தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 04, 2019

அவன் நினைத்தால் ?


னக்கு அரேபியர்களிடம் ஆச்சர்யமாக நிறைய விசயங்களிருக்கிறது அதில் ஒன்று அரசாங்க அலுவலகத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இதில் எப்படியும் நான்கு நாட்கள் மீட்டிங் நடக்கும் காலை வந்தவுடன் மீட்டிங் தொடங்கி விடுகிறது. பேசுகிறார்கள், பேசுகிறார்கள், வேலை முடியும் நேரம்வரை பேசுகிறார்கள். பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு இரண்டு நாட்கள் விடுமுறை இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் அலுவலகத்தில் பேசியது போதாதென்று விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் அருசுவை உணவுகளோடு மீட்டிங். நான் பலமுறை இவர்களிடம் ஆச்சர்யப்பட்டு கேட்டிருக்கிறேன் இப்பொழுது பேசியவை எல்லாம் எப்போது நடைமுறைப்படுத்துவது ? அதற்கு இவர்கள் சொல்லும் ஒரே பதில்.

إن شاء الله
"இன்ஷா அல்லாஹ்"
Meaning of அவன் நினைத்தால் ?

நான் தொடக்கத்திலேயே சொல்லி இருந்தேன் ஆச்சர்யமான விசயங்கள் நிறைய உள்ளதென்று. அந்த விசயங்கள் அனைத்துமே இதைப் போலவேதான். எனது பால்யப் பருவத்தில் பள்ளியில் கரும்பலகையில், எழுதியிருந்த வெள்ளை வாசகங்கள் இப்பொழுதும் என் நெஞ்சில் பசுமையாய் நினைவு இருக்கின்றது.

பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர்

ஆம் நம் முன்னோர்கள் சொன்னதைப் போல பேச்சைக் குறைக்கும்போது உழைப்பு தானாகவே பெருகி விடும் இவர்கள் பேச்சைக் குறைக்காதனால்தான் இதுவரை இவர்களால் விஞ்ஞான பாதையில் செல்ல முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இந்தியர்களை சொல்வார்கள் இப்படி

கலம்த் கிறுகிறு வாஜித்.
(Meaning of Loose Taking Too much) (Very Talkative)

இவர்களைப்பற்றி எழுத வேண்டுமானால் நிறைய விசயங்கள் உள்ளது அதைப்பற்றி ஒரு புத்தகமாக வெளியிடலாம் என இருக்கிறேன். மீண்டும் சந்திப்போம், இவர்களைப் பற்றிய விசயங்களுடன்...

Chivas Regal சிவசம்போ-
இது இவருக்கு தேவையா ? அவன் பேசுறான் தொலையுறான் உமக்கு ஒழுங்கா சம்பளம் வருதா ஸ்டார் ஹோட்டல்ல தின்னமா, மறுநாள் கழட்டி விட்டோமான்னு கழன்டுக்கிட்டு போக வேண்டியதுதானே...

48 கருத்துகள்:

  1. எனக்கு இந்த மாதிரி அனுபவமில்லை. அவங்களோட எஃபிஷியன்சி கம்மி (அதுனாலதான் நமக்கு அங்க வேலை).

    நான் இதைப்பற்றி பிரஸ்தாபித்தபோது, இந்தியர்கள் வாழ்க்கையை அனுபவிக்காம காசுக்காக வேலை பார்க்கறீங்க, ஆனா அராபியர்களுக்கு வேலை ஒரு பகுதிதான் என்றார்கள். வாழ்க்கையை வாழ்வது அவங்களுக்கு முக்கியமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உண்மையிலேயே வாழப்பிறந்தவர்கள் அரேபியர்கள்தான்.

      இவ்வுலகில் அனைத்தையும் பெற்றே மரணிக்கின்றார்கள்.

      பிரியாணியை வாழ்நாளில் சாப்பிடாமலேயே மரணித்த குப்பனும், சுப்பனும் நம்மூரில் ஏராளம், தாராளம் நண்பரே...

