வியாழன், ஜூன் 07, 2018

முடிந்தால் நகைக்கலாம்


அமைச்சரே எதிரி நாட்டுப்படைகள் போர் புரிவதற்கு தயாராக இருப்பதாக ஓலை அனுப்பி இருக்கின்றார்களே... கத்தியின்றி ரத்தமின்றி சுலபமான தீர்வு காண்பதற்கு அமைச்சரவையில் என்ன ஆலோசனை செய்தீர் ?
ஆம் மன்னா, நேற்று இரவு முழுவதும் மெரிட்டனில் சீரியல் நடிகைகளுடன் ஆலோசித்ததில் நாட்டை எதிரி நாடுகளிடம் ஒப்படைத்து விட்டால் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து விடலாம் மன்னா.
யாரங்கே... முதலில் இந்த அமைச்சரை பலி பீடத்தில் வைத்து தீர்த்துக் கட்டுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

வணக்கம் மன்னா, இவன் நேற்று மகாராணியார் அந்தப்புரத்தில் குளித்து ஆடை மாற்றிய சுமார் 1 ½ நாழிகை வரை பார்த்துக்கொண்டே இருந்தான் மன்னா ஆகவே மகாராணியை முழுமையாக பார்த்த இவனது கண்களை பிடுங்க உத்தரவு கொடுங்கள்.
யாரங்கே... மகாராணியாரை 1 ½ நாழிகை வரை பார்த்த அன்னிய தேசத்து கயவனை உடன் பிடிக்காமல் கூடவே இருந்த பார்த்த அரண்மனை சேவகனின் கண்களைப் பிடுங்கி எறியுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

வணக்கம் அரசே... நேற்று இளவரசி தேரில் ஜேம்ஸ் ஊரணியோரம் வீதிஉலா வரும் பொழுது இளவரசி மீது தூக்கிப் போடப்பட்ட முயல் குட்டியை தேரின் சக்கரத்தில் வைத்து நசுக்கி விட்டேன் மன்னா.
யாரங்கே... இளவரசி மீது முயல் குட்டியை வீசியவனைப் பிடிக்காமல் வந்த இந்த தேரோட்டின் தலையை தேரின் சக்கரத்தில் வைத்து நசுக்குங்கள்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

மன்னிக்க வேண்டும் மன்னா இந்த மாதம் சம்பளம் தாமதமானதால்தான் எனது போர் வாளை கறிக்கடை கரீம்பாயிடம் அடகு வைத்தேன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் மன்னா.
யாரங்கே... இந்த போர் வீரனை கறிக்கடை கரீம்பாயை விட்டே தலையை வெட்டச்சொல்லி இவன் தலையை பத்தமடைப் பாயில் சுருட்டி வீசுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

மன்னா நேற்று இளவரசியாருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த இனைஞனை எனது செல்லில் காணொளி எடுத்திருக்கிறேன் இதோ ஆதாரம் அவனின் கைகளை வெட்ட ஆணையிடுங்கள் மன்னா.
யாரங்கே... இளவரசிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவனின் கையை வெட்டாமல் அதை காணொளி எடுத்த இந்த காவல் வீரனின் கைகளை வெட்டி எறியுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

புலவரே என்னைப் புகழ்ந்து எழுதிய கவிதையை படித்துக் காண்பீர் கில்லர்ஜியின் நண்பர் - நண்பிகளும் கேட்டு எனது பெருமை அறியட்டும்.
தேக்கு மரத்தில் தூக்கு மேடை போட்ட ஜோக்கு மன்னா
உன்னை எதிர்த்து நாக்கு பேசத்தடை போட்ட பேக்கு மன்னா
மக்கள் வாயில் பாக்கு போடவும் தடை ஏன் மன்னா ?  
உன் மொட்டைத் தலையில் இருப்பது களி மண்ணா ?  
யாரங்கே... என்னை களி மண் என்று சொன்ன இந்த புலவரை உயிருடன் களி மண்ணால் பூசி மூடுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *


சிவாதாமஸ்அலி-
தண்டனை பெறுபவர்கள் எல்லோருக்குமே தீர்வு அவர்களது வாயிலிருந்தே வருகிறதே...

