தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 26, 2018

உலகம் அழியுமா ?

அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால் மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் Stephan Hacking கூறியதாவது-

நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. எனினும் மனித இனம் பூமியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இப்போது  ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்த சில நூற்றாண்டுகளில் பூமியில் மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் சில சமயங்களில் மனித இனம் இனியும் தப்புமா ? என்ற கேள்வி எழுந்ததும், அதிலிருந்து நூலிழையில் தப்பியதையும் அறிவோம். 1963-ல் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியை இதற்கு உதாரணமாகக் கூறலாம் இது தவிர 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு விசியதால் லட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களிலும் அடிக்கடி நிகழ வாய்ப்பு உள்ளது.

இவற்றை எல்லாம் எதிர் கொள்வதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அடுத்ததாக பூமி வெப்பமாதல் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு விஷயங்களை தடுக்க வேண்டும்.

இவையெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயம் அல்ல. இதிலிருந்து தவறினால் மனித இனமே கூண்டோடு அழியலாம்எனவே ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் கடந்து மனித இனம் வாழ வேண்டுமானால் வேற்று கிரகங்களில் குடியேற்றுவது அவசியமாகிறது. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.














இனியாயினும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதிருக்க இறைவனிடம் மனிதனாக மட்டும் வாழ்ந்து காட்டுவோம் - கில்லர்ஜி.

சாம்பசிவம்- 
ஐயா சொல்றது சரிதானோ ? 2014-ல் கூட ஜப்பான்ல சுனாமி வந்துருச்சே

.இன்று டிசம்பர் 26 சுனாமி நினைவு நாள்

52 கருத்துகள்:

  1. கில்லர்ஜி நான் ஏற்கனவே சந்திரன் ல அப்புறம் செவ்வாய்ல ப்ளாட்டு வாங்கி வீடு கட்டியாச்சு இன்னும் ப்ளாட்டு வேற வாங்கி வைச்சுருக்கோம்..வேனுன்னா சொல்லுங்க நம்ம ராக்கெட்ட எடுத்துக்கோங்க கார் மாதிரி ஜம்முன்னு இருக்கும் எடுத்துட்டு போங்க...போய் யார் வேனா தங்கிக்கோக்கங்க..அங்கேயே வேனாலும் இருங்க இல்ல சுத்திப் பாத்துட்டு வாங்க..என்ன ஒரே ஒரு விஷயம் கட்டு சாப்பாடு கட்டிட்டுப் போய்டுங்க..ஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ப்ளாட் கீ மட்டும் கொடுத்தால் போதும். ராக்கெட் நம்மிடம் இருக்கிறது ஓட்டுவதற்கு நம்ம ராமநாதன் இருக்கிறார்.

      நீக்கு
    2. இன்னும் இரண்டு வருடம் காத்திருந்தால் நானே உங்க்ச்ளுக்கு ராக்கெட் செய்து தருவேன் அங்கிள்

      நீக்கு
    3. ராக்கெட் தரும் மருமகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. இது யாரு புதுசா? ஏஞ்சல் ராகசூரியா? ஏஞ்சலோட பெயரா? அவர் மகள் பெயரா?

      நீக்கு
    5. இது புதுக்கோட்டை புள்ளிமான்.

      நீக்கு
  2. கில்லர்ஜி இது இயற்கையின் ப்ரொட்டெக்ட்டிவ் மெக்கானிஸம். தன்னைத்தானே காத்துக் கொள்ளும் ஒரு மெக்கானிஸம்...அதாவது நான் சொல்லுவது இயற்கை சீற்றங்கள்.

    குண்டு எல்லாம் மனுஷ செயல்கள்...அழிவு பத்தி பேசும் போது...இயற்கையையும் இதையும் கலக்க முடியாது ஜி...ஆனா ஒன்னு ஜி அணுகுண்டு வீச்சு, இதனால இயற்கை கண்டிப்பா பாதிக்கப்படும். வாக்குமூலம்னு சொல்லுவாங்களே அது போல... ஐன்ஸ்டீன் தான் ஆட்டம் பாம்ப் கண்டுபிடிப்பின் தந்தை அவர் நேரடியாக அதில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது ஈக்வேஷன் தான் அணுகுண்டு வர காரணம் என்பதறாக வருந்தியிருக்கிறார்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐன்ஸ்டீன் வருந்தி இருப்பது ஆச்சர்யமான விசயமே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. இனி பூமியை காப்பாற்றும் பணி தொடங்கினாலும் நாம் வெகுதூரம் வந்து விட்டோம் என்று தோன்றுகிறது. நம்மால் பல விஞ்ஞான வசதிகளை விடமுடியாது. பூமியின் இயற்கைத் தன்மையை கெடுக்கத் தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன.