      நீக்கு
    2. நீங்கள் என்ன எழுத வேண்டும்? எதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று நான் மனதிற்குள் நினைத்து இருந்தேனோ அதைப் பற்றி இப்போது தான் நினைக்கத் தொடங்கியமைக்கு வாழ்த்துகள். ஒரு சந்துக்கு பத்து பிரியாணி கடை வந்து விட்டது. 70 ரூபாய் முதல் 500 வரைக்கும் இங்கே பிரியாணி விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றது. கிராமங்களில் கூட. எட்டு கோடி தமிழர்களின் முக்கிய உணவே இன்று பிரியாணி தான்.

      நீக்கு
    3. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. ''..லேஷ் ந்த கலம் கிறுகிறு வாஜித்!?...''

    ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது..ன்னு சொல்லுவாய்ங்கே..

    அப்பிடி இருக்குறப்போ
    சுலைமானியும் பேரீச்சம் பழமும் சட்டுனு மறந்து போகுமா!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நேற்றுதான் இந்தப்பழமொழியை உல்டா செய்து ஒரு பதிவு எழுதி வைத்தேன்.

      இன்று காலை உங்களிடமிருந்து... அதே வார்த்தை வருகிறது.

      நீக்கு
  3. வொர்க் மோர் டாக் லெஸ் ...ஆமாம் அப்போ ரொம்பவே ஃபேமஸ் வாக்கியம். இப்போதெல்லாம் அது வெளியில் காண்பதில்லையே..இங்கு

    அப்படினா அவர்கள் பணக்கார நாடுகளாக இருப்பது பிற நாட்டவரின் உழைப்பில்?!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் இருந்தும் உழைப்பாளிகளான நம்மவர்களைக் கண்டால் அவனுங்களுக்குப் பிடிக்காது...

      நீக்கு
    2. அந்நாடு வளர்ந்து இருப்பதின் பின்னணி இந்திய உழைப்பாளிகளே...

      நீக்கு
    3. ஆமாம் ஜி இன்று நடிப்பவனே போற்றப்படுகிறான், உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான்.

      நீக்கு
    4. //உழைப்பாளிகளான நம்மவரைப் பிடிக்காது// - அதைவிட, நம்முடைய ஆட்டிடியூட்தான் அவங்களுக்குப் பிடிக்காது. காசு கிடைக்கும்னா நாம, நம்ம ஆட்களையே காட்டிக்கொடுக்கத் தயங்கமாட்டோம். இதை அவர்கள் நல்லா உபயோகப்படுத்திப்பாங்க, ஆனால் நம்மை அதனால் அவங்களுக்குப் பிடிக்காது.

      நீக்கு
    5. நிதர்சனமான உண்மை நண்பரே

      நீக்கு
  4. நான் உங்களைக் கலாய்த்து சொல்ல வந்ததை சிவாஸ் சொல்லிட்டாரு பாருங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவசம்போவை தூண்டி விடுவது நீங்கள்தானா ?

      நீக்கு
  5. ஓ... இப்படி வேறா?

    நம்மூரிலும் பேசிக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள், அலுவலகத்தில் சொல்லவில்லை, டெலிபோனில், நேரில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பினும் பேசுவதில் அரேபியர்களை மிஞ்ச உலகில் ஆளில்லை வாய் வலித்தாலும் பெயின் கில்லர் போட்டுக் கொண்டு பேசுவார்கள்.

      இதில் எஜிப்தியர்கள் படா ரகம்.

      நீக்கு
  6. கில்லர்ஜி மெதுவா ஃபார்முக்கு வரார்னு நினைக்கிறேன். தொடரட்டும். இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

      நீக்கு
  7. அடுத்த புத்தகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. Meet, eat and retreat - this is what to be done in meetings!

    பல அலுவலக சந்திப்புகளில் இது தான் நடக்கிறது! உங்கள் அனுபவ பகிர்வுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நலமா ?
      தொடர்ந்து எழுதுவேன்.