Chivas Regal சிவசம்போ-
அரசருக்கு சொந்த சரக்கு கிடையாது போலயே...

72 கருத்துகள்:

 1. தலை வெட்டித் தம்பிரான் இவன் தானோ?...

  வெளியில் இருந்து ஏடாகூடமாக ஏதாவது சிரித்து வைத்தால் - விபரீதம் ஆகிவிடும் என்று வீட்டுக்குள் வந்து சிரித்தேன்...

  ராஜாவின் காதுக்கு எட்டாமல் இருந்தால் சரி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   ராஜாவின் காதுக்கு கேட்டு விட்டதாக ஒற்றனிடமிருந்து ஓலை வந்தது.

   நீக்கு
 2. நாசூக்காக அருமையாக.மிகவும் இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. சிரிக்க முடிந்ததால் சிரித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. மன்னனுக்கு மரண தண்டனை கொடுப்பது மட்டும்தான் வேலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது காலை வேளை அரச சபை கூடியதும் முதல்கட்டம். இது முடிந்ததும் அந்தப்புரத்துக்கு பறந்து விடுவார்.

   நீக்கு
  2. ஹா... ஹா... ஹா... அடுத்த வேலை அங்குதானாக்கும்!!

   நீக்கு
  3. இது அன்றாட மண்டகப்படிதான்.

   நீக்கு
 5. /// ஸ்ரீராம்...///

  மரண தண்டனை கொடுப்பதும் மன்னனுடைய வேலை தான்....

  இங்கே மன்னனுடைய முகங்களில் ஒன்றைதான் பதிவிட்டுள்ளார் - ஜி!...

  இனிவரும் பதிவுகளில் மன்னனின் மற்ற முகங்களையும் பதிவிடுவார் என எதிர்பார்க்கலாம்....

  முக்கியமாக வங்கி நாட்டு இளவரசி வளைக்கை செல்வியை வளைக்கப் போய் -

  சேடிப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்த விவகாரம்!?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முக்கியமாக வங்கி நாட்டு இளவரசி வளைக்கை செல்வியை வளைக்கப் போய் - சேடிப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்த விவகாரம்!?....//

   ஆஹா... இப்படி வேற ஒண்ணு இருக்கா? வங்கி நாடா வங்க நாடா?

   நீக்கு
  2. ஆஹா என்ன ஜி அடுத்த பதிவுகளுக்கு அஸ்திவாரமிடுவது போலிருக்கிறதே...

   நீக்கு
 6. வேணாம். எதுவும் சொல்லலை! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு! :P :P :P :P :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயமா ? இதுக்கு விளக்கரை அளித்திட ஸ்ரீராம்ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

   நீக்கு
  2. அக்காவுக்கு பயமே கிடையாதே... என்ன ஆச்சு?!!

   நீக்கு
  3. பீப்பீ ஊதியதற்கு அர்த்தம் சொல்லுங்கள் ஜி. எனக்கு பி.பி. ஏறுது.

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆஅ கீசாக்கா வாழ்க்கையில் முதேல்ல் தடவையா ஷையாகிட்டா:).. ஹையோ டங்கு ச்லிப் ஆச்ச்சூஊஊஊஊஊ பயப்படுறாஆஆஆஆஆ ஹா ஹா ஹா:))

   நீக்கு
 7. சிரித்தேன் நண்பரே
  படத்தையும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 8. // வங்கி நாடா.. வங்க நாடா?.. //

  வங்கி நாடு தான்...
  வங்க நாடு..ந்னு சொல்லப் போய்
  வேற எதும் வில்லங்கம் வந்தால்!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பிறகு மஞ்சப்பொடிகள் பிரச்சனையை கிளப்பி விடுவார்கள்.

   நீக்கு
 9. சில ஜோக்குகள் புன்னகைக்க வைத்தன. சில சிரிக்க வைத்தன. மொட்டைத்தலை மன்னர்[கில்லர்ஜி] ஜோக்கு வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

  நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கடைசியில் என்னை மன்னராக்கி விட்டீர்களே...

