தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 15, 2018

டிட் ஐ ஹிட் யுவர் கார் ?


இந்தப் பதிவின் தொடர்ச்சி... 
லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் ?

எனக்கு நேற்று சாப்பிட்ட எலிக்கறி அடி வயிற்றைக் கலக்கியது... இருப்பினும் அலெர்ட் ஆறுமுகம்போல உட்கார்ந்திருந்தேன்..

அஹோய்... லேஷ் ஜாலான் ?
சகோதரா ஏன் கோபம் ?
கம் மர்ரா அனா சவி ஹாத்ப் ?  
எத்தனை முறை செல்பேசி செய்வது ?

மாலீஷ் ஹாத்ப் அனா கல்லி தாக்கல் சையாராஹ்.
மன்னிக்கணும் கைப்பேசியை காருக்குள்ளே போட்டுருந்தேன்.
லேஷ் உத்ரப் இந்தே சையாராஹ் மால் ஊவா ?
எதுக்கு இவனது காரை இடித்தாய். ?

ஊவா கலம்த் கஸாப் அராமி.
பொய் சொல்றான் இவன் அயோக்கியன்.
இந்தே லேஷ் கூல் ஊவா அராமி ?  
நீ எதற்கு இவனை அயோக்கியன்னு சொல்றே ?

ஊவா சவி முஷ்கில் சையாராஹ் மால்அனா
இவன் எனது காருக்கு பிரச்சனை செய்துட்டான்.
ஊவா லா இந்தே ?
அவனா இல்லை நீயா ?

ஊவா சீர் சோய் சோய்.. அதா ஃபீ முஷ்கில்..
இவன் மெதுவாக போனான் அது பிரச்சனை.
இந்தே ஐ மக்கான் சீர் முக்கப் சையாராஹ் வல்லா சாராஹ் துபாய் ?
நீ எந்த இடத்தில் போறே கார் பார்க்கிங்கா இல்லை துபாய் ரோடா ?

ஊவா இம்சி.. வாஜித் சோய்ய...
இவன் ரொம்ப.. மெதுவாப் போனான்.
யா.. ஹாஜி அதான் மக்கான் அதா ஸகில் தாணி கேஃப் இம்ஸி ?
அந்த இடம் அப்படித்தான் வேறு எப்படி போவது ?

ஊவா மாஃபி ஜெய்ன், ஸூப் ஸினப் மால் ஊவா.
இவன் சரியில்லை, இவன் மீசையைப்பாரு..
அதிகாரி அழகான என்னைப் பார்த்தார், நான் அவரைப் பார்த்தேன்.
அனா மாரீத் ஸூப் ஸினப் மால்ஊவா, இந்தே லேஷ்... உத்ரப் சையாராஹ் மால் ஊவா தலாத்தா மர்ரா ?
எனக்கு இவன் மீசையை பார்க்க வேண்டிய அவசியமில்லை, நீ எதற்கு இவனுடைய காரை மூன்றுமுறை இடித்தாய் ?

மாஃபி தலத்தா மர்ரா சோய்ய... வாஹத் மர்ரா...
மூன்றுமுறை இல்லை ஒருமுறை மட்டும்தான் மெதுவாக.
இந்தே முத்தஃபா மாஃபி கலம்த் கஷாப்.
நீ ஆலீம்மூஷா பொய் பேசாதே.

லா ஊவா கலம்த் கஷாப்.
இல்லை இவன் பொய் சொல்றான்.
இந்தே ஸோல் ஊவா.
நீ கேள் இவனிடம்.
என்னிடம் திரும்பி ஆங்கிலத்தில் கேட்டான்.

டிட் ஐ ஹிட் யுவர் கார் த்ரீ டைம்ஸ் ?
எஸ் ஷ்யூர் த்ரீ டைம்.
ஃப்ராமிஸ்.
ஃப்ராமிஸ்.
நோ யூ டாக்கிங் நாட் ட்ரூ.
ஓகே நோ ப்ராப்லம் கால் த மால் மேனேஜ்மெண்ட் டிவிஷன் கலெக்ட் த தட் டைம் வீடியோ க்ளிப் ஆஃப்டர் யூ வில் டிஸைட்.

