்பரங்கள் விபரமாக வந்தாலும், ஒரு கவ்யாணம். கார்த்திகைக்கு கூட யாரும் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதாக தெரியவில்லேயே! எங்கும் எப்போதும் மார்டன்தான்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  17. நடிகன், நடிகை.. ஆண்ட நாடு நண்பரே....ஈது

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    கல்யாணம் என்று திருத்திக் கொள்ளவும். ஏதோ என் மனதில் பட்டதைச் சொன்னேன்.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. சினிமா மோகம்... என்னத்தச் சொல்ல....

    ஆதங்கம் சொன்ன பதிவு.

    பதிலளிநீக்கு
  20. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  21. இந்த வாரம் வேட்டி வாரமாம்..! இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. வருக வெட்டி வாரம் எாம் சொல்லலாம்
    புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. அதீதமான சினிமா மோகம்! மக்களை எங்கேயோ கொண்டு போய் விட்டது! என்னத்தைச் சொல்ல! :(

    பதிலளிநீக்கு
  24. சினிமா மோகத்தைக் கோடாலி கொண்டு பிளந்திருக்கிறீர்கள். 3000 பேர் இருக்கிற சங்கத்துக்கு தொலைக்காட்சியில் எத்தனை விளம்பரம்.

    ஜனவரி 1-7 வரை ராமராஜ் வேஷ்டி 100 ரூக்குக் கிடைக்குமாம். ரொம்ப விளம்பரங்களினால் தரம் குறைந்து விலை ஜாஸ்தியானது, டி.எம்.டி முறுக்குக் கம்பிகளும் வேஷ்டிகளும்தான். இப்போல்லாம் லுங்கி கட்டற ஆட்கள் கம்பியாயிடுச்சு. எல்லோரும் அரை டிரௌசர்தான்.

    பதிலளிநீக்கு