    ஏதோ ஒரு நட்சத்திரம் பலகோடி மைல்களுக்கு வான வெளியில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தபடி இருக்கிறதாம். அது மட்டும் பூமிக்குக் கிடைத்தால்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம்ஜி விஞ்ஞான உபயோகத்தை கை விடுவதற்கு மனிதர்கள் தயாராக இல்லை.

      நீக்கு
  4. இந்தோனேஷியாவிலும் அடுத்தடுத்து சுனாமி தாக்குதல்! இயற்கையை ஒரு நாளும் மனிதனால் வெல்ல முடியாது! 2004 ஆம் ஆண்டு சுநாமி வந்தப்போ நாங்க யு.எஸ்ஸில் இருந்தோம். முதலில் ஒரு சின்னச் செய்தி. கடல் அலைகள் வெகு உயரமாக எழும்பின என. பின்னர் வந்த செய்திகள் அதிர்ச்சியைக் கொடுத்தன. சுநாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனைகள். யாராலும் மறக்க முடியாத நாளாகி விட்டது அந்த நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அந்த நேரம் அபுதாபியில் இருந்தேன் உலகமே மறக்க முடியாது.

      நீக்கு
  5. அவ்வளவு கொடுமையான சுனாமியிலும் திருச்செந்தூர்க் கோயில் சேதம் அடையாமல் இருந்தது ஓர் ஆச்சரியம் தான். அதே போல் பனைமரங்கள் பாதுகாக்கப்பட்டால் இம்மாதிரி புயல், சுநாமி தாக்குதல்களில் இருந்து சேதங்கள் குறைவாக இருக்கும் என்றும் சொல்கின்றனர். இனியாவது அதற்கேற்ற விழிப்புணர்வு வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தாலும் அந்நேரத்திலும் செல்ஃபி எடுக்கும் மனிதர்கள் உண்டே...

      நீக்கு
  6. தீதும் நன்றும் பிறர் தர வாரா
    எல்லாம் நாமே ஏற்படுத்திக்கொண்டதுதானே நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நமக்கு நாமே சூனியம் செய்து கொண்டோம்.

      நீக்கு
  7. இயற்கை சீற்றத்தை பார்த்து கொண்டு இருக்கிறோம்.
    டிசம்பர் சுனாமியின் நினைவுகள் மனதில் வந்து கஷ்டபடுத்துகிறது.
    எரிமலை வெடித்து சிதறி சுனாமி வருகிறது, புயல், மழை என்று வந்து அழிவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
    கடவுள் ஆக்கவும் செய்வார் அழிக்கவும் செய்வார்.
    காப்பது உன் கடன் என்று அவன் அடி சரணடைய வேண்டியது நம் கடன்.

    பதிலளிநீக்கு
  8. அழிவின் விளிம்பில்..... இயற்கை சீற்றங்கள் ஒரு புறம் இருக்க மனிதன் நிறைய அழிவுக்கு விதை விதைக்கிறான்.

    சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை எத்தனை பேர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இன்னும் வளர்கிறோம் என்பதே உண்மை.

      நீக்கு
  9. எதற்கும் ஒரு முடிவு உண்டு ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இந்த முடிவை மனிதனே அவசரப்படுத்துவது ஏன் ?

      நீக்கு
  10. இதென்ன கருத்து? தவறு செய்பவர்கள் மனிதர்கள்தாம். அவர்களைத் திருத்தாமல் இன்னொரு கிரகத்துக்குப் போய் என்ன செய்வது? அங்கேயும் நம்ம வேலையைக் காட்டவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அங்கு முதலில் போனவன் ஒரு மதத்தை தோற்றுவிப்பான்.

      மீண்டும் ஒன்றிலிருந்து புரோட்டா திங்க வேண்டியதுதான்... 1 2 3 4

      நீக்கு
    2. நல்ல மறுமொழி கில்லர்ஜி... இதைத்தானே நாம் எப்போதும் பார்த்துவருகிறோம். இவனே பிரச்சனையை உண்டாக்குவான், அப்புறம் பிரச்சனை வந்துடுச்சேன்னு கவலைப்படுவான், சரி, அடுத்த கிரகத்துக்காவது போவோம்னு திட்டம் போடுவான். நல்லா சொன்றாங்க டீடெயிலா...