   நீக்கு
  2. கில்லர்ஜி,

   நீங்கள் மொட்டைத் தலையுடன் இருந்ததால், உங்களை நீங்களே மன்னராக உருவகம் செய்திருக்கிறீர்கள் என்ற நினைப்பில் இவ்வாறு எழுதிவிட்டேன்.

   நிதானமாக யோசித்ததில், தவறு செய்துவிட்டோமோ என்ற உறுத்தல்.

   அன்புகொண்டு தவறாக எடுத்துக்கொள்ள் வேண்டாம்.

   நீக்கு
  3. நண்பரே பதிவின்படி நீங்கள் சொன்னதே உண்மை எனது கணக்கும் அதுவே... நான் என்னை மன்னராக்கி விட்டீர்களே என்று கலாத்தலுக்காக கேட்டேன்.

   அதுதான் உங்களைக் குழப்பி விட்டது போலும்

   இதில் தவறாக நினைக்க ஒன்றுமே இல்லையே.....

   நீக்கு
 10. என்ன பேக்கு மன்னன் னா...அட கொடுமையே...

  ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 11. ரசித்தேன். 1 1/2 நாழிகை மகாராணியார் குளிப்பதைப் பார்த்தவனுக்கு, "என்னால ரெண்டு நிமிஷம்கூடப் பார்க்க முடியாது, நீ எப்படி 1 1/2 நாழிகை, என்று பரிசு கொடுப்பாரோன்னு பார்த்தேன்.

  மெரிட்டனில்- அப்படீன்னா என்ன?
  நாளிகை- நாழிகை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவரோட பாலிஸியே தண்டனை வழங்குவது மட்டும்தானோ... என்னவோ...

   மெரிட்டன் ஹோட்டல்தான்.

   பிழையை திருத்தி விட்டேன் நன்றி நண்பரே

   நீக்கு
  2. மெரிடியன் ஹோட்டல் இல்லையோ?

   நீக்கு
  3. படத்தை இப்போதுதான் பார்த்தேன். ஓவியர் கோபுலு, தனது வலது கையில் பிரச்சனை வந்தபிறகு (வயதான பிறகு), இடது கையில் வரைய முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றார்.

   நீங்கள் இடது கையால் நன்றாக எழுதினீர்களா?

   எனக்கு மிரர் இமேஜாக எழுதுவது ஓரளவு சுலபமாக வரும். (தமிழ்ல ஓரளவு வேகமாகவும், ஆங்கிலத்தில், கூட்டெழுத்து இருப்பதால் கொஞ்சம் மெதுவாகவும்) திருமணத்துக்கு முன்பு மனைவிக்கு 4-5 பக்கக் கடிதம் முழுவதும் மிரர் இமேஜாக எழுதினேன். அவள் கண்ணாடியைக் காட்டிப் படித்தாளாம்.

   நீக்கு
  4. மெரிட்டன்
   மெரிடியன்
   லீ மெரிடியன்
   மூன்றும் உண்டுதானே...?

   எழுத்து நன்றாக வரும் என்று சொல்ல முடியாது.

   சிறு வயதில் இரகசியங்களை நான் மிரரில்தான் எழுதுவேன். ஆனால் உங்களைப்போல் 4,5 பக்கத்துக்கு எழுதியதில்லை.

   மாறுபட்ட சிந்தனையாளர்கள் உலகம் முழுவதும் பரவித்தான் வாழ்கின்றனர் போல...

   சிந்தனை உணர்வே வராத ரஜினி ரசிகர்கள் போலவே...

   நீக்கு
  5. நானும் இடது கையால ஓரளவுக்கு எழுதுவேன்.. வலது கையால எழுதினால் அதிராவைப்போல இருக்கும்:)) இடது காண்ட் எனில் அஞ்சுவைப்போல இருக்கும்:)) ஹையோ படிச்சதும் கிலி:)ச்சு ஜாம்ஸ் ல போட்டிடுங்கோ கில்லர்ஜி:))

   நீக்கு
  6. இடது கையில் எழுதினால் அஞ்சுவைப்போல் இருக்குமா ?

