தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 27, 2017

ஔவை – யார் ?


ன்பைக்கொடு
சையை ஒதுக்கு
ன்முகம் காட்டு
கை குணம்கொள்
ண்மை பேசு
ரே போற்ற வாழ்
ண்ணம் நலமெனில்
ற்றம் காண்பாய்
யம் இல்லை இதில்
ன்றே குலமென
ங்கி குரலெழுப்பு
வை பாட்டி
சொன்ன நற்சொல்,
என மனதில் கொள்,
மகிழ்வுடன் வாழ்.
          - கில்லர்ஜி
 காணொளி

சாம்பசிவம்-
என்ன இவன்... இப்படி சொல்லிக்கிட்டு ஓடுறான், அப்படின்னா ஔவையார் நம்ம ஊடகழி ஜாதி இல்லையோ அப்ப ஔவை-யாரு ?

59 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)...அவ்வைப்பாட்டி சுடும் வடை எல்லாம் மொத்தமும் எனக்குத்தேன்ன்ன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர் இன்னும் வடைக் கடை வைக்கல்ல

   நீக்கு
  2. அவர் இப்போ உகண்டாவில் இருப்பதனாலாக்கும் ஹா ஹா ஹா

   நீக்கு
 2. அன்பைக் கொடு:
  எப்பவும் நாமே கொடுத்துக்கொண்டிருந்தால் போறிங்கா வந்திடும்:)

  ஆசையை ஒதுக்கு:
  அதெப்படி?:) ஞானி ஆனால் மட்டுமே முடியுமாக்கும்:)[அதிராவைப்போல:)]

  இன்முகம் காட்டு:
  நெடுகவும் எப்படிக் காட்டுவது இன்முகமாக.. மனிசர் எனில் உணர்ச்சிகள் இருக்கும்.. அப்போ அப்பப்ப கோபமும் வரத்தானே செய்யும்:).

  ஈகை குணம்கொள்:
  சிலர் கொடுக்கக் கொடுக்க வாங்கிட்டே இருப்பினம்:) திரும்ப ஒரு குட்டியாவது கொடுக்கோணும் என நினைக்க மாட்டினம்.. அப்போ ஒரீடத்ல எரிச்சல் வந்திடும்:).. கொடுப்பது நின்றிடும்:)

  ஊரே போற்ற வாழ்:
  எப்பூடித்தான் நல்லவரா வாழ்ந்தாலும் கண்ணை மூடினால் அவ்ளோதான்:) நமக்கு யாரும் சிலை வைக்கப்போற்தில்லை:).. நம்மள நாமே புகழ்ந்தால்தான் உண்டு.. கில்லர்ஜி கூட.. ஒரு பேச்சுக்குக்கூட அதிராவைப் புகழமாட்டார்ர்:) ஹா ஹா ஹா:)..

  எண்ணம் நலமெனில் ஏற்றம் காண்பாய்:
  இக்காலத்துக்கு இது எங்கே பொருந்துது.. நல்ல எண்ணங்களுக்குக் காலமில்லை:)

  ஒன்றே குலமென ஓங்கி குரலெழுப்பு:
  ஹையோ இதெல்லாம் குரலோடுதான் நிற்கும்.. கல்யாணம் கருமாரி என வரும்போது அனைத்தும் தலை தூக்கும்:))...

  ஹா ஹா ஹா ஹையோ எதுக்கு எல்லோரும் என்னைக் கலைக்கினம்:) அப்பூடி என்ன தப்பாச் சொல்லிட்டேன்ன்:) என் மனதில் தோன்றியதைச் சொன்னது டப்பாஆஆஆ?:)) ஹா ஹா ஹா.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப் அவ்வைப் பாட்டீஈஈஈஈஈ வெயார் ஆ யூஊஊஊஊஊஊ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா அசத்தல் பூஸ்

   மிகச் சிறப்பு யதார்த்தமான வார்த்தைகள்
   இருந்தும் கில்லர் ஜி சொன்னவை மீச்சிறப்பு

   நீக்கு
  2. ஏற்றுக்கொள்ளத்தக்க practicalஆன விளக்கம்.