அவரது கண்ணில் கிலி பறப்பதைக் கண்டேன் அதிகாரி என்னிடம் கேட்டார்.
ஓகே கில்லர்ஜி ஸ்சூ கூல் இந்தே சவி மாலீஷ் சீர் சவசவ வல்லா ஸ்சூ ?
சரி கில்லர்ஜி என்ன சொல்றே நீ மன்னிச்சு ஒண்ணாப் போறீங்களா ? இல்லை வேறென்ன ?

லா மாஃபி மாலீஷ் அனா ரோஹ் மக்காமா.. சவி தர்த்தீப் கானூனி.
இல்லை மன்னிப்பு வேண்டாம் நீதி மன்றம் தீர்மானிக்கட்டும்.
அதிகாரியும், நானும் அரபியில் பேசிக்கொள்ளவும் மேற்படியார் என்னை மிரட்சியாகப் பார்த்தார் இவன் அரபி பேசுவானா ?

ஹாஜி ஊவா கூல் சீர் மக்காமா ஸ்சூ சவி ?
ஹாஜி இவன் நீதிமன்றம் போகணும்னு சொல்றான் என்ன செய்ய... ?  
மாலீஷ் சையாராஹா மால் ஊவா அனா சவி தர்த்தீப் ஸஹீர் முஷ்கில் மாஃபி ஸ்யாதா.
மன்னிக்கணும் இவனது காரை நான் சரி செய்து கொடுத்துடுறேன் சின்ன பிரச்சனைதான்.

இந்தே கூல் ஸஹீர் முஷ்கில், ஊவா கூல் கபீர் முஷ்கில்.
நீ சொல்றே சின்ன பிரச்சனை இவன் சொல்றான் பெரிய பிரச்சனை.
லா அனா சவி ஸூராஹ் அல்கின் இந்தே ஸூப்.
இல்லை நான் ஃபோட்டோ எடுத்து வாறேன் இப்போ நீ பாரு.

ஹாஜி அவ்வல் அதா மாஃபி காதத் இந்தே சவி யக்துல் முஹாவலா அதா நமூனா தாணி பாதின் ஃபீ முக்காலிஃபா.. அதா குல்லும் கலம்த் மக்காமா.
ஹாஜி இது விபத்து இல்லை கொலை முயற்சி இது வேற மாதிரி அப்புறம் அபராதம் உண்டு எல்லாம் நீதி மன்றம் சொல்லும்.
மாலீஷ் இந்தே சவி தர்த்தீப்.
மன்னிக்கணும் நீ சரி செய்து விடு.
அனா மாஅறஃப் இந்தே மஸூல், ஊவா மஸூல் சீர் பர்ரா கலம்த் சவசவ பாதின் தால் அனா ஃபீ இந்த ஸார்.
எனக்குத் தெரியாது நீயும், அவனும் பொருப்பு வெளியே போயி ஒன்றா கலந்து பேசிவிட்டு பிறகு வாங்க நான் காத்திருக்கேன்.