      நீக்கு
  9. தங்களது அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆதரவால் எழுதுவேன்.

      நீக்கு
  10. eat less chew more
    speak less and listen more இம்மாதிரியான பல உண்டு நினைவுக்கு வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  11. அரேபியாவில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் சுவையானவை. எழுதிய பதிவுகளிலிருந்தே செய்திகளைச் சேகரித்துத் தொகுத்து நூலாக்குங்கள்.

    பதிவுகள் காலப்போக்கில் மறக்கப்படும். நல்ல நூல்கள் வாசகரின் மனங்களில் இடம் பிடிக்கும். வாழ்த்துகள்.
    (கைபேசியில் எழுதியது).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆலோசனையும் நன்று முயல்கிறேன்.

      நீக்கு
  12. நாம இப்படிக்கா போவோம் ஜி...

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை

    பதிலளிநீக்கு
  13. பேச்ச்சைக் குறைச்சால் குடும்பத்திலும் குழப்பம்தான்:).. சிக்கல் தீராது...
    இன்ஷா அல்லாஜ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா அதிகம் பேசினாலும் ஓட்டைவாய் என்று சொல்கின்றார்களே...

      நீக்கு
  14. பேச்சைக்குறைத்தால் நல்லது தான்.

    சந்திராஷ்டமம் இன்று எனக்கு அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார் ஜோதிடர்.
    (தொலைக்காட்சியில் ராசிபலன் சொல்பவர்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ பலருக்கு வாயால்தான் பிரச்சனை வருகிறது.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. அவர்களின் இயல்பை விவரித்த விதம் அழகு. பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுபாவம். ஒவ்வொரு நாடுகளுக்கும் அவ்வாறே போலிருக்கிறது.

    மெளனமே ஒருவித அழகு. ஆனால் அந்த மெளனத்திலும் சிக்கல்கள் எழும்பும். அதனால், அனைவருமே பேச்சை குறைத்து பேச்சின் திறனிலால் வரும் சிந்தனையை செயல்பாடுகளில் காட்டினால் அவர்களின் திறமைகள் வெளிப்படும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது அழகிய கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
    2. அவர்களுக்குப் பேச்சினால் நன்மை என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள்.
      நம்மூரில் தம்பி ஒரு பெரிய வேலையில் இருந்தான். மீட்டிங்க் என்று வரும்போது திருச்சி அலுவலகத்துக்குச் சென்று விடுவான்.
      வெறும் வெர்பல் டயரியா என்று வருத்தப் படுவான்.
      அவர்கள் பேசவும் அங்கு சென்ற இந்தியர்கள் உழைக்க இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை. இரத்தத்தை உறிஞ்சி சக்கையானதும் அனுப்பி விடுவார்கள்.
      நலமாக இருங்கள் தேவகோட்டைஜி.
      நிறைய எழுதுங்கள்.

      நீக்கு
    3. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. வித்தியாசமான பதிவு,

    கலம்த் கிறுகிறு வாஜித்.

    பதிலளிநீக்கு
  17. ஓகோ ... இப்பதான் புரியுது அரேபியனுங்க எல்லாம் வாயிலேயே வடை சுடுகிறானுங்களா ... பிரியாணிக்கு வடை நல்ல காம்பினேசன்தான் விடுங்கோ ஜி!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவர்கள் வாய்ச்சொல்லர்கள் மட்டுமே... செயலர்கள் அல்ல!

      நீக்கு
  18. வாய் சொல்லில் வீரனடி..என்பது என் நினைவுக்கு வருகிறது நண்பரே!!

    பதிலளிநீக்கு
  19. தங்களின் அனுபவத்தை எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  20. நீண்ட நேரம் பேசினாலும் பயனுள்ள பேச்சு பலன் தரலாம்.. என்றாலும் செயலாக்கத்திற்கும் நேரம் இல்லாது போனால் எப்படி? "பேச்சைக் குறை செயல் படு" என்பது தேவையான வாசகம் (Slogan) தான்.

    பதிலளிநீக்கு