   நீக்கு
  3. அதிரா நாங்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்ல நினைத்து வந்த போது நீங்கள் எல்லாத்தையுமே விளக்கமா சொல்லிட்டீங்க...என்றாலும் நல்லதைக் கேள் நல்லதைப் பார், நல்லதைப் பேசு நு சொல்லற வார்த்தைகள் தானே இவை அத்தனையும் ஸோ செய்யறோமோ இல்லையோ நல்லதை வாசித்துக் கொண்டே இருந்தால் எப்போதேனும் ஏதேனும் ஒரு நொடியில் நலல்து செய்ய மாட்டோமா...பேசமாட்டொமா...அப்படினுதான்....

   நீக்கு
  4. ஹா ஹா ஹா தங்கியூ தங்கியூ.... பட்டிக்கென்ன சொல்லிப்போட்டுத் தன்பாட்டில போயிட்டா... இதை எல்லாம் பார்த்துப் படிச்சு நாங்க பயப்பட வேண்டிக்கிடக்கூஊ:)...

   கீதா... என்னதான் ஜதார்த்தம் நமக்குப் புரிஞ்சாலும்... கெட்டது செய்ய 90 வீத மனிதருக்கும் மனம் வராது...
   ஹையோ கில்லர்ஜி முறைக்கிறாரே:)

   நீக்கு
  5. @அதிரா ...தெய்வமே நீங்க எங்கியோ போய்ட்டிங்க !!

   நீக்கு
  6. ஹா ஹா ஹா இருக்கட்டும் அஞ்சு இருக்கட்டும்... ஞானியானோர் எல்லாம் ஒரு விதத்தில் தெய்வம்தேன்ன்ன்:)).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)

   நீக்கு
 3. எனக்கு ஒளவையுடன் ஒரு சண்டை.. எப்பவும் போராட்டம் அவ சொன்ன ஒரு வசனம்... “பெண்டிர் சொல் கேளேல்”.. என எதுக்காகச் சொன்னாஆஆஆஆஆஅ?:) எனக்கு இதுக்கு இப்போ றீசன் வேணும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தையல் சொல் கேளேல் ! என்றுதானே ஔவை சொன்னார் .......... தையல் என்றால் கொடூரம் அவ்வாறான சொற்களைக் கேட்காமல் இருத்தல் அறம் என்றுதான் ஔவையார் சொன்னார் பூஸ் ...............

   நீக்கு
  2. அதிரா-இதற்கு இரண்டுவகைநாகப் பொருள் கொள்ளலாம்.

   தையல்-கட்டிளம் பெண்கள். இளம் பெண்கள் சொல்வதை மோகத்தில் மயங்கி, அறிவைப் பயன்படுத்தித் தெளியாமல் தலையாட்டிக் கேட்காதே

   தையல்-மனதைத் தைக்கும் கொடூர வார்த்தைகள். அந்தவார்த்தைகளைக் கேட்டால் உணர்ச்சியால் தூண்டப்பட்டு நீயும் அப்படிப்பட்ட வார்த்தைகளை, செய்கைகளைச்-சண்டை செய்து துன்பத்தில் ஆழ்ந்துவிடுவாய். அதனால் தையல் சொல் கேட்காதே

   நீக்கு
  3. ஹையோ அது தையல் தான் சீராளன்... அவசரத்துக்கு வாயில் நுழைய மாட்டேன் என்றிட்டுது அதனால பெண்டிர் எனப் போட்டேன்... தையல் எனில் பெண்ணுக்கு ஒத்த சொல் எனத்தான் படிச்சேன்... கொடுமை என்பது இப்போ புதுச்சொல் எனக்கு... மிக்க நன்றி. இது என் மனத்தில் இருந்த மிகப் பெரிய குறை:(..