நானும், அவரும் வெளியே வந்தோம் காரின் அருகே வந்ததும் காரை உனது செல்லில் ஃபோட்டோ எடு ஆஃபீஸரு கேட்டாரு எனச்சொல்ல நான் எனது செல் சாதாரணமானது ஃபோட்டோ எடுக்க முடியாது என்று சொல்ல அவர் எனது காரை அடிபட்ட இடத்தில் எடுக்க, நான் அந்த தருணத்தை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் அவரை சுற்றி சுற்றி எடுத்தேன் சத்தமின்றி அந்தப் புகைப்படம்தான் மேலே காண்பவை.
நாம சமாதானமாகப் போயிடுவோம் உன்னோட காரை நான் சரி செய்து தர்றேன் நீதிமன்றம் வேண்டாம்
நான் எனது நண்பரிடம் யோசனை கேட்கிறேன் பிறகு பார்க்கலாம் என்று எனது செல்லில் கோயமுத்தூருக்கு அழைத்து எனது அன்பு மகளிடம் நல்லா இருக்கியாடா ? கோயமுத்தூர் ஏர்போர்ட் விலைக்கு வருவதாக கேள்விப்பட்டேன் என்ன ரேட்டுனு கேட்டு வையி என்று மேலும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வைக்க...
உனது நண்பர் என்ன சொன்னார் ?
அவரும் சமாதானமாகத்தான் போகச்சொல்றார் சரி என்னை எதுக்கு அயோக்கியன்னு சொன்னே ? எனது மீசை உன்னை என்ன செஞ்சுச்சு ?
? ? ?
சொல்.
மன்னிச்சுக்க... ஏதோ டென்சன்ல சொல்லிட்டேன்.

இருவரும் உள்ளே வந்து அதிகாரியிடம் சமாதானமாக போகிறோம் என்று சொல்ல அவரும் வாழ்த்துகள் சொல்லி எனது காரை அவருடைய செலவில் சரி செய்து கொடுப்பதற்கான ஒர்க் ஷாப் பேப்பர் கொடுத்து அவருக்கு அபராதத்தொகை எண்ணூறு திர்ஹாம்ஸுக்கான பேப்பரும் கொடுத்து இருவரையும் கை கொடுக்கச் சொல்லி சமாதானமாக்கி விட விடை பெற்று வெளியே வந்தோம் மறுநாள் காரை ஒர்க் ஷாப்பில் சரியாக்கினேன்.

நண்பர்களே... நான் நினைத்திருந்தால் நீதிமன்றம் போயி அவரை அலைக் கழித்திருக்கலாம் இதனால் எனக்கு லாபம் என்ன ? அவருடைய குடும்பத்தின் சாபம்தானே ? பாவம் அவரும் என்னைப் போல பிழைக்க வந்தவர் மேலும் தொழுகையாளி அவருடைய பாவம் நமக்கெதற்கு ? இதன் பின்னே நானும்தானே அலைய வேண்டும் இதற்காகவா வந்தோம் ? மறப்போம் மன்னிப்போம்.

முற்றும்

50 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆவ் இன்று மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))) பூஸோ கொக்கோ?:))

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நல்லபடியாக பிரச்சனை முடிந்தது. அரபி பேச்சில் அவரை அசர வைத்ததற்கு பாராட்டுகள். நடுநடுவில் தமிழில் எழுதியதால் நாங்கள் பிழைத்தோம். அவரே சரி செய்ய பணமும் கொடுத்து மன்னிப்பும் கேட்டு விட்டார். நல்ல மனிதர்தான். இங்கு என்றால், பிரச்சனை தீயை வளர்த்து,அதில் எல்லோரும் குளிர் காய்வார்கள். நல்ல முடிவு. நல்ல தீர்ப்பு. மறப்போம்... மன்னிப்போம் என தாங்கள் விட்டு கொடுத்தது வெகு சிறப்பு. தங்கள் பெருந்தன்மையான நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்..கதை மாதிரி தங்கள் அயல் நாட்டு அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள.

    ஆமாம்.. கோயமுத்தூர் ஏர்போர்ட் விலைக்கு வாங்கி விட்டீர்களா? என்ன விலை? அறிய ஆவலுடன் உள்ளேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவர் செய்த தவறுக்கு தண்டனை அரசுக்கு எண்ணூறு திர்ஹாம்ஸ் அபராதம் கட்டியதும், (இந்த தொகை உடனே கட்டலாம் அல்லது அவருடைய கார் ரினுவலுக்கு போகும் அவ்வருட கடைசி தேதியிலும் கட்டலாம்) ஆனால் எனது காரை சரி செய்வதற்கான தொகை அவர் காரை இன்சூரண்ஸ் செய்த கம்பெனியிலிருந்து, டிராபிக் டிபார்ட்மெண்ட் போக ஒர்க் ஷாக் அங்கிருந்து தொகையை வாங்கி கொள்ளும்.