      நீக்கு
    3. நண்பரே கணினியை உருவாக்கினான் அதை அப்படியே மக்களுக்கு உபயோகத்தில் விடாமல், வைரஸ் இருக்கிறது அதை நீக்கவேண்டுமென ஆண்ட்டி வைரஸ் போடச்சொல்லி பணம் பறிக்கின்றான்.

      இதை ஏன் அவன் தொடக்கத்திலேயே வைக்ககூடாது ?

      நண்பரே விஞ்ஞானிகள் கருவிலேயே வியாபாரத்தை தொடங்கி விட்டார்கள்.

      கர்ப்பிணியை மூன்று மாதத்தில் ஊசி போடவைத்து, குழந்தை பிறந்தவுடன் பால்டின்னுக்கு 1 2 3 என்று நம்பர் போட்டு விற்கிறார்கள். இனி நாம் இந்தப் பாதையை விட்டு விலகவே முடியாது.

      நீக்கு
  11. அன்பின் ஜி...

    மீண்டும் சாட்டையைச் சுழற்றி அடித்து இருக்கிறீர்கள்....

    ஆனால் மனிதனுக்கு மனமும் தோலும் தான் மரத்துப் போனதே...

    அப்புறம் ஒரு விசயம்....

    எங்கோ பலகோடி மைலுக்கு அப்பால ஏதோ ஒரு கெரகம் தண்ணியப் பீய்ச்சி அடிக்குதாமே...

    ஸ்ரீராம் ஜி சொல்லியிருக்கார்...

    அட்ரசை வாங்கி வைங்க....

    அந்தத் தண்ணிய பாட்டில்ல அடைச்சி ஏவாரம் பண்ணுவோம்...

    அவுகளையும் ஒரு கூட்டாளியா போட்டுக் கிடலாம்...

    இத நாஞ் சொல்லலை...

    நம்ம நாட்டு வியாதிகள் சிலதோட
    மைண்ட் வாய்ஸ் ஆக்கும்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
      தங்களது வேலை நிலவரங்கள் சீரடைந்து விட்டதா ?
      ஸ்ரீராம்ஜியை தொடர்பு கொண்டு டீலிங் பேசி வைக்கிறேன்.

      நீக்கு
    2. அன்பின் ஜி...

      மஸ்ரிகளின் மனோபாவம் தான் தங்களுக்குத் தெரியுமே!..

      என்னை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார்கள்...

      வேறு பிரச்னை இல்லை...

      நீக்கு
    3. அன்பின் ஜி
      தங்களது இடர்பாடுகள் விரைவில் நீங்கிட இறைவனை வேண்டுகிறேன்.

      நீக்கு
  12. மிக ஆபத்தான விடயம்...
    ஆண்டவன் செயல்...தான்....

    பதிலளிநீக்கு
  13. பூமி அழியத்தான் போகிறது. 2012 டிசம்பரில அழியப்போகுது என்றார்கள் மீயும் ரெடியா இருந்தேன்ன்.. சாப்பாடு தண்ணி எல்லாம் ரெடிப்பண்ணி.. பின்ன மேலோகத்தில கிடைக்குமோ தெரியாதெல்லோ:) ஆனா அழியேல்லை...

    ஆனா இப்போ செவ்வாய்க் கிரகத்தில 2 ஏக்கர் காணி வாங்கி விட்டிருக்கிறோம்.. விரைவில அத்திவாரம் போட உள்ளோம் அனைவருக்கும் சொல்லி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவ்வாய்க்கிழமை இரண்டு ஏக்கர் காணி வாங்கினீங்களா ?

      விவேகானந்தர் தெரு மூணாவது குறுக்கு சந்துலயா ?

      நீக்கு
  14. பூமிப்பந்து அழிவை சந்திக்கும். ஆனா இப்ப இல்ல.. இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும். பூமி அற்பாயுசில் போறதா விதி இருந்தால் பிளாஸ்டிக், கெமிக்கல்ன்னு சுற்றுச்சூழலை மாசுப்படுத்தினால் சீக்கிரமாவே போய் சேர்ந்துடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உங்கள் கருத்தும் வேகமாகத்தான் இருக்கு.

      நீக்கு
  15. நம் புராணக்கதைகள் கேட்டதில்லையா ஜி பிரளயம்வந்து உலகு அழியும் சிலர் தப்பிக்கலாமவர்களிடமிருந்து மேலும் சந்ததிகள் வரலாம்

    பதிலளிநீக்கு
  16. வேற்று கிரகத்தில் குடி புக வேண்டும் என திட்டமிட்டால் மனிதன் பூமியை அழித்த பின்னரே வெளியேற வேமுயல்வான் குடிபுக வேறிடம் இருக்கும் மமதையில் . எனவே பூமி தாயை காக்க முதலில் முயல்வோம் .சரியா நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான விடயத்தை சொன்னீர்கள் நண்பரே மனிதர்கள் அனைவருக்கும் குறிப்பாக விஞ்ஞான உலகில் சஞ்சரிப்பவர்களுக்கு...