   நீக்கு
 12. நன்றாகவே இரசித்தேன்,நகைத்தேன். எல்லாமே அருமை. அப்போ மன்னரை புகழ்ந்து கவிதை எழுதிய கவிஞர் கில்லர் ஜி க்கு கடைசியில் தண்டனையா..?
  உங்க திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் அண்ணா ஜீ. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
  2. ஹையோ அதுக்கில்ல தண்டனை:)) கில்லர்ஜி ரக்:) ஐ மாத்திட்டார்ர் கர்ர்:)).. தண்டனை எதுக்கெனில் பக்கத்து வளவில் விழுந்த ஆணியைக் காந்தம் கட்டிக் களவெடுத்தமைக்காக ஹையோ ஹையோ... தங்கட வீட்டுப் பெண்ணுக்கு காந்தத்தில தூது விட்டவர் என பக்கத்து வீட்டுக்காரங்க கேஸ் போட்டிட்டினமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஉ சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   நீக்கு
  3. ஹலோ எனது ஆணியை எடுத்தது களவாகுமா ?

   நீக்கு
 13. சிரிக்க வைத்தன.
  உதவி தேவைபடும் போது கூட உதவி செய்யாமல் செல்லில் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிரும் எண்ணத்தை சொல்கிறது.
  இளவரசிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவனை தடுக்காமல் அதை படம் எடுத்து மன்னரிடம் கொடுத்து தன் கையை இழந்தவன் நிலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்று எதைத்தான் படமெடுக்க வேண்டுமென்ற சிந்தை மனிதனிடம் மழுங்கி விட்டதே... என்ன செய்வது ?வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. மன்னா கில்லர்ஜி தங்களைப் பற்றி முகநூலில் தாறுமாறாக எழுதியிருக்கிறார். கொல்ல ஆணையிடுங்கள் மன்னா.

  யாரெங்கே.கில்லர்ஜியைக் கொல்லாமல் வந்த இவனைப் பிடித்துக் கொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதென்ன புதுக்கதை எனக்கும் பிரச்சனையா ?

   நீக்கு
  2. ஆங்ங் மீயும் மீயும் படுபயங்கரமா:) ஐயாவோடு சப்போர்ட் பண்றேன்ன்:).. ஜாம்ஸ் ஊரணியில் காதுவரை ஒருநாள் முளுவதும் நிக்கச் சொல்லி ஆணையிடுங்கோ மன்னாஆஆஆஆஆ:))

   நீக்கு
  3. எதிரிகள் பெறுகி விட்டனரே...

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  அனைத்து ஜோக்குகளும் மிக அருமை.
  தலைப்பு நன்றாக இருக்கிறது. "முடிந்தால் நகைக்கலாம்."ஆனால், எனக்குதான் "நகைத்து முடியலை".ஒவ்வொன்றையும் ரசித்து சிரித்துப் படித்தேன். நல்ல ரசனையுடன் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

  மன்னர் முன் அனைவரும் குற்றங்களை "எடுத்து வைக்காமல்," குற்றங்களுக்கு உரிய தீர்ப்பை "எடுத்து கொடுத்து" விட்டார்கள். சிவ தாமஸ் அலியின் கருத்து சரிதான்..

  இன்னமும் நகைச்சுவை துணுக்குகள் தங்கள சிந்தனையில் உதயமாவதை பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.

  இரண்டு கைகளிலும் எழுதி காந்தியின் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவதற்கும் பாராட்டுக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவாக இரசித்து எழுதியமைக்கு நன்றி

   புகைப்படத்தில் உள்ள விடயத்தை கவனித்து எழுதி பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.

   நீக்கு
 16. நல்ல அமைச்சர்...தன் வாயாலேயே வாங்கிக்கிடுறார்.....ஹஹஹா.....ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ அமைச்சர் உளறுவாயனாக இருப்பாரோ...?