      எனக்கு செலவு இல்லை இதற்கான அலைச்சல் மட்டுமே...

      இதுதான் இந்த நாட்டின் சட்ட அமைப்பு.

      ஏர்போர்ட் ரேட் ஒத்து வரவில்லை ஆகவே விட்டு விட்டேன்.

      நீக்கு
  3. நல்ல முடிவு.. மகளோடு எயார்போர்ட் வாங்குவது பற்றிப் பேசியது ரொம்ப அநியாயம்.. மகள் பயந்திருப்பா:) அப்பாவுக்கு என்னமோ ஆச்சு என:))..

    அதுசரி காரைத்திருத்தி ஒழுங்காக் குடுத்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நினைத்திருக்கலாம் அது வெயில் காலம் வேறு.

      காரை சரி செய்வது ஒர்க் ஷாப் வேலை அந்த பேப்பரை வாங்கியவுடன் எனக்கும், அவருக்கும் தொடர்பு கிடையாது.

      பிறகு ஒர்க் ஷாப்பும், போலீஸ் டிபார்ட்மெண்டும் தொடர்பு. பணம் பட்டுவாடா வங்கி மூலம் மட்டுமே.

      நீக்கு
  4. அரபி மொழியில் நன்றாக பேச தெரிந்ததும் ஒரு அட்வான்டேஜ் .இங்கே 40 வருஷமா வசிக்கும் பல ஆசியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது .நம்மை பார்த்ததும் ஹிந்தியில் பேச ஸ்டார்ட் பண்ணுவாங்க .

    நல்ல விஷயம் செய்தீங்க யாருடைய பாவமும் சாபமும் வேண்டவே வேண்டாம் .என் கணவரின் காரை இங்கே போன வருஷம் பாகிஸ்தானி மில்க் மேன் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது காரில் முட்டிட்டார் eid நேரம் பாவம் பெரிய dent .பயந்து மன்னிப்பு கேட்டதும் இவர் பரவால்லைன்னு விட்டுட்டார் .அந்த மனிதர் refugee வேற .எங்களுக்கு 100 பவுண்ட் செலவு ஆனா எங்கே பார்த்தாலும் ஸலாம் சொல்வார் அந்த மனிதர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எதற்கு பிறரின் சாபம் ? எனக்கு எனது வேலை சுபமாய் முடிந்தால் மோதும்தானே...

      பாக்கிஸ்தானியும் சிறிய சம்பளத்தில் வாழ்பவர் பாவம்.

      நீக்கு
  5. சட்டப்படி அதிகாரிகள் நடக்கும்போது எப்படிப்பட்ட சந்தோஷம். மிகவும் ரசித்த பதிவு.

    எனக்கு ஒரு அரபி வக்கீல் சொன்னது. இங்குள்ள நீதிபதிகள் பெரிய பெரிய சட்டப் புத்தகங்களைப் படித்து கரைகண்டவர்கள் கிடையாது. தகப்பன் ஸ்தானத்தில் இருந்து இரண்டு பேருடைய பிரச்சனையைக் கேட்டு சட்டப்படி தீர்ப்பு சொல்வாங்க. நியாயம்தான் சொல்வாங்க. எப்போதும் தவறுதலா தீர்ப்பு சொல்லிடக்கூடாதுன்னு பயப்படுவாங்க என்றார (அவங்கள்லாம் ஐந்துமுறை தொழுது இஸ்லாமிய நெறிகளில் ஒழுகுபவர்கள்)

    என் அனுபவத்தைப் பின்னால் எழுதறேன். நியாயமா நடந்ததா இல்லை மதமாச்சர்யமா நடந்ததான்னு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      அந்த வக்கீல் சொன்னது உண்மையே நமது நாட்டில் சட்டத்தை கரைத்துக் குடித்து படித்தவர்கள் ஏராளம் பேர்.