      இது நமது பூமி அடுத்த சந்ததிகளிடம் பக்குவமாக ஒப்படைக்க வேண்டும் என்ற சிந்தை வரணும்.

      நீக்கு
  17. இருக்கும் வரை நிம்மதியைத் தேடிக் கொள்வோம். அதுவரைப் பொறுமைதான் தேவை
    கண் முன் நடக்கும் அனியாயங்களுக்குப் பதில் இல்லை. பெருமளவு நடக்கும்
    இயற்கை சேதங்களுக்கு நாமே பொறுப்பு.

    அன்பு தேவகோட்டை ஜி இறைவன் தான் காக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    முதலில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என்னுடைய நினைவாஞ்சலி.. நல்ல விழிப்புணர்வு பதிவு. இயற்கை என்ன செய்யும்? சுற்றுச்சூழலை மாசு படுத்துவது நாம்தான். நடைப்பயிற்சி நல்லது என்பது வாயளவோடு சரி..! எளிதாக செல்லுமிடங்களுக்கும் வண்டி இல்லாமல், ஒருவராலும் செல்ல முடிவதில்லை. இதில் வீட்டிலுள்ள அனைவருக்கும் தனித்தனியே வேறு.. சுற்றுச் சூழல் மாசடையாமல் என்ன செய்யும்.? கிரகம் மாற்றும் போதும் வான் வெளியில் அடிக்கடிச் தோன்றும் மாசுகளில் உலகம் என்ன ஊறுகளை விளைவிக்குமோ? நடக்க இருப்பவை நடந்துதான் தீரும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இயற்கையை சீரழிப்பதே நாம்தான் பிறகு இறைவனை குறை சொல்லி என்ன செய்வது ?
      நடப்பது நடக்கட்டும்.

      நீக்கு
  19. அதானி, அம்பானி போன்ற வசதியுள்ள மனிதர்கள் எல்லாம் செவ்வாய்க்கோ..அல்லது சந்திரனுக்கோ சென்று வாழமுடியும்..குடியிறுக்கும் வீட்டுக்காக 1983லிருந்து 2018வரைக்கும் வழக்கு கோர்ட்டுன்னு அலையும் மனிதர்கள் எல்லாம் அழிய வேண்டியதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உலகமே செல்வந்தர்களுக்கு மட்டும்தான் நண்பரே...

      நீக்கு
  20. உலகம் அழியுமோ இல்லையோ, நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற உயிரினங்கள் என்ன பாவம் செய்தது...இறைவன் அவற்றைக் காப்பாற்றி பூமியை புதுபிக்கச் செய்வாரோ? டினோசார் மாதிரி மனிதனை வைத்து யாரோ படம் எடுப்பார்கள்??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மனிதனை வைத்து படம் எடுப்பது வேறு உயிரினமாக இருக்கலாம். வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  21. உலகம் தானாக அழிவது இருக்கட்டும்.. உலகத்தை நாம் சிறிது சிறிதாக அழித்து வருகிறோம். ஆம் நாம் நமக்கு அளிக்கப்பட்ட இயற்கையை சிறிது சிறிதாக அழித்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான வார்த்தை.

      நீக்கு
    2. வணக்கம் அங்கிள்...எங்கள் தலைமுறைக்கு நிறைய கோபங்களும் வருத்தங்களும் இருக்கிறது.பல.பொக்கிஷங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப் படாமல் இருக்கிறது.அல்லது பாழடைந்து தந்துருக்கிறீர்கள்...

      மாறவேண்டும்
      மாற்றுவோம்...
      இப்படி நல்ல கருத்துக்களை எழுதுவதோடு நில்லாமல் எங்கள் வளர்ச்சி க்கு எவ்வாறு உதவ இயலும் என்று யோசித்து உதவினால் நாங்கள் நீங்கள் நினைப்பதை விட பிரமாண்டமாக வளர்வோம்..

      இப்பதிவைப் பார்த்து இதைச்சார்ந்து எழுத நினைத்துள்ளேன்..

      நன்றி அங்கிள்

      நீக்கு
    3. இதைக்குறித்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் மருமகளே...

      நீக்கு