   நீக்கு
 17. மன்னர் முன்பே தீர்மானித்துவிடுவார் போல தண்டனை வாங்காமல் தப்புவதுகஷ்டம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எல்லாமே முன் அனுபவமாக இருக்குமோ...?

   நீக்கு
 18. ஹாஹா :) அனைத்தும் ரசித்தேன் .
  ஆனாலும் மன்னர் கொடுக்கும் தண்டனைகள் கடுமை வேணும்னா தேம்ஸ் கரைக்காரம்மா ரெசிபிஸில் ரெண்டு மூணு செஞ்சு குற்றவாளிகளுக்கு கொடுத்திருவோமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை குற்றவாளிகள் ஏற்றுக் கொள்ளாமல் எங்களை கொல்லுங்கள் என்று சொல்வார்களே...

   நீக்கு
  2. ஹலோ அதாரது கூட்டுச் சேர்ந்து சிரிக்கிறது.. ஒருவர் பின் ஒருவரா ஒரே லைனில நில்லுங்கோ.. நான் ரெண்டைச் செலவளிக்க மாட்டேன்ன் ஒரு கல்லிலேயே இரு மாங்காய் விழுத்துவேன்ன்ன்...:))

   http://www.laughspark.info/uploadfiles/a-cat-shooting-a-machine-gun-5247.gif

   நீக்கு
  3. ஆகா.. சாவை விட கொடுமையா அந்த ரெசிபிகள்.. "உங்கள் ப்ளாக்" கிலும் இந்த கலாய்த்தல்கள் தொடங்கி தொடர்கின்றனவா? நிறைய ரசிக்கலாம்.. நேரமும், பொழுதுந்தான் வேண்டும். 24 ஐ 48 ஆக்கினால் நல்லது.

   நீக்கு
  4. ஆமாம் சகோ தின்று அனுபவித்தவர்களின் வாக்குமூலம் இது

   நீக்கு
  5. கல்லுக்கென்ன பஞ்சமா ? இரண்டு கல்லு எடுத்து அடிக்கலாமே ?

   நீக்கு
 19. துளசி: ஹா ஹா ஹா ஹாஹா..அனைத்தும் ரசித்தோம்!!கில்லர்ஜி

  கீதா: கில்லர்ஜி பறக்கும் முத்தம் எடுத்தவன் சாட்சிக்காக எடுத்துருக்கான்...ஏன் தண்டிக்க வேண்டும் ஃபோனில் படம் எடுக்காமல் அவன் கையை வெட்டினால் அவன் மன்னனிடம் பராதி சொல்லும் போது சாட்சி கேட்பானே மன்னன்...அப்போ சாட்சி வேண்டாமா...ஹிஹிஹி..

  இப்பதான் கமென்ட் பாக்ஸே ஓபன் ஆச்சு கில்லர்ஜி...இதுவரை ஓபன் ஆகவே இல்லை...


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மன்னரிடம் கேள்வி கேட்பாடு கிடையாது.

   தமிழ்நாடு சுடுகாடாகும்னு சொன்னவனை யாராவது கேட்க முடிகிறதா ?

   நீக்கு
 20. ஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துதூஊஊஊஊஉ என் கண்ணுக்கு இது தெரியவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)..

  இப்போ என் செக் மெசேஜ் அனுப்பினா.. அதுதான் ஓடி வந்தேன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓடி வந்தமைக்கும், ஓட விட்டவர்க்கும் நன்றி்

   நீக்கு
 21. அடுத்த crazy mohan ஆயத்தமாக இருக்கிறார் என்று தெரிகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவர் மலையாயிற்றே...

   ஏதோ "லூஸ் மோகன்" என்ற நிலைப்பாட்டில் சொல்லி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.

   நீக்கு
 22. இதுபோன்ற ஸாடிஸ்டுகள் நம் சரித்திரத்திரத்திலும் இடம் பெற்றுள்ளனர். ஜோக்குகள் அருமை.

  பதிலளிநீக்கு
 23. வலிந்து சிரிச்சுட்டேன். போதுமாண்ணே?!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...