      அது சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியே குற்றவாளிகளை தப்பிக்க வைத்து பணம் சம்பாரிப்பதற்காக!

      இவர்களுக்கு சட்டத்தின் மீதும் மதிப்பு கிடையாது, இறையின் மீதும் பயம் கிடையாது.

      இங்கு பெரும் பொருப்பில் உள்ளவர்கள் அனைவருமே 'குர்ஆன்' மீது சத்தியம் செய்தே வேலையை செய்கின்றார்கள்.

      நிறைய சொல்லலாம் இது செல்வழி...

      நீக்கு
  6. மறப்போம் மன்னிப்போம்..,. நல்லது. பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் நல்ல மனத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அரபி மொழி தெரிஞ்சதாலே நல்லதாப் போச்சு. ஆனால் அந்த ஆள் திகைச்சுப் போயிருப்பார். போகட்டும், எப்படியோ பிரச்னை சுமுகமா முடிஞ்சது. கோவை விமான நிலையத்தை வாங்கி இருந்தா அங்கே ஒரு பெரிய ஃப்லாட் கட்டிக் குடி போகலாமேனு நினைச்சேன். சீதோஷ்ணம் அருமையா இருக்கு. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நம்மில் பலர் மொழி தெரியாமல் சில வெட்டி செலவுகளில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

      ப்ளாட் கட்டிக்கிறீங்களா ? அதுதான் ரேட் ஒத்து வரலையே....

      நாங்களே யானைகளை கட்டி வைக்க இடம் பத்தாமல்தான் அலையிறோம்.

      திருச்சி ஏர்போர்ட் படஞ்சு வந்தால் பார்க்கலாம்.

      நீக்கு
  9. பிரமாதம் தேவகோட்டை ஜி.
    அரபியில் கலக்குகிறீர்கள்.
    சாமர்த்தியமாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.
    சுலபம் சுபம் .வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும்!...

    ஈத் முபாரஹ்... ஹஜ்ஜி!...
    ஸ்லோனக் இந்த!?.. தமாம்!..

    மஜ்பூத்... மஜ்பூத்..
    குல்லு மஜ்பூத்!..

    அல்லா சவ்வி ஜேன் ந்த!...

    சுனு யபி ந்த ஹபீபி?..

    சுலைமானி?.. ந்த அபி ஸிரப்!..

    யெல்லா... அன ஈஜி பாதேன்
    சவ சவ புர்யாணி!...

    மா ஸலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ வலைக்கும் சலாம் ரஹமத்துல்லாஹ் பரக்கத்.

      வல்லாஹி அல்லா சவி முஸாதா. ஃபீ நஸீப் மிஷான் அனா.

      ஈத் முபாரக் ஜி
      ஜீப் புர்யாணி ஸம்மக்.

      நீக்கு
  11. உங்களுக்கு ஒரு வேளை அவர்களின் மொழி தெரியாதிருந்தால் இந்த கேஸ் எப்படிப் போயிருக்கும் ? கற்பனை செய்யலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக சுலபம் ஐயா.
      போலீஸ் ஸ்டேஷன் போயி, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நான் பேசி, அதை அவர்களுக்கு புரிந்த விதத்தில் எடுத்துக் கொண்டு ஒர்க் ஷாப் பேப்பர் தருவார்கள்.

      அதைக் கொண்டு போய் நான் செலவு செய்து சரி பார்கணும்.

      ஆனால் சரி செய்யாமல் காரை ஓட்டக்கூடாது.

      மொழி தெரியாதவர்களின் நிலைப்பாடு இதுவே.

      நீக்கு
  12. உமக்குப் பெருமனது என்பதை நாங்கள் அறிவோம். மொழி மட்டும் தெரியாமல் போயிருந்தால்....நினைத்துப் பார்க்கமுடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே...
      மேலே ஜியெம்பி ஐயாவுக்கு கொடுத்த மறுமொழியை படிக்கவும்.