   நீக்கு
  4. ஆவ்வ்வ் மிக அருமையாக விளக்கிட்டீங்க நெ தமிழன்.... அவ்வை ஒரு பெண்ணாக இருந்துகொண்டு எதுக்கு பெண்ணின் சொல் கேளாதே எனச் சொன்னா... அப்படிப் பார்த்தால் ஒளவையின் சொல்லையும் கேட்கக் கூடாதே... அதை மட்டும் எப்படி எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என மனதில் ஒரே குழப்பம்... 7,8 வருடங்களுக்கு முன்புகூட ஒரு பொதுத்தளத்தில் கேட்டேன்... எங்கட கேள்ஸ்:) எல்லோரும் என்னோடு சேர்ந்து அதுதானே அதெப்படி எனக் குரல் கொடுத்தார்கள் ஹா ஹா ஆனா சரியான பதில் கிடைக்கவில்லை...
   மிக்க நன்றி....
   அப்போ சுவீட் 16 சொல்றதையும் கேய்க்கக்கூடாதோ அவ்வ்வ்வ்வ்வ் அவ்வைப் பாட்டி இப்பூடி மாட்டிவிட்டிட்டாவே என்னை:)..

   நீக்கு
  5. 'சுவீட் 16 சொல்றதையும்' - அதுக்குத்தான் நவீன ஔவை எழுதியிருக்காங்களே.

   'அதிரா சொல் கேள்; அதிகமாகக் கலாய்'

   நீக்கு
  6. ஹஆஹாஆ :) அப்படியே கன்னாபின்னாவென்று நெல்லைத்தமிழனின் கருத்தை வழி மொழிகிறேன் :)

   சாகறதுக்கு முன்னாடிகூட மூணு நிமிஷம் எமதர்மன் கிட்ட டைம் பெர்மிஷன் கேட்டு அதிரா போஸ்ட் கமெண்டில் என்ன்ன மிஸ்டேக்ஸ் இருக்குனு கலாய்ச்சிட்டுதான் நான் பூவுலகுக்கு பை சொல்வேன் :))

   நீக்கு
  7. ஹா ஹா ஹா நவீன அவ்வை சரியாத்தான் சொல்லியிருக்கிறாபோல:)..

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு:) எமன் அங்கிள்:) அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாய்ட்டார்ர்:)

   நீக்கு
 4. வணக்கம் ஜி !

  ஔவை மொழிபோல் அழகாய் உயிரெழுத்தில்
  செம்மையாய்த் தந்தீர் சிறப்பு !

  தம +1

  பதிலளிநீக்கு
 5. அடடே என்று ஓடிவந்து
  ஆ என்று வியந்து ரசித்து
  இனிய பதிவு என்று தம வாக்கு
  ஈந்து
  உண்மையிலேயே
  ஊனைக்கூட மறந்து
  என்ன வார்த்தை போடலாம்
  ஏ என்கிற எழுத்துக்கு என்று யோசித்து
  ஐயே....
  ஒன்றும் கிடைக்க மாட்டேன் என்கிறதே
  ஓடிவிடுவோம் இதோடு
  ஔவை மன்னிக்கட்டும்
  அஃதே நமக்கு நல்லது என்று அமைகிறேன்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல முயற்சி. "ஊனைக் கூட மறந்து"?

   நீக்கு
  2. ஹை ஸ்ரீராம் சூப்பர்!!!

   கீதா

   நீக்கு
  3. "ஊனைக்கூட மறந்து"?
   உணவைக்கூட மறந்து....

   நீக்கு
  4. ஆஹா வாழ்க மின்னல் கவிஞர் ஸ்ரீராம்...:)..

