தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், டிசம்பர் 19, 2016

அவசரம்


நான்,
இரையை தேடும் அவசரத்தில்,
இறைவனை தேட மறந்து விட்டேன்,
பணத்தை தேடும் அவசரத்தில்,
பக்தியை நாட மறந்து விட்டேன்,
மதுவை தேடும் அவசரத்தில்,
மனசாட்சியை மறந்து விட்டேன்,
மாதுவை தேடும் அவசரத்தில்,
மானமுள்ளதை மறந்து விட்டேன்,
கடைசியில் இடத்தை வாங்கிய போதுதான்,
தெரிந்தது இது சுடு(ம்)காடு என்பது...

* * * Today my Birthday Post * * *

38 கருத்துகள்:

 1. என்ன தான் இருந்தாலும்.....


  வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு
  பாராட்டுகள்

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோ..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
  மனதை எழுத்துகளாக வடித்து
  மனங்களை சேமித்து உள்ளீர்கள்

  வாழ்க பல்லாண்டு.

  பதிலளிநீக்கு
 4. எங்கும் அவசரம்தானய்யா. அதுதான் உலகம். புதுக்கோட்டைக் கணினிப்பயிற்சி முகாமில் உங்களைக் கண்டது மகிழ்வினைத் தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரை சந்தித்ததில் தனிப்பட்ட
   வகையிலும் சந்தோஷமே...

   நீக்கு
 5. தவிர்க்க இயலா வேலை
  அதனால்தான் தங்களைப் புதுகையில் சந்திக்கும் வாய்ப்பை
  இழந்து விட்டேன்
  மீண்டும் விரைவில் சந்திப்போம் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் வருத்தம் உண்டு சந்திப்போம் நண்பரே

   நீக்கு
 6. வர வர உங்கள் இடுகையில் யதார்த்தம் கூடிக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் படத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!..

  மறுபடியும் நிதானமாகத் தேடுங்கள்..
  கிடைக்க வேண்டியெதெல்லாம் நிச்சயமாகக் கிடைக்கும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி மகிழ்ச்சியான கருத்துரை கண்டு மகிழ்கின்றேன்...

   நீக்கு
 8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

  நீங்க வாங்கியது வில்லங்கமில்லா சொத்து தானே :)

  பதிலளிநீக்கு
 9. ஜி சுடுகாட்டிலுமா வில்லங்கம் ?

  பதிலளிநீக்கு
 10. பிறந்த நாள் வாழ்த்துக்கள். அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 11. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நீங்கள் செய்யாத எதனாலும் இழப்பு ஏதுமில்லை

  பதிலளிநீக்கு
 12. பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. கவிதை நன்றாக இருந்தாலும் பிறந்த நாள் அன்று இப்படி ஒன்று எழுதி இருக்க வேண்டாமோ? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் குழந்தைகளுடன் உங்கள் வருங்காலம் சிறப்பாகவும் அமைதியாகவும் செல்லப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பிறந்தநாளே என்னை இப்படி எழுத வைத்தது

   நீக்கு
 14. Belated birthday wishes! உங்கள் எழுத்துக்களில் உள்ள உண்மை நெஞ்சின் மையத்தை தாக்கி என்னவோ செய்கிறது.

  பதிலளிநீக்கு
 15. இப்போ சுடுகாடும் மறைந்து விட்டது நண்பரே.....

  பதிலளிநீக்கு
 16. அருமை! ஜி! தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ஜி! என்றாலும் பரவாயில்லை நாம் ஒவ்வொரு நாளூம், ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறந்து கொண்டேதானே இருக்கிறோம்! இல்லையா ஜி! எனவே தங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து எழுத்துலகிலும் ஒளிர்ந்திட பல்லாண்டு வாழ்க என்று மனதார வாழ்த்துகிறோம் கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  விபரங்கள் அறிந்தேன்.தங்கள் செல்வங்களுடன்,தாங்கள் பிறந்த மண்ணில் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடிய தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.தாமதமாக வந்து வாழ்த்துரைத்தமைக்கு மனம் வருந்துகிறேன்.என்னால் முன்பு மாதிரி வலைப்பக்கம் வர இயலவில்லை.அவ்வப்போது வந்து படிக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. பிறந்த நாளில் அருமையான கவிதையை படைத்துள்ளீர்கள். பாராட்டுகள்! இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தங்களது பதிவை பார்க்க இயலவில்லை. தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்க.
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 19. இந்தப் பதிவுக்குக் கருத்துத் தெரிவித்த நினைவு இருக்கு. ஆனால் காணோமே! எனினும் மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மேலே சொல்லி இருக்கின்றீர்களே...

   நீக்கு