      நீக்கு
  13. பி.ஏ., பி.ஓ.எல்., எம்.ஏ, பிஹெச்.டின்னு எதையெதையோ படிச்சிக் 'கிழிச்சுட்டு' நாற்பது வினாடி ஒழுங்கா இங்கிலீசில் பேசணும்னா எனக்கு நாக்கு வெளியே தள்ளுது. ஆங்கிலத்தோடு கடினமான அரபு மொழியிலயும்[கில்லர்ஜிக்கு இன்னும் எத்தனை மொழி தெரியும்?] நீங்க கலக்குறதை நினைச்சா கொஞ்சம் பொறாமையா இருந்தாலும் ரொம்ப சந்தோசமா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அங்கு அனுபவத்தால் ஆங்கிலத்தில் கலக்கும் படிக்காதவர்களும் உண்டு.

      பொறாமை நல்லது அது கெடுதலுக்காக இருக்ககூடாது நான் தமிழ் படித்துக்கொண்டு இருந்த மலையாளி மீது பொறாமைப்பட்டே... இவன் மட்டும் எப்படி படிக்கலாம் ? என்று மலையாளம் எழுதவும், படிக்கவும் செய்து அவனை ஓவர்டேக் செய்தேன். பின்நாளில் தட்டச்சும்.

      அவனுக்கு படிக்க மட்டுமே தெரியும் அந்த நண்பனின் பெயர்

      മുഹമ്മദ് കോയാ
      Mohammad Koya
      محمد كويا
      (முஹம்மத் கோயா)

      நீக்கு
  14. அரபி மொழியில் தெரிந்தது நல்லதாகி விட்டது.
    மன்னிப்பும், சமாதானமும் அருமை.
    உங்கள் நல்ல மனம் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அங்கு நியாயமாக வாழ்பவனுக்கு பயமில்லை. மாரியாத்தாளின் துணையும் உண்டு

      நீக்கு
  15. அவனை ஏன் சும்மா விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குமேல் நீதிமன்றம் போகலாம் ஆனால் நானும் வழக்கு முடியுவரை நாட்டுக்கு வரமுடியாது. கடவுஅட்டை என்வசம் இருக்காது நண்பரே...

      இங்கு அடிதடிக்கு வேலையில்லை.

      நீக்கு
  16. இம்முறை பதிவு அரபு மொழியில எழுதியிருக்கிறீங்களோன்னு நினைச்சேன். ஏர்போர்ட் விலை கேட்கச்சொன்னது மகளின் நிலையை கற்பனை செய்து பார்த்தேன். ஙே..... ..
    இங்கு நல்ல சட்டதிட்டங்கள் இருக்கு. சில பேருக்கு விபரம் தெரியாததாலும், மொழி பிரச்சனையாலும் கஷ்டப்படுவினம்.. நல்ல மனசுக்கு குறை வராது அண்ணா ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தமிழாக்கமும் தந்து இருக்கிறேன். ஆம் மொழி தெரியாமல்தான் பலரும் பண இழப்புகள், பிரச்சனையை சந்திக்கின்றார்கள்.

      நீக்கு
  17. ஒருவன்(ள்) எத்தனை மொழிகளை அறிந்து வைத்திருக்கிறானோ(ளோ) அத்தனை மனிதர்களுக்கு சமம் என்ற பொன்மொழியை மெய்ப்பித்து விட்டீர்கள்.

    இரண்டு பகுதிகளிலும் எழுத்து நடை அருமை. உங்கள் அனுபவம் படிக்கும் எல்லாருக்கும் பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இரண்டையும் இரசித்து படித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  18. மன்னிக்கனும் தலைவரே..தமிழே படிக்க எழுத தெரியாத என்னால் தங்களின் பலமொழி புல்மையான. அந்த மொழியை என்னால் படிக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே தமிழில்தானே எழுதியுள்ளேன் அதைப் படியுங்கள் போதும்.