   நீக்கு
  5. @ ஸ்ரீராம்அடடே நீங்களுமா !! நீங்களும் தெய்வமே எங்கியோ போயிட்டீங்க :)
   என்னைல்லாம் அடிச்சி பட்டினி போட்டாலும் இப்படிலாம் எழுத முடியாது :)

   நீக்கு
  6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பட்டினி போட்டால் கவித:) எப்பூடி வரும்:).. என் மாவிள்:அக்கில் ஒண்டு சாப்பிட்டுப் பாருங்கோ கன்னா பின்னா எனவரும்.. கவிதை:).. ஹா ஹா ஹா..

   நீக்கு
  7. ஊனைக்கூட மறந்து - இதற்கு அர்த்தம் உடம்பையும் மறந்து. ஊன்-உடம்பு. இந்த அர்த்தத்துலதான் ஸ்ரீராம் எழுதினாரா என்பது தெரியாது.

   நீக்கு
  8. நான் இப்படி நினைத்தேன்
   இது மலையாளமும்கூட...

   நீக்கு
 6. அருமையாய் சொன்னீர்கள்! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 7. நல்லாத்தான் இருக்கு, ஆனால் கடைபிடிப்பது ரொம்ப கஷ்டமாச்சே.

  இருக்கற ஜாதி போதாதுன்னு, "இடைகழி ஜாதி"ன்னு புதுசா உருவாக்கிட்டீங்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே அது இடைகழி அல்ல!
   "ஊடகழி" ஜாதிப்பெயரை தவறாக சொல்லி நாட்டில் சண்டையை கிளப்பி விடாதீர்கள்.

   வெளியூர் ஆகவே எனது இணைய வரவு குறைவு.

   நீக்கு
 8. கில்லர்ஜி நல்ல வார்த்தைகள்! நல்ல பதிவு! ஆனால் யதார்த்த ரீதியில் கஷ்டம்தான். ஐடியல் வார்த்தைகள்...ஆனால் ஐடியல் லைஃப் சான்ஸே இல்லையே! ஆனாலும் நல்ல விஷயங்களைக் கேட்டு வாசித்துப் பார்த்து வந்தால் நல்லதை எப்போதேனும் செய்து பேச மாட்டோமா இல்லையா...அதுவும் மத்ததெல்லாத்தையும் விட இந்த சாதி இருக்குப் பாருங்க...ஒன்றே குலம்னு இருப்போம்னா யாரு விடறாங்க....சாதிகள் இல்லையடி பாப்பா உயர்வு தாழ்வு இல்லைனு ஔவை சொன்னாங்கதான் ஆனா நடக்குதா...ம்ம்ம்ம்ம்

  சரி சரி நல்லது சொன்ன உங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்! பின்பற்ற முயற்சி செய்வோம்....

  பதிலளிநீக்கு
 9. சாம்பசிவத்தை வாயை மூடிக்கிட்டு கொஞ்ச நாள் சும்மா இருக்கச் சொல்லுங்க ஜி!! நாக்குல சனி!! ஏற்கனவே அவனவன் இந்த சாதி வைச்சு ஒருத்தன ஒருத்தன் அடிச்சுக்கிட்டு இருக்கான் இவரு வேற குண்டைத் தூக்கிப் போடுறாரு...ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அட்டகாசமான ஆத்திச்சூடி நண்பரே
  மிரட்டும் காணொளி ஒளவையார் பார்த்திருந்தாலும் தலை தெறிக்க ஓடியிருப்பார் !!!

  பதிலளிநீக்கு
 11. பொன் மொழிகள்! த ம 14

  பதிலளிநீக்கு
 12. சொல் கொள் வாழ்ன்னு சொன்னா யார் கேட்கிறா ?இப்படி வாழ்ந்தா வாழ்க்கையே பாழ்னு சொல்றவங்க பெருகிப் போனாங்களே :)

  பதிலளிநீக்கு
 13. அருமையான ஆத்திச்சூடி,எனக்கு என்னமோ உங்க பதிவுகள் தாமதமாவே வருது! போகட்டும், அதிராவின் கருத்துக்களைக் கன்னாபின்னாவென ஆமோதிக்கிறேன்.

  ஶ்ரீராம் தான் ஓர் பிறவிக் கவிஞர் எனக் காட்டி விட்டார். நல்லா இருக்கு எல்லாமே! அருமையான தொகுப்பு!

  பதிலளிநீக்கு
 14. புதிய ஆத்திச்சூடி அருமை

  பதிலளிநீக்கு
 15. நன்றி நெல்லை, நன்றி கீதா ரெங்கன், நன்றி அதிரா...

  பிறவிக்கவிஞர் என்று சொன்ன கீதாக்காவுக்கு கடனை எப்படி அடைக்கப்போகிறேன்? தொண்டை அடைக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விக்ஸ் மாத்திரை எடுங்க கிச்சு கிச்சை போக்கிடுங்க...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா இதோ ஸ்ரீராம் இருக்கவே இருக்கு அஞ்சுவின் வல்லாறை:) ஊஸ்.. குடிச்சால்ல் பறந்தே போயிடும்:).. தொண்டை அடைப்புக்குச் சொன்னேன்:).

   நீக்கு
  3. ஆமாமா :) அந்த ATHIRAA VEETTU மாவிளக்கில் ஒரு துண்டை விழுங்கினாலும் போயி போச்சு :)


   யாரங்கே உயிரான்னு கேக்கறது :))

   நீக்கு
  4. கில்லர்ஜி.... உங்கள் பதிலை (அப்போ அப்போ பார்க்கிறேன்) பார்க்கும்போது உங்கள் நகைச்சுவை உணர்வு நல்லாத் தெரியுது. வாழ்த்துக்கள்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவராலதான் என் மகுடம் போச்சூஊஊஊஊஊ:) மொகமட்டைத் தேம்ஸ்ல தள்ளாமல் விட மாட்டேன்ன்ன்ன்:))

   நீக்கு
  2. நான் ஊருள இல்ல

   நீக்கு
 17. அந்தக் காலத்தில் காதல் ஆத்திசூடி எழுதினேன் எங்கு இருக்கிறது என்று தேட வேணும் வாழ்த்துக்சள் ஜீ

  பதிலளிநீக்கு
 18. அந்த அவ்வை படம் நீங்க வரைஞ்சதா ??
  தமிழ்நாடு மேப்பில் அவ்வை தலை வச்சி நல்லா இருக்குங்க
  ஒளவை ..அட கடவுளே olavai னு தமிழில் டைப்பினாதான் நீங்க எழுதினமாதிரி வருது
  நீங்க எப்படி டைப்பினீங்க ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வரைந்தது அல்ல!
   டிவியில் பாட்டி வைத்தியம் வரும்போது படம் எடுத்தேன்.

   நீக்கு
 19. எண்ணம் நலமெனில் சொல்லியிருக்கும் எல்லாமே கிட்டும் ..அருமையான நவீன ஆத்திச்சூடி

  பதிலளிநீக்கு
 20. இரண்டு நாட்களாக இணைய இணைப்பு இல்லை..

  வந்து பார்த்தால் -
  இங்கே திருவிழா களைகட்டியிருக்கிறது..

  அப்புறமாக சந்திப்போம்!..

  பதிலளிநீக்கு
 21. ஔவையாரை மறக்காமல் பதிவிட்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 22. புதிய ஆத்திசூடி அழகுதான் ஜீ!

  பதிலளிநீக்கு
 23. உயிர் எழுத்துக்களை முதல் எழுத்தைக் கொண்டு ஒளவையாரால் மட்டுமா எழுத முடியும். நம்ம Killargee யாலும் முடியும்

  பதிலளிநீக்கு
 24. ஔவை சொன்ன நற்சொல் மனதில் இருந்தாலும் மனிதில் மகிழ்ச்சி மட்டும் இருக்க மாட்டுதே நண்பரே.........

  பதிலளிநீக்கு