      நீக்கு
  19. மன்னித்த உங்கள் பெருந்தன்மையை போற்றுகிறேன். பெரும்பாலும் அந்த ஊர்க்காரர்கள் இம்மாதிரி சமயங்களில் வேற்று நாட்டவர் அரபி பேசினால், சட்டென்று இறங்கி வந்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மிகச் சரியாக கணித்து இருக்கின்றீர்கள்.

      அதேநேரம் ஆங்கிலம் வேகமாக பேசினால் பயந்து விடுவார்கள்.

      நீக்கு
  20. நல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க....

    பதிலளிநீக்கு
  21. மன்னிப்பது மாமனித இயல்பு. உங்களுக்கு அது இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தரிசனங்கள் நலமுடன் முடிந்ததா ?

      ஆம் "என்னுடைய மரணம் எந்தவொரு மனிதருக்கும் சந்தோஷத்தை கொடுக்ககூடாது" இதுவே எமது கடைசி ஆசை.

      நீக்கு
  22. அரபி மொழியிலும் சொல்லியிருப்பது சிறப்பு. நானும் கூடவே சொல்லிப் பார்த்தேன்.

    உங்களுக்கு என்னென்ன மொழிகள் தெரியும் ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பதிவுகளில் நான் சொல்லி வருகிறேனே ஜி.

      அடுத்த பதிவிலும் மொழிகளை கொடுத்துள்ளேன்.

      நீக்கு
  23. அருமையான படைப்பு
    சுவையாக இருந்தது

    பதிலளிநீக்கு
  24. அரபி கத்துக்கிட்டது நல்லாதா போச்சு....உங்களுக்கு நிறை மொழி தெரியும்.

    அரசு அதிகாரி அவர் வேலையை நன்கு செய்து இருக்கிறார்...இங்கே நினைக்கும் போது, சிலர் அவ்வாறு இருப்பார்கள்.

    நல்ல மனம் தங்களுக்கு மறப்போம் மன்னிபோம்ன்னு...

    ஏர்போட் விலை...ஹஹஹா....அவருக்கு தமிழ் தெரியாதது நல்லதா போச்சு...ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நமது நாட்டில் இரண்டு புறமும் அதிகாரிக்கு கப்பம் கொடுக்க வேண்டியது வரும்.

      ஆமாம் அவனுக்கு தமிழ் தெரிந்தால் மகளிடம் பேச முடியுமா ?

      நீக்கு
  25. துளசி: நல்லபடியாக முடிந்ததே. அவன் தகராறு செய்திருந்தாலும் உங்கள் பக்கம் நியாயம் இருப்பதாலும் அங்குள்ளவர்கள் போலீஸ் நேர்மையாக இருப்பதாலும் நியாயம் வென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    கீதா: ஹப்பா ஒரு வழியா அந்த ஆளை ஓரங்கட்டி நம்மூர் பஞ்சாயத்து தலைங்க மீசையைட் தடவி தடவி நியாயம் சொல்லுமே அது போல உங்க மீசையைத் தடவிக்காட்டி அந்தாளை பயமுறுத்தி நியாயத்தை நிலை நாட்டிட்டீங்க!!! சரி கோயம்புத்தூர் ஏர்போர்ட் ஜுஜூபி....ட்ராஃபிக்கே கிடையாது....ஹீத்ரூ பேசுவோமா...செம பிஸி ஏர்போர்ட்....என்ன சொல்றீங்க ஜி!!! அபுதாபியும், துபாயும் எண்ணை கொழிக்கறதுனால இழைச்சு இழைச்சு கட்டியிருக்காங்களாம் அது கூட பேசலாம் தான்...என்ன சொல்றீங்க...நான் இல்லாம ரகசியமா பேசி முடிச்சுராதீங்க சொல்லிப்பூட்டேன்...அதிராக்குத் தெரிய வேண்டாம் இந்த ரகசியம் ஓகேயா......ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      இப்போதைக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலை பேசிக்கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு